மச்சி,
உன் பிரச்சினை உனக்கு, என் பிரச்சினை எனக்கு, அவன் பிரச்சினை அவனுக்கு,ஆனா உனக்கு ஒரு பிரச்சினைனா அது எனக்கும் பிரச்சினைதான், எனக்கு ஒரு பிரச்சினைனா அது உனக்கும் பிரச்சினைதான். அவனுக்கு ஒரு பிரச்சினைனா அது நமக்கும் பிரச்சினைதான். அவனுக்கு வந்த பிரச்சினை நமக்கும்தான் என்று இருந்தா பிரச்சினை, பிரச்சினை என்று பெரிய பிரச்சினையாஹவே இருக்கும். அவனுக்கு வந்த பிரச்சினைய நம்ம பிரச்சினையா நினைக்கவில்லை என்றால் அது பிரச்சினை இல்லை ஆனா நமக்கு வந்த பிரச்சினையை அவன் பிரச்சினையா நினைக்கவில்லை என்று பிரச்சினை பண்ணுனா தான் பிரச்சிணையே.அடுத்தவங்களுக்கு பிரச்சினை உண்டு பண்ணுகிற பிரச்சினைகளை வைத்து போது இடத்தில் பிரச்சினை பண்ணினால் அது பிரச்சினைத்தான். அதுக்காக நாமளும் எல்லாத்தையும் பிரச்சினையா நினைக்க கூடாது. இப்ப என்ன பிரச்சினைனா, நம்ம கிட்டே பிரச்சிணையே இல்லாத ஆளு யாரு? சொல்லு பார்ப்போம். இதுக்கு நீ பதில் சொன்னேனு வைச்சுக்கோயேன். இந்த லோகத்தில் பிரச்சிணையே இல்லாத ஒரு ஆளு நீதான்.பிரச்சினை இல்லாததை நெனச்சு பிரச்சினை பண்ணாதே.சரி பிரச்சினை பண்ணாம விஷயத்துக்கு வா. உன் பிரச்சினை என்ன?
Thursday, 20 March 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நைனா,
உங்கள் கேள்வியை கோவி.கண்ணன் அவர்களின் பதிவு பின்னூட்டத்தில் பார்த்தேன்.
http://tamilblogging.blogspot.com என்கிற முகவரிக்குள் செல்லுங்கள். பதிவுலகம் சம்பந்தமான எல்லாவிதமான கேள்விகள் சந்தேகங்கள் எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும்.
நைனா,
குறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதி இருக்க வேண்டும். நீங்கள் இரண்டு தான் எழுதி உள்ளீர்கள். இன்னொன்றும் எழுதி விட்டு, தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் உங்கள் URL முகவரியை (http://naiyaandinaina.blogspot.com)அதற்குரிய செவ்வகக் கட்டத்தில் டைப் செய்து "அளி" என்பதில் க்ளிக் செய்யுங்கள். தமிழ்மணத்தில் பதிவுகள் காட்டப்படுவது தொடங்கி விடும்.
மிக நன்றி திரு.ரத்னேஷ் ஐயா...
மிக நன்றி திரு.ரத்னேஷ் ஐயா...
முடியலப்பா சாமி.. இவ்வளவு பிரச்சினைகளோட இருக்குற ஒரு ஆளோட சினேகமே வேண்டாம்.. வர்ரேன் சாமி
நண்பர் ரூபஸ் அவர்களே....
நம்மில் பிரச்சினை இல்லாத ஆள் ரெண்டு பேர் தான் ஒருவர் இறந்துவிட்டார் இன்னொருவர் பிறக்கவே இல்லை
நன்றி
தங்கள் நட்புக்கு நன்றி நைனா
ஆகா - பிரச்னையைப் பத்தி இப்படி ஒரு பதிவா - பிரசனையைப் பத்திப்பதிவு போட்டா அதுவே பிரச்னையாயிடும் - போடலேன்னா அது பெர்ரிய பிரச்னையாயிடும். நாட்லே வீட்லே தெருவுலே ஆபீஸ்லே பார்லே கிளப்புக்கடயில -எங்கேய்யா பிரச்னை இல்ல - அவனவன் பிரச்னை அவனவனுக்கு - நமக்குள்ள பிரச்னையே நாமே தான்
வர்ட்டா
Post a Comment