உழைப்பின் உன்னதம் அறிந்தவன் தமிழன். உழைப்பின் உயர்வை அறிந்தவன் தமிழன். விண்ணை கடைந்து எடுக்க கலன் அனுப்பியவன் தமிழன், மண்ணை கடைந்து உழுது உண்ணும் கலன் நிரப்பியவன் தமிழன். அவன் காணா களமும் இல்லை அவன் இல்லாத காலமும் இல்லை.
உயிரை எடுக்கும் தொழில் செய்பவனை எமதர்மராஜா என்று போற்றி பிறர் மதித்து தொழும் வேளையிலும் அவனை காலன் என்று காலால் எத்தி மிதித்தவன் தமிழன். எவனுக்கும் அஞ்சி சேவகம் செய்யாதவன். அந்நியர்கள் ஒவ்வொரு பாளையமாக கைப்பற்றி வரி வசூல் வேட்டை நடத்திய வேளையிலே ' நெற் கட்டும்' செவலை. 'நெற்கட்டான்' சேவல் என்று மாற்றி வீரப்போர் நடத்தி, விடுதலை போரின் முதல் 'நாற்றை' நட்டவன் நம் தமிழன். "எமக்கு என்ன சேவகம் செய்திட்டாயடா பரங்கிப்பேயே? எம்மிடம் வரி வசூலிக்க வந்திட்டாய்?" என்று போர் முழக்கம் செய்தவனும், விடுதலை நாற்றை வீறுடன் எழ செய்தவனும் தமிழனே ஆக முதலில் வீர வாளையும், வேலையும் ஆயுதமாக ஏந்தியவன் தமிழன். பின்னே தானே சிப்பாய் என்று பெயர்பெற்றவரும் கலகம் செய்திட்டார். அந்நியன் கலக்கம் அடைந்திட்டான்.
மேலை நாட்டினர், நம் உரிமை பொருளின் மீதும் உரிமை நாட்டினர். அடங்கியவனோ தமிழன்? அவனுக்கு எதிராய் வியாபார ஆயுதம் ஏந்தி கப்பல் தொழில் செய்து, கடல் பரப்பின் மீதும் நம் உரிமையை நாட்டினர் தமிழர்.
அயல் நாடுகளின் உதவியுடன் இராணுவமும் நடத்தி வந்தவன் தமிழன். தமிழன் என்றால் சும்மா இல்லை "எம்டன் அவன்" என்று உணர்த்தியவன் ஒரு மறத்தமிழன். தமிழனின் பெருமை கூற ஆரம்பித்தால் அது முற்று பெறாது போய் கொண்டே இருக்கும். மேலும் இன்றைய சூழ்நிலையில், பழம்பெருமை பேசி வீணே பொழுதை களித்து, கழித்து கிடப்பதல்ல நமது பெருமை.
உலகெங்கும், தமிழ் மக்களுக்கு ஆதரவாய் உலக தமிழ் இனம் ஒன்று பட்டு இருக்கும் இந்த வேளையிலே, மும்பையிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை காட்டும் முகமாய். 01 - 03 - 2009 ஞாயிறு மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை "மாதுங்கா கிங் சர்கிள் - தானே" ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான 25. கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலியை தங்கள் உணர்வுடன், தமிழ் உணர்வுடன் ஏற்படுத்தினர். இது வெறும் மனித கரங்கள் அல்ல. உலக தமிழ் மக்களுக்காக, அல்லல்படும் மக்களுக்காக நீட்ட பட்ட அன்பு கரங்கள். உலகில் நாம் எங்கெங்கு பிரிந்து இருந்தாலும், நம் உயிரும், உணர்வும் ஒன்றே என உணர்த்த சேர்ந்திட்ட ஆதரவு கரங்கள்.
"ஏய்... தமிழ் மக்கள் விரோத அரசே, பாரு எங்கள் ஒற்றுமையை, எங்கள் தமிழரை காப்பாற்று" என்று அணி திரண்டு, இன்னல் படும் மக்களுக்கு தங்கள் ஆதரவை காட்டி நின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான அரசுக்கு தன் பலத்தை காட்டி நின்றனர். அல்லல் படும் மக்களுக்கு ஆதரவாய், தன் சமுதாய எழுச்சிக்காக கூடி நின்றனர். உலகெங்கும் உள்ள தன் தமிழ் மக்களுக்கு ஆதரவை கூட்டி நின்றனர். தமிழ், தமிழன் என்று முழங்கி அவன் நிமிர்ந்து நிற்க, இங்கே தன் நெஞ்சு நிமிர்த்தி நின்றனர். ஒற்றுமை எனும் ஆயுதம் ஏந்தி.
இந்த மாபெரும், மனித சங்கிலி போராட்டத்தை, தமிழ் உணர்வை, இன ஒற்றுமையை காட்டும் நிகழ்ச்சியை பல இயக்கங்கள், பல சங்கங்கள், பல அமைப்புகள், ஒன்று சேர்ந்து நடத்தியது. அது உலக மக்களுக்கு உணர்த்தியது, தமிழும், தமிழ் உணர்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று.
