Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Thursday, 28 May 2009

"சாரு" சாருக்காக ஒரு கதை.

சாரு அண்ணே.... வணக்கமுங்க.

உங்களோட "வன்முறையின் தோல்வி" படிச்சேன். ஆகா என்ன ஒரு எழுத்து, நடை, கருத்து ? சும்மா சொல்ல கூடாது. எல்லாமே அருமை. அருமை. என்ன ஒரு அலசல், தகவல் ஆராச்சி!!! நான் படிச்ச வரலாற்று பொஸ்தவத்திலெ கூட இப்படி எழுதி வைக்கலை அதற்காக உங்களுக்கு ஓராயிரம் கோடி நன்றிகள்.

நீங்க ஊருக்கே கதை எழுதி யாவாரம் பண்ணுற ஆளு. ஆனா நான் உங்கள மாதிரி ஆளுங்க சொல்லுற கதைகளை கேட்டு, படிச்சி பொழுத ஓட்டுற வெட்டிப்பய. நீங்க ஏற்கனவே இந்த கதைய கேட்டு இருப்பீங்க, நான் உங்க கிட்டே இந்த கதைய சொல்லுறதா நெனைக்கபுடாது. ஞாபகப்படுத்துறேன் அம்புட்டுதான்.

சரி இனி நாம கதைக்கு போலாமா...

ஒரு ஊருலே ஒருத்தன் இருந்தான். ஒரு ஊருனாலே பலபேரு இருப்பாங்க ஆனா ஏன் ஒருத்தன் இருந்தான் என்று சொல்லுறாங்க? அதை பற்றி நாம ரொம்ப விவாதிக்காமே சட்டுன்னு சொல்றேன், ஏன்னா அவன் நம்ம கதாநாயகன். நம்ம கதாநாயகன், நல்லவன் வல்லவன் ஏழைபங்காளன் தயாள குணம் உள்ளவன். அவன் பல பேருக்கு பல உதவிகள் செஞ்சிருக்கான். செய்வான். அவன் ஒரு நா ஒரு மருத்துவமனைக்கு சென்று உதவிகள் செய்யலாம்னு போனான். அங்கே இருந்த மருத்துவரும் அவனை கூட்டிகிட்டு போய் வார்டு வார்டா காமிச்சாரு.

ஒரு வார்டிலே ஒருத்தன் 'சேது' கணக்கா ஒருத்தன் இருந்தான் அவன் "மாயம்மா", "மாயம்மா" என்று கத்திகிட்டே இருந்தான்.

நம்ம கதாநாயகன், "இவன் யாரு? இவன் ஏன் மாயம்மா... மாயம்மான்னு கத்திகிட்டே கிடக்கான்" என்று கேட்டான்.

அதுக்கு அந்த டாக்டரு சொன்னாரு "இவன் ஒரு பயங்கர படிப்பாளி, இவன் படிச்சிகிட்டு இருக்கும் போது அந்த மாயம்மாங்குற பொண்ணை காதலிச்சான் ஆனா அவனோட காதல் நிறைவேறலை, அப்புறம் அந்த பொண்ணுக்கு போன வருஷம் மார்ச்சு மாசம் ரெண்டாம் தேதி கல்யாணம் ஆயிட்டு அன்னிலேருந்து இப்படி பைத்தியமா ஆயிட்டான்"னாறு.

"அச்..சச்சோ..ச்சோ.... ஐயோ பாவம்" அப்படின்ட்டு அடுத்த வார்டுக்கு போனாங்க, அங்கே போய் பார்த்தா அங்கே 'குணா' கமல் கணக்கா ஒருத்தன் இருந்தான் அவனும் சும்மா இல்லாமே "மாயம்மா" "மாயம்மா" ன்னு பொலம்பிகிட்டு இருந்தான்.

இதை பார்த்த வொடனே நம்ம கதாநாயகன் மூளை பயங்கரமா யோசிச்சிட்டு இப்ப உங்க மூளை யோசிச்சிருக்கே அந்தா மாதிரி "அட பார்ரா, இங்கேயும் ஒருத்தன் பொலம்பிகிட்டு இருக்கானே, அந்த மாயம்மா ஒரு அம்சமான பிகரா இருந்திருக்கணும் இப்படி பலபேரை பயித்தியமா அலைய வச்சிருக்காளே" என்று மனசுக்குள்ளே எண்ணி கிட்டு "என்ன....டாக்டர் அந்த மாயம்மா பெரிய பிகரோ? இப்படி பலபேரை அலைய வச்சிருக்காளே? இங்கே பாருங்க, இங்கேயும் அவளை காதலிச்சி ஏமாந்த ஒருத்தன் பொலம்பிகிட்டு இருக்கான் பாருங்க." ன்னானாம்.

அதை கேட்ட டாக்டரு சிரிச்சிகிட்டே சொன்னாராம் "ஐயோ, ஐயோ உங்களோட ஒரு தமாசா இருக்கே, இவனும் படிப்பாளிதான் அறிவாளிதான் ஆனா இவன் மாயம்மாவை காதலிச்சவன் இல்லே, அந்த மார்ச்சு மாதம் ரெண்டாம்தேதி மாயம்மா கழுத்திலே தாலி கட்டுன புருஷன் தான் அவன்"ன்னாராம்.


கதை சொல்லும் நீதி: ஒரே மேட்டரு எல்லா பக்கமும் ஒர்க் அவுட் ஆகாது. நல்லா விசாரிக்கணும் அதுக்கு அப்புறம் தான் சொல்லணும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நானும் தவறு செய்திருக்கலாம் மதிப்பிற்குரிய சாருவும் தவறு செய்திருக்கலாம், அதற்காக கண்டிப்பாக உங்க கருத்தை பதிஞ்சி சொல்லிட்டு போங்க.

அன்பார்ந்த பதிவர்களே இந்த பதிவுக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *