Friday, 24 July 2009

ஐயோ... நானும் சரக்கடிக்கணும்...



"ஆண்டவனை.., மாநேஜரை.., பொண்டாட்டியை..." என நேரத்திற்கேற்றாற் போல திட்டி தன் பேச்சு, தன் காதிற்கே மருந்துக்குக் கூட விழுந்து விடக் கூடாது என நினைக்கும் ஒருவன்.

"ச்சும்மா, டைம்பாஸ் மச்சி போதை தெளிஞ்சவுடனே நானே எந்திச்சி போயிருவேன்" எனக் கூறும் ஒருவன்.

அவளின் முகம் பாராமல் அவளை ஏக வசனத்தில் "காதல் கோட்டை" பாணியில் தாலி அறுக்கும் ஒருவன்.

ஏற்கனவே ரெண்டு பீரு உள்ளே போய் இருப்பது தெரிந்தும் அடுத்து ஹாட்டுக்கு அடி போடும் மற்றொருவன்.

இப்பிடி தினுசு தினுசாய் குடிக்கும் எத்தனையோ பேரை நான் பாத்துருக்கேன். நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.

மேற்சொன்ன அனைத்தும்,"அவன்"களன்றி "அவள்"களுக்கும் பொருந்தும் என்பதில் 'சிப்ஸ'ளவும் ஐயம் வேண்டாம். "சரக்கு" இந்த வார்த்தை, இன்றைய‌ இளைஞர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் ஒரு லாகிரி வஸ்து. சரி, இப்ப எதுக்கு இந்த மேட்டர்ன்னு நீங்க கேக்கலாம்.உஹூம்..கேக்கனும். அப்பத்தான் நான் குடிச்சிபுட்டு உளர முடியும்.

இவ்வளவு பாத்ததுனால எனக்கு போதைன்னா என்ன..? நம்மளும் சரக்கடிக்கலாமா..? நமக்கும் வாங்கி கொடுக்க ஒரு இளிச்சவாயன் சிக்குவானா?..? அப்டிங்கிற சந்தேகம் வந்துச்சு. உடனே நான் இங்க முதல்ல ஒருத்தன சொல்லிருக்கிறேனே அவன்கிட்ட கேட்டேன். அவன் சொன்னான். "மாப்ள, சரக்கு புனிதமான‌து"ன்னான்."ஒருவனுக்கு ஒரு பிராண்டுன்னு இருக்கனும்டா. அதுதான் பண்பாடு.அப்பத்தான்டா சொர்க்கம், ஒடம்புக்கும் நல்லது.சும்மா டைம்பாஸ் பண்ணக் கூடாதுடா"ன்னான்.

சரி,எல்லாத்தரப்பு வாதத்தையும் கேக்கனுமா இல்லையா..? ன்னு எனக்குள்ள இருந்த பஞ்சாயாத்துப் பெருசு சொல்ல, இரண்டாவது ஆள்கிட்ட கேட்டேன். அவன்,"மச்சி, வாழ்க்கையில எல்லாமே ஒரு எதிர்பார்ப்புத்தானடா..!, ஒவ்வொரு சரக்கும் ஒவ்வொரு மாதிரி, நாம எதிர்பாக்குறது போதைன்னாலும் அதை வெரைட்டியா பார்க்கணும்டா, போதை தெளிஞ்ச பிறகு விட்டுட்டு போயிரனும்"டா. அப்பிடின்னு சொன்னான். நான் உடனே முதல் ஆளு சொன்ன‌ "ஒருவனுக்கு ஒரு பிராண்டு" மேட்டர எடுத்து விட்டேன்.

உடனே நம்மாளு. "அப்போ, என்ன மசு***டா உலகத்திலே இத்தனை பிராண்டு வகைங்க?"ன்னான். "லீகல் பிராண்டு காணாதுன்னு கள்ளச் சாராய ஊரல் வேறை"ன்னு அடுத்தடுத்து போட்டுத் தாக்கினான். எனக்கு அப்பவே கண்ணக் கட்ட ஆரம்பிச்சுருச்சு. ரைட்டு. இது வேற எங்கயோ போகுது. நம்ம ஓடிருவோம்ன்னுட்டு,மூணாவது ஆள்கிட்ட போயி அதே கேள்விய கேட்டேன்.

