Monday, 20 July 2009
ஜலதரங்கம்
சப்தம் சூழ் தனிமை,
வம்பாய் வந்தமர்ந்து
போட்டிக்கு போதையேற்றும்
முறுக்கேறிய மீசைக்காரன்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,
சிதறிக் கிடக்கும்
சுண்டல்களில் கண்ணும்,
சண்டைகளுக்கு காதும்
கொடுத்து முடியாது,
ஒழுங்கிலா டாஸ்மாக்கை
சுற்றி பார்கிறேன்.....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் சிறுநீரை
அடக்குவதென
இயற்கையை அடக்க
முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மேலும் இரண்டு பியரை,
ஏற்றி இருக்கலாம்...!
(இதன் கருவை கவிதையாக்க அனுமதி தந்த நாடோடி இலக்கியனுக்கு நன்றி).
-
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
பாவம்யா... நாடோடி இலக்கியன்.
கலையிலதான் அந்த கவிதையப் படிச்சு, சூப்பர்ன்னு என்னையும் அறீயாம் சொல்லிட்டு இருந்தேன்.
அதுக்குள்ளய..!
தலைப்பு சூப்பர் நைனா...!
கலக்குங்க.
என்னண்ணே குளோனிங்கா? குளோனிங்க்
கவிதை.நையாடோடி?
நக்கலடிப்பதில் உனக்கு நிகர் நீ தான் நைனா..
கவிதைகேத்த படம் நைனா..
:)
நையாண்டினா சும்மாவா ?
நீ படுத்து கிடக்குற போட்டாவ யாருப்பா எடுத்தா நைனா? ஜாக்கி அண்ணாச்சியா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
அங்கன சாய்ஞ்சு கிடக்கறது ஒண்ணு நானு..
இன்னொண்ணு யாருப்பா?(வாலா?)
தண்டோரா said...
அங்கன சாய்ஞ்சு கிடக்கறது ஒண்ணு நானு..
இன்னொண்ணு யாருப்பா?(வாலா?)
நையான்டின்னு சொன்னங்களே!!!!!
உங்களுகென்றே வரும் நக்கல்....
ஜ்யோராம் சுந்தருக்கு மாணக்கர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கு.
/*டக்ளஸ்... said...
பாவம்யா... நாடோடி இலக்கியன்.
கலையிலதான் அந்த கவிதையப் படிச்சு, சூப்பர்ன்னு என்னையும் அறீயாம் சொல்லிட்டு இருந்தேன்.
அதுக்குள்ளய..!
தலைப்பு சூப்பர் நைனா...!
கலக்குங்க.
*/
நன்றி நண்பா.
/*கே.ரவிஷங்கர் said...
என்னண்ணே குளோனிங்கா? குளோனிங்க்
கவிதை.நையாடோடி?*/
நன்றி.
அடிக்கடி வாங்க அண்ணே.
/*Cable Sankar said...
நக்கலடிப்பதில் உனக்கு நிகர் நீ தான் நைனா..*/
நன்றி அண்ணாத்தே.
/*பிரியமுடன்.........வசந்த் said...
கவிதைகேத்த படம் நைனா..
:)*/
மிக நன்றி நண்பா.
இது உங்கள் முதல் வருகை என்று எண்ணுகிறேன்.
அடிக்கடி வாங்க.
/*Suresh Kumar said...
நையாண்டினா சும்மாவா ?*/
இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ......
/*T.V.Radhakrishnan said...
:-))*/
Thank you sir.
/*கலையரசன் said...
நீ படுத்து கிடக்குற போட்டாவ யாருப்பா எடுத்தா நைனா? ஜாக்கி அண்ணாச்சியா?*/
வருகைக்கு நன்றி நண்பா. But, Keep the company secrets please.
/*அத்திரி said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......*/
கெ..கெ..கெ..கெ..கெ...கெ..
/*தண்டோரா said...
அங்கன சாய்ஞ்சு கிடக்கறது ஒண்ணு நானு..
இன்னொண்ணு யாருப்பா?(வாலா?)*/
அண்ணே... உங்களுக்கு... இவ்ளோ பெரிய.... பெரிய... பெரிய.... வாலு இருக்குன்னு இப்ப நீங்க சொல்லி தெரிஞ்சுகிட்டேன்.
/*சொல்லரசன் said...
நையான்டின்னு சொன்னங்களே!!!!!
*/
ஆமா. சரிதான் ஒன்னு நையாண்டி, இன்னொன்னு "வோர்டு கிங்கு"
/*ஆ.ஞானசேகரன் said...
உங்களுகென்றே வரும் நக்கல்....*/
மிக நன்றி நண்பா...
/*கோவி.கண்ணன் said...
ஜ்யோராம் சுந்தருக்கு மாணக்கர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கு.*/
அண்ணே அவரு முனைவர் பட்டம் வாங்க தான் சொல்லி தருவாராம்.... நானெல்லாம் பட்டயம் வாங்குறதுக்கே இங்கே நாக்கு தள்ளுது...
:))
/* நாஞ்சில் நாதம் said...
:))*/
:))))))))))
namma pakkaththu link koduththirunthaa innum suvaraasyamaa irukkume.
:)
/*
நாடோடி இலக்கியன் said...
namma pakkaththu link koduththirunthaa innum suvaraasyamaa irukkume.
:)
*/
ஆமா தல. விட்டு போச்சு...
இனி செஞ்சி போடுறேன் தல... இந்த முறை பிழை பொறுத்து அருள்க.
அதுவும் நல்லாருக்குன்னு எழுதிட்டு வந்தேன் - இங்க வந்த இதுவும் நல்லாருக்கு - கவுத எல்லாரும் எழுதலாம் போல இருக்கே
/* cheena (சீனா) said...
அதுவும் நல்லாருக்குன்னு எழுதிட்டு வந்தேன் - இங்க வந்த இதுவும் நல்லாருக்கு - கவுத எல்லாரும் எழுதலாம் போல இருக்கே*/
வாங்க ஐயா.... வாங்க....
தங்கள் வரவு நல வரவு ஆகுக...
அப்புறம் அடிக்கடி வாங்க ஐயா...
Post a Comment