Wednesday, 30 September 2009

எ வெட்னஸ்டே - ரீமேக் அல்லாத ரீமேக் படம்



எ வெட்னஸ்டே - புத்தம் புதிய படம்
நடிப்பு : கவுண்டமணி, செந்தில், பதிவர் கேபிள் சங்கர்.

(ஷாட் ஓபன்)

(பீச்லே கவுண்ட மணி ஒரு கருப்பு போர்வை, போர்த்தியபடி... மற்றும் ஒரு நாயுடன்... )

கவுண்ட மணி : நேத்து வரைக்கும் நான் ஒரு 'ரிச் மேன்'... இன்னிக்கு ஐயம் 'பெக்கர் மேன்'... ஒரு சாதாரண மெண்டல் மேனாலே இப்படி ஆயிட்டேன்... இது எனக்கு தேவை தான்... இது நானே வலிய போய் விழுந்த குட்டை... பினாமி மாதிரி வந்தான் அந்த மெண்டல் மேன், சுனாமி மாதிரி என்னோட வாழ்க்கை திருப்பி போட்டுட்டான்....என் கதைய கேளு... அப்புறம் நீயும், யாரையும் "உன்னை போல் ஒருவன்" என்று நினைத்து யாரு கிட்டேயும் வம்பிழுக்க மாட்டே.... தட் இஸ் எ வெட்னஸ்டே....(என்று சொல்லியவாறே... மேல் நோக்கி பார்கிறார்...)

(ஷாட் க்லோசெஸ் அண்ட் ஒபன்ஸ் அட் கவுண்டமணி'ஸ் ஆபீஸ்)

(கவுண்ட மணி தனது அலுவலகத்தில். கம்ப்யூட்டர் முன்னாடி சோர்வாக இருக்கிறார், செந்தில் பெர்முடாஸ், முண்டா பனியன் போட்டு, டையும் கட்டி அதற்க்கு மேலே தனது சட்டையை சும்மா போட்டபடி வருகிறார்... கவுண்ட மணி "உன்னை போல் ஒருவன்" படம் பார்த்துட்டு தன் பிளாக்கில் விமர்சனம் எழுதி கொண்டிருக்கிறார்.)

கவுண்ட மணி : டேய் 'கீ-போர்டு' தலையா... எங்கேடா ரெண்டு நாளா ஆளையே காணும்...

செந்தில் : ஹி... ஹி... ஒலகம் ரொம்ப கேட்டு போச்சண்ணே!

கவுண்ட மணி : என்னடா சொல்றே... உனக்கும் ஒருத்தன் பொண்ணு தாரேன்னு சொல்லிட்டானா?

செந்தில் : அதை சொல்லலண்ணே... கம்ப்யூட்டர் வச்சிருக்குறவனெல்லாம் சாப்ட்வேர் எஞ்சினியராம்...!!!

(கவுண்ட மணி கோபமாக, முறைத்து பார்கிறார்.)

செந்தில் : பிளாக்கு வச்சிருக்குறவனெல்லாம் பெரிய ரைட்டராம்... படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்.

(கவுண்ட மணி மிக கோபமாக, செந்திலை எத்துகிறார்)

(அப்போது கவர்ச்சி உடையுடன் ஒரு மங்கை வருகிறார். சீனியர் எஞ்சினியர்-ன்னா அது யாரு... என்று கேட்டு சில சந்தேகங்களை கேட்டு விட்டு போக வருகிறார்)

(கவுண்டமணி, எங்கே தான் சும்மா இருந்தால் தன்னிடம் எதுவோ கேட்டுவிடுவாள் என்று மெயில் ஒப்பன் பண்ணி)



டியர் மிஸ்டர் ஒபாமா..,

உங்க ப்ரோஜக்ட் நல்ல ப்ரோஜக்ட், நாங்க அதுக்காக பாடுபட்டுகிட்டு இருக்கோம். நாங்க செய்யிற எல்லா ப்ராஜக்க்டும் மோசமாத்தான் இருக்கும்னு நீங்க நெனக்குறது உங்கள் மக்களோட பொது புத்தி. அப்புறம் நீங்க செய்யற ப்ராஜக்டு மட்டுந்தான் நல்லது என்று சொன்னா அது அமெரிக்க பார்பனிசம். உங்க ப்ராஜக்டுக்கான மேனுவலை பத்தாம் நம்பர் பாண்ட்லே டைப்பு பண்ணி கேட்குறது கொஞ்சம் ஓவர்... இந்த லெட்டரும் ஓவர்..