இந்த கரப் பினப்பிலே, இது ஆண்டான் கரம், இது அடிமை கரம், இது படித்தவன் கரம், இது படிக்காதவன் கரம், இது ஏழை கரம், இது செல்வந்தன் கரம், இது கருப்பன் கரம், இது செவத்தவன் கரம், இது வெளுத்தவன் கரம், இது சாப்பிட்டவன் கரம், இது சாப்பிடாதவன் கரம், இது கூலி தொழிலாளி கரம், இது பொறியாளன் கரம், இது மருத்துவன் கரம், இது நோயாளியின் கரம், இது முதிர்ந்த கரம் இது பிஞ்சு கரம் என்று பேதம் தெரியவில்லை, "நாம் அனைவரும் சமம் ஒன்று" என்று வேதம் தெரிந்தது.
வாழ்க தமிழ்.
வளர்க தமிழ் உணர்வு.
ஓங்குக தமிழனின் ஒற்றுமை.
Tuesday, 3 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
மும்பை மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க.. கேட்கவே சந்தோஷமாக இருக்கு நண்பா.. எப்படியாவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்தால் மகிழ்ச்சி..
/*கார்த்திகைப் பாண்டியன் said...
மும்பை மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க.. கேட்கவே சந்தோஷமாக இருக்கு நண்பா.. எப்படியாவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்தால் மகிழ்ச்சி..*/
வருகைக்கும், மற்றும் எனக்கான உங்கள் ஆதரவிற்கும் நன்றி நண்பா
நல்ல பதிவு :)
/* ஸ்ரீமதி said...
நல்ல பதிவு :)*/
வருகைக்கு நன்றி, ஸ்ரீமதி அவர்களே,
உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.
//அது உலக மக்களுக்கு உணர்த்தியது, தமிழும், தமிழ் உணர்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று.//
இது எங்கும் எப்போதும் அழியாது நண்பரே.
எல்லா இடங்களிலும் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டனர்...
அரசியல்வாதிகளுக்கு உணர்ச்சி எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை...
எப்படியோ மும்பை மக்களின் உணர்வுகளை பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது...
/*சொல்லரசன் said...
//அது உலக மக்களுக்கு உணர்த்தியது, தமிழும், தமிழ் உணர்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று.//
இது எங்கும் எப்போதும் அழியாது நண்பரே.*/
வருகைக்கு நன்றி நண்பரே.
/*அரசியல்வாதிகளுக்கு உணர்ச்சி எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை...*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!
//மும்பையிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை காட்டும் முகமாய். 01 - 03 - 2009 ஞாயிறு மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை "மாதுங்கா கிங் சர்கிள் - தானே" ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான 25. கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலியை தங்கள் உணர்வுடன், தமிழ் உணர்வுடன் ஏற்படுத்தினர்.//
மும்பாயின் மக்கள் வெள்ளத்திலும்,மாதுங்கா-தானே இரு இடங்களுக்குமான தூரம் வரையிலுமான இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றிருக்கவேண்டும்.ஊடகங்கள் எப்படி உணர்வுகளைப் புறக்கணிக்கின்றன என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு.தகவலுக்கு நன்றி.
/*ராஜ நடராஜன் said...
//மும்பையிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை காட்டும் முகமாய். 01 - 03 - 2009 ஞாயிறு மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை "மாதுங்கா கிங் சர்கிள் - தானே" ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான 25. கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலியை தங்கள் உணர்வுடன், தமிழ் உணர்வுடன் ஏற்படுத்தினர்.//
மும்பாயின் மக்கள் வெள்ளத்திலும்,மாதுங்கா-தானே இரு இடங்களுக்குமான தூரம் வரையிலுமான இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றிருக்கவேண்டும்.ஊடகங்கள் எப்படி உணர்வுகளைப் புறக்கணிக்கின்றன என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு.தகவலுக்கு நன்றி.*/
வருகைக்கு நன்றி... நன்றி.. நன்றி.
நம்ம ஆளுங்க எல்லா இடத்துலயும் இப்படி ஒன்னு சேர்ரதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாதான் இருக்கு.. ஆனா இங்க எல்லாத்தையும் அரசியலாக்குறதுக்குனே ஒரு கூட்டம் வேற இருக்கே...
கரம் கரம் னு போட்டு, பதிவை ரொம்ப காரசாரமா ஆக்கிட்டீங்க..
/*" உழவன் " " Uzhavan " said...
நம்ம ஆளுங்க எல்லா இடத்துலயும் இப்படி ஒன்னு சேர்ரதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாதான் இருக்கு.. ஆனா இங்க எல்லாத்தையும் அரசியலாக்குறதுக்குனே ஒரு கூட்டம் வேற இருக்கே...
கரம் கரம் னு போட்டு, பதிவை ரொம்ப காரசாரமா ஆக்கிட்டீங்க..*/
வருகைக்கு நன்றி நண்பரே....
Post a Comment