Thursday, 20 August 2009

கலைஞர் பகுத்தறிவுவாதியா...!!!



தமிழகத்து அரசியலின்
பல்கலைகழகம்,
கலங்கரை விளக்கம்,
முத்தமிழ் அறிஞர்,
பல்துறை கலைஞர்
கலைஞர் அவர்களை...

விமர்சிக்கும் வித்தகர்கள்,
பகடிபாடும் பாணர்கள்,
விகடம்செய் விற்பன்னர்கள்,
நைச்சியமாக நையாண்டி
செய்திடும் நாரதமுனிகள்
என தரணியிலே
பல்லோருண்டு.

அத்தனைபேருக்கும்
அவரே பதிலடி
கொடுக்கும் அணுகுண்டு.

அவர், எதிர் நின்று
கேள்வி கேட்கும்
திறன் யாருக்குண்டு.

அத்தனை பேரும்
ஓடி காணாமல்
போவார் வெருண்டு.

இந்த சிறார்களை
மன்னிக்கும் மனமும்
அன்பும் அவருக்குண்டு.

பலதளங்கலிலே இருந்து
ஏகடியம் பேசும்
பலரும் வைப்பதுண்டு
ஒரு குற்றச்சாட்டுண்டு
அது
அவர் போட்டிருக்கும்
மஞ்சத்துண்டு.

மஞ்சள் அணிவது
ஒரு குறைபாடா?
பகுத்தறிவின் குறைபாடா?
அல்லது செழுமதியின்
செயல்பாடா

பகுத்தறிந்து பார்த்தால்
அது ஒரு குறியீடு.
அதனுண்மைக்கு எது ஈடு.

கலைஞர்,
பழுத்த அரசியல்வாதி,
பழுத்த தமிழறிஞர்,
பழுத்த சமூகவாதி,
பழுத்த ராஜதந்திரி,
பழுத்த என
சொல்லுங்கால்
எண்ணமதிலே
மஞ்சள் வரவில்லை
சொல்லுங்காள்
மக்களே சொல்லுங்காள்

உலகிற்கு ஒளி
கொடுப்பது இரண்டு
தனல் ஆதவனும்
தண் அம்புலியும்
இரண்டும் பழுப்புநிறம்
கொள்வதுண்டு.

அறியாமை இருள்
நீக்க வந்த இந்த
சூரியன் பழுப்பு நிறம்
கொள்வதிலே என்ன குற்றமுண்டு?

இன்னும் ஒரு
விளக்கம் கொடுத்து
ஒதுங்குகிறேன் என்
கை கொண்டு.

போக்குவரத்து சந்திகளிலே,
சந்திதிருப்பீர் மூவிளக்கு
செந்நிறத்திலே,
பசுந்நிறத்திலே
மதிசால் தலைவர்
சால்வை நிறத்திலே
ஒன்று,
என்று
மூன்று.

சிந்திப்பீர் மக்களே சிந்திப்பீர்
சிந்திக்கும் திறன் பெற்றோரே
சிந்திப்பீர்...

சிகப்பின் அடையாளம்
சிறைப்பட்டு நிற்பது,
பசுமையின் விளக்கம்
பாய்ந்து செல்வது...

இவையிரண்டுமே
வாழ்வை சிறப்பிக்குமா...
ஓரிடத்திலேயே அசையா
குட்டையாக இருப்பதும்,
விளைவை முன்பின்
யோசியாது
பாய்ந்தோடுவதும்
பயந்தோடுவதும்
வாழ்விலே சிறப்பினை
கொண்டுவராது...

எதுவாக இருந்தாலும்,
எந்த சூழலாக இருந்தாலும்,
பொறுமை காத்து
நின்று நிதானித்து,
கவனித்து செய்வதே
சிறப்பாகும்.

நின்று கவனி,
கவனித்து செல்.
அந்த கவனி
என்பதின் குறியீடே...
மஞ்சள் என்பதையும்
நான் உங்களுக்கு
சொல்லவும் வேண்டுமோ?




