Tuesday, 8 September 2009
மூன்று கவுஜைகள்
எதிர் வீட்டு ஸ்ரீக்கு இருபத்தி அஞ்சு வயசு..
வேலை இல்லாத வெட்டி ஆபீசர்...
இரு கைகளையும் குறுக்கே கட்டியவனாக
என் முன்னே வந்து நிற்கிறான்..
"மாமா.. உள்ளே என்ன இருக்கு
கண்டுபிடிங்க பார்ப்போம்.."
எத்தனை யோசித்தும் கண்டுபிடிக்காத
முடியாதவனாய் ஏதேதோ சொல்கிறேன்..
"நீயே சொல்லிருப்பா.."
கடைசியாய் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..
"ஒன்ன்ன்ன்...னை கூட விடலியே"
என்று வாய் குவித்து
குற்றாலமாய் வாந்தி..
தோற்றுப் போனதற்காக
வாழ்க்கையில்
முதல் முறையாய்
தண்டனை அனுபவிக்கிறேன்,
நான்தான் வாந்தியை கழுவிவிடனுமாம்...!!!
***************
பாலத்தில் வரும்பொழுது விரூமென்று
என்னை தாண்டிப் போனது ஒரு வண்டி..
பலபேரு ஆரவாரமாய் செல்கிறார்கள்
கோஷங்கள் பலமாக...
தலையில் எதோ கொடியை கட்டியவாறே.....
எப்பாடு பட்டேனும் குவாட்டரும், பிரியாணியும்
பார்க்க வேண்டும் என்ற முடிவுடன்
துரத்தத் துவங்குகிறேன் நான்..
என்னுடைய வேகத்தை விட
அதிகமாய் இருக்கிறது முன்னால்
செல்லும் வண்டியின் வேகம்..
ஏதோவொரு வளைவில் சட்டெனத்
திரும்பி காணாமல் போனது..
ஓட்டிப் போன பரதேசியை
பொறாமையோடு திட்டியவாறே
என் பாதைக்கு திரும்புகிறேன்..
கடந்து போகிறது இன்னுமொரு வண்டி..
மற்றொரு கோஷ்டியை சுமந்தபடி..
மீண்டும் தொடங்குகிறது என் விரட்டல்..!!!
***************
வோல்ட் மங்க்
வோட்கா
மானிட்டர்
மாவா
M.C
VSOP
ஷகீலா
டகீலா
சாராயம்
கள்
டோப்பு
கஞ்சா
கொகேன்
உலகின் சந்தோஷம் அனைத்தும்
பார்த்து சலித்துப் போய் விட்டேன்..
என் போதை தெளிய வேண்டும்,
மனம் நொந்து, வாய் விட்டு
கதறி அழ சோகத்தைத் தா..
கடவுளின் முன் கூனிக்
குறுகியவனாக நின்று இருந்தான்
உலகத்தின் ஹைடெக் மனிதன்..
சிரித்துக் கொண்ட கடவுள்
கைகளைத் தட்டினார்..
"பதிவுலக கவிகள்" பிறந்தார்கள்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
me the first,
ஆமா நான்தான்.
கவுஜ நல்லா இருக்கு நைனா அவர்களே...
என்னவென்று சொல்லாது
எடுத்த வாந்தியதனை
தண்டனையாய் கழுவ
தனியே ஒர் கவிதை
குவர்ட்டருக்கு ஆசைவைத்து
கடந்து போகும் வண்டியினை
நோவாமல் துரத்துதலாய்
மற்றுமோர் கவிதை
பதிவுலக கவிகளெல்லாம்
பயந்து ஓடுமாறு
உதாரணம் நிறைய வைத்து
ஒய்யாரமாய் கவிதை
அதிகமான வேலைப்பளு
அழுத்தினாலும் ஆளும்மை
புதிதாய் யோசித்தி
படைக்கின்றீர் நன்றி நைனா...
பிரபாகர்.
எந்த கவிதையும் குவாட்டர தாண்டலயே ஏன் ???
கடைசி கவிதை உங்களுக்காகவே படைக்கப்பட்டது!
