Friday, 18 September 2009

"குடிக்காதவன்" அதிரடி திரைப்படம் (பகுதி 2)

இந்த படத்தின் இடைவேளை வரையிலான பகுதி இங்கே...




அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே

(டேபிள் மேலே... மிக அருமையான பாரின் சரக்கு... மினு மினு என்று மின்னி கொண்டிருந்தது... அதை பார்த்து தான் மேற்கண்ட பாடலை "கேபிளும்", "90"-யும் மானசீகமா பாடிக்கொண்டிருந்தார்கள்.)

"என்னடா இது, பிரம்மலோகம் வந்தும் பிரேமானந்தா கால்ல விழுற மாதிரி இருக்கு இது..." என்றவாறே தனது பிளாக் பெர்ரி போனை எடுத்து... எதோ பேசி வைக்க...

"அண்ணே உனக்கு சோளப்பொரியே... ஆடம்பரம் இப்ப உனக்கு பிளாக் பெர்ரியா.... ஆஅவ்வ்வ்"

"போன் போட்டது நீங்க தானே..."தேன் பாச்சியது லேட்டஸ்ட் ஹாட் முமைத் கான்

"யா... யா.. ஐ ஒண்டி கால் யூ."

"யூ நோ அம்பானி பிரதர்ஸ்..."

"Yes"

"அப்படியா... அப்படின்னா... வீ..வீ....வீ....... வா..வா... வா...." என நைனா இழுக்க...
சட்டென... கேபிள் அண்ணன் நைனா சட்டைய பிடித்து இழுத்து. நைனா காதிலே ரகசியமாய்
"என்னடா சொல்லவரே... "
(நைனாவும் கிசு.. கிசுவென)
"வம்பாணி பிரதர்ஸ்-ன்னு"



இதை கவனியாமல்.... முமைத் கானோ முகம் பிரகாசமாய்...அலறுகிறார்...
"வார்னர் பிரதர்ஸ்!!!"

"அதான்.... அதான்.... அதேதான்.... யூ பிராயினி..." இது நைனா.

"பிராயினி...!!! வாட்?"

"அதாவது... அதாவது... மு...மு...மு...."

"டேய்... வெண்ணை நைனா... அடங்குடா...அவளை காண்டாக்கி அனுப்பி வச்சிராதே... மேடம், ஹீ இடியட், ஐ எக்ஸ்ப்ளைன்... யூ ப்ரைனி அதாவது மூளைக்காரங்க....ஹி ஸ்மால் பாய், ஐ பிக் பாய்..."

"ஐ சி..." என்றவாறே, முமைத் கானோ அவரது தொப்பையை பார்க்க...

"இட் இஸ் 'பீர்' தொப்பை, ஐ பர்பஸ்புல்லி மேட், ஐ ஆக்ட் டூ ரோல் இன் பிலிம் லைக் விக்ரம் ஒன் லைக் 'கம்பி' இன்னொன்னு லைக் 'கும்பி' தட்ஸ்வோய் மை 'கும்பி' இஸ் சோ...ஓகே...ஹி... ஹி..ஹி.. வீ டான்ஸ் பண்ணுவோம்... ஓகே.."



(இரண்டு பேரும் 'பருத்தி வீரன்' சரவணன் கார்த்தி மாதிரி ஆட்டம் போட்டார்கள், முமைத் கான் முகம் சுளிக்க... அண்ணன் கேபிள் சூழ்நிலை உணர்ந்து... தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி தன் யூத்து தொப்பையை லேசாக ஆட்டி ஆட்டி ஆடி "கெத்தை" மெய்ண்டைன் பண்ணறார்... )

ஆட்டம் முடிந்த உடன்...

"டேய்... நைனா... என்னிக்காவது நீ இந்த மாதிரி பாருக்கெல்லாம் வந்திருக்கியாடா... "

"இல்லண்ணே... நீங்க தெய்வம்னே... தெனாலி படத்திலே கமல் சொல்வார் அதை மாதிரி நீங்க ஒரு தெய்வ அண்ணன்னே..."

