பெயர் : பதிவுலகம்
நிஜ பெயர் : மொக்கைராசு.
புனை பெயர்: ஆளுக்கு ஆள் மாறும்
பால் : ஆண்பால் (பதி - ஆண்பால் தானே; பெண்ணிய வாதிகள் இதற்க்கு போட்டியாக சதிஉலகம் உண்டாக்கலாம்)
சமீபத்திய சாதனை : சினிமாவிற்க்கே எனிமா கொடுத்தது.
நீண்ட நாள் சாதனை : கக்கூசில் கிறுக்கியவரை எல்லாம் எழுத்தாளர் ஆக்கியது.
வேதனை : அடிக்கடி நடக்கும் சண்டைகள், அதனால் உடையும் மண்டைகள்.
ரோதனை : ஒரு மொக்கை பதிவை போட்டுட்டு, போன் பண்ணி வேற (படிக்க) சொல்றது.
எரிச்சல் : நாலு ஷாட்டு நடிச்சவன் எல்லாம் முதல்வர் கனவு காணுவது மாதிரி, நாலு மொக்கை போட்டுட்டு சாகித்ய அகாடமிக்கும், பாரத் ரத்னா கமிட்டிக்கும் போன் போட்டு என் பேரு இருக்காண்ணே அப்படின்னு அப்பாவியா கேட்குறது...
வசதி : யாரையாவது நல்லா திட்டி எழுதுறது.., அப்புறமா அதை நீக்கிடறது.
அசதி : சில பதிவுகளை படிக்கும்போது வறது.
வாய்ப்பு: அங்கே கண்டது இங்கே கண்டது என்று எதையாவது எழுதிபுட்டு, மண்டையில் வெட்டிய மின்வெட்டு, குளிக்கும் போது அழுக்கான பின்புறம் என்று எப்படியாவது பேரு வச்சி மற்றவனை மண்ட காய வைக்கறது எவனாவது ரொம்ப கொடைஞ்சா முன்னே-பின்னே மேலே கீழே நவீன பழசுன்னு சொல்லி அவன கிறுக்கா ஆக்கிடறது
காய்ப்பு : அதை இதை எழுதி மிளகு ரசம், தக்காளி ரசம், பாதரசம் அதிரசம் பாயசம் என பல இசங்களை பாடம் எடுத்து காய்ச்சி எடுக்கறது.
ஆப்பு : பதிவு நல்லா இருந்து, கொஞ்சம் பேரு வாங்கிட்டா, நீங்க மக்கள் பிரச்சினை எழுதுறது இல்லேன்னு சொல்லிடறது.
காப்பு : டிஸ்க்கி, முஸ்க்கி, கிஸ்கி, டஸ்கி,பஸ்கி.......... குறிப்பா வாக்கி டாக்கி தவிர எதுனாலும் போட்டு டிக்கியை காப்பாற்றி கொள்றது.
டாப்பு : நம்ம பேரு இல்லாமே நம்ம பதிவு சில பத்திரிகைலே வந்திடறது.
Thursday, 16 December 2010
பயடேட்டா-பதிவுலகம்
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
அனுபவம்,
நகைச்சுவை,
பதிவர் சதுரம்,
பதிவுலகம்,
மொக்கை,
வேலையத்த வேலை

Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
மீ தி பிரஸ்ட் அஹ ????
இதற்க்கு என்ன மாதிரியான பின்னூட்டம் போடவேண்டும்
Nice one!
நாலு //ஷாட்டு நடிச்சவன் எல்லாம் முதல்வர் கனவு காணுவது மாதிரி, நாலு மொக்கை போட்டுட்டு சாகித்ய அகாடமிக்கும், பாரத் ரத்னா கமிட்டிக்கும் போன் போட்டு என் பேரு இருக்காண்ணே அப்படின்னு அப்பாவியா கேட்குறத//
அதுக்கு பேர் பாரத் ரத்னா இல்லிங்க...
பதிவு ரத்னா .. அடட நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா. அட போங்க சார்,
இந்த பதிவ போட்ட நேரத்தில
நீரா ராடியா- கிட்ட அலைப்பேசியிருந்தால் உங்களுக்கு கூட கிடைச்சிருக்கும்.
