நண்பரின் வீட்டிற்கோ அல்லது உறவினரின் வீட்டிற்கோ காதுகுத்து, திருமணம் (இதுவும் ஒரு வகை காதுகுத்து தானோ?), போன்ற சிறப்பு தினங்களில் நீங்கள் செல்லும் பொழுது, அங்கே இரண்டு வாலிபர்களோ அல்லது வாலிபிகளோ ஓடியாடி வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.
வீட்டில் உள்ள யாருக்கோ நண்பர்களாய் இருப்பார்கள் ஓடியாடி வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் போனதும் அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்க பாவனை செய்வதை இன்னும் அதிகப்படுத்தி, பல பேரை மேற்பார்வை செய்வது போலே ஆட்டத்தையும் அதிகப்படுத்துவார்கள். நண்பரிடமிருந்தோ,உறவினரிடமிருந்தோ விடைபெறும் பொழுது உங்களின் அரிய அவதனிப்பை அங்கே நீங்கள் வெளிப்படித்தி இருக்கக் கூடும்..
" அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்று சொல்லி அந்த மீசைவைத்த/தாவணி போட்ட, மன்னிச்சிகோங்க.... சுடிதார் போட்ட 'குழந்தை'யின் மனத்தை கிளறி விட்டு வந்திருப்பீர்கள்.
யோசித்துப்பாருங்கள். அந்த சின்னஞ்சிறு வயதில், அதுவரை தனக்கு மட்டுமே "எதுவுமே செட் ஆகவில்லை" என்று நொந்து இருக்கும் வேளையிலே கிடைத்த இந்த முக்கியத்துவம்,கவனிப்பு,செண்ட்டர் ஆஃப் அட்ராக்ஸன் அவர்களை ஏதேதோ செய்திருக்க, வேறு ஒரு சந்தர்பத்தில், நீங்கள் வேறு ஒரு நபரை இதே மாதிரி கமன்ட்ட.... அதுவரை தன் மனதில் இருந்த நம்பிக்கை, பெருமை, கர்வம், 100 சதவீதத்தில் இருந்து 50க்கோ 30க்கோ அல்லது பூஜ்ஜியத்திற்கோ வடிந்து போனதின் தாக்கத்தை தன்னுள்ளே வைத்து, அதற்கு பெயரிடத்தெரியாமல் தவிக்கும் ஜீவன் எத்தனை? எத்தனை??
வளர,வளர இந்த ஆழ்மன வலி "குத்துங்க, எசமான் குத்துங்க... இந்த பொம்பளைங்களே இப்படிதான்" போன்ற வசனத்தை ஆண்களும், " இந்த ஆண்கள் எல்லாரும் மோசம், மலர் விட்டு மலர் தாவும் வண்டு, ஜொள்ளு பார்டிங்க" போன்ற வசனத்தை பெண்களும் ஆத்மார்த்தமா ரசிக்க செய்து, நீ பெரிய பையன்/பொண்ணுல்ல என்று ஏமாற்றத்தை, "உலகத்தை புரிஞ்சி, பக்குவபடுதல்" என்ற ஒரே காரணத்தைச் சொல்லிச் சொல்லி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் வளரப் போகும் பிஞ்சு எத்தனை? எத்தனை??
வேலை பாரத்தை தோள்களில் ஏற்பதில் துவங்கி, குடும்ப கஷ்டங்களை பகிர்ந்து, நண்பனின் வீட்டில் வேலை செய்ய வந்தால், அந்த குடும்பத்து உறுப்பினர்களின் நட்பு பாசம் அனுபவித்த ஒரே காரணத்திற்காக வேலை செய்ய வந்தவர்க்கு தரப்படும் வரமோ சாபமோ.
இவை எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை, இப்படி அக்கினி முன்னிலையில் "டாவை" ஆரம்பிச்சி, பல போராட்டங்களுக்கு பின்னே அக்கினி சாட்சியாகவோ, இல்லை அண்பர் ஆறுமுகத்தின் சாட்சியாகவோ கைபிடித்த பின்பும் அந்த அக்கினி தீ அவன்/அவள் வாழ்நாள் முழுதும் எறிந்து கொண்டுதான் இருக்கும் அவசரப்பட்டுடேனோ? என்ற கேள்வியாய் மனதில்.
எனவே, " அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள்.