"நல்லா என்ஜாய் பண்ணு...டோன்ட் வொர்ரி... "கேபிள்" இஸ் ஹியர்?"

"எதுக்கு குடிச்சு புட்டு காசில்லண்ணே..ன்னு சொல்லிட்டு தூக்குல தொங்குறதுக்கா?"

"இங்கே வந்தும், இத்தனைய பார்த்தும் உன் எச்ச புத்தி போகுதா பாரு.... நான்சன்ஸ்... அண்ணன் இப்ப கோடீஸ்வரண்டா..."

"அண்ணே... உன்கிட்ட தான் காசே கிடையாதே... இதெல்லாம் எப்புடி...நீங்க இப்படி கோடீஸ்வரண் ஆனதை பார்க்க நம்ம அண்ணன் தண்டோரா இல்லியே..."

"டேய்... நான்சன்ஸ்.. மூடிகிட்டு குடி.."
(ரெண்டு மூணு ரவுண்டு போகிறது... ஆரவாரம் கொஞ்சம் குறைந்து இருவருக்கும் பெரியண்ணன் தண்டோரா நினைவு ஆட்டுகிறது... அதனால் எக்ஸ்ற்றாவ ரெண்டு லார்ஜை உள்ளே விடுகிறார்கள்)

"அண்ணே... நம்ம பெரிய அண்ணன் கூட இப்படி செலவு பண்ணது கிடையாது... உன்னை நெனைக்கும்போது.... ஆஆவ்வ்வ்வ் ...இப்படி ரெண்டு நாளிலே எப்படி உங்கிட்டே இவ்ளோ பணம் வந்தது... நீ அண்ணன் சொன்னா மாதிரி... அவரோட சொத்தை எல்லாம் அவர்கூட பொதைக்கலைன்னு நெனக்குறேன்... "(நைனா தாரை தாரை யாக கண்ணீர் விட்டு அழுகிறார்.)

"அதெல்லாம் பொதச்சிட்டேன், நீ பேசாமே அழுகாச்சி..பண்ணாமே சரக்கை அடி... "

"அப்புறம், உங்கிட்டே எப்படி இவ்ளோ காசு..."

"அண்ணன் சொன்ன மாதிரி அவரு சொத்தை எல்லாம் வித்தேன்..."

"ம்..ம்..ம்...."

"லம்ப்பா ஒரு ஏழு கோடி தேறிச்சு..."

"அடப்பாவி... இவ்ளோ வச்சிக்கிட்டா தான் நம்ம கிட்டே பஞ்சப்பாட்டு பாடுனாரு!!! , வீதி ஓரத்திலே பட்டை அடிச்சி மட்டையானாறு...ஹூம் அப்புறம்..."

அதை கொண்டு போய் பேங்கிலே போட்டேன்... என் பேருலே "

"என்ன நீ... இப்படி செய்யலாமா...???!!!"

"இன்னும் கேளுரா வெண்ணை... என் பேருலே போட்ட பிறகு, அவரு பேருல ஏழு லட்சம் ரூபாய்க்கு நூறு செக்கு எழுதி அவரு கூடவே பொதச்சிட்டேன்... இப்ப அவருக்கும் அதை ஹேண்டில் பண்ண ஈசியா இருக்கும் அவரும், அப்புறமா, அவரு, அவருக்கு சவுகரியப்படுற நேரத்திலே போய் மாத்திக்குவாறு...இப்ப சொல்லு நான் அவரு சொன்ன மாதிரி செஞ்சிட்டேனா இல்லியா... "

"அவ்வ்வ்வ்....அவ்வ்வ்வ்....அவ்வ்வ்வ்.... நான் ஒன்னு கேட்கட்டுமா...."

"இன்னொரு லார்ஜுங்குறதை தவிர வேற என்ன வேணாலும்.......ஹூம்..."

"இதெல்லாம் தப்பில்லையா..."

"ம்ம்ம்ஹும்.. தப்பில்லை... நாலு பேருக்கு நாலு விதமா சரக்கு வாங்கி கொடுக்குறதுக்கு எதுவும் தப்பில்லை..."