டிஸ்கி: அடுத்து வேறு ஏதாவது ஒரு பதிவர் நான் லேபில் வைத்து போலே வைக்க முயற்சி செய்தால், அதில் என் பெயரும் இடம் பெறவே இந்த முயற்சி.

இப்பவே ஒத்துகோங்க, நான் இலக்கியவாதி...

இல்லையெனில் இந்த "கலை"வெறி தொடரும்.


69 comments:

Raju said...

யோவ், என்னாயா லேபிளு இது...?

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
யோவ், என்னாயா லேபிளு இது...?*/

தெளிவா கேளுயா... கேபிளுன்னு காதுலவிழுது....

ஒ.. லேபிலா... அந்த கூட்டத்திலே நானும் சேரனும் என்று ரொம்ப நாளா ஆசை..

Radhakrishnan said...

கவனித்து செல் என்பதன் பொருள் தானா மஞ்சள்.

மஞ்சள் என்றால் மங்கலகரம் எனவும் பொருள் படும்.

மஞ்சள் என்றால் மட்டம் எனவும் பத்திரிக்கைகள் கொள்ளும்.

கருப்பு நிறத்தையும் இப்படி ஒரு கேள்வி கேட்டு விடுங்களேன். பெரியார் பகுத்தறிவுவாதியா என! கருப்பு நிறம் போட்டுக்கொண்டு மாலை போடும் பக்தர்களும் உண்டாம்.

நல்ல சந்தங்களை உள்ளடக்கிய வரிகள், மிகவும் ரசித்தேன்.

நையாண்டி நைனா said...

/*வெ.இராதாகிருஷ்ணன் said...
கவனித்து செல் என்பதன் பொருள் தானா மஞ்சள்.

மஞ்சள் என்றால் மங்கலகரம் எனவும் பொருள் படும்.

மஞ்சள் என்றால் மட்டம் எனவும் பத்திரிக்கைகள் கொள்ளும்.

கருப்பு நிறத்தையும் இப்படி ஒரு கேள்வி கேட்டு விடுங்களேன். பெரியார் பகுத்தறிவுவாதியா என! கருப்பு நிறம் போட்டுக்கொண்டு மாலை போடும் பக்தர்களும் உண்டாம்.

நல்ல சந்தங்களை உள்ளடக்கிய வரிகள், மிகவும் ரசித்தேன்.*/

கருத்துக்கு நன்றி ஐயா. தொடர்ந்து வாருங்கள்.

அத்திரி said...

ஏலே நைனா அண்ணாச்சிக்கு என்ன ஆச்சுலே

துபாய் ராஜா said...

யோவ் நைனா,நீங்க நல்லவரா ? கெட்டவரா ??!!. :(

தெர்லயப்பா !! :))

இந்த கவுஜயில் உள்குத்து,வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாமே இருக்கே ?!


//போக்குவரத்து சந்திகளிலே,
சந்திதிருப்பீர் மூவிளக்கு
செந்நிறத்திலே,
பசுந்நிறத்திலே
மதிசால் தலைவர்
சால்வை நிறத்திலே
ஒன்று,
என்று
மூன்று//

நம்ம தலைவர்ங்க வரும்போதுதான் ஒரு விளக்குக்கும் வேலையே கிடையாதே ??!! :))

//பழுத்த என
சொல்லுங்கால்
எண்ணமதிலே
மஞ்சள் வரவில்லை
சொல்லுங்காள்
மக்களே சொல்லுங்காள்//

இப்படி கழுத்து மேலே 'காள்' போட்டு கேட்டா என்னத்தை சொல்ல...!! :))

//இப்பவே ஒத்துகோங்க, நான் இலக்கியவாதி... //

ஒத்துக்கிறோம்.உங்களுக்கு இருக்கறது
'எலக்கிய'வியாதிதான். :))

பன்னிக்காய்ச்சலுக்கு கூட மருந்து உண்டு.நீங்க காய்ச்சறதுக்கு மருந்தே கிடையாது. :))

//இல்லையெனில் இந்த "கலை"வெறி தொடரும்.//

தொடரட்டும் உங்க கொலைவெறி ச்சீ,ச்சீ
கலைவெறி.... :))

துபாய் ராஜா said...

