Friday, 10 July 2009

கவுஜைகள்... மாதிரி சில...




நல்ல சரக்கு இங்கே
இது கள்ள சரக்கு.


57.ரூ. குவாட்டருக்காக
கொடுத்த நூறு ரூபாயில்,
மூணு ரூபா சில்லறை
வாட்டர் பாக்கட்டுக்கு,
நாப்பது ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டாஸ்மாக் கவுண்டரில்
கத்தும் இதே மனதுதான்
நட்சத்திர விடுதிகளில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பேன்ட் பாக்கடிலிருந்து
நழுவி விழப்போகும் குவாட்டரைக்
கவனியாது பயணிக்கும்
முகமறியா நண்பனிடம்
சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்
அலுவலகம் வந்த பிறகும்
அந்தக் குவாட்டரைப் பற்றிய
சிந்தனையிலேயே மனம்..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

முன் எப்போதோ
குடித்து, விழுந்து
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
யாருமறியாரென தெரிந்தும்
அனிச்சையாய் பிறரை தவிர்க்கும்
விழுந்து தொலைத்தவனின் கண்கள்..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ஓல்ட் மங் அடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி ..அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
VAT 69 ....!


அனுமதி அளித்த அண்ணன் நாடோடி இலக்கியனுக்கு நன்றிகள்.

/THE END.

25 comments:

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா

வால்பையன் said...

நல்ல கலக்கல்!

ரெண்டு நாளைக்கு போதை நிற்கும் தல!

Raju said...

அய்...இன்னைக்கி நாடோடி இலக்கியனா...?
வேர் இஸ் ச.கு..?

நையாண்டி நைனா said...

/*நாஞ்சில் நாதம் said...
ஹா ஹா*/

Thanks Nanbaa...

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
நல்ல கலக்கல்!

ரெண்டு நாளைக்கு போதை நிற்கும் தல!
*/

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் தல.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
அய்...இன்னைக்கி நாடோடி இலக்கியனா...?
வேர் இஸ் ச.கு..?*/

ஆமா....நண்பா..
சதகுப்பை நாளை வெளி இடப்படும்... ( போடுற மொக்கைய இப்பவே போட்டா என்னன்னு கேட்கப்புடாது....)

நையாண்டி நைனா said...

/*செந்தழல் ரவி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்*/

வாங்க..வாங்க....

உங்க கண்ணுலே வருறது..ஆனந்த கண்ணீர் தானே... எனக்கு தெரியும் எனக்கு தெரியும்....

நாடோடி இலக்கியன் said...

ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
:)

சொல்லரசன் said...

நையான்டி சரக்கு நல்ல சரக்கு,சும்மா கிர்ர்ர்ர்ர்ருன்னு ஏறுது கிக்கு நமக்கு

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உங்க கையால சுட சுட ஆத்தி குடுத்த பட்ட சூப்பர் ..! "கல கல" எப்போ "கள கள" ஆனார் ? ... கல(ள)க்கல்!!!!

Raju said...

"கவுஜைகள்... மாதிரி சில..."
யோவ்..இப்பதான் கவனிக்கிறேன்
இது "கவுஜை"கள் மாதிரி சிலன்னா..உண்மையிலேயே இது கவிதைகளா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

புரியுது ... நைனா புரியுது ... வாரகடைசி ... Friday night... ஊ ... நடக்கட்டும் ... நடக்கட்டும் ...

தினேஷ் said...

4.50.ரூ. கிங்ஸ்க்குகாக
கொடுத்த பத்து ரூபாயில்,
50 பைசா சில்லறை
அவர் பாக்கெட்டுக்கு,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
பெட்டி கடையில்
கத்தும் இதே மனதுதான்
நட்சத்திர விடுதிகளில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!

தினேஷ் said...

3 ரூ. டீக்காக
கொடுத்த பத்து ரூபாயில்,
2 ரூபாய் சில்லறை
அவர் பாக்கெட்டுக்கு,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டீ கடையில்
கத்தும் இதே மனதுதான்
காஃபி டேயில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

//ஓல்ட் மங் அடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி ..அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
VAT 69 ....!//

அதே கலக்கல்

நையாண்டி நைனா said...

/*நாடோடி இலக்கியன் said...
ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
:)*/

நன்றி... நண்பரே...

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
நையான்டி சரக்கு நல்ல சரக்கு,சும்மா கிர்ர்ர்ர்ர்ருன்னு ஏறுது கிக்கு நமக்கு*/

ரொம்ப ரொம்ப நன்றி பாசு...
நம்ம "டக்கு" கிட்டே ஊறுகா இருக்கு வாங்கிகங்க....

நையாண்டி நைனா said...

/*நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
உங்க கையால சுட சுட ஆத்தி குடுத்த பட்ட சூப்பர் ..! "கல கல" எப்போ "கள கள" ஆனார் ? ... கல(ள)க்கல்!!!!*/

போதை ஏத்த அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
"கவுஜைகள்... மாதிரி சில..."
யோவ்..இப்பதான் கவனிக்கிறேன்
இது "கவுஜை"கள் மாதிரி சிலன்னா..உண்மையிலேயே இது கவிதைகளா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
*/

டம்ம்ப்ரி....நீ போடுறது எல்லாம் பதிவுன்னா.... நா எழுவுறது எல்லாம் கவுஜை தான்.

நையாண்டி நைனா said...

/*
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
புரியுது ... நைனா புரியுது ... வாரகடைசி ... Friday night... ஊ ... நடக்கட்டும் ... நடக்கட்டும் ...
*/
உங்களுக்கும் ஒரு பாட்டிலும் ஒரு கிளாசும் வச்சிருக்கு, நீங்க தான் வரவே மாட்டேன்குறீங்க.

நையாண்டி நைனா said...

அண்ணா... சூரியன் அண்ணா....
நீங்களும் பின்னுரியலே....

நையாண்டி நைனா said...

/*
ஆ.ஞானசேகரன் said...
//ஓல்ட் மங் அடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி ..அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
VAT 69 ....!//

அதே கலக்கல்
*/
கப்புன்னு.. நீங்க வாங்கி அடிச்சா மாதிரியே... செர்டிபிகேட் கொடுதுட்டீயலே....

ஜெட்லி... said...

நல்ல விஷயம்....
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

நையாண்டி நைனா said...

"ஒரு குவாட்டர்"