Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Wednesday, 14 October 2009

கணவர்களை அடையாளம் காண பத்து வலிகள்..!!!(பிழை இல்லே)



நமது நண்பர்... திரு. கார்த்திகை பாண்டியன் அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்காரு... அதே பாணியிலே... நம்ம பணி.

இந்த உலகத்தில் அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - கணவர்கள். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய" இந்தக் கைப்பிள்ளைகளை அடையாளம் காண எளிமையான வழிகள் இங்கே..

--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மனைவியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு ரெண்டு ரூபாய் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும், வேறு ஒரு 'ரங்ஸ்' கூட்டிகிட்டு வந்த 'தங்க்ஸ்' இவரு வாசல்லே இருந்த நெலமைய பார்த்து பிச்சையா போட்டதா இருக்கும். "கல்யாணம் கட்டிகிட்டா, கைலே நாலு காசு போரளும் " என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் திருவோடு எடுத்து தெருவோடு போகும் வரை.

--> மழை பெய்த இரவில் தங்க்ஸ் அருகே போகும்போது, பக்கத்தில் இருப்பவர்கள் காதில் எதுவும் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் தங்க்ஸ் இவர்களின் மீது ஏழு வீட்டுக்கு கேட்குமாறு லட்சார்ச்சனை செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.

--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்று தெரிந்தும், கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) அவளுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.

--> டிராபிக் சிக்னலில் மிகச்சரியாக ஸ்டாப் கோடுக்கு வெகுமுன்பாகவே வண்டியை நிறுத்தி விடுவார்கள். சிவப்பு பச்சையாக மாறும்வரை பொறுமையாகக் காத்திருந்துதான் போவார்கள். இதனால் பின்னால் உக்காந்திருக்கும் தங்க்ஸ் கிட்டே வண்டி வண்டியாய் திட்டு வாங்குவார்கள்.

--> வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் " என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

--> பஸ் பிரயாணத்தில் பக்கத்து சீட்டு பயணி அவரது தங்க்ஸ் அவரை மதிப்பும் மரியாதையுமா பேசுவார் என்று அளந்து விடுவதை பொளந்துகிட்டு கேட்டு கொண்டே இருப்பார்கள். இறங்கும் இடம் வரும்போதுதான் முன்னாள் இருந்து ராட்சச தனமா ஒரு குரல் வரும். கடைசியில் பார்த்தால் அது இவர்கள் தங்கஸை விட மிக கொடுமையாக இருக்கும்.

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.இவனுக்கு இருக்குற தைரியம் கூட நம்ம கிட்டே இல்லியே... இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்

--> ஆபிசில் லீவே போட மாட்டார்கள். மற்றவர்கள் வேலையையும் இவர்களே பார்ப்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்து சீட்காரர் செய்த தப்புக்கும் சேர்த்து இவர்களே திட்டு வாங்கிக் கொள்வார்கள்.பின்னே வீட்டுக்கு சீக்கிரம் போய் சிக்கலில் மாட்ட அவர்கள் விரும்புவார்களோ...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். மாங்கு மாங்குன்னு பதிவு எழுதி... கடைசியில் இதெல்லாம் நான் கிடையாது... என்னோட நண்பர் ஒருவரோட அனுபவம்னு டிஸ்க்கி... மட்டும் போட்டா போதும் பாவம் அந்த நண்பர் அப்படின்னு... பின்னூட்டமும் போடுவாங்க... (நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)


டிஸ்கி: இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. என்னோட நண்பர் ஒருத்தரோட அனுபவம் இது... அதனால யாரும் "நீயும் இளிச்சவாய கணவர்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..