பெண் : (செந்திலிடம்) இங்கே "ஆலினால் அலெக்ஸ்சா" அப்படின்னா யாருங்க..

செந்தில் : இட் இஸ் மீ...

கவுண்ட மணி : (கொஞ்சம் அசந்தா, இந்த "டேப் மாறி" தலையன் இவளை கொத்திகிட்டு போய்ருவான்) ஹே.. மேடம், அந்த பெக்கர் இல்லே... ரேமான்ட் கோட்டும் சூட்டும் போட்டிருக்குற நான்தான் "ஆலினால் அலெக்ஸ்சா"

பெண்: போங்க சார், நீங்க இங்கே உள்ளவரு... அதான் கோட்டும் சூட்டும் போட்டிருக்கீங்க... இவரு தான் அமெரிக்கன் ஸ்டைல்லே... பெர்முடாசும், பனியனும் போட்டிருக்காரு... இவரைத்தான் நான் பார்க்க வந்தேன்...

கவுண்ட மணி : அய்யோ அவனை நம்பாதே... அவன் அமெரிக்கன் கிடையாது... ஆப்பிரிக்கன், அவன் இங்கே கம்பனி வாசல்லே பிச்சை எடுக்குறவன், கோட்டும் சூட்டும் போட்டா எவன் பிச்சை போடுவான்... அதான் அந்த நாதாரி அப்படி ஒரு கெட்டப்பு போட்டிருக்கு...

(அந்த பெண்ணும், செந்திலுடன் தனி அறை சென்று எதோ விவாதம் செய்து விட்டு போய் விடுகிறார்...)

செந்தில் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்....

கவுண்ட மணி :டேய்... 'டபரா செட்' தலையா நீ பார்த்ததே அவ ஒருத்திய மட்டுந்தான்.... இதுக்கு மேல பாடாதே...

செந்தில் : அண்ணே...! எனக்கு ஒரு சந்தேகம்ண்ணே...

கவுண்ட மணி : என்னடா....? கேளுடா..இதுக்குதான்டா... கம்பனிக்கு ஒரு "ஆலினால் அலெக்ஸ்சா" வேனுங்குறது...

செந்தில் : வாக் மேன் - அப்படின்னா?

கவுண்ட மணி : நடந்துகிட்டே பாட்டு கேட்குறதுக்கு பேரு.

செந்தில் : வொயர் மேன் - அப்படின்னா யாரு?

கவுண்ட மணி : கம்பி வொயர்லே வேலை பார்குறவன்.

செந்தில் : லைன் மேன் - அப்படின்னா யாரு?

கவுண்ட மணி : ரயில்வே லைன்லே வேலை பாக்குறவன்.

செந்தில் :அப்புறம்...

கவுண்ட மணி :டேய்... 'பியூஸ் கேரியர்' வாயா... போதும் நிறுத்திக்குவோம்...

செந்தில் : இன்னும் இருக்குண்ணே...!!!

கவுண்ட மணி : அடுத்து நீ எங்கே வாறே...??? என்ன கேட்க போறேன்னு??? எனக்கு தெரியும்... வேண்டாம்... போதும்

செந்தில் : அதில்லண்ணே....

கவுண்ட மணி : டேய்... அதுக்குதான் வலை உலகத்துலை பெரிய சண்டையே நடந்துகிட்டு இருக்கு... அதுலே என்னை கோர்த்து விட பார்க்குறியாடா... 'சி.பி.யூ' மண்டையா...

செந்தில் : அண்ணே.... சொல்லுங்கண்ணே...

கவுண்ட மணி : டேய்... 'ஷ்ரட்டர்' மண்டையா... போதுண்டா...

செந்தில் :டாபர் மேன் அப்படின்னா... யாரு?

கவுண்ட மணி : (அதிர்ந்தவராக) ஏண்டா நாயே... உன் பேரையே மறந்துட்டியாடா...???

செந்தில் : சொல்லுங்கண்ணே... தெரியுமா தெரியாதா..?

கவுண்ட மணி : டேய்... உன் பேரை என்கிட்டே கேட்குறியே.... இந்த எகதாளம் தானே வேண்டாங்குறது...

செந்தில் : தெரியலைன்னா... தெரியலைன்னு சொல்லுங்கண்ணே... டாபர் ஆம்லா தைலம், டாபர் ஹனி போல டாபர் ப்ரோடட்ஸ் யூஸ் பன்றவங்க தான் டாபர் மேன்... இது கூட தெரியாமே... நீங்கல்லாம்... "ஆலினால் அலெக்ஸ்சா..."

