Wednesday, 14 October 2009

கணவர்களை அடையாளம் காண பத்து வலிகள்..!!!(பிழை இல்லே)



நமது நண்பர்... திரு. கார்த்திகை பாண்டியன் அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்காரு... அதே பாணியிலே... நம்ம பணி.

இந்த உலகத்தில் அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - கணவர்கள். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய" இந்தக் கைப்பிள்ளைகளை அடையாளம் காண எளிமையான வழிகள் இங்கே..

--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மனைவியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு ரெண்டு ரூபாய் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும், வேறு ஒரு 'ரங்ஸ்' கூட்டிகிட்டு வந்த 'தங்க்ஸ்' இவரு வாசல்லே இருந்த நெலமைய பார்த்து பிச்சையா போட்டதா இருக்கும். "கல்யாணம் கட்டிகிட்டா, கைலே நாலு காசு போரளும் " என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் திருவோடு எடுத்து தெருவோடு போகும் வரை.

--> மழை பெய்த இரவில் தங்க்ஸ் அருகே போகும்போது, பக்கத்தில் இருப்பவர்கள் காதில் எதுவும் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் தங்க்ஸ் இவர்களின் மீது ஏழு வீட்டுக்கு கேட்குமாறு லட்சார்ச்சனை செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.

--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்று தெரிந்தும், கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) அவளுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.

--> டிராபிக் சிக்னலில் மிகச்சரியாக ஸ்டாப் கோடுக்கு வெகுமுன்பாகவே வண்டியை நிறுத்தி விடுவார்கள். சிவப்பு பச்சையாக மாறும்வரை பொறுமையாகக் காத்திருந்துதான் போவார்கள். இதனால் பின்னால் உக்காந்திருக்கும் தங்க்ஸ் கிட்டே வண்டி வண்டியாய் திட்டு வாங்குவார்கள்.

--> வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் " என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

--> பஸ் பிரயாணத்தில் பக்கத்து சீட்டு பயணி அவரது தங்க்ஸ் அவரை மதிப்பும் மரியாதையுமா பேசுவார் என்று அளந்து விடுவதை பொளந்துகிட்டு கேட்டு கொண்டே இருப்பார்கள். இறங்கும் இடம் வரும்போதுதான் முன்னாள் இருந்து ராட்சச தனமா ஒரு குரல் வரும். கடைசியில் பார்த்தால் அது இவர்கள் தங்கஸை விட மிக கொடுமையாக இருக்கும்.

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.இவனுக்கு இருக்குற தைரியம் கூட நம்ம கிட்டே இல்லியே... இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்

--> ஆபிசில் லீவே போட மாட்டார்கள். மற்றவர்கள் வேலையையும் இவர்களே பார்ப்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்து சீட்காரர் செய்த தப்புக்கும் சேர்த்து இவர்களே திட்டு வாங்கிக் கொள்வார்கள்.பின்னே வீட்டுக்கு சீக்கிரம் போய் சிக்கலில் மாட்ட அவர்கள் விரும்புவார்களோ...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். மாங்கு மாங்குன்னு பதிவு எழுதி... கடைசியில் இதெல்லாம் நான் கிடையாது... என்னோட நண்பர் ஒருவரோட அனுபவம்னு டிஸ்க்கி... மட்டும் போட்டா போதும் பாவம் அந்த நண்பர் அப்படின்னு... பின்னூட்டமும் போடுவாங்க... (நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)


டிஸ்கி: இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. என்னோட நண்பர் ஒருத்தரோட அனுபவம் இது... அதனால யாரும் "நீயும் இளிச்சவாய கணவர்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..

57 comments:

தராசு said...

நான் ஒண்ணும் "நீயும் இளிச்ச வாய் கணவன் தானா" ன்னு பின்னூட்டம் போடல.

கார்த்திகைப் பாண்டியன் said...

//"அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் " என்று ஒதுங்கியே இருப்பார்கள்.//

//இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்//

வலியின் வலிமை தெரியுது நைனா

ஷாகுல் said...

அப்போ நீங்க இல்லாயா அது.

