Monday, 15 June 2009

ஆட்டுக்கோவணம்... இவனும் இவளும்...(9)!!!

"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார். இவனும் இவளும் தனியாக விடப்பட்டார்கள்.

இவன் இவளைப் பார்த்தான். ஒல்லியாகச் ஆனால் பெரிய பெண்ணாக இருந்தாள். மேக்கப் மட்டுமே இவளைக் கொஞ்சம் சின்ன பெண்ணாக காட்டியது. கூரான நாசி. அழகான கண்கள். உதடுகள் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தன. சின்னதொரு பயமாக இருக்கக் கூடும். இவனுக்கும் வயிற்றை எதோ பண்ணியது. இது போல பெண்ணோடு பேசுவது இவனுக்கும் முதல் தடவை. தயங்கியவனாக இவள் எதிரே நடுங்கியபடி நின்றான்.

இவள் இவனை நிமிர்ந்து பார்த்தாள். இவளுக்கு பிடித்த அரைக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து இருந்தான். நிமிர்ந்து இவன் முகத்தை பார்த்தாள். இவன் இவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். இவன் பேரழகன் இல்லை என்றபோதும் பார்க்க நன்றாக தான் இருந்தான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் அவனது நடுக்கத்தை ரசித்தவளாய்....



"நீங்க என்ன செய்றீங்க...., மற்ற விஷயங்கள் எல்லாம் புரோக்கர் சொன்னாரு... என்னப் பத்தியும் அவரு உங்ககிட்டே சொல்லி இருப்பாரு உங்களுக்கு எதுவும் கேட்கனும்னா.... கேளுங்க.." என்று பேச்சை ஆரம்பித்த அவள் தொடர்ந்து....

"இப்ப உங்கள்ட்டே எவ்ளோதான் இருக்கு?" இவள் மெதுவாக கேட்டாள்.

"இல்லைங்க.. என்கிட்டே ரொம்பலாம் பணம் கிடையாது... என்னோடது ஒரு பக்கா மிடில் கிளாஸ் பேமிலி.. நான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கோம்.. எனக்கும் கல்யாணம் ஆக இன்னும் ஒரு ஆறு வருஷம் ஆகும் போலே இருக்கு.... அதான்.... "

"அதுக்கு நான் இப்ப என்ன செய்யனும்னு நெனைகிறீங்க, என்கிட்டே என்ன எதிர்பார்கிறீங்க????"

"கண்டிப்பா.. யாரும் நான் இப்படி கேட்குறதை கேட்டாங்கன்னா சிரிப்பாங்க, ஒதுக்க மாட்டாங்க இருந்தாலும் வாழ்கை என்று வந்த பிறகு நான் கேட்காம இருக்க கூடாது என்ற முடிவுக்கு நான் வந்துட்டேன்"

"ரொம்ப கதைய பேசவேண்டாம், நான் புரிஞ்சிகிட்டேன்.... உங்களுக்கு.. என்ன பிடிச்சிருக்கா?.. என்ன எதிர் பார்க்குறீங்க???" தயங்கியவாறே கேட்டாள்.

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க.. நிஜமாவே உங்களை பிடிச்சு இருக்கு.. குறிப்பா வெளிப்படையா பேசுற உங்க குணம்.. இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா..? ஆனா நான் ஒரு நூத்தம்பது ரூபா குறையா தான் வச்சிருக்கேன்"

"ம்ம்ம்..... ஒக்கே சரி வாங்க, ரெண்டு நாளா ஒரு கிராக்கியும் வரலை, எதோ இப்ப வருகிற காசை வைத்து இன்னும் ரெண்டு நாள் ஓட்டனும் வாங்க பேசி பார்க்கலாம்..."

இவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து புரோக்கர்களிடம் இவளுடைய சம்மதத்தை சொன்னான். இவளுடைய சக தோழிகள் இவள் சம்மதத்தை கேட்டு ஆச்சரியப்பட்டு போனார்கள்.

புரோக்கர்களில் ஒருவர் ஆரம்பித்தார். "அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசிடுவோம்.. எங்க கமிசனை பத்தி ஒண்ணுமே சொல்லலியே...!!!?"

"நீங்க வழக்கமா வாங்குறதை விட கொஞ்சம் குறைவா வாங்கிகோங்க...."

"அப்படி இல்லீங்க.. நீ என்ன நினைக்குரீங்கன்னு சொன்னாதான் நல்லா இருக்கும்.. எப்போதும் நாங்க தான் பேசி விடுவோம்... இப்போ இது புது கதையா இருக்கு..."

