Tuesday, 28 July 2009
கவிதை மணம்.
ஒருநாள் இருப்பான்,
மறுநாள் இருக்கமாட்டான்,
ஒருநாள் ஒருவன் பெரியவன்,
மறுநாள் அவனே சிறியவன்,
ஒருநாள் ஒருவன் சிறியவன்,
மறுநாள் அவனே பெரியவன்,
இதென்ன தத்துவம்?
வாழ்க்கை தத்துவம்.
அட...
நம்ம தமிழ்மண
மறுமொழியாளர்கள் தான்..!!!
பின் குறிப்பு:
1: இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.
2: நானும் கவிதை எழுத போறேன் என்று சொன்னதற்கு விழுந்து விழுந்து சிரித்தார், ஒரு "பிராபல" பதிவர். அவருக்கு சவால் விட இந்த கவிதையை எழுதினேன். எது எப்படியோ உங்க கருத்தை சொல்லிட்டு போங்க. நீங்க அவரு கட்சி என்றால் கமண்ட் சொல்லிட்டு போங்க, என்னோட கட்சி என்றால் பின்னூட்டம் போட்டுட்டு போங்க.
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.
//
ஆகா. அற்புதம். சிங்கம் களம் இறங்கிடீச்சு.
யார் இந்த பிராபல பதிவர் எளக்கியவாதி "கார்த்திகைப் பாண்டியனா" பாஸு..!
இதுக்கு யாராவது எதிர்கவிதை எழுதுவாங்களான்னு காத்துருக்கேன்.
:)
ஒருவேளை அந்த பின்னாலடை நகரப் பதிவரா இருப்பாரோ..?
நைனா, வர வர உங்கள நிறைய பேரு கொலவெறியோட தேடிக்கிட்டு இருக்காங்கன்னு உளவுத்தொற ரிப்போட்டு சொல்லுது.
/*கடையம் ஆனந்த் said...
ஆகா. அற்புதம். சிங்கம் களம் இறங்கிடீச்சு.*/
என்னை சிங்கம் என்று சொல்லி... உங்களோட கவிதை தாகத்தை சொல்லி இருக்கீங்க... ரொம்ப நன்றி நண்பா...
/*
டக்ளஸ்... said...
யார் இந்த பிராபல பதிவர் எளக்கியவாதி "கார்த்திகைப் பாண்டியனா" பாஸு..!
இதுக்கு யாராவது எதிர்கவிதை எழுதுவாங்களான்னு காத்துருக்கேன்.
:)
*/
அடப்பாவி... நீ ஏனப்பா எலைக்கியவாதிய போர்க்களதுலே தேடுறே..!!!
தம்பி... முடிஞ்சா நீ போடப்பா... எதிர் கவுஜைய..
//ஒருநாள் இருப்பான்,
மறுநாள் இருக்கமாட்டான்,
ஒருநாள் ஒருவன் பெரியவன்,
மறுநாள் அவனே சிறியவன்,
ஒருநாள் ஒருவன் சிறியவன்,
மறுநாள் அவனே பெரியவன்,
இதென்ன தத்துவம்?
வாழ்க்கை தத்துவம்.
அட...
நம்ம தமிழ்மண
மறுமொழியாளர்கள் தான்..!!!//
கீதையின் சாரம் மாதிரி இதுதான் வலையுலகின் சாரம்,கைலி,லுங்கி எல்லாம்.........
:))
/*டக்ளஸ்... said...
ஒருவேளை அந்த பின்னாலடை நகரப் பதிவரா இருப்பாரோ..?
நைனா, வர வர உங்கள நிறைய பேரு கொலவெறியோட தேடிக்கிட்டு இருக்காங்கன்னு உளவுத்தொற ரிப்போட்டு சொல்லுது.*/
அய்யா டக்கு,
சிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..
நான் யாருன்னு ஊருக்கே தெரியும், நீ யாருன்னும் ஊருக்கே தெரியும்,
நாம ரெண்டு பெரும் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்.
பிள்ளையையும் கிள்ளிவுட்டுட்டு, குவாட்டரையும் காட்டுறியா...???
\\தம்பி... முடிஞ்சா நீ போடப்பா... எதிர் கவுஜைய..\\
தல..கவிதையா இருந்தா எதிர்கவிதை போடலாம்..