கவுண்ட மணி : இங்க பாருங்க பதிவர்களே...அவன் அவன் என்ன டென்சன்லே இருக்கான்... இவன் கவலைய பாருங்க.... இன்னிக்கு இவனை கொல்லாம விடுறதில்லை...(என்று ஒரு பேப்பர் வெய்ட்டை எடுத்து ஓங்கி எறிகிறார்..)

(செந்தில் டக்கென்று விலகிவிட... அந்த பேப்பர் வெய்ட், அந்த நேரத்தில் நிறுவனத்தை பார்வை இட வந்திருந்த முதலாளி "கேபிள் சங்கர்" மேல் விழுகிறது...)

செந்தில் : அண்ணே... நீங்க சிங்கம்னே... சினிமாக்காரங்க மேல உள்ள கோபத்தை, சினிமாக்காரரான நம்ம மொதலாளி "கேபிள்" மேல காட்டிட்டீங்களே... யூ ஆர் எ கிரேட் மேன்.

கவுண்ட மணி : மொதலாளி சார்..., மொதலாளி சார்..., சாரி.... மொதலாளி சார்... அந்த 'ஜாவா வாயன்' சொல்றதை நம்பாதீங்க சார்... அந்த 'ஆப்ரிகன் அனகொண்டா' என்னை வேணும்னே சீண்டி விட்டு மாட்டி விட்டான் சார்...

கேபிள் : யூ பிளடி நான்சன்ஸ்... ஹோட்டல்லே சாப்பாடு நல்லா இருந்தா அந்த ஹோட்டலுக்கு நல்ல பேரு, அதே நேரம் சாப்பாடு நல்லா இல்லேன்னா... ஹோட்டலுக்கு கேட்ட பேரு...தான்...

கவுண்ட மணி(பதிவுல தான் அப்படின்னா... இங்கேயுமா...என மனதுக்குள் எண்ணியவராக): மன்னிச்சுகோங்க சார்... இதெல்லாம் அந்த 'டாட் மேட்ரிக்ஸ்' தலையனாலே வந்தது...

கேபிள் : நோ... கெட் லாஸ்ட்

கவுண்டர் : என்னை மட்டும் வெளியிலே அனுப்புனா? அவனையும், அந்த 'டாஸ் தலையனயும்' சேர்த்து அனுப்புங்க... பாருங்க... நம்ம கம்பனி அடையாள அட்டைய கூட அது கழுத்துலே தொங்க விடலை

கேபிள் : அவன், அவனுக்கு "கூகுள்" கம்பனிலே வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி ரெண்டு நாளைக்கு முந்தியே ரிசைன் பண்ணிட்டான். இன்னிக்கு சில பேப்பர்ஸ் அன்ட் அரியர்ஸ் வாங்க தான் வந்திருக்கான்

கவுண்ட மணி : அடங்கொன்னியா... "கூகுள்" பெரிய "செர்ச் என்ஜின்" வச்சிருக்குற கம்பனின்னு சொல்வாங்க, அது இவனை போய் "செர்ச்" பண்ணி எடுத்திருக்கே...ஒருவேளை... செர்ச்:"பன்னி"-ன்னு கொடுத்திருப்பாங்களோ...

(கவுண்ட மணி சோகமாக வெளியே வருகிறார்...)
(ஒரு மெர்சிடஸ் பென்ஸ் நிற்கிறது...அதிலே செந்திலும் அந்த பெண்ணும் இருக்கிறார்கள்... )


செந்தில்: அண்ணே... இப்பா நான் பாரின் மேன், ஆனா நீங்க... காமன் மேன் கூட கிடையாது... புவர் பெக்கர் மேன்...

பெண் : டார்லிங்... அந்த பெக்கர் மேன் கூட என்ன பேச்சு... வாங்க நாம போலாம் நமக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு...

கவுண்ட மணி : நல்லாவே புரிஞ்சு போச்சுடா... நல்லாவே புரிஞ்சு போச்சுடா... காமன் மேன்... யாரு பெக்கர் மேன் யாருன்னு...

THE END

டிஸ்க்கி: ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் ஒரு காமன் மேனுக்கு சகஜம், அதனாலே அதை கண்டு பிடிச்சி பின்னூட்டத்திலே கும்முறவங்க... காமன் மேன் கிடையாது...


