Friday, 11 September 2009
ABC... நீ வாசி எல்லாமே... SO... ஈசி..
சின்ன வயசிலே சைக்கிள் டயரு, இல்லே கயறு, ஒன்னும் இல்லன்னா முதுகு பின்னாடி சட்டைய, இல்லன்னா அரைஞான் கயிறையே பெல்ட்டு மாதிரி செட்டப் செஞ்சி போட்டிருந்த பட்டன் இல்லாத டவுசரை பிடிச்சிக்கிட்டு ரயிலு விட்டு.... போன ஆட்டம், இப்ப நல்ல டிரஸ் போட்டு பொட்டி தட்டியா, போட்டி தட்டியா ஆனா பிறகு, ஆட முடியாததாலே எந்த தேசத்து கனவானோ இல்லே யாரோட கணவனோ ஆரம்பிச்சி வச்ச இந்த ஆட்டம், இப்ப நண்பர் துபாய் ராஜா ( பயந்துறாதீங்க... பேருதான் துபாய் ராஜா. ஆனா நம்ம ஊரு காரர்தான் ) புண்ணியத்துலே என்கிட்டே வந்திருக்கு நான் கொஞ்சம் தள்ளிவிட்டு அப்புறம் தள்ளுறதுக்கு ஒரு நாலு பேரை கோர்துவிடனும்
சில விதிகள்
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..
ஸ்டார்ட் மீஜிக்....
1. A – Avatar (Blogger) Name / Original Name : நையாண்டி நைனா / விதி மூன்றின் படி A-வில் ஆரம்பமான கேள்வி மட்டுமே செல்லும்... (நாங்கல்லாம் ஒரு கொள்கை எடுத்து போட்டா அதை நாங்களே மீற மாட்டோம்.)
2. B – Best friend? : கேட்காம கடன் கொடுக்குறவங்களும், கொடுத்த கடனை கேட்காதவங்களும்
3. C – Cake or Pie? : கே-பை
4. D – Drink of choice? : இந்தியாவின் தேசிய பானம், ஆம் ஆத்மிக்கா சாய் தான் (தண்டோரா அண்ணன்.... ஓல்ட் மாங்குன்னு... சவுண்டு கொடுத்து என்னோட ப்ரீமியரை (நான் பிரஸ்டீஜெல்லாம் பார்குறவன் இல்லே ) கெடுக்க பார்ப்பாரு.... கண்டுக்காதீங்க...)
5. E – Essential item you use every day? : ஹி..ஹி...ஹி... ஐட்டம் அப்படின்னு சொல்லிட்டாலே அது எசன்சியல் தான்... (அப்படிதானே கேபிள் அண்ணே... ???) பிரியங்க சோப்ரா அண்ட் அனுஷ்கா அப்படின்னு சொல்லலாம், இருந்தாலும் சொல்றேன் நம்ம பொட்டிதாங்க
6. F – Favorite color? ரோஸ் (டைட்டாநிக்கி கீரோயினி பேரும் ரோசுதான்.... ஹி...ஹி...ஹி... )
7. G – Gummy Bears Or Worm? : நமகெல்லாம் நம்ம ஊரு "கல்கோனா" (அதாங்க உரல் முட்டாய்) முட்டாயும் கைலே வாட்சு மாதிரி கட்டுரை ஜவ்வு முட்டாயும் தான்.
8. H – Hometown? வீரத்தையும், விவேகத்தையும் விளைவிக்கும் ஊர்... "நெல்லை" தாங்க
9. I – Indulgence? மொக்கை போடுறதை தவிர நான் வேறை எதை சொன்னாலும் யாரும் நம்ப போறது இல்லே...
10. J – January or February? ஜனவரி தான் - அந்த மாசத்திலே தானே நாம "குடி"அரசு ஆனோம்.
11. K – Kids & their names? நானே ஒரு மீசை வச்ச......(சரி... சரி... சொல்லவில்லை....) அண்ணன் பிள்ளைகளும் அக்கா பிள்ளைங்களும் உண்டு.