"அண்ணே... நீங்க நல்லவரா... கெட்டவரா.."

(டக்குன்னு அண்ணன் கேபிள், நாயகன் கமல் மாதிரி)
"தெரிலப்பா..."

(இருவரும்...போதையும்... சோகமும்... களிப்பும்... சேர்ந்த ஒரு புது கலவையால் மட்டையாகிறார்கள்)

(பேக் ரவுண்டில், இளைய ராஜா வாய்சில்)
தென்பாண்டி சீமையிலே... சரக்கோட போதையிலே... கேன் போல கிடந்தவனை... யாரொதைச்சாரோ... யாரொதைச்சாரோ...
===================================================
(எண்டு கார்டு: பாரதி ராஜா வாய்சில்)
இவர்கள் செய்தது.. சரியா தப்பா... என்று ஆராய்ந்தால்...
"விடை" பல கிடைக்கலாம்... சரக்குக்கு "கடை" பல இருப்பது போல்...

"சடை"களை கண்டு, "நடை"களை மாற்றாமல்
"தடை"களை கடந்து, "படை" நடத்துவோம்...

அளவிலா போதையுடன்...
நையாண்டி நைனா


THE END.


22 comments:

இரும்புத்திரை said...

முமைத் கான் இவங்க யாருக்கு கிடைச்சாங்க - மூணாவது பார்ட்டில் கலக்கி கலங்குகிறார்கள் - எழுவது உங்கள் அரவிந்த்

Raju said...

\\இரும்புத்திரை அரவிந்த் said...
முமைத் கான் இவங்க யாருக்கு கிடைச்சாங்க - மூணாவது பார்ட்டில் கலக்கி கலங்குகிறார்கள் -
எழுவது உங்கள் அரவிந்த்\\

பாஸூ, நீங்க சும்மாவே ஒரு நாளைக்கு ஆறு பதிவு போடுவீங்கோ..!
இப்ப இது வேறயா..?
நடத்துங்க.

பித்தன் said...

சரக்கு(கதை) போத தரலைன்னாலும், ஊறுகாய் (முமைத்கான்) ரொம்ப போதை தருகிறது.

மணிஜி said...

முமைத்கானையும் சாகங்கப்பா..ஆவியா அவகூட ஆஃப் அடிக்கணும்

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

நாலு பேரு மண்டைய பிச்சிகிட்டு ஓடனும்னா எவ்வளவு மொக்கை போட்டாலும் தப்பில்லை... :)

நல்லா போடுராங்கப்பா மொக்கை.. :)

ஹேமா said...

நைனா,வெள்ளிக்கிழமை வந்தாலே அப்பாடி...நான் போய்ட்டு திங்கட்கிழமை வரென்.

Cable சங்கர் said...

முமைத்கானுடன் ஆட்ட்ம் போட்ட டயர்டில் இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.. பர்ஸ்ட் ஹாப் சூப்பர்.. க்ளைமாக்ஸ் அழுகாச்சி.. :(

பிரபாகர் said...

அண்ணன் சொல்லை காப்பாற்ற
பணத்தையெல்லாம் வங்கி போட்டு
சின்னதாய் செக்கெழுதி
சுடுக்காட்டில் புதைத்துவிட்டு

தண்டோரா(வை) போட்டபடி
தண்ணியினை அடித்துவிட்டு
கொண்டாடும் நண்பர்களே
கலியுகத்தில் நீடு வாழ்வீர்...

பிரபாகர்.

அரங்கப்பெருமாள் said...

பட்டைய(நாட்டு சரக்கல்ல) கிளப்பிட்டியே நைனா... எப்பிடித்தான் யோசிப்பாங்களோ!!!

தினேஷ் said...

தல கேட்டதும் ஒரு ஐட்டத இட்டாந்து ஓட்டிட்டிங்களே..

தேங்கஸ்பா..

Nathanjagk said...

//"சடை"களை கண்டு, "நடை"களை மாற்றாமல்
"தடை"களை கடந்து, "படை" நடத்துவோம்... //
mmmm!! Every peck has it's own effect & impact. Enjoy!! LOL!!!

நையாண்டி நைனா said...

