Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Monday, 14 April 2008

யாரடி நீ மோகினி-விமர்சனம்

ஒரு நூத்தி அறுபது ரூபாயில் என்னென்ன செய்யலாம்?

1. தான் குடும்பத்திற்கு எதிர்கால சேமிப்பாய் வைக்கலாம்.

2. வீட்டிற்கு தேவையான பொருள் வாங்கி வைக்கலாம்.

3. பிள்ளைகள் படிக்க தேவையான நூல்கள் வாங்கி அடுக்கலாம்.

4. தான் பெண்டாட்டிக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கலாம்.

5. அப்பா, அம்மா விற்கு மருத்துவதிற்கு பயன் படுத்தலாம்.

6. ஏழைக்கு உணவளித்து பசி போக்கலாம்.

7. ஏழை மாணவனுக்கு உடை வாங்க உதவி செய்யலாம்.

8. புண் பட்ட மனத்தாய் இருந்தால் 4,5,6 பாக்கெட் தங்க ராஜா(Gold Kings), வடிகட்டி(Filter), உள்ளம்( Wills), கத்தி (Scissors) என்னாமாவது மனசுக்கு பிடிச்சசத்தை வாங்கி ஊதலாம்.

9. குவாட்டறோ, ஆப்போ, வாங்கி ஊத்தலாம், நண்டு இறா, சுறா, புறா கோழி கொக்கு, கௌதாரி ன்னு எதையாவது வாங்கி வெட்டலாம்.

10.பணம் அதிகமா இருந்தா. சும்மா ரோட்ல போறவனை கூப்பிட்டு, வடிவேலு மாதிரி வீரம் பேசி முதுகிலே ரெண்டு போட்டு போலீஸுக்கு தண்டமா கூட கொடுக்கலாம்.

ஆனா சும்மா கூட
"யாரடி நீ மோகினி" படத்திற்கு மட்டும் போய்ராதே................


அந்த நூத்தி அறுபது ரூபா, நான் இங்கே மும்பையில் PVR மல்டிபலெக்ஸ்-சில் படம் பார்க்க கொடுத்த தண்டம்.