Friday, 14 August 2009
யூத்து பதிவராக...எளிய வழி.
இந்த பதிவருங்க கிட்டே நல்ல பதிவரு அப்படின்னு பேரு எடுக்குறது ரொம்ப குஷ்டமப்பா... ஆமா... கையிலே குஷ்டம் பிடிச்சி தேயிற மாதிரி மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சி போட்டா கண்டுக்க கூட மாட்டேங்குறாங்க... சரி அதை, இதை போட்டு கூட பேரு வாங்கிரலாம்ன்னு வச்சிக்கோங்களேன்... இந்த பதிவருங்க கிட்டே யூத்து பதிவருன்னு பேரு வாங்குறது கஷ்டமோ கஷ்டம்.
சும்மாவா....!!! முப்பது லைனு பதிவுலே இருபது லைனுலே தான் யூத்து, யூத்துன்னு கதறனும், அப்புறம் மூனுலைனுலே "சில்வண்டு" பொண்ணுங்களை தான் சைட்டு அடிசேம்ன்னு அடிச்சு விடனும்... அதுக்கும் அப்புறம் "பெப்சி கேன்" மாதிரி ஆண்டிங்க தன்னை சைட்டு அடிச்சாங்கன்னு பீலாவை பீளிங்ஷா ஊத்தணும் மீதி இருக்குற நாலு லைனுலே சொல்லவந்த மேட்டரை சொன்னா தான் யூத்து பதிவருன்னு ஒத்துகுறாங்க... இல்லாங்காட்டி... சூ.. சூ.. சூ.. சூ.. சூதானமா பார்த்து பதிவு போடுய்யான்னு டெர்ரர் ஆக்குறாங்க.
இதை பற்றிய மேலதிக தகவல்களுக்கு தமிழகத்தின் நிரந்தர (நயன்தாரா அல்ல) யூத்து அண்ணன் கேபிள் சங்கரை அணுகவும்.அவர் மிக அருமையாக விளக்குவார், அவரு முப்பது லைனு பேசுனாருன்னா... வேண்டாம் விட்டுருங்க... அதான் இதுக்கு முந்திய பத்திய நீங்க நல்லா தெளிவா படிசிட்டீங்கல்லோ....
நாளொரு படமும் பொழுதொரு பதிவுமா இருந்த யூத்து அண்ணன் கேபிள், பதிவு போட்டு, பதிவு போட்டு யூத்துங்கறதை நிலை நாட்டுறது எளிய வழி அல்லன்னு கண்டு, மெலிய வழி தேடலானார்.
வாக்கிங், ஜாக்கிங் மட்டுமில்லாமல் ஹாக்கிங் கூட செய்து பார்த்திட்டார், ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகலை...
ஒரு நாள் இப்படி பீளிங்ஸொட அண்ணன் "ஜலக்கிரீடையிலே" இருக்கும்போது அண்ணன் கண்ணுலே ஒரு வெளம்பரம் பட்டது.... அன்றைய நாளிதல்லே...
இதை பார்த்த வொடனே கேபிள் அண்ணனுக்கு கையும் ஓடலை காலும் ஓடலே... ஐஸ்வர்யா ராய் கால்ஷீட்டு கெடச்ச ரஜினி மாதிரி, டாக்டர் பட்டம் வாங்குன விஜய் மாதிரி, வெற்றி படம் கொடுத்த அஜீத்து மாதிரி அவருக்கே கொஞ்ச நேரம், அவரையும் அந்த பொழுதையும் நம்ப முடியலே...
அன்னிக்கு நைட்டே போனை போட்டு "நான் சீக்கிரம் ஸ்லிம் ஆகணும், இதுக்கே பலபேரு பதிவு போட்டு அத்திரி பாச்சா ஆடுறாங்க, அதனாலே அந்த 5 நாளிலே 5 கிலோ குறைக்கிற 5000 ரூபாய் கோல்டு ப்ளான்லே நான் இப்பவே சேர்ந்துக்கறேன்" என்று சொல்லி ஆன்லைனிலே பணம் கட்டிட்டாரு.