ஆமா,பிரபாகர்,பிரபாகர் ன்னு ஒரு பொலவர் வந்து வாழ்த்துப்பாட்டு படிப்பாரே ??!!.அவரை என்ன இன்னும் காணோம் !! :))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆ.. ஆ....
கவிஜு... கவிஜு...
//அந்த கூட்டத்திலே நானும் சேரனும் என்று ரொம்ப நாளா ஆசை..//
அப்படியே எந்த கூட்டத்துலன்னு ... தெளிவா சொல்லுங்கப்பு

Jackiesekar said...

ரசித்தேன் நைனா.. உனக்குள்ள இருக்கும் அந்த கலைஞனை

Dominic RajaSeelan said...

மிகவும் அருமை அன்பரே , சரியான நெத்தியடி , வாழ்த்துக்கள் .

மணிஜி said...

மஞ்சகாட்டு நைனா
மானிட்டர் அடிக்க போனார்

காஞ்ச காட்டுக்குள்ளே
...... காட்டி நின்றார்

நெஞ்ச தொட்டு சொன்னார்
கெஞ்ச கெஞ்ச மன்னார்..

(நைனா கவுஜ சூசூப்பர்)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

இப்பவே கண்ண கட்டுதே...

Suresh Kumar said...

நையாண்டி கலைஞரை பார்த்து இந்த கேள்வி

சொல்லரசன் said...

//சிந்திப்பீர் மக்களே சிந்திப்பீர்
சிந்திக்கும் திறன் பெற்றோரே
சிந்திப்பீர்... //

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கிடைக்குமா அந்த திறன்

சொல்லரசன் said...

//அந்த கூட்டத்திலே நானும் சேரனும் என்று ரொம்ப நாளா ஆசை..//

சிந்திப்பீர் மக்களே சிந்திப்பீர்
சிந்திக்கும் திறன் பெற்றோரே
சிந்திப்பீர்...

ப்ரியமுடன் வசந்த் said...

மஞ்சள் சிந்தனை
யாருக்கும் இப்படி தோன்றியிருக்காது நைனா

அருமை

Sanjai Gandhi said...

லேபிள் ஆட்களுக்கு இது தெரியுமா? :)

கலையரசன் said...

//இல்லையெனில் இந்த "கலை"வெறி தொடரும்.//

என் மேல அவ்வளவு பாசமா நைனு...

பிரபாகர் said...

கலைஞரவர் மஞ்சள் துண்டு
காரணத்தை ஆராய்ந்து
அழுத்தமாய் அனைவருக்கும்
எடுத்துச்சொன்ன என்நண்பா

கூழ் குடிக்க சென்றிடுவார்
கிருஸ்துமஸ் கலந்திடுவார்
வேழ முகன் வெறுத்திடுவார்
வெறுப்பதனை உமிழ்ந்திடுவார்.

காரணத்தை ஆராய்ந்து
கருத்துடனே சொல்லிட்டால்
சிறுபான்மை காவலரின்
சிறப்பான செயலிதனை

அறிந்திடுவோம் தெளிந்திடுவோம்
அவர்புகழை பேசிடுவோம்
மறுபேச்சு ஏதுமின்றி
மஞ்சள் துண்டு தொடர்ந்திடுவோம்.

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

//நின்று கவனி,
கவனித்து செல்.
அந்த கவனி
என்பதின் குறியீடே...
மஞ்சள் என்பதையும்
நான் உங்களுக்கு
சொல்லவும் வேண்டுமோ?//

ஆகா...

அரங்கப்பெருமாள் said...

