இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு.. அல்ல... அல்ல... அல்ல...
***************
ஒவ்வொரு முறையும்
போதையேற்றி தோற்கும்போது
இதுவேயென்
கடைசி கட்டிங்காய்
இருக்க வேண்டுமென
பிரார்த்தித்துக் கொள்கிறேன்
காலக்கொடுமைக்கு
என் பிரார்த்தனைகளும்
தோற்றே போகின்றன
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நீ
நான்
ன்நா
நீ
நான் நீ
நீ நான்
எப்படிப் பார்த்தாலும்
பாருக்கு
இரண்டு பேர்
தேவையாய் இருக்கிறது
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

நேற்றோரு டாஸ்மாக்கில் இதைத்தான்
குடித்துக்கொண்டிருந்தேன்
இன்று இந்த டாஸ்மாக்கில் இதைக்
குடித்துக்கொண்டிருக்கிறேன்
இது தீர்ந்தபின்
நாளை வேறோருடாஸ்மாக்கில்
நான் இதை குடிக்கக் கூடும்
டாஸ்மாக் மாறிக் கொண்டிருக்கிறதே
தவிர
மாறாமலே இருக்கிறதென் போதை
! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு நெலையிலே எழுதினது... (மாவு கட்டு போட்டுகிட்டுன்னு யாராவது உண்மைய சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு..) கண்டுகோங்கப்பா..ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))
12 comments:
கலக்கல். உங்க தயவுல என்னோட ஒரு பதிவு ரெடி.
//டாஸ்மாக் மாறிக் கொண்டிருக்கிறதே
தவிர
மாறாமலே இருக்கிறதென் போதை//
அடடா ..!! எப்படியெல்லாம் கவிதை எழுதுறாங்க ..!!
கோமால இருந்தாக்கூட நான்னா எந்திரிச்சு வந்து கும்முறீங்களே நைனா.. அவ்வ்வ்வ்..
ahaa.. ஆளு இருக்கீயளா..?
கலக்கல் அண்ணாச்சி
/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
கலக்கல். உங்க தயவுல என்னோட ஒரு பதிவு ரெடி.*/
எப்படியோ பதிவு உசார் பண்ணா போதும்... வாழ்க
/* கோமாளி செல்வா said...
//டாஸ்மாக் மாறிக் கொண்டிருக்கிறதே
தவிர
மாறாமலே இருக்கிறதென் போதை//
அடடா ..!! எப்படியெல்லாம் கவிதை எழுதுறாங்க ..!!*/
எல்லாம் ஓல்டு மங்கு அருள் தான்,
/*கார்த்திகைப் பாண்டியன் said...
கோமால இருந்தாக்கூட நான்னா எந்திரிச்சு வந்து கும்முறீங்களே நைனா.. அவ்வ்வ்வ்..*/
என்ன பண்றது உங்க பதிவை படிச்சா "டாக்குட்டரோட"(விஷய காந்து அல்ல ) பஞ்சு டயலாக்கு மாதிரி இருக்கு அதான்.
/*Cable Sankar said...
ahaa.. ஆளு இருக்கீயளா..?*/
இருக்கோம் சாமியோவ்...
/*அத்திரி said...
கலக்கல் அண்ணாச்சி*/
நன்றி அண்ணாச்சி
காதலும் போதையும் ஒண்ணுன்னு ஸ்டெடி ஆ சொல்லீடிங்க போங்க
உங்களது இந்தப் பதிவினை, நான் இன்று (19 டிசம்பர் 2010 ), வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். முடிந்தால் இங்கு வந்து படித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லவும். நன்றி !
Post a Comment