கொஞ்ச நேரத்திலேயே "உங்கள் 'ரெஜிஸ்ற்றேசன்' உறுதி செய்யப்பட்டது, நாளை காலை ஆறு மணி முதல் உங்கள் 'கோர்ஸ்' ஆரம்பமாகும், வாழ்த்துக்கள்." என குறுஞ்செய்தியும் வந்து சேர்ந்தது...இதை கண்டவுடனே... பரமசிவன் படத்திலே வருகிற அஜீத்து மாதிரி தானும் ஸ்லிம் ஆகிட்டா மாதிரி, ஆனா லைலாவை விரட்டி விட்டுட்டு (ஏன்னு கேட்டா அது ஓல்டு பீஸாம்....) ஜெனீலியா கூட கனவுலே டூயட்டும் ஆடி முடிச்சி தூங்கி போனார்.
மறுநாள் காலை ஆறு மணி, "டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...
திறந்து பார்த்தால், அவரது பதிவுலே, ஹாட் ஸ்பாட்லே போட்டு பெரு மூச்சி விட்டாரே.... அனுஷ்கா. அந்த அனுஷ்கா மாதிரியே ஒரு பொண்ணு மிக குறைவா உடையுடன்... ஆனா கழுத்துலே ஒரு டாலர், அதை தன் கையில் பிடித்தவாறே ஒயிலாக போஸ் கொடுத்து நிற்க, அண்ணன் கேபிள் அப்படியே மெய் மறந்து நிற்க, "ஹே... ராசாத்தி... ரோசாப்பூ... வா... வா...." என்று பேக்-கிரவுண்ட்ல் மீசிக் மட்டுந்தான் பாக்கி......
அந்த பெண் தன் கைலே பிடிச்சிருந்த அந்த டாலரை அவரது முகத்துக்கு நேரா காட்டி, முடியுமா உன்னாலே??? என்று சவாலாக ஒரு கிறக்க பார்வை பார்க்க அந்த டாலர்லே "என்னை பிடித்தால் நான் உன்னவள், எங்கே.. பிடி பார்ப்போம்" என்று இருக்க. சைகையால் அவரை சுண்டி இழுத்து ஓட்டம் பிடித்தாள் அந்த பெண். அண்ணனும் தொடர்ந்து ஓடினார்...ஆனால் அவள் ஓடியே மறைந்தாள். இப்படி அஞ்சி நாள் போச்சி... அஞ்சு நாளும் ஓட்டம் தான் பெருசாச்சே தவிர... வேற ஒன்னும் நடக்கலே... ஆனா ஆச்சரியப்பட தக்க வகையிலே அவரும் அஞ்சு கிலோ குறைஞ்சி போனாரு.
அஞ்சு நாலு கழிச்சி... இது சரி பட்டு வராது, நாம பத்து கிலோ குறையனும்னு சொல்லி 10 நாளிலே 10 கிலோ குறையிற 9,000 ரூபாய் ப்ளான் எடுத்துக்கறேன் என்று சொல்லி பணமும் கட்டுனாரு.. இதுக்கும் வழக்கம் போல குறுஞ்செய்தியும் எல்லாம் வந்துச்சு... இவருக்குத்தான் இப்ப மேட்டர் எல்லாம் புரிஞ்சு போச்சே... நாளைக்கு பாவனா, கார்த்திகா மாதிரி எவளாவது வருவா... வந்து... பார்க்கட்டுமே... நாளைக்கு எப்படியும் 'மேட்டரை' முடிச்சிறனும் என்று முடிவோட இருந்தாரு...
மறுநாள் காலை ஆறு மணி;
"டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...
திறந்து பார்த்தால், ஏஞ்சலினா ஜூலி, நவோமி கேம்பல் மாதிரி சும்மா செம அல்ட்ரா மாடர்ன் பாரின் கேர்ல்ஸ் ரெண்டு பேரு வந்திருந்தாங்க...இவங்க கிட்டேயும் அதே மாதிரி அறிவிப்பு உள்ள டாலர், சீண்டல்....