தினேஷ் said...

மொக்க..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//"நீயும் இளிச்சவாய கணவர்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க//

Ok. "Under" stand !!! :):)

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
மொக்க..*/

எனது எல்லா பதிவுமே மொக்கை தான்... இதனை மட்டும் மொக்க என்று சொல்லி என்னை வைத்து நீங்க காமெடி பண்றது நல்லா இல்லே நண்பா.... அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலையரசன் said...

தங்க்ஸ் ஊருல இல்லையோ?

மணிஜி said...

நடத்து நைனா...நடத்து...

Prathap Kumar S. said...

நல்லாருக்கு...ஆனா நல்லால்ல...
ஓகே தலைவா

முரளிகண்ணன் said...

:-)))

சொல்லரசன் said...

//இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. என்னோட நண்பர் ஒருத்தரோட அனுபவம் இது...//

நாட்டல ரொம்பபேர் தனக்கு நேர்ந்த சோக‌அனுபவங்களை அவங்க சொன்னாங்கோ,இவங்க சொன்னாங்கோன்னு சொல்லிட்டு இருக்காங்க. நீங்கமட்டும் விதிவிலக்க என்ன?

VISA said...

:)))))))))))))))))))))

பீர் | Peer said...

பாம்பின் கால் பாம்பறியும். அவ்வ்வ்வ்....

தேவன் மாயம் said...

//இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்//

நைனா!!!நல்ல பாஸிடிவ் அப்ரோச்!!

தேவன் மாயம் said...

இதுபோல் எத்தனை பேரு???? ஹி!

ஹேமா said...

என்ன நடக்குது இங்க,தீபாவளின்னு கேள்விப்பட்டேன்.களை கட்டுதோ கொண்டாட்டம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரிதான்.:-)))))))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சரித்திரத்தில் நின்று விட்டீர்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது..ன்னு சந்திரபாபு பாட்டும் கூட சேத்து படிங்க நைனா.. ஹெஹெஹே..

Anonymous said...

//வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.//

அந்த ஒரு விஷயத்தில் எல்லா ரங்க்ஸும் பாவம்தான். என் அனுதாப ஓட்டு அவங்களுக்கே. :)

ஆ.ஞானசேகரன் said...

//தராசு said...

நான் ஒண்ணும் "நீயும் இளிச்ச வாய் கணவன் தானா" ன்னு பின்னூட்டம் போடல.//

ரிபீட்ட்ட்ட்

என்ன நைனா எப்படி இப்படியெல்லாம்..

வெண்ணிற இரவுகள்....! said...

வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் //

நல்ல நையாண்டி

GHOST said...

அனுபவம் பேசுகிறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பின்னோக்கி said...

எப்படித்தான் தோணுதோ உங்களுக்கு :)

நையாண்டி நைனா said...

/* தராசு said...
நான் ஒண்ணும் "நீயும் இளிச்ச வாய் கணவன் தானா" ன்னு பின்னூட்டம் போடல.*/

சரிதானே ஒரு ஆம்பிளையோட கஷ்ட்டம் ஒரு ஆம்பிளைக்கு தானே புரியும்

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
//"அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் " என்று ஒதுங்கியே இருப்பார்கள்.//

//இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்//*/

வலியின் வலிமை தெரியுது நைனா*/
Keep The Company Secrets.

நையாண்டி நைனா said...

/* ஷாகுல் said...
அப்போ நீங்க இல்லாயா அது.*/

Yes, I am not that person.

நையாண்டி நைனா said...

/* நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//"நீயும் இளிச்சவாய கணவர்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க//

Ok. "Under" stand !!! :):)*/

Yes, Thanks. You have INTEL INSIDE.

நையாண்டி நைனா said...

/* கலையரசன் said...
தங்க்ஸ் ஊருல இல்லையோ?*/
ஒரு மனுஷன் உண்மை பேசுறது, பொறுக்காதே உங்களுக்கு... உடனே மிரட்ட வேண்டியது... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/* தண்டோரா ...... said...
நடத்து நைனா...நடத்து...*/
இதெல்லாம் நீங்க சொல்லவேண்டிய மேட்டரு... நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்...