அண்ணே... நீர் இலக்கியவாதிதான்..இலக்கியவாதிதான்..இலக்கியவாதிதான் அய்யா!!!
நீ முக்கண்ணை(மூவிளக்கு) காட்டினாலும் குற்றம் குற்றமே...நெற்றிக்க..... (ஏஏஏவ்வ்வ்வ்)

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
ஆமா,பிரபாகர்,பிரபாகர் ன்னு ஒரு பொலவர் வந்து வாழ்த்துப்பாட்டு படிப்பாரே ??!!.அவரை என்ன இன்னும் காணோம் !! :))//

வாழ்த்துப்பாட்டு மட்டுமல்ல
வசவுப்பாட்டும் வந்துவிடும்
எழுதிவிடும் விஷயம்தான்
எனக்கு முதல் தேவை நண்பா

அலுவக வேலையதும்
ஊர்கிளம்பும் அவசரமும்
தொல்லையாய் தொடந்துவர
தாமதமாய் பதிலளித்தேன்...

பிரபாகர்

GHOST said...

//விமர்சிக்கும் வித்தகர்கள்,
பகடிபாடும் பாணர்கள்,
விகடம்செய் விற்பன்னர்கள்,
நைச்சியமாக நையாண்டி
செய்திடும் நாரதமுனிகள்
என தரணியிலே
பல்லோருண்டு.//

நாரதமுனிகள் கவிஞர் நையாண்டி நைனா வாழ்க

GHOST said...

//விமர்சிக்கும் வித்தகர்கள்,
பகடிபாடும் பாணர்கள்,
விகடம்செய் விற்பன்னர்கள்,
நைச்சியமாக நையாண்டி
செய்திடும் நாரதமுனிகள்
என தரணியிலே
பல்லோருண்டு.//

நாரதமுனிகள் நையாண்டி நைனா வாழ்க

கார்த்திகைப் பாண்டியன் said...

எனால அழுகைய கண்ட்ரோல் பண்ணவே முடியல... நைனா.. இத்தன நாள் இதையெல்லாம் எங்கையா ஒளிச்சி வச்சு இருந்தீங்க.. லேபில் பட்டாசு கிளப்புது

வால்பையன் said...

ஒத்துகிறேன்

இத்தோட நிறுத்திகுவோம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))))))))))))))!!!!!!!!




கலைஞர் பகுத்தறிவுவாதியா...!!! //

இல்லேங்களே!?

தினேஷ் said...

உடன்பிறப்புக்கு ஒரு டீ சொல்லுங்க..

Anbu said...

Raittu

இரும்புத்திரை said...

லேபிள்ல அரவிந்த்,டக்ளஸ்,வால்பையன் பெயர் இல்லாததைக் கண்டித்து உள்நடப்பு செய்கிறேன்

வால்பையன் said...

//லேபிள்ல அரவிந்த்,டக்ளஸ்,வால்பையன் பெயர் இல்லாததைக் கண்டித்து உள்நடப்பு செய்கிறேன் /

என்னை சிக்க வைப்பதன் நோக்கம் என்னவோ!?

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
ரசித்தேன்.*/

நன்றி ஐயா.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
ஏலே நைனா அண்ணாச்சிக்கு என்ன ஆச்சுலே*/

அண்ணே... ஒன்னும் ஆகலன்னே...

வருகை மற்றும் நகைச்சுவை காமண்டிற்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*யோவ் நைனா,நீங்க நல்லவரா ? கெட்டவரா ??!!. :(

தெர்லயப்பா !! :))

இந்த கவுஜயில் உள்குத்து,வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாமே இருக்கே ?!
*/


இப்ப இந்த கேள்வி நான் உங்களை பார்த்து கேட்கணும்...

நீங்க நல்லவரா ? கெட்டவரா ??

இப்படி கோர்த்து விடுறியே ராசா...