அமைதியாய் அழகை ஆராதியுங்கள்.
ப்ளீஸ்...
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இது அண்ணன் நர்சிம் அவர்களின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல. அதனை ஒட்டி வந்த பதிவு. அண்ணே இந்த வார்த்தையையும் உங்க லிஸ்ட்லே சேர்த்துகோங்க.
நீங்க இந்த மாதிரி நொந்த ஆளா இருந்தா உங்க வேதனைய பதிவு செய்யுங்க. இல்லை மனதில் கேள்வியுடன் வாழ்பவரா இருந்தா அதையும் சொல்லிட்டு போங்க, இல்லை இப்படி எதுவும் இல்லை என்றாலும் அதையும் சொல்லிட்டு போங்க, பின்னூட்டத்திலே.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Friday, 27 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ஒண்ணுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்...
ஏதோ சொல்ல வந்து இருக்கேங்க நண்பா.. ஆனா சத்தியமா ஒண்ணும் புரியல..
//எனவே, " அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள்.
அமைதியாய் அழகை ஆராதியுங்கள்.
ப்ளீஸ்...//
வழிமொழிகிறேன்..
/*கார்த்திகைப் பாண்டியன் said...
ஒண்ணுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்...*/
என்னடா இது "மதுரை"க்கு வந்த சோதனை?????
/* கார்த்திகைப் பாண்டியன் said...
ஏதோ சொல்ல வந்து இருக்கேங்க நண்பா.. ஆனா சத்தியமா ஒண்ணும் புரியல..*/
என் பாட்டு புரியவில்லை என்று சொன்னவன் எவன்?
( அவன் இவன் என்று ஏக வசனம், இங்கு தேவை இல்லை)
அவை அடக்கத்துடன் நானே சொல்லி விடுகிறேன்.
நண்பா... "சும்மா, சும்மா, உசுப்பேத்தி உடம்பை ரணகளமா ஆக்காதீங்க" என்று சொல்கிறேன்.
/*சந்தனமுல்லை said...
:-))*/
முதல் முறையா இந்த தம்பி கடைக்கு வந்திருக்கீங்க என்று நினைக்கிறன்.
நன்றி மீண்டும் வருக.
/*//எனவே, " அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள்.
அமைதியாய் அழகை ஆராதியுங்கள்.
ப்ளீஸ்...//
வழிமொழிகிறேன்..*/
அப்பாடா... ஒரு லைனாவது புரிஞ்சதே....
மிக நன்றி நண்பரே.
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் இப்படி/
/* அத்திரி said...
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் இப்படி/*/
எல்லாம் மனசுலே உள்ளது தான் தலைவரே.
//ஓடியாடி வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.//
உங்களை பத்தி ஏதோ சொல்லவரிங்க...........
புரிந்தது எல்லாம் புரிவதும் இல்லை
புரிவது எல்லாம் புரிந்ததும் இல்லை
/*//ஓடியாடி வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.//
உங்களை பத்தி ஏதோ சொல்லவரிங்க...........
புரிந்தது எல்லாம் புரிவதும் இல்லை
புரிவது எல்லாம் புரிந்ததும் இல்லை*/
இப்படியுமா?
நானெல்லாம் உண்மையிலேயே வேலை செய்வேங்க.
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே...
:):):(:(?????*****@@##:):):(:(
//இது அண்ணன் நர்சிம் அவர்களின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல.//
சரி சரி
எனவே, " அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள்.
அமைதியாய் அழகை ஆராதியுங்கள்.
ப்ளீஸ்...//அப்ப வேலை செய்றவங்களை பாரட்டவே கூடாதா?
/*Cable Sankar said...
:):):(:(?????*****@@##:):):(:(*/
வருகைக்கு நன்றி அண்ணே.
/*புருனோ Bruno said...
//இது அண்ணன் நர்சிம் அவர்களின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல.//
சரி சரி
*/
வருகைக்கு மிக நன்றி மருத்துவர் அவர்களே.
/*jackiesekar said...
எனவே, " அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள்.
அமைதியாய் அழகை ஆராதியுங்கள்.
ப்ளீஸ்...//அப்ப வேலை செய்றவங்களை பாரட்டவே கூடாதா?*/
மிக நன்றி jackiesekar அண்ணா.
Post a Comment