Showing posts with label புதசெவி. Show all posts
Showing posts with label புதசெவி. Show all posts

Tuesday, 10 March 2009

மருத்துவர் புருனோ பதில் தருவார் என்று நம்பி, ஒரு கேள்வி.

இங்கு மும்பையில், எனது நண்பருடன் சேர்ந்து அவரது மனைவிக்கு மருந்து வாங்க சென்றோம். Duphaston என்று அதற்கு பெயர்.(அதன் பயன்பாடு மற்றும் செயல்பாடும் பற்றி இங்கே நான் எழுதுவேன், ஆனால் அதை படித்துவிட்டு சிலர் மருத்துவர் ஆலோசனை இன்றி அதனை தனக்கு தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்யும் கொடுமை நடந்துவிடும், அதனால் விட்டு விடுகிறேன். ) அந்த மருந்தை மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் நண்பரும் மூன்று மாதங்கள் வாங்கினார். இறுதி சுழற்சி அல்லது இறுதி கட்டத்தில் அவருக்கு நான்கு, ஐந்து மாத்திரைகளே போதுமானதாக இருந்தது. ஆனால் கடையில் "நாங்கள் ஒரு அட்டையாக மட்டுமே தருவோம். நான்கு ஐயிந்தாக தர மாட்டோம்" என்று கூறினார். நண்பரும் வேறு வழியின்றி ஒரு அட்டை வாங்கி சென்றார்.

பிறிதொரு நாளில் வேறு நண்பருடன், மருந்து வாங்க சென்றேன் மருந்தின் பெயர் Mox 500. இப்போது அந்த மருந்து கடையில் நண்பரே ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்தார். நீங்கள் ஏன் ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்தீர்கள். இரண்டு அல்லது மூன்று போதுமே என்றேன். அதற்கு அந்த நண்பர் இந்த மாத்திரை ஒன்று இரண்டெல்லாம் தர மாட்டார்கள். அட்டை தான் வாங்க வேண்டும் என்று கூறினார்.

இரண்டுமே விலை உயர்ந்த மருந்துகள் தான்.

இப்போது என்னுடைய கேள்விகள். இது தெளிதல் மற்றும் அறிதல் நோக்கில் வைக்கபடும் கேள்விகள்.

1. இப்படி இந்த மாத்திரைகளை, மருந்துகளை முழுவதுமாக தான் விற்க வேண்டும் என்று அந்த கடைக்காரர் சொல்கிறாரே. இது சரியா? தவறா?

2. இது சரி என்றால் அந்த உத்தரவை வழங்கிய துறை எது? தவறு என்றால் இதை எங்கே முறையிட வேண்டும்?

3. இந்த மாதிரி நிர்பந்திக்கும் போது, பொருளாதாரா ரீதியாக ஓரளவு வசதியாக இருப்பவர்கள் வாங்கி விடுவார்கள். நடுத்தர மக்களுக்கு தேவை இல்லாத சுமையாகவும், ஏழைகள் வாங்க முடியாதும் போகிறதே? அப்படியே வாங்கி விட்டாலும், அதனை பாதுகாக்கும் வழிகளும், உபகரணங்களும் இல்லது போகும் போது எப்படி காப்பது?

இதில் தங்கள் பெயர் குறிப்பிட்டு விளித்தது, நண்பர் என்கிற முறையில் தான். இதில் தங்களுக்கு வருத்தம் வந்தால், மன்னித்து. நானும் இந்த வலை உலகும் அறியும் பொருட்டு விடை தாருங்கள். என்று தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மருத்துவர் புருனோ மட்டுமன்றி, இதைப்பற்றி அறிந்தவர் யாரும் பதில் அளிக்கலாம். மற்றவரும் தங்கள் அனுபவங்களை தரலாம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, 16 October 2008

கேள்வி கேள்வி கேள்வி..

பெரும்பாலும் யாரு கதை எழுதினாலும், கீரோ லவ்வி கண்னாலம் கட்டுறார். ஆனா அவரு தங்கைக்கு இவரு தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறார்... ஏங்க? அப்படி????
அவரு தங்கை லவ்வ கூடதாங்கோ??? அப்படியே அவ லவ்வி தொலைச்சா அவரு ஏங்க ஒண்ணு வில்லனா இருக்கார்.. இல்லை கெட்டவனா இருக்கார்....

யாராவது பதில் சொல்லுங்களேன்....

Wednesday, 15 October 2008

மில்லியன் டாலர் கேள்வி....

திவாலு...திவாலு.. திவாலு... என்று சொல்கிறார்களே.... எங்கே அய்யா... திவாலு ஆகி போச்சு.... அந்த வங்கியும் அமெரிக்காவில் தான் உள்ளது... அந்த வங்கியின் பணமும் அங்கே தான் இருக்கு... அதுக்கிட்டே கடன் வாங்கி கட்டிய வீடும் அங்கேயே தான் இருக்கு.... பின்னே எப்படி திவால் ஆகும்... யாராவது மொத்த வங்கியை கொள்ளை அடித்து விட்டு எங்காவது ஓடிப் போய்ட்டாங்களா...

அய்யா... யாராவது விளக்குங்களேன்.......