****************************
/*//போக்குவரத்து சந்திகளிலே,
.......மூன்று//

நம்ம தலைவர்ங்க வரும்போதுதான் ஒரு விளக்குக்கும் வேலையே கிடையாதே ??!! :))*/

நல்ல வேளை அது எப்போ வேலை செஞ்சதுன்னு கேட்காம விட்டீர்களே...
********************************
/*//பழுத்த என
......மக்களே சொல்லுங்காள்//

இப்படி கழுத்து மேலே 'காள்' போட்டு கேட்டா என்னத்தை சொல்ல...!! :))
*/

சரி நான் கால்மேல கால் போட்டு கேட்குறேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
உங்க போன் நம்பர் சொல்லுங்க...

********************************
/*//இப்பவே ஒத்துகோங்க, நான் இலக்கியவாதி... //

ஒத்துக்கிறோம்.உங்களுக்கு இருக்கறது
'எலக்கிய'வியாதிதான். :))*/

நன்றி தல
***********************************
/*பன்னிக்காய்ச்சலுக்கு கூட மருந்து உண்டு.நீங்க காய்ச்சறதுக்கு மருந்தே கிடையாது. :))*/

பஸ்ட்டு பாராட்டு இப்ப ஆப்பா.... ஆவ்வ்வ்வ்
**********************************
/*//இல்லையெனில் இந்த "கலை"வெறி தொடரும்.//

தொடரட்டும் உங்க கொலைவெறி ச்சீ,ச்சீ
கலைவெறி.... :))*/

நன்றி தொடர்கிறேன்.

நையாண்டி நைனா said...

/*
துபாய் ராஜா said...
ஆமா,பிரபாகர்,பிரபாகர் ன்னு ஒரு பொலவர் வந்து வாழ்த்துப்பாட்டு படிப்பாரே ??!!.அவரை என்ன இன்னும் காணோம் !! :))
*/

துபாய் ராஜா அரசைவையில் இன்று "நமீதா நடனம்" என்று முரசறைந்தார்கள், ஒருவேளை அங்கே சென்று இருப்பாரோ...

:))

நையாண்டி நைனா said...

/*பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
ஆ.. ஆ....
கவிஜு... கவிஜு...
//அந்த கூட்டத்திலே நானும் சேரனும் என்று ரொம்ப நாளா ஆசை..//
அப்படியே எந்த கூட்டத்துலன்னு ... தெளிவா சொல்லுங்கப்பு
*/
ஆ.. ஆ....
நன்னி... நன்னி...
கவுஜர்கள் குழுவிலே...

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
ரசித்தேன் நைனா.. உனக்குள்ள இருக்கும் அந்த கலைஞனை*/

மிக நன்றி.. தங்கள் பதிலில் எனக்கு பல அர்த்தம் தெரிகிறது...

நையாண்டி நைனா said...

/*Dominic RajaSeelan said...
மிகவும் அருமை அன்பரே , சரியான நெத்தியடி , வாழ்த்துக்கள் .*/

நன்றி அருமை நண்பரே... அடிக்கடி வாருங்கள்.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
மஞ்சகாட்டு நைனா
மானிட்டர் அடிக்க போனார்

காஞ்ச காட்டுக்குள்ளே
...... காட்டி நின்றார்

நெஞ்ச தொட்டு சொன்னார்
கெஞ்ச கெஞ்ச மன்னார்..

(நைனா கவுஜ சூசூப்பர்)
*/

நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/*
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
இப்பவே கண்ண கட்டுதே...
*/
நன்றி தல வருகைக்கு...

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
நையாண்டி கலைஞரை பார்த்து இந்த கேள்வி*/

புரியலையே தல.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//சிந்திப்பீர் மக்களே சிந்திப்பீர்
சிந்திக்கும் திறன் பெற்றோரே
சிந்திப்பீர்... //

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கிடைக்குமா அந்த திறன்
*/

எலெக்சன் டயத்திலே மட்டும் வருகிற ஆளுங்களுக்கு எலெக்சன் டயத்திலே பிரியாவே கொடுப்போம்.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//அந்த கூட்டத்திலே நானும் சேரனும் என்று ரொம்ப நாளா ஆசை..//

சிந்திப்பீர் மக்களே சிந்திப்பீர்
சிந்திக்கும் திறன் பெற்றோரே
சிந்திப்பீர்...*/

ஆமா அதனாலே கவுஞ்சர்ன்னு ஒத்துக்கோங்க..