"ஒரு ஐம்பது ரூபா வாங்கிகங்க டிப்ஸா, சரக்குக்கு ஒரு ஐம்பது ரூபா வாங்கிகோங்க இடத்திற்கு ஒரு நூத்தம்பது ரூபா வாங்கிக்கங்க"

'இது ரொம்ப கம்மி... இன்னைக்கு சரக்கு விக்குற விலை என்ன? போலிசு மாமூல் என்ன? நாங்க நானூறு ரூபா எதிர் பார்க்கிறோம்."



"யோவ் சும்மா ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க.. என்று வெட்டி கதை பேசிகிட்டு இருந்தா வந்த ஒரு கஸ்டமரையும் அனுப்பி வைக்க வேண்டியது தான்.... எதோ வந்த கிராக்கிய அமுக்கி நாலு காசு தேத்த பார்பியா அதை உட்டுட்டு...."

பேரம் வளர்ந்து கொண்டே போய் கடைசியில் பெண்ணுக்கு கொடுப்பதில் ஒரு நூறு ரூபாயை குறைத்து கொண்டும், புரோக்கர்களுக்கு முன்னூத்தி ஐம்பது என்றும் முடிவானது. அப்புறம் "'கச்சேரி' எங்கே வைப்பது" பற்றிய பேச்சு ஆரம்பித்தது. இவனின் ஆசை ஹோட்டல் "நீல மேகத்தில்" என்பதாய் இருந்தது, புரோக்கரோ, அங்கே எல்லாம் முடியாது, இங்கே பக்கத்திலே தார்ப்பா கொட்டாயிலே தான் என்று குறைவாய் கொடுத்ததை குத்தி காட்டினார். அங்கே வைத்து ஒண்ணுமே செய்ய முடியாது என்று வாதிடத் தொடங்கினான் பையன். பேச்சு வளர்ந்து கொண்டே போனது.

"யோவ்... நீ என்ன காசை கொட்டியா கொடுத்திருக்கே... ரொம்ப ஓவரா எதிர்பார்க்காதே.. எங்க புள்ளை முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு புரோக்கர் கிழம்.

பையனின் முகம் சிவந்து போனது. "நீங்க இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் உங்க இவளை கூட்டிட்டு போனும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல... நான் போறேன்..."

புரோக்கர்கள் கமிசனுக்காக அடித்து கொண்டதில் கடைசியில் இவர்களின் ஆசை கருகிப் போனது. இந்தப் பெண் இவனை பாவமாக பார்த்தாள். ஏதும் செய்ய இயலாதவனாக, மறுநாள் பிளாக்கிற்கு ஒரு மேட்டரும் தேறிவிட்டதால்... இவன் நடக்கத் தொடங்கினான். மறுநாளும் பட்டினி கிடப்பது எப்படி என்று இவள் சிந்திக்க தொடங்கினாள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

டிஸ்கி:
இது அண்ணன் கார்த்திகை பாண்டியின் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல. மீறி நம்பினால் கம்பனி பொறுப்பு ஏற்கா...

22 comments:

சொல்லரசன் said...

அவரு சொந்தகதை சோககதையை சொல்லி நொந்துபோயிருக்காரு அதிலும்
நையான்டியா?

Unknown said...

டேய்.... டேய் நைனா... நிறுத்துடா... முடியலடா

நாடோடி இலக்கியன் said...

"மாட்டுத்தாவணியை" இப்படி கிழிச்சு போட்டீங்களே.

இருப்பினும் இதுவும் நல்லாதான் இருக்கு.
:)

கலையரசன் said...

உன்னைய மிதிக்க போறாங்க, பாத்துக்க!

துபாய் ராஜா said...

டிஸ்கி:
இது அண்ணன் கார்த்திகை பாண்டியின் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல. மீறி நம்பினால் கம்பனி பொறுப்பு ஏற்கா

:-)))))))))))

Raju said...

அண்ணே, கார்த்தி அண்ணே "ஹூம்"ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...!
அஞ்சா நெஞ்சன்கிட்ட சொல்லி நைனாவ தூக்கிரலாம். கவலைப்படாதீங்க.
ஒரே தூக்கா தூக்கிருவோம்.

Raju said...

யோவ்.. நைனா,
கார்த்தி அண்ணே அஞ்சா நெஞ்சனுக்கு ரொம்ப நெருக்கம்டி.
பார்த்து பொழச்சுக்க.அம்புட்து தான் சொல்லுவேன்.
பார்த்து பொழாச்சுக்கப்பா.

Raju said...