12. L – Life is incomplete without? "E E E E E E E E E E E " அதாவது புன்னகை
13. M – Marriage date? அடப்பாவமே... ஆயுள் கைதிக்கு தீர்ப்பு வந்த நாளு மறந்து போகுமா? NOV-28
14. N – Number of siblings? அண்ணன் ஒன்னு அக்கா ஒன்னு
15. O – Oranges or Apples? ஆரஞ்சு, கூட்டணி தர்மத்திற்காக பிடிக்கும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்ச்சி
16. P – Phobias/Fears? மொக்கை தான்... ( பின்னே நமக்கே ஒரு ஆள் போட்டியாக வந்தா ரசிக்க முடியுமா?)
17. Q – Quote for today?அதிர்ஷ்டம் தாங்க ஒருமுறை கதவை தட்டும் ஆனா நம்ம உழைப்பு நாம சோர்ந்து போற வரைக்கும் தட்டுங்க....(யாரும் சொல்லல்ல... ஒரு நைட்டு - ஒத்தை ஓல்ட் மங்கு - ஒரே பீளிங்க்சு - ஒன் லைன் தத்துவம் ரெடி)
18. R – Reason to smile? நான், அதாவது நையாண்டி நைனாவாகிய நான், ரொம்ப நல்லவன். ( இப்ப உங்க முகத்திலே புன்னகை வருது தானே..!!!)
19. S – Season? இதென்னங்க கொடுமையா இருக்கு.... நாலு ஜிகிடிங்க நம்ம பக்கம் இருந்தா எல்லா சீசனும் நல்ல சீசன் தான்.
20. T – Tag 4 People?-
அன்பு அண்ணன் ஜாக்கி சேகர் அவர்கள்,
அன்பு அண்ணன் அத்திரி அவர்கள்,
அன்பு அண்ணன் தராசு அவர்கள்,
அன்பு அக்கா ஹேமா அவர்கள்
21. U – Unknown fact about me?: நான் பொய் சொல்வதில்லை.
22. V – Vegetable you don't like? பாகற்காய்
23. W – Worst habit? சோம்பேறி,(வாங்க பொறுக்குறது... கலக்க பொறுக்காதது)
24. X – X-rays you've had? வேலைக்கு சேருமுன் மெடிகல் டெஸ்ட்க்காக எடுத்தது...
25. Y – Your favorite food? பரோட்டா - குருமா - பொறித்த கோழி - ஆம்லெட் - கொத்து பரோட்டா (கேபிள் அண்ணன் போடுவதும்...)
26. Z – Zodiac sign? அக்கபோர் கொடுக்கும் அக்குவாரியஸ்
******************************************************************
1. அன்புக்குரியவர்கள் : அம்மா அப்பா
2. ஆசைக்குரியவர் : ஆடை துறந்தவர் ( காந்தி இல்லிங்கோ )
3. இலவசமாய் கிடைப்பது : இம்சை
4. ஈதலில் சிறந்தது : ஈட்டி கொடுப்பது ( அதாவது சம்பாதித்து..)
5. உலகத்தில் பயப்படுவது : உடனிருந்து கெடுப்பவர்களை
6. ஊமை கண்ட கனவு : ஊரை ஆள்வது
7. எப்போதும் உடனிருப்பது : எண்ணும் எழுத்தும்
8. ஏன் இந்த பதிவு : ஏக்கத்தை சொல்ல
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐயமின்றி கற்பது
10.ஒரு ரகசியம் : ஒரு நாள் நானு....
11.ஓசையில் பிடித்தது : ஓசி சரக்கடித்து புலம்புது
12.ஔவை மொழி ஒன்று : ஔவியம் பேசேல்.
13.(அ)ஃறிணையில் பிடித்தது: அ(ஃ)க்கபோர்
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
அனுபவம்,
கேள்வி-பதில்,
தொடர்,
நகைச்சுவை,
பதிவர் சதுரம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
கேள்வி பதிலிலும் சேட்டதானா?
Nov 28?
ஓகே ஓகே
//சின்ன வயசிலே சைக்கிள் டயரு, இல்லே கயறு, ஒன்னும் இல்லன்னா முதுகு பின்னாடி சட்டைய, இல்லன்னா அரைஞான் கயிறையே பெல்ட்டு மாதிரி செட்டப் செஞ்சி போட்டிருந்த பட்டன் இல்லாத டவுசரை பிடிச்சிக்கிட்டு ரயிலு விட்டு....//
ஆரம்பமே அருமை நைனா...