ஒரு காவியத்துக்கு எப்டி போட முடியும்..
வேணுமின்னா "கலைஞர்" கிட்ட கேட்டுப் பாக்கலாம்.
/*
துபாய் ராஜா said...
//ஒருநாள் இருப்பான்,
அட...
நம்ம தமிழ்மண
மறுமொழியாளர்கள் தான்..!!!//
கீதையின் சாரம் மாதிரி இதுதான் வலையுலகின் சாரம்,கைலி,லுங்கி எல்லாம்.........
:))
*/
(தங்கபதக்கம் படத்திலே வருகிற வசனம் மாதிரி படிக்கவும்...)
சாரம் கிழிஞ்சிருந்தா, கோபுரத்துக்கு பக்கத்திலே இருக்கிற டெய்லர்கிட்டே கொடுக்கலாம்... கோபுரத்து சாரமே சரிஞ்சு அந்த டெய்லர் மேலே விழுந்தா எங்கே போய் முறையிடலாம்...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\(தங்கபதக்கம் படத்திலே வருகிற வசனம் மாதிரி படிக்கவும்...)\\
You Missed One thing...
Twinkle twinkle Little Star...
how i wonder what you are..
Up above the well so high..
Like a Diamond in the Sky..
Twinkle twinkle Little Star...
how i wonder what you are..
Up above the well so high..
Like a Diamond in the Sky..
Twinkle twinkle Little Star...
how i wonder what you are..
Up above the well so high..
Like a Diamond in the Sky..
/*
டக்ளஸ்... said...
\\தம்பி... முடிஞ்சா நீ போடப்பா... எதிர் கவுஜைய..\\
தல..கவிதையா இருந்தா எதிர்கவிதை போடலாம்..
ஒரு காவியத்துக்கு எப்டி போட முடியும்..
வேணுமின்னா "கலைஞர்" கிட்ட கேட்டுப் பாக்கலாம்.
*/
ஆகா... யாரைன்னாலும் கேட்டு பாரு....
ஆனா பைத்தியக்காரன் அண்ணாத்தே.. கிட்டே மட்டும் "நைனா ஏன் அப்படி எழுதினாரு"ன்னு கேட்டு வச்சிராதே... அப்புறம் அந்த பதிவை படிக்க எனக்கு மூணு நாளு வேணும்... இன்னும் தமிழ் அகராதிலாம் நான் தேடி போக வேண்டி வந்துரும்.
(அண்ணன் பைத்தியக்காரன் அவர்களே, மன்னித்து விடுங்கள் இந்த சிறுவனை. கலாய்க்க மட்டுமே.... தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்)
\\அப்புறம் அந்த பதிவை படிக்க எனக்கு மூணு நாளு வேணும்... இன்னும் தமிழ் அகராதிலாம் நான் தேடி போக வேண்டி வந்துரும்.\\
உங்களுக்காச்சும் பதிவ படிக்கும்போதுதான் இது வேணும்..
நான்லாம் எப்பவுமே அங்க போறதுக்கு முன்னாடியே முன்னெச்சரிக்கையா ஒரு குவார்ட்டர் வாங்கி வாச்சுருவேனாக்கும்.
அதுனால தைரியாம அவராண்ட கேக்கலாம்.
கிளம்பியாச்சா ?
//டக்ளஸ்... said...
ஒருவேளை அந்த பின்னாலடை நகரப் பதிவரா இருப்பாரோ..?//
யாருங்க அவரு?
//நையாண்டி நைனா said..
அய்யா டக்கு,
சிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..//
நைனா குவாட்டருன்னா, டக்லஸ் மிக்ஸிங் என்பது பதிவுலகம் அறிந்ததே!!!!!!!
.//நீங்க அவரு கட்சி என்றால் கமண்ட் சொல்லிட்டு போங்க, என்னோட கட்சி என்றால் பின்னூட்டம் போட்டுட்டு போங்க.//
முடியல............ரைட்டு ............நடக்கட்டும்
ஹா ஹா! நீங்கள் எழுதும் மிகவும் உண்மையான விசயங்கள் கூட நகைச்சுவைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு விடுகிறது. அருமை நைனா.