கார்த்தி அண்ணே,
நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க, இந்த மேட்டர நம்ம அஞ்சா நெஞ்சன்கிட்ட சொல்லி, அது என்னா சபை..?, ஆங்........ஏதோ ஒரு சபைல பேசச் சொல்லிருவோம். ( அண்ணந்தான் இப்போ எம்.பி.ஆகிட்டாகல்லா...!)

Cable சங்கர் said...

அவரு பதிவுக்கு லிங்க் க்கொடுத்திருக்கலாமில்ல.. நி கவலை படாதே நைனா.. நானிருக்கேன்..

நையாண்டி நைனா said...

/*
சொல்லரசன் said...
அவரு சொந்தகதை சோககதையை சொல்லி நொந்துபோயிருக்காரு அதிலும்
நையான்டியா?
*/

அவரோட சொந்த கதையா அது....
இதுவும் ஒரு ஆளோட சோக கதை தான்.

நையாண்டி நைனா said...

/*Keith Kumarasamy said...
டேய்.... டேய் நைனா... நிறுத்துடா... முடியலடா*/

அண்ணே...
கோவிச்சுகாதீங்க....
எனக்கு உங்களை மாதிரி எழுத வர மாட்டேங்குது, நேரமும் இல்லை. இருந்தாலும், இதை நேரம் செலவு பண்ணி படிச்ச உங்களோட பெருந்தன்மைக்கு நன்றிகள் மற்றும் வணக்கம் அண்ணே.

கோவிச்சிக்கிட்டு வாராமே படிக்காமே பூடாதே அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/*
நாடோடி இலக்கியன் said...
"மாட்டுத்தாவணியை" இப்படி கிழிச்சு போட்டீங்களே.

இருப்பினும் இதுவும் நல்லாதான் இருக்கு.
:)
*/

நன்றி அண்ணே...
அடிக்கடி வாங்க அண்ணே.

நையாண்டி நைனா said...

/*
கலையரசன் said...
உன்னைய மிதிக்க போறாங்க, பாத்துக்க!
*/
நான் அடிவாங்குறத நீ பாத்துகினு தான் நிப்பியா மாப்ஸ்..... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*
thubairaja said...
டிஸ்கி:
இது அண்ணன் கார்த்திகை பாண்டியின் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல. மீறி நம்பினால் கம்பனி பொறுப்பு ஏற்கா

:-)))))))))))
*/

வாங்க அண்ணாத்தே ...மொதோ தபா வந்துருக்கே... வணக்கம் மற்றும் நன்றிகள்.

அடிக்கடி வாங்க

நையாண்டி நைனா said...

/*தீப்பெட்டி said...
:))*/

நன்றி.
(பத்த வச்சிர மாட்டீங்களே....)

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்....... said...
அண்ணே, கார்த்தி அண்ணே "ஹூம்"ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...!
அஞ்சா நெஞ்சன்கிட்ட சொல்லி நைனாவ தூக்கிரலாம். கவலைப்படாதீங்க.
ஒரே தூக்கா தூக்கிருவோம்.
*/

ஏன் உனக்கு இந்த வெறி.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
யோவ்.. நைனா,
கார்த்தி அண்ணே அஞ்சா நெஞ்சனுக்கு ரொம்ப நெருக்கம்டி.
பார்த்து பொழச்சுக்க.அம்புட்து தான் சொல்லுவேன்.
பார்த்து பொழாச்சுக்கப்பா.*/


யோவ், டக்லூசு...நைனா ராம்ராஜுக்கு ரொம்ப நெருக்கம்டி... பார்த்து பொழச்சுக்க.அம்புட்து தான் சொல்லுவேன்.
பார்த்து பொழாச்சுக்கப்பா.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
கார்த்தி அண்ணே,
நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க, இந்த மேட்டர நம்ம அஞ்சா நெஞ்சன்கிட்ட சொல்லி, அது என்னா சபை..?, ஆங்........ஏதோ ஒரு சபைல பேசச் சொல்லிருவோம். ( அண்ணந்தான் இப்போ எம்.பி.ஆகிட்டாகல்லா...!)*/

என்னய்யா ரொம்ப பயம் காட்டுறே.....

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
அவரு பதிவுக்கு லிங்க் க்கொடுத்திருக்கலாமில்ல.. நி கவலை படாதே நைனா.. நானிருக்கேன்..*/

அண்ணே அவரு ஏற்கனவே பிரபலம்.


அண்ணன் நீங்க இருக்கும்போது தம்பி நான் எதுக்கும் கவலை படமாட்டேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))))

நையாண்டி நைனா said...

/* ஜோதிபாரதி said...
:))))))*/

THANKS ANNA

நையாண்டி நைனா said...

/*
T.V.Radhakrishnan said...
:-)))
*/
Thanks anna...