//C – Cake or Pie? : கே-பை//
அட்டகாசம்.
//G – Gummy Bears Or Worm? : நமகெல்லாம் நம்ம ஊரு "கல்கோனா" (அதாங்க உரல் முட்டாய்) முட்டாயும் கைலே வாட்சு மாதிரி கட்டுரை ஜவ்வு முட்டாயும் தான்.//
ம்ம்ம்.'கல்கோனா' காணாமலே போய் விட்டது.ஜவ்வு மிட்டாய் எங்கியாவது கண்ணுல படுது. :(
'அ' முதல் 'ஃ' வரையும் அருமை.
நைனா...நான் ஏற்கனவே அபூவும்,பெருமாளும் கூப்பிட்டுப் பதிவு போட்டுட்டேனே.
எங்கே என் பதிவுகளின் பக்கம் ரொம்ப நாளாக் காணோம்?
ஆஹா, கோத்து விட்டுட்டாங்கப்பா,
முயற்சி பண்றேன்.
பதிவுலக உளவாயரே..!
உளறுவாயரே வாழ்க.
(நானும் ஸ்மைலி போடலை)
சரி, ஒரு முடிவோட தான் இறங்கி இருக்கீங்க,
சேட்ட!!
சேட்ட!!
:-)
:-)))))))))))))))
எலேய்...சூப்பர்லேய்...
பெஸ்ட் ஆஃப் உங்க நையாண்டி!
:))
//U – Unknown fact about me?: நான் பொய் சொல்வதில்லை.//
மெய்யாலுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!
/*கார்த்திகைப் பாண்டியன் said...
கேள்வி பதிலிலும் சேட்டதானா?
Nov 28?
ஓகே ஓகே
*/
Thanks Nanbaa.
/*துபாய் ராஜா said...
ஆரம்பமே அருமை நைனா...
........................
'அ' முதல் 'ஃ' வரையும் அருமை.*/
மிக நன்றி நண்பா...
/* ஹேமா said...
நைனா...நான் ஏற்கனவே அபூவும்,பெருமாளும் கூப்பிட்டுப் பதிவு போட்டுட்டேனே.
எங்கே என் பதிவுகளின் பக்கம் ரொம்ப நாளாக் காணோம்?*/
ஆங்கில எழுத்தை வைத்து எழுதுங்க...
(வேலை பளுவின் காரணமாய்... பதிவுலகம் பக்கமே வரலை....)
/*தராசு said...
ஆஹா, கோத்து விட்டுட்டாங்கப்பா,
முயற்சி பண்றேன்.*/
நடத்துங்க... உங்க கை வண்ணத்தையும் பாப்போம்.
/*நாஞ்சில் நாதம் said...
:))*/
:)0)
/*♠ ராஜு ♠ said...
பதிவுலக உளவாயரே..!
உளறுவாயரே வாழ்க.
(நானும் ஸ்மைலி போடலை)*/
சரி தான்...
/*ghost said...
சரி, ஒரு முடிவோட தான் இறங்கி இருக்கீங்க,*/
Thanks Nanbaa.
/*அகல் விளக்கு said...
சேட்ட!!
சேட்ட!!
:-)*/
சொல்லுங்க, நான் மும்பைலே தான் இருக்கேன்... சொல்லுங்க "சேட்ட" என்ன பண்ணனும்?
/*ஸ்ரீ said...
:-)))))))))))))))*/
Thanks.
/*தண்டோரா ...... said...
எலேய்...சூப்பர்லேய்...*/
நன்றி அண்ணாச்சி.
/*வால்பையன் said...
பெஸ்ட் ஆஃப் உங்க நையாண்டி!*/
Thanks Mr.Vaal.
/* கடையம் ஆனந்த் said...
:))*/
:)))))
/*சொல்லரசன் said...
//U – Unknown fact about me?: நான் பொய் சொல்வதில்லை.//
மெய்யாலுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!*/
ஆமாங்கண்ணு.
Post a Comment