Friday, 31 July 2009

அப்பாவி ஆண்களின் அலறல்...



நமது நண்பர் லோகு உருகி உருகி காதல் கவிதை எழுதி கொண்டிருக்கிறார். அவர் வெகு விரைவில் இதோ உங்களுக்காக நான் படைத்த இந்த கவிதைகளையும் எழுதுவார். அவருக்கு இந்த "காதல்?" கவிதைகளை சமர்பிக்கிறேன்.

இது நண்பரின் கவுஜைக்கு, எதிர் கவிதை அல்ல. அல்ல.. அல்ல...


ராட்சசிகள்
எப்போதும்
குரூரமாகவே மட்டும்
வருவதில்லை..

நீ அன்று மணவறையில்.....


*********


தினமும் நீ
என்ன கொண்டு
அடிக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..


அன்றைய 'சேதாரத்தை'தெரிந்து கொள்ள..


***********

நீ 'கன்னம்' வைத்து
பேசும் பேச்சுக்காகவே,
ஒரு நாளில்
மணிக்கணக்கில் இயங்குகிறது


கடை வீதி 'கனகா ஒயின்ஸ்(bar attached)'..


********

பலருக்கு பல் வலியால்
வாய் இளிக்கும்..
இளிச்ச வாயே மருமகனாய் வந்தது


உன் பெற்றோருக்குத்தான்..


********

எடுத்து வீசிய
பின் தான் பிய்ந்தது,
நீ செய்து வைத்திருந்த

பேப்பர் ரோஸ்ட்டு..


********

நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சந்தையை தேர்வு
செய்து கொள்கிறது


'கோயில் யானை'..


*******

நீ 'வாங்க' என்று
இளித்துக் கொண்டு
வரவேற்கும் அழகுக்காகவே
உன் வீட்டிலிருந்து
தினமும் யாரவது வர
வேண்டிக் கொள்கிறோம்


நானும் உன் கைனடிக் ஹோண்டாவும்..


*******

ஊரிலுள்ள பைனான்சியர்கள்
எல்லாம் நம் வாசலில்..
உண்மையை சொல்
போன வாரம்


ஷாப்பிங் போய் இருந்தாயா???


********

எல்லா காட்டு யானைகளும்,
ஊருக்கு உள்ளேயே சுற்றுகின்றன..
உனக்கும்
முதுமலை தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்??


********

யார் கண்டார்?
உன் வீடு
தெற்கில் இருப்பதால் தான்
சுடுகாடா? ஊருக்கு தெற்க்கே
என்று சொல்கிறார்களோ என்னவோ??


*********

காதலுடன்????


60 comments:

Cable சங்கர் said...

நிஜமாய் காதல் வயப்பட்டு, பின் தெளீந்த ஒரு காதலனின் காதல் கவிதைகள் அற்புதம்.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
நிஜமாய் காதல் வயப்பட்டு, பின் தெளீந்த ஒரு காதலனின் காதல் கவிதைகள் அற்புதம்.*/

Thanks. Thanks. Thanks.

வால்பையன் said...

//நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சந்தையை தேர்வு
செய்து கொள்கிறது

'கோயில் யானை'.. //

யானையாலயே முடியலைனா நாமெல்லாம் எம்மாத்திரம்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹேமா said...

நானும்தான் எவ்வளவோ கஸ்டப்பட்டு யோசிச்சு எழுதுறேன்.இந்தளவுக்கு இல்ல நைனா.

அனுபவம் பேசியிருக்கோ !

லோகு said...

என்ன பண்றது நண்பா...
எனக்கு வாய்த்தது அப்படி...
உனக்கு வாய்த்தது இப்படி..

எப்பூடி..

பீர் | Peer said...

//Blogger லோகு said...

என்ன பண்றது நண்பா...
எனக்கு வாய்த்தது அப்படி...
உனக்கு வாய்த்தது இப்படி..

எப்பூடி..//

லோகு, கல்யாணம் ஆயிடுச்சா?

பீர் | Peer said...

//பலருக்கு பல் வலியால்
வாய் இளிக்கும்..
இளிச்ச வாயே மருமகனாய் வந்தது

உன் பெற்றோருக்குத்தான்.. //

இதை ரசித்தேன்...

(மேரா பப்பா குதுள் கே அந்தர் நகி)

தினேஷ் said...

அட அட என்னமா யோசிக்கிறீய .. சொந்த அனுபவம் இல்லாமல் ஆக வேண்டிக்கிறேன்..

dharshini said...