அவன் சொன்னான், "மாப்ள, சரக்குக்கு சாதி, மத பேதமெல்லாம் தெரியாது. யாரடிச்சாலும் போதை தன்னாலே ஏறும்டா. ஆனா மோந்து பார்த்த உடனே போதை வரக்ககூடாதுன்னான்". அவனும் முதல் ஆள் சொன்ன மாதிரியேதான் கிட்டத்தட்ட முடிச்சான். சரின்னுட்டு நாலாவது ஆள்கிட்ட போயி கேட்டா!!!, "மச்சி, அவன் எப்பிடி சரக்கடிக்கிறான்னு எனக்கு தெரியாதுடா ஆனா நான் மூடியை தொறந்த உடனே வாசம் பட்டே போதையாயி இருக்கேன்" அப்டின்னான்.

இந்த நாலு பேர்க்கிட்டயும் கேட்டுட்டு மண்டை காய்ஞ்சு போயி, "நம்ம இனிமேல் எவன்கிட்டயும் ஓசிலே சரக்கடிக்க மூச்சை போடக்கூடாது, சொந்த காசை எடுத்து போய் தாண்டா சரக்கு அடிக்கணும்டா டக்லஸ்ஸு..."ன்னு முடிவு பண்ணின கரெக்டா 2 நிமிஷத்துல "நீ எந்த பாருக்கு போய் எந்த சரக்கு வாங்கி எப்படி அடிச்சி போதை ஏத்திகிட்டு வந்தாலும் நீ அவனுங்களை பழி வாங்க முடியாதுடா @#$%^%^!.... அவனுங்க அதுக்குள்ளே மட்டையாயிருவானுங்க"ன்னு எனக்குள்ள இருந்த "சந்தானம்" சொல்லி என்னை டரியலாக்கினான்.

பின் குறிப்பு:
இந்த கதையில் வரும் "டக்லஸ்" நமது சக பிரபல பதிவர் "டக்ளஸ்..." அல்ல. மீறி யாரேனும் சிண்டு முடியும் வேலை செய்தால் அதற்கு என் கதாநாயகன் "டக்லஸ்ஸொ", நானோ பொறுப்பேற்க மாட்டோம் என்று இங்கேயே அறிவிக்கிறேன்.

முக்கிய அறிவிப்பு, இது நண்பர் ராஜு...வின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல.

44 comments:

நாஞ்சில் நாதம் said...

:))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

இல்ல இல்லன்னு போதைல உளரிட்டய பங்காளி ....

அத்திரி said...

போலாம் ரைட்டு

சொல்லரசன் said...

எங்க கொ.ப.செ விற்கு எதிர்பதிவு போட்ட நைனாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு,
அகில உலக அபி அக்கா முன்னேற்றக் கழகம்

Raju said...

\\எங்க கொ.ப.செ விற்கு\\

இது எப்ப ஆச்சு..?
சொல்லவே இல்ல..!

Raju said...

\\அகில உலக அபி அக்கா முன்னேற்றக் கழகம்\\

யோவ், சொல் ராசா அதுக்கு நான் தலைவர்யா..!

Anonymous said...

:))

வால்பையன் said...

//"மாப்ள, சரக்குக்கு சாதி, மத பேதமெல்லாம் தெரியாது. யாரடிச்சாலும் போதை தன்னாலே ஏறும்டா. //

இந்த ஒரு வார்த்தைக்காகவே ஃபுல்லு அடிச்சிட்டு குப்புறபடுக்கலாம்!

தினேஷ் said...

//ஏற்கனவே ரெண்டு பீரு உள்ளே போய் இருப்பது தெரிந்தும் அடுத்து ஹாட்டுக்கு அடி போடும் மற்றொருவன்.//

அட உள்ள போன குளிர்ச்சியை சரி பண்ண வேணாமா ?

// "மாப்ள, சரக்கு புனிதமான‌து"//

ஆமா மச்சான்

//ஒருவனுக்கு ஒரு பிராண்டுன்னு இருக்கனும்டா. //

வாழாத்தெரியா போதமகன்

தினேஷ் said...