கார்த்திகைபாண்டியனுக்கு ஓலை அனுப்பியாச்சா!?
எங்க நைனா ஆளையே காணும்?
இந்த கவிதய எழுத இமயமலை போயிட்டியோ?
ரைட்டு.. சிக்கினது நானா.. மானிட்டர் அடிச்ச மப்பு தெளிய நான் தான் கிடைச்சேனா?
:))))))))
//எதிர் வீட்டு ஸ்ரீக்கு இருபத்தி அஞ்சு வயசு..
வேலை இல்லாத வெட்டி ஆபீசர்...//
மதுரை ஸ்ரீ பகுதி நேர விரிவுரையாளராக இருப்பதாக வேள்விபட்டேன்.
எதிர் கவுஜக்கு வேறு நிறம் லேதா?
சூப்பர் கவிதைகள்
கவித கவிதன்னு சொல்லுங்க
வோல்ட் மங்க்
வோட்கா
மானிட்டர்
மாவா
M.C
VஸோP
ஷகீலா
டகீலா
சாராயம்
கள்
டோப்பு
கஞ்சா
கொகேன்
நைனா என்னா இதெல்லாம்.தமிழா..இல்லாட்டி !ஒண்ணுமே புரில. !
கவிதயே ஒரு போதை.
போதையே போதையானா:::!
ம்ம்ம் நடக்கட்டும் நைனா கலக்கல்..
கவுஜ நல்லா இருக்கு
கடவுள் கைதட்டினார் பிறந்தனர் ப்ளாக் கவிஞர்கள்..
அப்படியா.. இருங்க..இருங்க
நானும் கவிதை எழுதப்போறேன்.
அருமை.
அட்டகாசம்.
தூள்.
சூப்பரு தல
அருமை :)
இதற்காகத்தான் காத்திருந்தீர்கள் போலும் இத்தனை நாட்களாக...
செம கலக்கல்...
நான் உங்க எதிர் கவுதையைத்தான் சொன்னேன்...
/*Anbu said...
me the first,*/
Thank You Very Much, Brother.
/*Anbu said...
ஆமா நான்தான்.*/
நீயே தான் தம்பி
/*Anbu said...
கவுஜ நல்லா இருக்கு நைனா அவர்களே...*/
மிக நன்றி தம்பி.
/*பிரபாகர் said...
என்னவென்று சொல்லாது
எடுத்த வாந்தியதனை
தண்டனையாய் கழுவ
தனியே ஒர் கவிதை
குவர்ட்டருக்கு ஆசைவைத்து
கடந்து போகும் வண்டியினை
நோவாமல் துரத்துதலாய்
மற்றுமோர் கவிதை
பதிவுலக கவிகளெல்லாம்
பயந்து ஓடுமாறு
உதாரணம் நிறைய வைத்து
ஒய்யாரமாய் கவிதை
அதிகமான வேலைப்பளு
அழுத்தினாலும் ஆளும்மை
புதிதாய் யோசித்தி
படைக்கின்றீர் நன்றி நைனா...
பிரபாகர்.
*/
நானிலத்தில் நின் அன்பில்
நனைந்த நான்.
நன்றி நன்றி நன்றி
/*கத்துக்குட்டி said...
எந்த கவிதையும் குவாட்டர தாண்டலயே ஏன் ???*/
ஹி...ஹி..ஹி... இந்த விஷயத்திலே நானும் கத்துக்குட்டி தான்
/*வால்பையன் said...
கடைசி கவிதை உங்களுக்காகவே படைக்கப்பட்டது!
கார்த்திகைபாண்டியனுக்கு ஓலை அனுப்பியாச்சா!?*/
இப்படி நீங்க சொல்லிட்ட நீங்க தப்பிச்ச மாதிரியா???
நீங்களும் இப்ப எலக்கிய வாதியா மாறிட்டு வாறீங்க...
/*கலையரசன் said...
எங்க நைனா ஆளையே காணும்?
இந்த கவிதய எழுத இமயமலை போயிட்டியோ?*/
இமய மலைக்கு போக நமக்கு இன்னும் நாள் இருக்கு.... ஆணி பிடுங்க போயிட்டேன் நண்பா...