41 comments:

Raju said...

எனி உள்குத்து இஸ் இன் திஸ் பதிவு...?

பிரபாகர் said...

செந்திலோடு(ட) கவுண்டமணி
சேர்ந்திருந்த நகைச்சுவைகள்
எந்த நாளும் இனிக்கின்ற
இனிய அந்த விசயத்தை

இந்த நாளுக்கேற்றார்போல்
இனிதாய் மாற்றிட்டு
சந்தைக்கடை விமர்சனத்தை
சூப்பராய் நக்கல் செய்து

என்றுமே இளைஞராம்
யூத்துகளில் யூத்தாம்
அன்பு அண்ணன் கேபிள்
அலெக்சாவின் புதுப்புயல்

நன்றாய் அவரைக் கோர்த்து
நையாண்டி செய்திட்ட
அன்பு நண்பா நையாண்டி
அசத்துகின்றீர் நீடு வாழி....

பிரபாகர்.

சொல்லரசன் said...

//பிளாக்கு வச்சிருக்குறவனெல்லாம் பெரிய ரைட்டராம்... படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்.//


இந்த ஊள்குத்து யாருக்கு?

கிருஷ்ண மூர்த்தி S said...

/படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்./

நை.நை!ப்ளாக் எழுத படத்தைப் பாத்தே ஆகணுமா என்ன?

இந்த ரீமேக் இல்லாத ரீமேக் பதிவைப் படிச்சுப் பாத்தா யாருமே படத்தை ஒழுங்காப் பாத்த மாதிரியே தெரியலையே:-)

சரவணகுமரன் said...

செம நக்கலு!

ராஜ நடராஜன் said...

ஹாய் மேன்!

உங்கள் தோழி கிருத்திகா said...

அந்த "ஜாவா வாயன்" சொல்றதை நம்பாதீங்க சார்... அந்த "ஆப்ரிகன் அனகொண்டா" என்னை வேணும்னே சீண்டி விட்டு மாட்டி விட்டான் சார்...
//////ithuthaan ultimate piece...kalakkals :)

VISA said...

பதிவு லக லக லக...கல...கல..கல...சூப்பர். நல்ல கற்பனை........இது என்ன கேபிள் மாசமா....?

Cable சங்கர் said...

யோவ். சூப்பர்.. அதுவும் கவுண்டர், செந்தில் டயலாக் அருமை.. ரொம்ப லைவா இருந்திச்சி.. :)

கலையரசன் said...

யோவ் நீ இப்படியே பொழப்ப ஓட்டு!

GHOST said...

கவுண்டமணி செந்தில் காமெடி சூப்பர் கலக்கிடிங்க

தினேஷ் said...

காமெடி ஓவர்...

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
எனி உள்குத்து இஸ் இன் திஸ் பதிவு...?*/
(நாயகன் கமல் பாணியில் படிக்கவும்)
"தெரியலப்பா..."

நையாண்டி நைனா said...

/* பிரபாகர் said...
செந்திலோடு(ட) கவுண்டமணி
................
................
அசத்துகின்றீர் நீடு வாழி....

பிரபாகர்.*/

Thanks Nanbare....
நானெல்லாம் இப்ப ராஜாவா இருந்தா இதுக்கு பரிசு கொடுத்து பாராட்டலாம். நான் ஒரு காமன் மேன் அதனாலே நன்றி. நன்றி. நன்றி.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//பிளாக்கு வச்சிருக்குறவனெல்லாம் பெரிய ரைட்டராம்... படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்.//

இந்த ஊள்குத்து யாருக்கு?*/

It is for you and you only.

நையாண்டி நைனா said...

/*கிருஷ்ணமூர்த்தி said...
/படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்./

நை.நை!ப்ளாக் எழுத படத்தைப் பாத்தே ஆகணுமா என்ன?

இந்த ரீமேக் இல்லாத ரீமேக் பதிவைப் படிச்சுப் பாத்தா யாருமே படத்தை ஒழுங்காப் பாத்த மாதிரியே தெரியலையே:-)*/

முதல் வருகை என்று எண்ணுகிறேன்.... வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.அடிக்கடி வாருங்கள்.

பின்னோக்கி said...

அட..டா..ஆரம்பமே அசத்தலா இருக்கே..
இந்த பச்ச புள்ளய யாராவது அடக்குங்களேன்

நையாண்டி நைனா said...