ஹி ஹி... ஜோக் நல்லா இருந்தது நைனா..
கவிதைகள் சிரிக்கும்படி நன்றாக இருந்தது... (ஆனா எல்லா பொன்னுங்களும் அப்படியேன்னு நெனச்சுடாதீங்க!)

மணிஜி said...

என் வீட்டுல நான் தான் பாஸ் தெரியுமில்லே..(ஆனா ஒண்ணு..இப்படி சொல்றதுக்கு என் பொண்டாட்டி கிட்ட அனுமதி வாங்கியிருக்கேன்)

சொல்லரசன் said...

//தினமும் நீ
என்ன கொண்டு
அடிக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..

அன்றைய 'சேதாரத்தை'தெரிந்து கொள்ள.. //


உங்க‌ சேதார‌த்துக்கு எங்க‌ளின் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்

பிரபாகர் said...

கலக்கல் நைனா...

அனைத்தும் அற்புதம்...

அப்பாவி ஆண்களின்
அலறலை அழகாக
தப்பாமல் சொன்ன என்
நையாண்டி நண்பனே

இப் பாரில் இதுபோன்ற
இன்னலை எதிர்நோக்கி
எப்போதும் பாரதனில்
இருப்போர்கள் பலருண்டு...

பிரபாகர்.

ஜெட்லி... said...

கலக்கு நையாண்டி....

cheena (சீனா) said...

நைனா

கண்ணாலம் ஆய்டுச்சா
இல்ல - சும்மாங்காட்டியா

எப்படி இருப்பினும் இப்படி எழுதுவது பேஷனாகி விட்டது

பாவம் பெண்குலம் - பெண் பாவம் பொல்லாதது - பாத்துக்கொ நைனா

Suresh said...

ஹீ ஹீ :-)

Suresh said...

எடுத்து வீசிய
பின் தான் பிய்ந்தது,
நீ செய்து வைத்திருந்த

பேப்பர் ரோஸ்ட்டு.

:-) ஹீ ஹீ ரொம்ப லேசா இருக்கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Raju said...

ஜெய் ஹோ....!
மேரா பாப்பாபீ குதுர்க்கோ அந்தர் நஹி ஹே..!
:)

வெண்பூ said...

கலக்கல் நையாண்டி நைனா.. சூப்பரு.. தபூ சங்கர் எதும் படிச்சிடப்போறாரு, நாண்டுகிடுவாரு.. :)))))

ஆ.ஞானசேகரன் said...

//பலருக்கு பல் வலியால்
வாய் இளிக்கும்..
இளிச்ச வாயே மருமகனாய் வந்தது ///


நல்ல நல்ல அனுபவம் உங்களுக்கு தலைவரே

நான் said...

super

Suresh Kumar said...

யார் கண்டார்?
உன் வீடு
தெற்கில் இருப்பதால் தான்
சுடுகாடா? ஊருக்கு தெற்க்கே
என்று சொல்கிறார்களோ என்னவோ?? //////////////////////

யார பார்த்து நையாண்டி ............... சூப்பர் நையாண்டி மொக்கை

தராசு said...

கலக்கல் நைனா

குடந்தை அன்புமணி said...

உங்க வீட்டில் நிஜத்தில் நடந்தது...
நிழலாக இங்கே... அப்படித்தானே...?

சூப்பருங்க...

கார்த்திகைப் பாண்டியன் said...

super..:-)))

அத்திரி said...

//Cable Sankar said...
நிஜமாய் காதல் வயப்பட்டு, பின் தெளீந்த ஒரு காதலனின் காதல் கவிதைகள் அற்புதம்.//


பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய...........ரிப்பீட்டு................

அத்திரி said...

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய...........ரிப்பீட்டு................

துபாய் ராஜா said...

யோவ் நைனா,எப்படிய்யா இதெல்லாம்??!!.......

//தினமும் நீ
என்ன கொண்டு
அடிக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..

அன்றைய 'சேதாரத்தை'தெரிந்து கொள்ள.. //

//பலருக்கு பல் வலியால்
வாய் இளிக்கும்..
இளிச்ச வாயே மருமகனாய் வந்தது

உன் பெற்றோருக்குத்தான்//

அலுவலகத்தில் குபீரென சிரித்ததில் எல்லா நாட்டுகாரனும் என்னா, என்னான்னுட்டான் !!

//நீ கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சந்தையை தேர்வு
செய்து கொள்கிறது

'கோயில் யானை'.. //

//எல்லா காட்டு யானைகளும்,
ஊருக்கு உள்ளேயே சுற்றுகின்றன..
உனக்கும்
முதுமலை தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்?? //

ஆனைக் கவிதைகளும் அருமை.