அண்ணன்...ஆகா... இன்னிக்கு செம வேட்டை தான் எப்படியும் ரெண்டுல ஒன்னை பாத்திரலாம்னு வெரட்ட ஆரம்பிச்சாரு... ஆனா ஒன்னத்தையும், ஒன்னும் பண்ண முடியலே... ஏன் தொட்டு கூட பார்க்க முடியலை.... இப்படியே பத்து நாளும் போயிட்டு, ஒன்னும் வேலைக்கு ஆகலை, இவரு 10 கிலோ கொரஞ்சதை தவிர.
அண்ணன் திருப்பியும் அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உங்க பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. நான் 3 நாளிலே 30 கிலோ குறைக்கிற 30,000 ருபாய் பிளாட்டினம் பிளானை எடுத்துக்க விரும்புகிறேன் என்று சொன்னார்.
அதுக்கு அடுத்த முனையிலே இருந்து, நீங்க ஒரு முறைக்கு, இரு முறை யோசிச்சு முடிவு பண்ணுங்க இது கொஞ்சம் தீவிரமா இருக்கும் அப்படின்னு சொல்ல... அதுக்கு நம்ம அண்ணன்... இந்த "ஸ்ட்ராங் வீர் மகா வீருக்கு எல்லா பீருமே சர்பத்து தாண்டா புக்கு பண்ணுறா அந்த பிளாட்டினம் பிளானை" என்று கர்ஜித்து போனை துண்டித்தார்.
அண்ணன் அப்படியே படுக்கையிலே கிடந்து கற்பனை பண்ண ஆரம்பிச்சார். நாளைக்கு எப்படியும்... எப்படியும்... குறைஞ்சது மூணு பேராவது வருவாளுங்க... ஆபீஸ்லே வேற இது தீவிர ப்ளானுன்னு சொன்னானுங்க... அய்யய்யோ... அய்யய்யோ... நம்ம கொத்து பரோட்டாவிலே எழுதுவோமே அதுமாதிரி எதுவும் நடக்குமோ.. என்று தனக்கு தானே பேசிகிட்டே கனவு கண்டே தூங்கி போனார்.
மறுநாள் அதிவிரைவா எழுந்து கொஞ்சம் "வார்ம் அப்" பண்ணிக்கிட்டு சும்மா படுத்திருக்கிற மாதிரி பாவ்லா காட்டிகிட்டு இருந்தார்...
அவரு ஆவலுடன் எதிர் பார்த்து கிட்டு இருந்த அந்த ஒலி..."டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...
மிக ஆவலுடன் திறந்து பார்த்தால்......., சும்மா சிக்ஸ் பேக்குடன் அஜானபாகுவான தோற்றத்திலே, இந்த "ரெஸ்லிங்க்கு" வருவாங்கல்லோ கரு கரு தேகத்துடன், அந்த மாதிரி நாலு முரட்டு ஆசாமிங்க கையிலே டாலருடன்....
அந்த டாலரிலே "மவனே என்னாண்டே மாட்னே, நீ எனக்கு தாண்டா... முடிஞ்சா தப்பிச்சு ஓடு"ன்னு இருந்துச்சு.... அதை படிச்சப்புறம் அண்ணன் ஏன் அங்கே நிற்க போகிறார்??????
அப்ப ஓடி போனவருதான் இப்ப வரைக்கும் காணோம்...
ஆனா இப்ப இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணாமே பழைய மாதிரியே நான் யூத்து... நான் யூத்துன்னு பதிவுக்கு பதிவு, பக்கத்துக்கு பக்கம்.... கூவிகிட்டு இருக்கா மாதிரி ஒரு தகவல் வந்தது..... இவரு கெட்டது போதாதுன்னு... இன்னும் பலபேரை.....
யாராவது பார்த்தீங்கன்னா.. தகவல் கொடுங்க... பிளீஸ்....
ஏன்னு கேட்குறீங்களா?
அவருகிட்டே இருந்து நான் தப்பிச்சு ஓடத்தான் கேட்குறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
54 comments:
மாஸ்டர் பீஸ் நைனா...!
தலைப்பை சரியாக படித்துவிட்டேன் !
:)
கேபிளிடம் நானும் அடிக்கடி யூத்து,யூத்துன்னு திருப்பி திருப்பி சொன்னா வேற மாதிரி கேக்குதய்யான்னு சொல்வதுண்டு..பதிவு பின்னி பிரிச்சிட்டீங்க..