/* சரவணகுமரன் said...
செம நக்கலு!*/

நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/* ராஜ நடராஜன் said...
ஹாய் மேன்!*/

தேங்க்ஸ் மேன்.

நையாண்டி நைனா said...

/* உங்கள் தோழி கிருத்திகா said...
அந்த "ஜாவா வாயன்" சொல்றதை நம்பாதீங்க சார்... அந்த "ஆப்ரிகன் அனகொண்டா" என்னை வேணும்னே சீண்டி விட்டு மாட்டி விட்டான் சார்...
//////ithuthaan ultimate piece...kalakkals :)*/

நன்றி. முதல் வருகைக்கு மற்றுமொரு நன்றி...
அடிக்கடி வாங்க...

நையாண்டி நைனா said...

/* VISA said...
பதிவு லக லக லக...கல...கல..கல...சூப்பர். நல்ல கற்பனை........இது என்ன கேபிள் மாசமா....?*/

பின்னூட்டத்திற்கு மிக நன்றி...

"கேபிள் மாசமா?" என்று அண்ணன் கேபிள் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும்... அப்புறம் எத்தனை மாசம் என்றும், அப்பா யார் என்றும் கேட்டு எனக்கும் சொன்னால் உங்களுக்கு புண்ணியமா போகும்...

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
யோவ். சூப்பர்.. அதுவும் கவுண்டர், செந்தில் டயலாக் அருமை.. ரொம்ப லைவா இருந்திச்சி.. :)*/

நன்றி... நன்றி.. நன்றி.

"தல நீங்க மாசமா?" நான் கேட்க வில்லை சாமியோவ்... நம்ம அண்ணன் விசா கேட்குராருங்கோவ்...

நையாண்டி நைனா said...

/* கலையரசன் said...
யோவ் நீ இப்படியே பொழப்ப ஓட்டு!*/

என்ன சாமி நமக்கு எது வருமோ
அதே செஞ்சி நல்ல பேரு எடுக்குறது தானே நல்லது...

நையாண்டி நைனா said...

/* ghost said...
கவுண்டமணி செந்தில் காமெடி சூப்பர் கலக்கிடிங்க*/

நன்றி அண்ணாத்தே....

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
காமெடி ஓவர்...*/

உங்க கமன்டும் ஓவராயிட்டே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*பின்னோக்கி said...
அட..டா..ஆரம்பமே அசத்தலா இருக்கே..
இந்த பச்ச புள்ளய யாராவது அடக்குங்களேன்*/

முதல் வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி, மிக நன்றி.
அடிக்கடி வாங்க.

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்கல் தல..

மணிஜி said...

நக்கலிஸ்ட் நைனா.....வாழ்க..வளர்க

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் நைனா :-)))

நையாண்டி நைனா said...

/*யோ வாய்ஸ் (யோகா) said...
கலக்கல் தல..*/

Thanks தல.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
நக்கலிஸ்ட் நைனா.....வாழ்க..வளர்க*/

நன்றி அண்ணாத்தே..

நையாண்டி நைனா said...

" உழவன் " " Uzhavan " said...
சூப்பர் நைனா :-)))

மிக மிக மிக நன்றி நண்பரே...

வால்பையன் said...

மேடிக்கு போட்டியாகவா!?

Deepan Mahendran said...

சூப்பரா இருக்கு நண்பரே.... !!!

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
மேடிக்கு போட்டியாகவா!?*/

Puriyalaiye... Nanbare.

நையாண்டி நைனா said...

/*சிவன். said...
சூப்பரா இருக்கு நண்பரே.... !!!*/

Thanks Nanbare.

adikkadi vaanga.

அரங்கப்பெருமாள் said...

நல்லா எழுதிறீங்க..சினிமாவுக்கு முயற்சிப் பண்ணலாமே?.. அட உண்மையாச் சொல்லுறேன்(சரக்குப் போடாம). சூப்பரா இருக்கு.

ஊர்சுற்றி said...

:)

நையாண்டி நைனா said...

/*அரங்கப்பெருமாள் said...
நல்லா எழுதிறீங்க..சினிமாவுக்கு முயற்சிப் பண்ணலாமே?.. அட உண்மையாச் சொல்லுறேன்(சரக்குப் போம). சூப்பரா இருக்கு.*/

நன்றி அய்யா...

நையாண்டி நைனா said...

/*ஊர்சுற்றி said...
:)*/

:))))))

முரளிகண்ணன் said...

கலக்கல் நையாண்டி.