Wednesday, 2 December 2009
எனது ஆசான் அண்ணன் தண்டோராவிற்கு சமர்ப்பணம்
நீரும், நீரோக்களும்
மாநிலங்களுக்கு இடையே...
பிரச்சினை
"பிரச்சினை தீர்ப்பது "நீரோ"!
மாநில தலைவர்களிடேயே...
பிரச்சினை
"பிரச்சினை தீர்ப்பது "நீ"ரோ?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மரமும் பெண்ணும்
மரமே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்ந்து பட்டவளா?
பெண்ணே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்க்கை பட்டவளா?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சந்தேகம் இல்லாமல்...
உன் தேகம்?
உனக்கு இல்லை!
என் தேகம்?
எனக்கு இல்லை!
உன் தேகம்?
எனக்கும் இல்லை!
என் தேகம்?
உனக்கும் இல்லை
எல்லார் தேகத்திலும்
சந்தேகம் மட்டும்.
சந்தேகமின்றி!!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பொறுப்பு துறப்பு:
நேற்று
அலை பேசியில் ஒரு அலை
பேசியது
ரமேஷ் வைத்யா எனும் தலை
சொல்லியது
உன்னுள் உறங்குது ஒரு கலை
அதனால்
இன்று நடந்தது இந்த கொலை
வேண்டாம்
எனக்கு பீச்சில் ஒரு சிலை
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ரமேஷ் வைத்யா சொன்னதையெல்லாம் நீங்க சீரியசாவா எடுத்துக்கறது?
சமர்ப்பணம்?? பொட்டு வச்சு,மாலை போடாம இருந்தா சரிப்பா..
/*தண்டோரா ...... said...
ரமேஷ் வைத்யா சொன்னதையெல்லாம் நீங்க சீரியசாவா எடுத்துக்கறது?
சமர்ப்பணம்?? பொட்டு வச்சு,மாலை போடாம இருந்தா சரிப்பா..*/
அஆவ்வ்வ்..... கவிதைய(!) ஒன்னும் சொல்லாமே... உன் கவிதைலே சொல்றதுக்கு ஒன்னும் இல்லேன்னு சொல்லாம சொன்ன உங்க தெறமை யாருக்கும் வராது.... அஆவ்வ்வ்..
இந்த கொலைவெறி தொடர்ந்தால் நீங்க கடைசிலே... சொன்னதை தான் பண்ணனும்... அஆவ்வ்வ்..
நைனா,ரொம்ப நாளா உங்களைக் காணல.இப்போகூட ஒரு அழைப்போட வந்திருக்கீங்க !
கவிதை முதல் இரண்டும் சிந்தித்த வரிகள்.
//மரமே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்ந்து பட்டவளா?
பெண்ணே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்க்கை பட்டவளா?//
பெண்ணுக்கும் சொல்லலாம்.நீ வாழ்ந்து பட்டவளா? என்று !
பொறுப்பு துறப்பு:
இந்த கவிதை சூப்பரு....
//பேசியது
ரமேஷ் வைத்யா எனும் தலை
சொல்லியது
உன்னுள் உறங்குது ஒரு கலை
அதனால்
இன்று நடந்தது இந்த கொலை
//
சிங்கம் கிளம்பிருச்சேய்.....!
நைனா, நானும் கொலை பண்ணியிருக்கேன், வந்து பாருங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post_02.html
அன்பின் நைனா
எல்லாமே நல்லா இருக்கு
நல்வாழ்த்துகள்
மரமும் பெண்ணும் படம் சூப்பர்
இது தொடர்ந்தால் மதுரை மண்ணில் கால் வைக்கும்போது நைனாவுக்கு இருக்குது செம ரகளை..
குரு மாதிரியே ஒரு எழவும் புரியலை..!
இந்தப் பதிவுக்கு தாராளமா பூவும், பொட்டும் வைச்சு பக்கத்தில் பத்தி பொருத்தி வைக்கலாம்..!
:)
கவிதை கவிதை கவிதை
//நேற்று
அலை பேசியில் ஒரு அலை
பேசியது
ரமேஷ் வைத்யா எனும் தலை
சொல்லியது
உன்னுள் உறங்குது ஒரு கலை
அதனால்
இன்று நடந்தது இந்த கொலை
வேண்டாம்
எனக்கு பீச்சில் ஒரு சிலை //
நைனா
உன் கவிதைக்கு ஏது விலை
ஏன்?ஏன் இப்படி? நல்லாத்தான போயிட்டிருந்தது?
அடுத்த டி.ஆரா நையாண்டி???
//"பிரச்சினை தீர்ப்பது "நீரோ"!//
பிரச்சனையாய் இருப்பது “நீரோ”
//மதுரை மண்ணில் கால் வைக்கும்போது நைனாவுக்கு இருக்குது செம ரகளை..//
அட இவய்ங்க இப்பிடித்தான் பாஸ்...இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடிய்மா?
ஆனாலும் கவிதை நல்லாயிருக்குங்க.
பீச்சில அடிக்குது அலை
அங்கே உனக்கு ஒரு சிலை
அதுக்கு தேவை ஒரு மலை
பொழப்பு வைப்போம் உலை
நீதான் எங்களுக்கு தலை
மூன்றும் முத்தா இருக்கு>... வாழ்த்துகள் நைனா
\\அகல்விளக்கு said...
பொறுப்பு துறப்பு:
இந்த கவிதை சூப்பரு...\\
I Like you Agal vilakku Boss..!
:-)
\\ கார்த்திகைப் பாண்டியன் said...
இது தொடர்ந்தால் மதுரை மண்ணில் கால் வைக்கும்போது நைனாவுக்கு இருக்குது செம ரகளை..\\
ஆயிரம் யானை வந்தாலும் எதிர்த்து நிக்கிற சிங்கம் பாஸு எங்க நைனா..!
அவரு சைலன்ட்டா பேசுனாலே சைரன் அலறும் ஆமா சொல்லிட்டேன்.
உங்களோட எல்ல வரிகளிலும்
சந்தோசமும், உற்சாகமும்.
தெறிக்குது....
Post a Comment