//லீகல் பிராண்டு காணாதுன்னு கள்ளச் சாராய ஊரல் வேறை"//

இவந்ந்தாஆய்ய்யா உம்ம் போஓஓதஅமக....(கொர்ர்ர்ர்ர்ர்)

தினேஷ் said...

/இந்த கதையில் வரும் "டக்லஸ்" நமது சக பிரபல பதிவர் "டக்ளஸ்..." அல்ல. மீறி யாரேனும் சிண்டு முடியும் வேலை செய்தால் அதற்கு என் கதாநாயகன் "டக்லஸ்ஸொ", நானோ பொறுப்பேற்க மாட்டோம் என்று இங்கேயே அறிவிக்கிறேன்.

முக்கிய அறிவிப்பு, இது நண்பர் ராஜு...வின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல.//

இல்ல இல்லனே உண்மைய உளரிட்டேயே பங்காளி..

கலையரசன் said...

எல்லாரும் இப்ப சரக்காண்டவரை பத்தி எழுதறீங்க?
அப்ப நானும் அடுத்த பதிவு "சரக்கே சவம்" ன்னு பதிவு போட்டுடறேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட்டு நடத்துங்க....

Suresh said...

செம கிக்கு ;) பதிவு இந்த பதிவை படிச்சிட்டு ஒருத்தர் சரக்கு அடிச்சி மட்டையாகிட்டாரு... யாரு ...

Cable சங்கர் said...

குற்றாலம் போய் வந்தா அதைவிட அடிய பின்னி விட்டிருக்கீங்க..நைனா..

தராசு said...

கலக்கல்

Suresh Kumar said...

அங்க காதல்னா இங்க சரக்கடிப்பா ? அங்க பிகர்னா இங்க பீரா நடத்துங்கோ ......................

மணிஜி said...

thalai..thamizhla adikka mutiyalai..attakaasam..

கார்த்திகைப் பாண்டியன் said...

is this a pozhappu? avvvvv.. ok ok.. nadakattum..:-)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

ஆ.ஞானசேகரன் said...

நடக்கட்டும்....

நையாண்டி நைனா said...

/*நாஞ்சில் நாதம் said...
:))*/
:-)))))

நையாண்டி நைனா said...

/*நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
இல்ல இல்லன்னு போதைல உளரிட்டய பங்காளி ....*/

மக்கா உங்க கவிதைய படிச்சிதான் உளரிட்டேன்.( இது எப்படி இருக்கு???? )

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
போலாம் ரைட்டு*/

"லெப்ட்டு" போனா வுடமாட்டீங்களா????

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
எங்க கொ.ப.செ விற்கு எதிர்பதிவு போட்ட நைனாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு,
அகில உலக அபி அக்கா முன்னேற்றக் கழகம்*/

அட இது வேறையா???

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
\\எங்க கொ.ப.செ விற்கு\\

இது எப்ப ஆச்சு..?
சொல்லவே இல்ல..!*/

காசு கொடுத்து அவரை கூவ சொல்லிட்டு... நீ இப்படி வேற சொல்லுறியா?

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
\\அகில உலக அபி அக்கா முன்னேற்றக் கழகம்\\

யோவ், சொல் ராசா அதுக்கு நான் தலைவர்யா..!*/

நீங்க கொடுத்த காசுக்கு அம்புட்டுதான் சொல்ல முடியும்.

நையாண்டி நைனா said...

/* கடையம் ஆனந்த் said...
:))*/
Thanks Nanbaa
:-))))

நையாண்டி நைனா said...

/* ச.செந்தில்வேலன் said...
:))*/

:-) Thank you new friend.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
//"மாப்ள, சரக்குக்கு சாதி, மத பேதமெல்லாம் தெரியாது. யாரடிச்சாலும் போதை தன்னாலே ஏறும்டா. //

இந்த ஒரு வார்த்தைக்காகவே ஃபுல்லு அடிச்சிட்டு குப்புறபடுக்கலாம்!*/

ஆமா தல

நையாண்டி நைனா said...