நையாண்டி நைனா said...

/* பிரியமுடன்...வசந்த் said...
மஞ்சள் சிந்தனை
யாருக்கும் இப்படி தோன்றியிருக்காது நைனா

அருமை*/

மஞ்சள் சிந்தனையா????.... ஏன்யா இப்படி டரியல் ஆக்குறீங்க...

நையாண்டி நைனா said...

/*SanjaiGandhi said...
லேபிள் ஆட்களுக்கு இது தெரியுமா? :)*/

கொஞ்சம் எடுத்து சொல்லுங்க தல.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
//இல்லையெனில் இந்த "கலை"வெறி தொடரும்.//

என் மேல அவ்வளவு பாசமா நைனு...*/

Yes Nanba..Yes.

நையாண்டி நைனா said...

/*பிரபாகர் said...
கலைஞரவர் மஞ்சள் துண்டு
..................
மஞ்சள் துண்டு தொடர்ந்திடுவோம்.

பிரபாகர்.*/

நன்றி நண்பரே....நன்றி.

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
//நின்று கவனி,
..............
சொல்லவும் வேண்டுமோ?//

ஆகா...*/

நன்றி நண்பரே.. உங்களது தொடர்ந்த ஆதரவிற்கு...

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
//நின்று கவனி,
..............
சொல்லவும் வேண்டுமோ?//

ஆகா...*/

நன்றி நண்பரே.. உங்களது தொடர்ந்த ஆதரவிற்கு...

நையாண்டி நைனா said...

/*அரங்கப்பெருமாள் said...
அண்ணே... நீர் இலக்கியவாதிதான்..இலக்கியவாதிதான்..இலக்கியவாதிதான் அய்யா!!!
நீ முக்கண்ணை(மூவிளக்கு) காட்டினாலும் குற்றம் குற்றமே...நெற்றிக்க..... (ஏஏஏவ்வ்வ்வ்)
*/

இலக்கியவாதின்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி... நன்றி...

அடுத்த லைனை கமுக்கமா... மறந்துட்டேன்.... ஹி..ஹி..ஹி...

நையாண்டி நைனா said...

/*பிரபாகர் said...
//துபாய் ராஜா said...
ஆமா,பிரபாகர்,பிரபாகர் ன்னு ஒரு பொலவர் வந்து வாழ்த்துப்பாட்டு படிப்பாரே ??!!.அவரை என்ன இன்னும் காணோம் !! :))//

வாழ்த்துப்பாட்டு மட்டுமல்ல
வசவுப்பாட்டும் வந்துவிடும்
எழுதிவிடும் விஷயம்தான்
எனக்கு முதல் தேவை நண்பா

அலுவக வேலையதும்
ஊர்கிளம்பும் அவசரமும்
தொல்லையாய் தொடந்துவர
தாமதமாய் பதிலளித்தேன்...

பிரபாகர்
*/

ஆமா... நான் நெனச்ச மாதிரி... துபாய் ராசா கிட்டே கவி படிச்சிட்டார்.... அப்போ நான் அனுப்பிச்ச நமிதாவை துபாய் ராசாவே வச்சிகிட்டாரே... எச்சூஸ் மீ துபாய் ராசா... நமீதாவை திருப்பி அனுப்பவும்.

நையாண்டி நைனா said...

/* ghost said...
//விமர்சிக்கும் வித்தகர்கள்,
....
பல்லோருண்டு.//

நாரதமுனிகள் கவிஞர் நையாண்டி நைனா வாழ்க
*/
Thanks GHOST.

நாஞ்சில் நாதம் said...

:)))))

நையாண்டி நைனா said...