/*கார்த்திகைப் பாண்டியன் said...
ரைட்டு.. சிக்கினது நானா.. மானிட்டர் அடிச்ச மப்பு தெளிய நான் தான் கிடைச்சேனா?*/
வா நண்பா வா...
அங்கே சுவிட்சு போட்டா இங்கே லைட்டு எரியும்ன்னு....
ஒரு பிரகஸ்பதி சொல்லுது...
/* mayil said...
:))))))))*/
:)))
/*சொல்லரசன் said...
//எதிர் வீட்டு ஸ்ரீக்கு இருபத்தி அஞ்சு வயசு..
வேலை இல்லாத வெட்டி ஆபீசர்...//
மதுரை ஸ்ரீ பகுதி நேர விரிவுரையாளராக இருப்பதாக வேள்விபட்டேன்.*/
தேர்தல் நேரத்துலே வந்து வந்தே.... உம்ம புத்தியும் அரசியல்வாதிங்க மாதிரியே சிந்திக்குதுய்யா...
கோர்த்து விடாமே இருக்கவே முடியாதா...
/*பீர் | Peer said...
எதிர் கவுஜக்கு வேறு நிறம் லேதா?*/
என்ன நண்பா பண்ணுறது... போதைலே இருக்கும்போது எழுதுறது கவிதையாம், போத தெளியிரப்ப எழுவுறது கவுஜையாம்..
/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பர் கவிதைகள்
கவித கவிதன்னு சொல்லுங்க*/
நன்றி தல...
/*ஹேமா said...
வோல்ட் மங்க்
வோட்கா
மானிட்டர்
மாவா
M.C
VஸோP
ஷகீலா
டகீலா
சாராயம்
கள்
டோப்பு
கஞ்சா
கொகேன்
நைனா என்னா இதெல்லாம்.தமிழா..இல்லாட்டி !ஒண்ணுமே புரில. !
கவிதயே ஒரு போதை.
போதையே போதையானா:::!*/
எட்டு திக்கும் சென்று சேர்த்த கலைச்செல்வங்கள் அவை - இனி தான் அதை தமிழ் மொழியில் பெயர்க்கனும்... ஹி..ஹி..ஹி..
/*ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நடக்கட்டும் நைனா கலக்கல்..
கவுஜ நல்லா இருக்கு*/
நன்றி தல....
ஆனா என்னை ஒரு தொடர்லே இழுத்து விட்டீங்களே... அப்பதிலே இருந்து நம்ம மண்டை ஒரு மாதிரி கேராவே இருக்குது சாமி....
/*Cable Sankar said...
கடவுள் கைதட்டினார் பிறந்தனர் ப்ளாக் கவிஞர்கள்..
அப்படியா.. இருங்க..இருங்க
நானும் கவிதை எழுதப்போறேன்.*/
அண்ணே... அண்ணே... கடவுள் தான் கை தட்டி இருக்காரு... சாத்தான் இல்லே... அதனாலே கொஞ்சம் பொறுங்க....
/*துபாய் ராஜா said...
அருமை.
அட்டகாசம்.
தூள்.*/
Thanks Nanbaaa....
/*இளைய கவி said...
சூப்பரு தல*/
வாங்க அண்ணாத்தே.... நன்றி.
/*இது நம்ம ஆளு said...
அருமை :)*/
நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க.
/*mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....*/
நன்றி... நண்பரே....
செய்து விடலாம் நண்பரே...
/*குடந்தை அன்புமணி said...
இதற்காகத்தான் காத்திருந்தீர்கள் போலும் இத்தனை நாட்களாக...
செம கலக்கல்...
நான் உங்க எதிர் கவுதையைத்தான் சொன்னேன்...*/
ஆணி பிடுங்க போனதாலே வர முடியவில்லை நண்பரே....
நன்றி தல
//கடவுள்
கைகளைத் தட்டினார்..
"பதிவுலக கவிகள்" பிறந்தார்கள்//
பதிவுலக எதிர்கவிகள் யார் கைதட்டி பிறந்தார்கள் .???
Post a Comment