/* இரும்புத்திரை அரவிந்த் said...
முமைத் கான் இவங்க யாருக்கு கிடைச்சாங்க - மூணாவது பார்ட்டில் கலக்கி கலங்குகிறார்கள் - எழுவது உங்கள் அரவிந்த்*/

சரி நண்பா... காத்திருக்கிறோம்.

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
\\இரும்புத்திரை அரவிந்த் said...
முமைத் கான் இவங்க யாருக்கு கிடைச்சாங்க - மூணாவது பார்ட்டில் கலக்கி கலங்குகிறார்கள் -
எழுவது உங்கள் அரவிந்த்\\

பாஸூ, நீங்க சும்மாவே ஒரு நாளைக்கு ஆறு பதிவு போடுவீங்கோ..!
இப்ப இது வேறயா..?
நடத்துங்க.*/

ஆமா அதானே...

நையாண்டி நைனா said...

/* பித்தன் said...
சரக்கு(கதை) போத தரலைன்னாலும், ஊறுகாய் (முமைத்கான்) ரொம்ப போதை தருகிறது.*/

நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/* தண்டோரா ...... said...
முமைத்கானையும் சாகங்கப்பா..ஆவியா அவகூட ஆஃப் அடிக்கணும்*/

இங்கே பார்ரா ஆசையை.... அண்ணே பின்ன கந்தசாமி வந்து உங்களை பஞ்சரா ஆக்கிருவாறு...

நையாண்டி நைனா said...

/* Achilles/அக்கிலீஸ் said...
நாலு பேரு மண்டைய பிச்சிகிட்டு ஓடனும்னா எவ்வளவு மொக்கை போட்டாலும் தப்பில்லை... :)

நல்லா போடுராங்கப்பா மொக்கை.. :)*/

பாராட்டிற்கு நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/* ஹேமா said...
நைனா,வெள்ளிக்கிழமை வந்தாலே அப்பாடி...நான் போய்ட்டு திங்கட்கிழமை வரென்.*/

அக்கா..! இதுக்கெல்லாம் பயப்படலாமா...

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
முமைத்கானுடன் ஆட்ட்ம் போட்ட டயர்டில் இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.. பர்ஸ்ட் ஹாப் சூப்பர்.. க்ளைமாக்ஸ் அழுகாச்சி.. :(*/

அண்ணே படத்திலே எல்லா சுவையும் இருக்கணும்...

அதுக்குதான்... அப்புறம் அந்த ஏழு கோடில இன்னும் என் பங்கு வந்து சேரலை...

நையாண்டி நைனா said...

/* பிரபாகர் said...
அண்ணன் சொல்லை காப்பாற்ற
பணத்தையெல்லாம் வங்கி போட்டு
சின்னதாய் செக்கெழுதி
சுடுக்காட்டில் புதைத்துவிட்டு

தண்டோரா(வை) போட்டபடி
தண்ணியினை அடித்துவிட்டு
கொண்டாடும் நண்பர்களே
கலியுகத்தில் நீடு வாழ்வீர்...

பிரபாகர்.*/
நாங்க தண்டோராவை போட்டு சம்பாதிசோம் நீங்க அதை தண்டோரா போட்டு சொல்றீங்களே.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/* அரங்கப்பெருமாள் said...
பட்டைய(நாட்டு சரக்கல்ல) கிளப்பிட்டியே நைனா... எப்பிடித்தான் யோசிப்பாங்களோ!!!*/

நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
தல கேட்டதும் ஒரு ஐட்டத இட்டாந்து ஓட்டிட்டிங்களே..

தேங்கஸ்பா..*/
கஸ்டமர் சாட்டிஸ்பாக்சன் ரொம்ப முக்கியம் அதான்...

நையாண்டி நைனா said...

/* ஜெகநாதன் said...
//"சடை"களை கண்டு, "நடை"களை மாற்றாமல்
"தடை"களை கடந்து, "படை" நடத்துவோம்... //
mmmm!! Every peck has it's own effect & impact. Enjoy!! LOL!!!

ரொம்ப நன்றி அய்யா...