\\ஹா ஹா! நீங்கள் எழுதும் மிகவும் உண்மையான விசயங்கள் கூட நகைச்சுவைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு விடுகிறது. அருமை நைனா.\\
இன்னா தெகிரியம் இருந்தாக்கா, எங்க நைனாவ காமிடி பீசுன்னு சொல்லுவீங்க..!
:)
ha..ha..haa,,
நைனா,என்ன ஒரு அழகான கவிதை.இதுநாள் வரைக்கும் நான் அறிந்திருக்காத சில விஷயங்களை இந்தக் கவிவரிகள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.
நன்றி நைனா.
//இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.//
நான் பின்னூட்டம் போடல நண்பா
கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு நிகர்
புதிதாய் யார் நைனா?
கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு நிகர்
புதிதாய் யார் நைனா?
நைனா ஃபுளோவ நிப்பாட்ட வேற வழி தெரியல...
சும்மா ஜோக்குக்கு, ரசிக்கிற மாதிரி இருக்கு, லக லக.....
பிரபாகர்.
நான் பின்னூட்டம் போட்டுட்டேன்..
கேபிள் சஙக்ர்
அன்பின் நையாண்டி நைனா,
எதற்காக இந்த மன்னிப்பு எல்லாம். கலாய்த்தால்தான் உங்கள் அழகே. அதனால்தான் உங்கள் இடுகைகளை சந்தோஷமாக வாசிக்கிறேன். வாய்விட்டு சிரிக்கிறேன். தாராளமாக, ஏராளமாக கலாயுங்கள். ரசிக்க காத்திருக்கிறேன்.
அன்பின் டக்ளஸ்,
அதிகம் குடிக்காதீங்க. உடம்பு கெட்டுடும். வேணும்னா பதிவு எழுதறதை நான் குறைச்சுக்கறேன் :-(
தோழமையுடன்
பைத்தியக்காரன்
\\அதிகம் குடிக்காதீங்க. உடம்பு கெட்டுடும். வேணும்னா பதிவு எழுதறதை நான் குறைச்சுக்கறேன் :-(\\
அண்ணே,
நான் குவார்ட்டர் வாங்கி வச்சுருவேன்னுதான் சொன்னேன். ஆனா, குடிப்பேன்னு சொல்லலயே... சொல்லலயே... சொல்லலயே...!
இப்ப என்ன பண்ணுவீங்க..?
இப்ப என்ன பண்ணுவீங்க..?
:-)
அதே தோழமையுடன்
டக்ளஸ்...
அன்பின் டக்ளஸ்,
அப்படியானால், வாங்கிய சரக்கை, இடுகைகளை வாசித்துவிட்டு திரும்பவும் கடையிலேயே கொடுத்துவிடுவீர்களா? இப்படியான பச்ச குழந்தையும் என் இடுகைகளை வாசிப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அப்பிடித்தான் ஒருதடவை உங்களோட "பழையனூர் நீலி"ன்னு ஒரு பதிவ படிச்சுட்டு, சரக்கை திரும்ப கடையில கொடுக்கப் போகுபோது,பயபுள்ள ரிடர்ன் எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டான். வேறென்ன பண்றது, அப்பிடியே அத நைனாகிட்ட கொடுத்துட்டேன். அத, அந்தாளு ராவா அடிச்சதா கேள்விப்பட்டேன். இனிமேல் அடுத்த குவார்ட்டர் வர்ற சனிக்கிழமைதான். (போட்டி முடிவுகளுக்குக்கு).
அப்பறம், நான் பச்சபுள்ள இல்ல.
அதே தோழமையுடன்
டக்ளஸ்.
/*Anbu said...
:-))*/
:)
/*சூரியன் said...
கிளம்பியாச்சா ?*/
ஆமா மக்கா....
தொல்லை தாங்க முடியலை.
/*
சொல்லரசன் said...
//டக்ளஸ்... said...
ஒருவேளை அந்த பின்னாலடை நகரப் பதிவரா இருப்பாரோ..?//
யாருங்க அவரு?
*/
நீங்க ஏன் பதறுறீங்க...
நீங்க ரொம்ப நல்லவருங்க.
இந்த சேட்டை பண்ணுறது எல்லாம், "வோர்ட் கிங்".
/*
சொல்லரசன் said...
//நையாண்டி நைனா said..