//ஊரிலுள்ள பைனான்சியர்கள்
எல்லாம் நம் வாசலில்..
உண்மையை சொல்
போன வாரம்

ஷாப்பிங் போய் இருந்தாயா???//

//யார் கண்டார்?
உன் வீடு
தெற்கில் இருப்பதால் தான்
சுடுகாடா? ஊருக்கு தெற்க்கே
என்று சொல்கிறார்களோ என்னவோ??//

சான்ஸே இல்லைய்யா ... :))

எதிர் கவிதைகள் எல்லாம் அருமை.

நையாண்டி வரிகளுக்கேற்ற நகைச்சுவை
படங்கள் அருமையிலும் அருமை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

யாரை பத்தி நைனா இம்புட்டு கவுஜையும்?

Anonymous said...

:-)))

நான் said...

சூப்பர்

நையாண்டி நைனா said...

/*
வால்பையன் said...
//நீ
கோவிலுக்கு வருவாய் என,
........
'கோயில் யானை'.. //
யானையாலயே முடியலைனா நாமெல்லாம் எம்மாத்திரம்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.*/

உங்களுக்கு புரியுது...
புரிய வேண்டிய ஆளுங்களுக்கு புரிய மாட்டேங்குது.

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நானும்தான் எவ்வளவோ கஸ்டப்பட்டு யோசிச்சு எழுதுறேன்.இந்தளவுக்கு இல்ல நைனா.
அனுபவம் பேசியிருக்கோ !*/

கம்பினி ரகசியங்கள் பகிர்வதற்கு அல்ல.

நையாண்டி நைனா said...

/*
லோகு said...
என்ன பண்றது நண்பா...
எனக்கு வாய்த்தது அப்படி...
உனக்கு வாய்த்தது இப்படி..

எப்பூடி..
*/
தம்பி இதுக்கு பேரு வலிக்காத மாதிரியே நடிக்கிறது.

நையாண்டி நைனா said...

/*
பீர் | Peer said...
//Blogger லோகு said...
..
எப்பூடி..//
லோகு, கல்யாணம் ஆயிடுச்சா?*/

அவரு மாமனாரு அவரை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாராம்.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அதான் அப்புடி.

நையாண்டி நைனா said...

/*பீர் | Peer said...
//பலருக்கு ....பெற்றோருக்குத்தான்.. //

இதை ரசித்தேன்...

(மேரா பப்பா குதுள் கே அந்தர் நகி)
*/
நன்றி அண்ணாத்தே... நன்றி.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
அட அட என்னமா யோசிக்கிறீய .. சொந்த அனுபவம் இல்லாமல் ஆக வேண்டிக்கிறேன்..*/

நன்றி நண்பா.... நன்றி.

நையாண்டி நைனா said...

/*dharshini said...
ஹி ஹி... ஜோக் நல்லா இருந்தது நைனா..
கவிதைகள் சிரிக்கும்படி நன்றாக இருந்தது... (ஆனா எல்லா பொன்னுங்களும் அப்படியேன்னு நெனச்சுடாதீங்க!)*/

வருகைக்கு நன்றி சகோதரி...

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
என் வீட்டுல நான் தான் பாஸ் தெரியுமில்லே..(ஆனா ஒண்ணு..இப்படி சொல்றதுக்கு என் பொண்டாட்டி கிட்ட அனுமதி வாங்கியிருக்கேன்)*/

நானெல்லாம் அனுமதி கேட்க வேண்டிய வேலையே இல்லை... ஹி..ஹி....

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//தினமும்..... கொள்ள.. //

உங்க‌ சேதார‌த்துக்கு எங்க‌ளின் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்*/

நண்பா கொஞ்சம் அசந்தா மலர் வளையமும் ஏற்பாடு பண்ணிருவீங்க போல் இருக்கே..!!!

நையாண்டி நைனா said...

/* Prabhagar said...
கலக்கல் நைனா...

அனைத்தும் அற்புதம்...

அப்பாவி ஆண்களின்
அலறலை அழகாக
தப்பாமல் சொன்ன என்
நையாண்டி நண்பனே

இப் பாரில் இதுபோன்ற
இன்னலை எதிர்நோக்கி
எப்போதும் பாரதனில்
இருப்போர்கள் பலருண்டு...

பிரபாகர்.
*/
நன்றி நண்பா.

