டி.ராஜேந்தர் என்ற பெயரை கேட்டதும் நமது குழந்தைகளின் முகமோரம் ஒரு திகிலும்... அவரின் தாடியும் அதை கோதிவிட்டுக்கொண்டே வேலை மெனக்கட்டுன்னு அவர் "தட்டி பார்த்த கொட்டாங் கச்சி..." என்று அவர் சிலுப்பும் வார்த்தையும் நமது நினைவில் அரை நொடி "டெர்ரராக" வந்து போய்விடுகிறது. என்றாலும் அவரின் கற்பனை வளம் (தமிழ் எம்.ஏ)மிகவும் ஆழமானது.
வாடா என் மச்சி..
வாழைக்காய் பச்சி...
என்று ரயில் பயணங்களில் அவரின் விருந்தோம்பல் பண்பு புருவமுயர்த்த வைத்தது அனைவரையும்..
ஹே டண்டனக்க டனக்கு னக்க
ஹே டண்டனக்க டனக்கு னக்க
என்று அடுத்தடுத்த வரிகளில் ரைமிங்கோடான சந்தங்கள் மிக மிக அற்புதமாய் இருக்கும்.அதுவும் இன்றைய நாக்க முக்க பாடலுக்கான அட்சாரம் அவர் அன்றே போட்டது, பாடியது, ரசிக்கப்பட்டது.
“அன்ன பூர்ணாவா.... ஆர்ய பவனா....’ என அவ்வப்பொழுது பிற ஹோட்டல்களை ஒப்பிட்டு ஒப்பிட்டு,ஒரு கணவனின் பார்வையில், தானே கஷ்டப்பட்டு உண்டாலும் மனைவியின் சமையலை வர்ணிப்பது. இது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, ஒவ்வொரு இல்லங்களிலும்.
"மில்லி லிட்டருக்கு கொண்டாட்டம் என்னைப் பார்க்கையிலே..."என குடிகாரர்கள் கொளரி, நாக்கை, உதட்டை கடித்து பாடும் பொழுது மனைவியர் வெட்கப்பட்டதை விட "மில்லி லிட்டர்" வெட்கப்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்திய வரிகள்..
"பாளையங்கோட்டை களிதானோ, கூழ் தானோ, புழல் ஜெயில் வார்டனும் நீதானோ.. என ஒரு பாதிக்கப்பட்ட பாடலாசிரியரின் சாரி.. சாரி.. மன்னிக்க, கணவனின் கற்பனையில் அனைத்து ஜெயிலையும் மனைவியுடன் ஒப்பிடப்பட்ட பாடலும் அந்த வகையே.
நவீன வாழ்க்கைக்கு ஏற்ப.. இந்த ஒப்பிடல் மாறிக்கொண்டே வந்து..
ஓல்ட்மாங் சுவை போல் புளிப்பவள் இவளா
ஓல்ட்காஸ்க் கலரில் முத்துன மகளா
என ஒப்பீடுகள் காலத்தோடு ஒத்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.
இது இன்று நேற்றல்ல..சங்க காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட பழக்கமாகவே படுகிறது.
இதோ ஒரு பேதையின் "அழகை" கும்பரின் வரிகள் சொல்லும் இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று.
விளக்கம்.
பெருத்த இடையைக் கண்ட வஞ்சி நாட்டுக் கொடியானது நாம் அவள் இடை பற்றும் அளவிற்கு கூட இல்லையே என வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, அட... இதை கூட விட்டு தள்ளுங்க அவள் நடை கண்டு களிறு என்று கூறப்படும் யானையும் மிரள, அவள் அடிக்கு, துறவிலே துவைக்கும் போது விழும் அடியே மென்மையானது, மேன்மையானது என எண்ணி இடுப்பு கச்சையும் நீரிலே மறைய, உழைத்து களைத்து வரும் நம்ம பயலுக்கு கஞ்சுடன் சில சொல்லடியையும் கொடுக்கும் பெண் நீராடினாள்.
பாடலின் சிறப்பு
பெண் நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்ற போதிலும், தண்ணீரில் அரசியலை கலந்து நமக்கு தண்ணீர் தராது வஞ்சிக்கும் பக்கத்துக்கு நாட்டு கொடி நம் பெண்களின் இடையை விட சிறிதானது என்றும் எள்ளி நகையாடுவது, களிரையும் விரட்டும் தளிர் எங்கள் பெண்கள் என்பது, கச்சையே மிரளும் அடி கொடுத்தாலும், தான் கொண்ட கணவனுக்கு கஞ்சி பரிமாறும் வேளையில் மட்டுமே சொல்லடி மட்டுமே கொடுப்பாள் என்று முடித்திருப்பது. கும்பரின் கற்பனையாக மட்டும் இருக்க முடியாது என்ற கேள்வியை நமக்கு விட்டு செல்கிறது...
பாடல்.
வஞ்சி மிரள இடைக்கு, அடநடைக்கு
அஞ்சி களிரொதுங்க, அடியன்னக்
கச்சம் நீரில் ஒளிப்பப் பயலுகப்
பச்சம் சொல்லடிப் பாவையும் ஆடினாள்
எப்பா...என்னா அடி....!!!.
.
அண்ணன் நர்சிம் அவர்களுக்கு நன்றி.