:) welcome back
:))
ஹா ஹா ஹா.. உண்மைதான்..
நல்லாயிருக்குங்க..
வா வாத்யாரே..வடைகறி வோணுமா?
இப்பதான் பாமுக்கு வரபோல??
// ஒரு மொக்கை பதிவை போட்டுட்டு, போன் பண்ணி வேற (படிக்க) சொல்றது //
உங்க செல் நம்பர் சொல்லுங்களேன்...
//நீண்ட நாள் சாதனை : கக்கூசில் கிறுக்கியவரை எல்லாம் எழுத்தாளர் ஆக்கியது. //
நல்லா கேட்டுக்குங்க, என்னை இல்லை, என்னை இல்லை என்னைப் பத்தி இந்த வரி இல்லவே இல்லை!
:-))))))))))))))))))
/* டம்பி மேவீ said...
மீ தி பிரஸ்ட் அஹ ????
இதற்க்கு என்ன மாதிரியான பின்னூட்டம் போடவேண்டும்*/
பஸ்டுக்கு நன்னி.
நீ எப்படினாலும் போடலாம் தலே..
/*எஸ்.கே said...
Nice one!*/
Thanks sir
/*பாரத்... பாரதி... said...
நாலு //ஷாட்டு நடிச்சவன் எல்லாம் முதல்வர் கனவு காணுவது மாதிரி, நாலு மொக்கை போட்டுட்டு சாகித்ய அகாடமிக்கும், பாரத் ரத்னா கமிட்டிக்கும் போன் போட்டு என் பேரு இருக்காண்ணே அப்படின்னு அப்பாவியா கேட்குறத//
அதுக்கு பேர் பாரத் ரத்னா இல்லிங்க...
பதிவு ரத்னா .. அடட நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா. அட போங்க சார்,
இந்த பதிவ போட்ட நேரத்தில
நீரா ராடியா- கிட்ட அலைப்பேசியிருந்தால் உங்களுக்கு கூட கிடைச்சிருக்கும்.*/
Good Idea, But
ராடியா கிட்டே பேசுன ஆளுங்களுக்கு தான் இப்ப "ராடு " ஏத்திகிட்டு இருக்காங்க.
/*கோவி.கண்ணன் said...
:) welcome back*/
Thanks Anna.
/* ஜெட்லி... said...
:))*/
Nandri Nanbaa
/*பதிவுலகில் பாபு said...
ஹா ஹா ஹா.. உண்மைதான்..
நல்லாயிருக்குங்க..*/
Nandri thala
adikkadi vaanga thala
/* மணிஜீ...... said...
வா வாத்யாரே..வடைகறி வோணுமா?*/
என்னா நீங்க? தொட கறி ரேஞ்சுக்கு பில்டப்பு!!!
/*ஜாக்கி சேகர் said...
இப்பதான் பாமுக்கு வரபோல??*/
Summaa summaa hee heee heee
/*philosophy prabhakaran said...
// ஒரு மொக்கை பதிவை போட்டுட்டு, போன் பண்ணி வேற (படிக்க) சொல்றது //
உங்க செல் நம்பர் சொல்லுங்களேன்...*/
take it 00 00 00 00 00
/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//நீண்ட நாள் சாதனை : கக்கூசில் கிறுக்கியவரை எல்லாம் எழுத்தாளர் ஆக்கியது. //
நல்லா கேட்டுக்குங்க, என்னை இல்லை, என்னை இல்லை என்னைப் பத்தி இந்த வரி இல்லவே இல்லை!*/
அப்படின்னா அது நீங்க இல்லியா....
/*ஸ்ரீ said...
:-))))))))))))))))))*/
Thanks Vaathyaare...
வணக்கம் நண்பா......
/* ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் நண்பா......
*/
Nanbare vanakkam... eppadi irukkeenga...
உள்ளே வரவே பயமா இருக்கு.. ஒரே லக லக லக..
இங்கேயும் வந்துட்டாகளா நீரா ராடியா?
ரசிச்சுச் சிரிச்சேன்.. நல்ல இருக்கு..
Post a Comment