Thursday, 20 March 2008

உன் பிரச்சினை என்ன?

மச்சி,

உன் பிரச்சினை உனக்கு, என் பிரச்சினை எனக்கு, அவன் பிரச்சினை அவனுக்கு,ஆனா உனக்கு ஒரு பிரச்சினைனா அது எனக்கும் பிரச்சினைதான், எனக்கு ஒரு பிரச்சினைனா அது உனக்கும் பிரச்சினைதான். அவனுக்கு ஒரு பிரச்சினைனா அது நமக்கும் பிரச்சினைதான். அவனுக்கு வந்த பிரச்சினை நமக்கும்தான் என்று இருந்தா பிரச்சினை, பிரச்சினை என்று பெரிய பிரச்சினையாஹவே இருக்கும். அவனுக்கு வந்த பிரச்சினைய நம்ம பிரச்சினையா நினைக்கவில்லை என்றால் அது பிரச்சினை இல்லை ஆனா நமக்கு வந்த பிரச்சினையை அவன் பிரச்சினையா நினைக்கவில்லை என்று பிரச்சினை பண்ணுனா தான் பிரச்சிணையே.அடுத்தவங்களுக்கு பிரச்சினை உண்டு பண்ணுகிற பிரச்சினைகளை வைத்து போது இடத்தில் பிரச்சினை பண்ணினால் அது பிரச்சினைத்தான். அதுக்காக நாமளும் எல்லாத்தையும் பிரச்சினையா நினைக்க கூடாது. இப்ப என்ன பிரச்சினைனா, நம்ம கிட்டே பிரச்சிணையே இல்லாத ஆளு யாரு? சொல்லு பார்ப்போம். இதுக்கு நீ பதில் சொன்னேனு வைச்சுக்கோயேன். இந்த லோகத்தில் பிரச்சிணையே இல்லாத ஒரு ஆளு நீதான்.பிரச்சினை இல்லாததை நெனச்சு பிரச்சினை பண்ணாதே.சரி பிரச்சினை பண்ணாம விஷயத்துக்கு வா. உன் பிரச்சினை என்ன?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Tuesday, 22 January 2008

தூங்கும் முன்பு பேசினால்.........???????

தூங்கும் முன்பு செல்போனில் பேசினால் உடல் நலனுக்கு ஆபத்து.
லண்டன்: தூங்கச் செல்வதற்கு முன்பு படுக்கையில் செல்போனில் பேசினால் உடல் நலத்திற்கு பேராபத்து ஏற்படும். மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.செல்போன் கருவியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால், ஞாபக மறதி மற்றும் தீராத தலைவலி ஆகியவை ஏற்படும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட நேரிடுமாம்.சரியாக தூங்காவிட்டால் மனச் சோர்வு, கவனக்குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் சரியாக படிக்க முடியாமல் சிரமப்பட நேரிடுமாம்.ஸ்வீடனில் உள்ள உப்பசாலா பல்கலைக்கழகம், கரோலின்ஸ்கா கல்வி நிறுவனம், மிச்சிகனில் உள்ள வேயன் ஸ்டேட் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த எச்சரிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.செல்போன் கருவியிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு மூளையை நேரடியாக பாதிக்கும் அபாயமும் உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தாட்ஸ் தமிழ் (செய்தி வலை)

தூங்குவதற்கு முன் மனைவியிடம் பேசினால் என்ன என்று எந்த ஒரு பல்கலைக்கழகமும் ஆய்வு செய்யாத காரணத்தினால்.நொந்து நூடுல்ஸ் ஆனவர்களால் நடத்தப்படும் இந்த "பிரான்டல் பல்வலிகலகம்" ( கலகம் என்றுள்ளது சத்தியமாகஎழுத்து பிழை அல்ல) ஒரு ஆய்வு நடத்தியது.

அதன் விபரம் வருமாறு:
தூங்கச் செல்வதற்கு முன்பு படுக்கையில் மனைவியுடன் பேசினால் உடல் நலத்திற்கு பேராபத்து ஏற்படும். மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வு தெரிவிக்கிறது.மனைவியின் வாயில் இருந்து வெளியாகும் புதிர் பேச்சால் ஞாபக மறதி மற்றும் தீராத தலைவலி ஆகியவை ஏற்படும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட நேரிடுமாம்.சரியாக தூங்காவிட்டால் மனச் சோர்வு, கவனக்குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் சரியாக படிக்க முடியாமல் சிரமப்பட நேரிடுமாம்.அலுவலகங்களில் வேலை செய்வோர் தவறிழைக்க நேரிடுமாம்.மனைவியின் வாயில் இருந்து வெளியாகும் புதிர் பேச்சு மூளையை நேரடியாக பாதிக்கும் அபாயமும் உள்ளது, என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சற்றுமுன் வந்த செய்தியாக:
சுவிளாசில் உள்ள உய்யலாலா பல்வலிகலகமும், ஆப்பு விலக்கி பாடசாலையும் சேர்ந்து நடத்திய ஆய்விலும் இந்த எச்சரிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.