Showing posts with label டக்ளஸ்.. Show all posts
Showing posts with label டக்ளஸ்.. Show all posts

Thursday, 23 July 2009

பிரபல பதிவர் டக்ளசுக்கு ஒரு மாடல்.



அன்பு (இது நமது சகபதிவர் 'அன்பை'விளித்து அல்ல )டக்ளசு அவர்களே...

மாசற்ற நமது தமிழ் தாய் பெற்றெடுத்த மாணிக்கமே, ஏன் இந்த திடீர் முடிவு? எந்த முடிவா ? இனி வலையில் எழுதுவதில்லை என்று ஒரு முடிவு எடுத்தாயே அதை தான் சொல்கிறேன். பொது கக்கூசு சுவற்றிலும், வீதி ஓர சகிலா பட போஸ்டரிலும் எழுதி வந்த சக பதிவர்கள் மத்தியில் நீ மட்டுமே வலையில் எழுதும் திடம் பெற்று இருந்தாய், திறன் பெற்று இருந்தாய், அப்படி இருந்த நீ, அந்த வளம் பெற்ற நீ, அந்த வரம் பெற்ற நீ அந்த 'தில்' (வேற்று மொழி உபயோகத்திற்கு மன்னிக்க..., யோவ் டக்கு நீ ஏன்யா எந்திருச்சு நிக்க, அய்யோ...டக்கு அது "மன்னிக்க".) பெற்று இருந்த நீ திடீரென இப்படி ஒரு முடிவெடுத்தாயே ஏன்.???? நீ வலையில் எழுத வந்ததால், மீனவர்களுக்கு புது வாழ்வு கிடைத்தது, அவர்களின் "வலை"க்கு வேலை வந்தது. ஆனால் அந்தோ.... பரிதாபம் இப்போதோ அவர்கள் கவனிப்பாறின்றி நடு வீதியில், மீண்டும் மன்னிக்க நடுக்கடலில். ஆம் துன்பமெனும் கடலில்.



நிற்க. (அய்யோ டக்கு... இதுக்கும் ஏன்யா எந்திச்சி எந்திச்சி நிக்க? லெட்டர் எழுதுனா இப்படிலாம் போடணும், இதெல்லாம் தெரியாமே நீயெல்லாம் பதிவெழுத வந்துட்டே...)

நீங்கள் இதுவரை ஆற்றிய பணிகளால் விளைந்ததை நீங்கள் மறைக்கலாம் ஆனால் நாங்கள் மறக்க முடியுமா? அப்படி செய்தால் நாங்கள் தமிழர்களா?

நீங்கள் பதிவெழுத வந்த பிறகுதான் காலைக்கதிரவனும் காலம்பர எழுந்து வேலைக்கு வருகிறான்.

நீங்கள் பதிவெழுத வந்த பிறகுதான் பசுவிலே இருந்தே பசும்பால் வந்தது... குறிப்பாக நீங்கள் ஒரு தத்துவமும் சொன்னீர்களே... "பசு பல நிறம், பால் ஒரே நிறம்" என்று அட...அட.... என்ன ஒரு உண்மை !!!, என்ன ஒரு தத்துவம் !!!. இது வரலாறு குறித்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, அது விட்டது.., நாங்கள் குறித்து கொண்டோம்.

பல நிறத்தில் இருக்கிற பசு ஒரே நிறத்தில் பால் கொடுக்கும்போது, ஒரே நிறத்தில் இருக்கிற எருமை ஏன் பல நிறத்தில் பால் கொடுக்கவில்லை என்று நீங்கள் கொந்தளித்து ஒரு பதிவு எழுதி இருந்தீர்களே...!!! அதற்கு நமது விஞ்ஞானிகள் இன்னும் மண்டையை உடைத்து கொண்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றனவே....

நீங்க பதிவு எழுதி மூட்டிய உற்சாகத்தில் தான் ஒபாமாவே ஒய்யாரமாய் ஜனாதிபதி ஒபாமா என்றானார்.


இதெல்லாம் உங்க பெருமைகளில் ஒரு சிறு துளி, இதனை இங்கே இந்த சூழ்நிலையிலும் நான் சொல்லவில்லை என்றால் தமிழ் கூறும் "குட் வோல்ட்" என்னை எஸ்குஸ் பண்ணாது.

நீங்கள் இன்னும் பல சாதனைகளை செய்யவேண்டும்,

ராஜ பக்சேவை ராப்பிச்சையாக்க வேண்டும்,
ஒசாமாவை பேசாமே ஆக்க வேண்டும்,
லஞ்சபேயை மை தடவி பாட்டிலிலே அடைக்க வேண்டும்
----------------......................

என்று இன்னும் பல காரியங்களை செய்து
எதிரிகளுக்கு எனிமா கொடுக்கவேண்டும் நீங்கள்

ஆகவே... நீங்கள் மீண்டும் "வலை"யில் எழுத வரவேண்டும், "வலை"யில் எழுத வரவேண்டும், "வலை"யில் எழுத வரவேண்டும்.


சற்று முன் கிடைத்த செய்தி: நீங்கள் எழுதுவதை நிறுத்தியதால், ஒரு தொண்டர் ஒரு வினோத போராட்டத்தை ஆரம்பித்து உள்ளார்.



எங்களுக்கா இல்லாவிட்டாலும், இந்த வினோத போராட்டத்தை முடித்து வைக்கவேண்டியாவது தாங்கள் வரவேண்டும்.



பின்குறிப்பு: தலைப்பில் இருப்பது எழுத்து பிழை அல்ல. ஒருவேளை நண்பர் வலை உலகை விட்டு போனால் இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று வைத்திருந்த ஒரு மாடல். தறுதலை போகாமே உக்காந்து மொக்கை போட்டுகிட்டே இருக்கே. அதனாலே பொறுமை இல்லாம இந்த மாடலை, அதாங்க மடலை போஸ்ட் பண்ணிட்டேன்.