நையாண்டி நைனா said...

/* நாஞ்சில் பிரதாப் said...
நல்லாருக்கு...ஆனா நல்லால்ல...
ஓகே தலைவா*/
இதை மாத்தி சொன்னா தான் குடும்ப வண்டி ஓடும். அதாவது... "நல்லால்ல..ஆனா நல்லாருக்கு..."

நையாண்டி நைனா said...

/* முரளிகண்ணன் said...
:-)))*/

:))))))

நையாண்டி நைனா said...

/* சொல்லரசன் said...
//இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. என்னோட நண்பர் ஒருத்தரோட அனுபவம் இது...//

நாட்டல ரொம்பபேர் தனக்கு நேர்ந்த சோக‌அனுபவங்களை அவங்க சொன்னாங்கோ,இவங்க சொன்னாங்கோன்னு சொல்லிட்டு இருக்காங்க. நீங்கமட்டும் விதிவிலக்க என்ன?*/

அமாம்னே... சில பேரு காணாமே போயிர்றாங்க... திடீர்னு இப்படி தோன்றி அலற வைக்குறாங்க...

நையாண்டி நைனா said...

/* VISA said...
:)))))))))))))))))))))*/

:))))))))))))))))))))))))))))))))))))))))))

நையாண்டி நைனா said...

/* பீர் | Peer said...
பாம்பின் கால் பாம்பறியும். அவ்வ்வ்வ்....*/
நன்றி நண்பா... அறிஞ்சிகிட்டதுக்கு நன்றி

நையாண்டி நைனா said...

/* தேவன் மாயம் said...
//இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்//

நைனா!!!நல்ல பாஸிடிவ் அப்ரோச்!!*/
பின்னே நாம ரங்கமணிங்க என்னிக்காவது நெகடிவ்வா திங்கு பண்ணுவோமா? இல்லே பண்ணத்தான் முடியுமா... நீங்களே சொல்லுங்க..

நையாண்டி நைனா said...

/* தேவன் மாயம் said...
இதுபோல் எத்தனை பேரு???? ஹி!*/

எல்லாருமே இப்படிதான் பாஸ்...

குறிப்பா இன்னும் பின்னூட்டம் போடாதவங்களுக்கு இன்னும் அவங்களோட தங்க மணிங்க.. அனுமதி கொடுக்கலே போலே இருக்கு...

நையாண்டி நைனா said...

/* ஹேமா said...
என்ன நடக்குது இங்க,தீபாவளின்னு கேள்விப்பட்டேன்.களை கட்டுதோ கொண்டாட்டம்.*/

ஆமாம் அக்கா... தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருங்க...

நையாண்டி நைனா said...

/* ஸ்ரீ said...
சரிதான்.:-)))))))))))*/

புரிந்து கொண்ட தோழா நீ வாழ்க

நையாண்டி நைனா said...

/* SUREஷ் (பழனியிலிருந்து) said...
சரித்திரத்தில் நின்று விட்டீர்கள் */

அமாங்க... இன்னும் உக்காருறதுக்கு பெர்மிசன் மேலே இருந்து வரலை ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/* பிரியமுடன்...வசந்த் said...
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது..ன்னு சந்திரபாபு பாட்டும் கூட சேத்து படிங்க நைனா.. ஹெஹெஹே..*/

அதை நீங்க செஞ்சிருங்க தல

நையாண்டி நைனா said...

/* சின்ன அம்மிணி said...
//வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.//

அந்த ஒரு விஷயத்தில் எல்லா ரங்க்ஸும் பாவம்தான். என் அனுதாப ஓட்டு அவங்களுக்கே. :)*/

புரிஞ்சிகிட்டீங்கன்னா... நன்றி

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
//தராசு said...