/*ghost said...
//விமர்சிக்கும் வித்தகர்கள்,
....பல்லோருண்டு.//

நாரதமுனிகள் நையாண்டி நைனா வாழ்க*/

Thank You Nanbare... Thank you.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
எனால அழுகைய கண்ட்ரோல் பண்ணவே முடியல... நைனா.. இத்தன நாள் இதையெல்லாம் எங்கையா ஒளிச்சி வச்சு இருந்தீங்க.. லேபில் பட்டாசு கிளப்புது*/

நன்றி நண்பா...

ஹேமா said...

நைனா நான் ஒத்துக்கிட்டேன் நீங்க இலக்கியவாதியேதான்.சந்தேகமே இல்லை.சிவப்பு,மஞ்சள் அப்பாடி...விளக்கம் ...என்ன சொல்ல.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
ஒத்துகிறேன்

இத்தோட நிறுத்திகுவோம்!*/

ஜெய்... வாலானந்தா...

தல ஒத்துகிருச்சி, அப்ப நிறுத்துறதை பற்றி யோசிக்க வேண்டியது தான்.

நையாண்டி நைனா said...

/*அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:)))))))))))))))!!!!!!!!
கலைஞர் பகுத்தறிவுவாதியா...!!! //
இல்லேங்களே!?*/

இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டா எப்படி?

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
உடன்பிறப்புக்கு ஒரு டீ சொல்லுங்க..*/

டீயா...!! குவாட்டர் சொல்லுங்க... சாரி.... சாரி... புல்லு சொல்லுங்க.

நையாண்டி நைனா said...

/* Anbu said...
Raittu*/

Raittu.

நையாண்டி நைனா said...

/*இரும்புத்திரை அரவிந்த் said...
லேபிள்ல அரவிந்த்,டக்ளஸ்,வால்பையன் பெயர் இல்லாததைக் கண்டித்து உள்நடப்பு செய்கிறேன்*/

நான் போட்டிருக்குறது... கவுஞ்சர்கள் பட்டியல்... நீங்க கேட்குறது... புலவர்கள் பட்டியல்

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
//லேபிள்ல அரவிந்த்,டக்ளஸ்,வால்பையன் பெயர் இல்லாததைக் கண்டித்து உள்நடப்பு செய்கிறேன் /

என்னை சிக்க வைப்பதன் நோக்கம் என்னவோ!?*/

உங்களை புலவராகத்தான் ஆசை. ஹி..ஹி..

நையாண்டி நைனா said...

/* நாஞ்சில் நாதம் said...
:)))))*/

சீக்கிரம் தமிழ் கத்துக்கோங்க..

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா நான் ஒத்துக்கிட்டேன் நீங்க இலக்கியவாதியேதான்.சந்தேகமே இல்லை.சிவப்பு,மஞ்சள் அப்பாடி...விளக்கம் ...என்ன சொல்ல.*/

என்னைய இலக்கியவாதின்னு ஒத்துகிட்டதுக்கு மிக நன்றி... மிக நன்றி....
( ஹை... இனி நானும் ரவுடி தான்... ரவுடி தான்...)

குசும்பன் said...

கலைஞரின் அடுத்த படத்தில் தாங்கள் தான் பாட்டு எழுதிதரவேண்டும் என்று கலைஞர் பிடிவாதமாக இருக்கிறாராம் தலைவரே!

Anonymous said...

அத்திரி said...
ஏலே நைனா அண்ணாச்சிக்கு என்ன ஆச்சுலே
//


நைனா இப்போம் உஜhலாவுக்கு மாறியிட்டாரு....

Earn Staying Home said...

ரசிக்கத்தக்க எழுத்து

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்காண செய்தி என் பக்கம் வந்துவிட்டு செல்லுங்களேன்

"உழவன்" "Uzhavan" said...

மும்பைல இப்ப மழைதான் அதிகம்னு கேள்விப்பட்டேன். வெயில்தான் அதிகம்போல :)