சூரியன் said...
//ஏற்கனவே ரெண்டு பீரு உள்ளே போய் இருப்பது தெரிந்தும் அடுத்து ஹாட்டுக்கு அடி போடும் மற்றொருவன்.//

அட உள்ள போன குளிர்ச்சியை சரி பண்ண வேணாமா ?

// "மாப்ள, சரக்கு புனிதமான‌து"//

ஆமா மச்சான்

//ஒருவனுக்கு ஒரு பிராண்டுன்னு இருக்கனும்டா. //

வாழாத்தெரியா போதமகன்
*/

Thanks Nanbaa..... Thanks.

நையாண்டி நைனா said...

/*
சூரியன் said...
//லீகல் பிராண்டு காணாதுன்னு கள்ளச் சாராய ஊரல் வேறை"//

இவந்ந்தாஆய்ய்யா உம்ம் போஓஓதஅமக....(கொர்ர்ர்ர்ர்ர்)
*/

பார்த்து நிதானமா அடி மாப்பு.

நையாண்டி நைனா said...

/*
சூரியன் said...
/இந்த கதையில் வரும் "டக்லஸ்" நமது சக பிரபல பதிவர் "டக்ளஸ்..." அல்ல. மீறி யாரேனும் சிண்டு முடியும் வேலை செய்தால் அதற்கு என் கதாநாயகன் "டக்லஸ்ஸொ", நானோ பொறுப்பேற்க மாட்டோம் என்று இங்கேயே அறிவிக்கிறேன்.

முக்கிய அறிவிப்பு, இது நண்பர் ராஜு...வின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல.//

இல்ல இல்லனே உண்மைய உளரிட்டேயே பங்காளி..
*/

இல்லே மாப்பு..... சில பேரோட கவுஜைய படிச்சா தன்னாலே இப்படி ஆகிற்றேன்

நையாண்டி நைனா said...

/*
கலையரசன் said...
எல்லாரும் இப்ப சரக்காண்டவரை பத்தி எழுதறீங்க?
அப்ப நானும் அடுத்த பதிவு "சரக்கே சவம்" ன்னு பதிவு போட்டுடறேன்..
*/
என்ன தல... இதுக்கெல்லாம் ரோசனை பண்ணிக்கிட்டு போட்டு தாக்குங்க.

நையாண்டி நைனா said...

/*பிரியமுடன்.........வசந்த் said...
ரைட்டு நடத்துங்க....*/
"லெப்ட்டு" நடத்துனா என்ன பண்ணுவீங்க?

நையாண்டி நைனா said...

/*Suresh said...
செம கிக்கு ;) பதிவு இந்த பதிவை படிச்சிட்டு ஒருத்தர் சரக்கு அடிச்சி மட்டையாகிட்டாரு... யாரு ...*/

Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
குற்றாலம் போய் வந்தா அதைவிட அடிய பின்னி விட்டிருக்கீங்க..நைனா..*/

vaanga thala vaanga... Thanks.

நையாண்டி நைனா said...

/*தராசு said...
கலக்கல்*/

paarthu... konjam water vittukonga.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
அங்க காதல்னா இங்க சரக்கடிப்பா ? அங்க பிகர்னா இங்க பீரா நடத்துங்கோ ......................*/
hey..hey...hey...
thanksu thala...

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
thalai..thamizhla adikka mutiyalai..attakaasam..*/

Thanks Anna. Thanks.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
is this a pozhappu? avvvvv.. ok ok.. nadakattum..:-)))))))))
*/

baasu sinthichi eluthunaa oru sarakku,

ippadi mokkai pottaa pala sarakku.

நையாண்டி நைனா said...

/*
T.V.Radhakrishnan said...
:-))
*/
:-)

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
நடக்கட்டும்....*/

Thanks Nanba. Thanks,

cheena (சீனா) said...

அடிக்கணும்னா அடிச்சிட்டுப் போயேன்யா - இதுக்கெல்லாம் இடுகை போட்டு டக்ளசை வம்புக்கிழுத்து ..ம்ம்ம்

நல்லாத்தான் இருக்கு - சுர்ருன்னு ஏறுது நடு மண்டல


நல்வாழ்த்துகள் நைனா