நான் ஒண்ணும் "நீயும் இளிச்ச வாய் கணவன் தானா" ன்னு பின்னூட்டம் போடல.//

ரிபீட்ட்ட்ட்

என்ன நைனா எப்படி இப்படியெல்லாம்..*/

நம்ம கானா பானா சொல்லி இருக்காரு பாருங்க.. வலியின் வலிமை ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*வெண்ணிற இரவுகள்....! said...
வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் //

நல்ல நையாண்டி*/

நன்றி நண்பா...
(இரண்டு தடவை நீங்க ஒரே கமண்டு போட்டிருந்ததாலே ஒன்னை நீக்கிட்டேன் நண்பா... கோவிச்சுக்காதீங்க...)

நையாண்டி நைனா said...

/* சஹானா beautiful raga said...
அனுபவம் பேசுகிறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்*/
ஹைய்யோ... என்ன இது உங்களுக்கு அனுபவமே இல்லாத மாதிரி 'டபாய்'க்குறீங்க..

நையாண்டி நைனா said...

/* பின்னோக்கி said...
எப்படித்தான் தோணுதோ உங்களுக்கு :)*/

அவ்ளோ அடியும் இடியும் வாங்கி இருக்கேன் சாமி .

cheena (சீனா) said...

நைனா - பாவப்பட்டவங்களப் பத்தி எல்லாம் எழுதப்படாது - தெரியுதா

யாராச்சும் தங்க்ஸ் எதிர் வினை எழுதப் போறாங்க

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

தல கவிதைக்கு எதிர்கவுஜ தான் போடறீங்கன்னு பார்த்தா, இப்போ இப்படி பதிவுக்கும் ஒரு நக்கல் பதிவு போட்டுட்டீங்களே.. சூப்பரு தல... :))

Unknown said...

//வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள். //

என்ன செய்யிறது...
அப்பாவி ஆண் சமூகம்...

ஆனா நான் கவலைப்பட மாட்டன்...
நானெல்லாம் வருத்தப்படாத வாலிபர் சங்க ஆள்...

நையாண்டி நைனா said...

/*cheena (சீனா) said...
நைனா - பாவப்பட்டவங்களப் பத்தி எல்லாம் எழுதப்படாது - தெரியுதா

யாராச்சும் தங்க்ஸ் எதிர் வினை எழுதப் போறாங்க

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்*/

அமாம் ஐயா... இருந்தாலும் எதனை நாலு தான் மனசுலே வச்சி பொருமுகிறது...

உங்கள் ஆசீர்வாதங்களுடன் எங்கள் தீபாவளி நன்றி, உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

/*Achilles/அக்கிலீஸ் said...
தல கவிதைக்கு எதிர்கவுஜ தான் போடறீங்கன்னு பார்த்தா, இப்போ இப்படி பதிவுக்கும் ஒரு நக்கல் பதிவு போட்டுட்டீங்களே.. சூப்பரு தல... :))*/

நன்றி தல, இப்படி நெறையா செஞ்சிருக்கோம்..

நையாண்டி நைனா said...

கனககோபி said...
//வீட்டில் இரு.... "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள். //

என்ன செய்யிறது...
அப்பாவி ஆண் சமூகம்...

ஆனா நான் கவலைப்பட மாட்டன்...
நானெல்லாம் வருத்தப்படாத வாலிபர் சங்க ஆள்...*/

சந்தோசமா இரு தம்பி... என்ஜாய் பண்ணு.
தீபாவளி வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

சுய விவரம் நல்லா இருக்குங்க.. ;))

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ம்ம்ம்.. புரியுது புரியுது

விக்னேஷ்வரி said...

அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - கணவர்கள். //

ஆரம்பமே தூள்.

1. இப்போவெல்லாம் பத்தாயிரம் ரூபாய் எடுத்திட்டு கணவர்கள் போக வேண்டாம். அவங்க கிரெடிட் கார்ட் மட்டும் எடுத்திட்டு மனைவிகள் போய்டுறாங்க.

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சானு மட்டும் சொல்லுங்க.

Jackiesekar said...

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.இவனுக்கு இருக்குற தைரியம் கூட நம்ம கிட்டே இல்லியே... இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்//

சூப்பருடா ரொம்ப ரசிச்சேன்...நைனா..

Anonymous said...

ha ha........ LATCS