அவர்களுக்கு ஒரு அறிவிப்பு மட்டுமே..

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
கலக்கு நையாண்டி....*/

Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*cheena (சீனா) said...
நைனா
கண்ணாலம் ஆய்டுச்சா
இல்ல - சும்மாங்காட்டியா
எப்படி இருப்பினும் இப்படி எழுதுவது பேஷனாகி விட்டது
பாவம் பெண்குலம் - பெண் பாவம் பொல்லாதது - பாத்துக்கொ நைனா*/

எங்களுக்கு சொல்ல நீங்க இருக்கீங்க... ஆனா ஆண்பாவம் செல்லாதுன்னு அவங்க நினைகிறாங்களே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*Suresh said...
ஹீ ஹீ :-)*/
Thanks Nanbaa.

நையாண்டி நைனா said...

/*Suresh said...
எடுத்து வீசிய
பின் தான் பிய்ந்தது,
நீ செய்து வைத்திருந்த

பேப்பர் ரோஸ்ட்டு.

:-) ஹீ ஹீ ரொம்ப லேசா இருக்கே
*/

வருகை மற்றும் ஆதரவிற்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
:-)))*/
:-))))))

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
ஜெய் ஹோ....!
மேரா பாப்பாபீ குதுர்க்கோ அந்தர் நஹி ஹே..!
:)*/
Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*வெண்பூ said...
கலக்கல் நையாண்டி நைனா.. சூப்பரு.. தபூ சங்கர் எதும் படிச்சிடப்போறாரு, நாண்டுகிடுவாரு.. :)))))*/

அண்ணே ரொம்ப நாளா ஆளை காணும். இப்ப வந்திருக்கீங்க. நன்றி அண்ணே.

நையாண்டி நைனா said...

/*
ஆ.ஞானசேகரன் said...
//பலருக்கு....மருமகனாய் வந்தது ///
நல்ல நல்ல அனுபவம் உங்களுக்கு தலைவரே.*/

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/* கிறுக்கன் said...
super*/
Thank you dear friend.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
யார் கண்டார்?
உன் வீடு
தெற்கில் இருப்பதால் தான்
சுடுகாடா? ஊருக்கு தெற்க்கே
என்று சொல்கிறார்களோ என்னவோ?? //////////////////////

யார பார்த்து நையாண்டி ............... சூப்பர் நையாண்டி மொக்கை*/

நன்றி நண்பா... தொடர்ந்து ஆதரவு கொடுக்குறீங்க நன்றி.

நையாண்டி நைனா said...

/* தராசு said...
கலக்கல் நைனா*/
Thanks annaa.

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
உங்க வீட்டில் நிஜத்தில் நடந்தது...
நிழலாக இங்கே... அப்படித்தானே...?

சூப்பருங்க...*/

நீங்களும் எப்படி வலிக்காத மாதிரியே நடிக்குறீங்க.... ஹி.ஹி.ஹி..

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
super..:-)))*/

Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
//Cable Sankar said...
நிஜமாய்... அற்புதம்.//
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய...........*/

என்னங்க அர்த்தம்?

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய...........*/

ஒன்னும் புரியலையே

நையாண்டி நைனா said...

துபாய் ராஜா said...
யோவ் நைனா,எப்படிய்யா இதெல்லாம்??!!.......

//தினமும்...கொள்ள.. //

//பலருக்கு...
உன் பெற்றோருக்குத்தான்//

அலுவலகத்தில் குபீரென சிரித்ததில் எல்லா நாட்டுகாரனும் என்னா, என்னான்னுட்டான் !!

//நீ.. 'கோயில் யானை'.. //

//எல்லா... சொன்னாய்?? //

ஆனைக் கவிதைகளும் அருமை.

//ஊரிலுள்ள.. இருந்தாயா???//

//யார்... என்னவோ??//

சான்ஸே இல்லைய்யா ... :))

எதிர் கவிதைகள் எல்லாம் அருமை.

நையாண்டி வரிகளுக்கேற்ற நகைச்சுவை
படங்கள் அருமையிலும் அருமை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
*/

நன்றி நண்பா....
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
யாரை பத்தி நைனா இம்புட்டு கவுஜையும்?*/

யாரை பற்றியும் இல்லே.. இது ஒரு கலைச்சேவை.

நையாண்டி நைனா said...

/* கடையம் ஆனந்த் said...
:-)))*/
Thanks Nanba...

நையாண்டி நைனா said...

/*கிறுக்கன் said...
சூப்பர்*/

நன்றி.. மிக நன்றி.