அய்யா டக்கு,
சிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..//
நைனா குவாட்டருன்னா, டக்லஸ் மிக்ஸிங் என்பது பதிவுலகம் அறிந்ததே!!!!!!!
*/
நண்பா உங்களுக்கும் கவிதை வருது நண்பா...!!!
நீங்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?
/*அத்திரி said...
.//நீங்க அவரு கட்சி என்றால் கமண்ட் சொல்லிட்டு போங்க, என்னோட கட்சி என்றால் பின்னூட்டம் போட்டுட்டு போங்க.//
முடியல............ரைட்டு ............நடக்கட்டும்
*/
என்ன நண்பா இப்படி சொல்லீட்டிங்க...!
/*
வெ.இராதாகிருஷ்ணன் said...
ஹா ஹா! நீங்கள் எழுதும் மிகவும் உண்மையான விசயங்கள் கூட நகைச்சுவைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு விடுகிறது. அருமை நைனா.
*/
முதல் வருகைக்கு நன்றி நண்பரே...
தொடர்ந்து நம்ம மொக்கைய படிக்க வாங்க... சந்தோசமா இருங்க.
/*டக்ளஸ்... said...
இன்னா தெகிரியம் இருந்தாக்கா, எங்க நைனாவ காமிடி பீசுன்னு சொல்லுவீங்க..!
:)
*/
மிஸ்டர் காமடி பீசு... நீங்க கொஞ்சம் சிண்டு முடியாமே இருங்கோ,
/*
T.V.Radhakrishnan said...
ha..ha..haa,,*/
ஐயா உங்க பதிவை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களா? இல்லே உங்களையே ஹேக் பண்ணிட்டாங்களா?
இல்லே...
எப்போதும் ஸ்மைலி மட்டுந்தானே போடுவீங்க...
இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்னோட கவிதைன்னு நினைக்கிறேன்...
/*
ஹேமா said...
நைனா,என்ன ஒரு அழகான கவிதை.இதுநாள் வரைக்கும் நான் அறிந்திருக்காத சில விஷயங்களை இந்தக் கவிவரிகள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.
நன்றி நைனா.
*/
மிக நன்றி... மிக நன்றி...
உங்களோட இந்த பாராட்டு என்னை வேறு தளத்திற்கு சிந்திக்க செய்கிறது... மிக நன்றி.
என்னோட இலக்கு டைரக்ட்டா சாகித்ய அக்காடமி என்று சொல்லாமல் சொல்கிறீர்கள், நன்றி.
/*
ஆ.ஞானசேகரன் said...
//இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.//
நான் பின்னூட்டம் போடல நண்பா
*/
உங்கள்ட்டே பின்னூட்டம் வாங்கும் அளவிற்கு நான் என்னை வளர்த்து கொள்கிறேன் அய்யா... நண்பா...
/*
Prabhagar said...
கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு நிகர்
புதிதாய் யார் நைனா?
.....
பிரபாகர்.*/
மகிழ்ச்சிப் பெரும் பிரவாகம் என்னை அடித்து செல்கிறது நண்பா.
/*shortfilmindia.com said...
நான் பின்னூட்டம் போட்டுட்டேன்..
கேபிள் சஙக்ர்*/
மிக நன்றி அண்ணாத்தே...
பைத்தியக்காரன் said...
அன்பின் நையாண்டி நைனா,
எதற்காக இந்த மன்னிப்பு எல்லாம். கலாய்த்தால்தான் உங்கள் அழகே.
..................
அன்பின் டக்ளஸ்,
அதிகம் குடிக்காதீங்க...
தோழமையுடன்
பைத்தியக்காரன்*/
மிக நன்றி அண்ணா... மிக நன்றி.
தொடர்ந்து ஆதரவு தரும் தம்பி டக்ளஸ் அவர்களுக்கு வெறும் நன்றி மட்டும் போதுமானது அல்ல... இருப்பினும் நன்றி.
(உனக்கு அதுக்காக சரக்கெல்லாம் வாங்கி தரமுடியாது... நீ கேட்டா மாதிரி.)
இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்./////////////////////////////
ஐயா நையாண்டி நான் பின்னூட்டம் இட்டுட்டேன் ............ போதும் பா ...............
போட்டியில நானும் தான் இருக்கேன்!
Post a Comment