ரம்யாகிருஷ்ணன் நம்ம கேப்டனை ஹோட்டல் ரூமில முடிஞ்சா புடிச்சுக்கோன்னு ஓடினாங்களாம்.அப்ப தலைவர் வேட்டி அவிழ்ந்து “மஞ்ச ஜட்டியோட ஓடி புடிச்சாராம்(ஹீம்..)
ஜட்டியோட கேபிளை நினைச்சுப் பார்த்தேன்..சிரிச்சு...
:)))))))))
வலிக்குது வாயும்,வுயிறும் சிரித்து சிரித்து.நல்லாத்தான் சிந்திக்கிறிங்க.
அனுஷ்கா.ம்ம்ம்ம்.5 கிலோதானா??
பாரின் கேர்ல்ஸ் கண்ணுலே போதை.
ரெஸ்லிங் வீரர்கள் கூட கவர்ச்சி டிரெஸ் போட்டிருக்காங்க.
பாவனா படம் மட்டும் ஏன் அப்ப்பூபூபூடி ??!!
ஏமாத்திட்டே நைனா.
ஹாஹாஹா!
கேபிளார் யூத்து ரகசியம் இதானா!?
பட்டயக் கிளப்பீட்டீங்க நைனா
அபாரம்
ஹா ஹா ஹா நைனா, இதுக்கு அப்புறம் கேபிள்ஆர் - "யூத் தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தைன்னு" சொன்னாலும் சொல்லுவாரு, சும்மா பின்னி பெடல் எடுத்துட்டீங்க.
கலக்குறீரு நையாண்டி... வாரம் ஒன்னாவது இந்த மாதிரி போடவும்
யோவ் கேபிள் என்னையா பாவம் செஞ்சாறு எல்லாம் ஊடு கட்டி அடிக்கி்றீங்க....
பதிவு கலக்கல் நைனா...
///தண்டோரா ...... said...
கேபிளிடம் நானும் அடிக்கடி யூத்து, யூத்துன்னு திருப்பி திருப்பி சொன்னா வேற மாதிரி கேக்குதய்யான்னு சொல்வதுண்டு.. பதிவு பின்னி பிரிச்சிட்டீங்க..///
நானும் ரொம்ப நாளா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன்.. அடங்க மாட்டேங்குறாரு..!
[[[ரம்யாகிருஷ்ணன் நம்ம கேப்டனை ஹோட்டல் ரூமில முடிஞ்சா புடிச்சுக்கோன்னு ஓடினாங்களாம். அப்ப தலைவர் வேட்டி அவிழ்ந்து “மஞ்ச ஜட்டியோட ஓடி புடிச்சாராம்(ஹீம்..)]]]
இது எந்தப் படத்துல..?
///ஜட்டியோட கேபிளை நினைச்சுப் பார்த்தேன்.. சிரிச்சு...///
ஐயோ.. ஐயோ.. ஐயோ.. சீப்பு சீப்பா வருது..!
அன்பு அண்ணன் சங்கரினை
அழகாக நக்கல் செய்து
வம்பு செய்யும் அன்பு நைனா
வருவீர் நீர் யூத்தை தாண்டி
என்றுமே இளைஞர்கள் தாம்
இளமையதை இணைந்திருந்தால்
உண்மையினில் இணைந்திருக்கும்
எங்களுக்கு கவலையில்லை....
பிரபாகர்.
சூப்பர்
ஐநூறு ரூபாய்க்கு அனுஷ்கா வந்தால் இளைக்கிறது ரெடி தலைவரே.. ரம்யாகிருஷண் கதை கடைசியா விஜயகாந்த ஜெயிச்சிட்டார்.. மஞச ஜட்டியா முக்கியம்
நைனா,எப்பவுமே யூத்தா இருக்கமுடியாது.உங்களையும் கலாய்க்க பின்னுக்கு காத்திட்டு இருக்காங்க.கவனம்.
எங்கள் அகில உலக யூத்து சங்கத்தின் நிரந்தர தலைவர், நாளைய Mr. Universe அண்ணன் கேபிளை கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்,
இதனை கண்டித்து அண்ணன் கேபிள் அவர்கள் அதே மஞ்ச ஜட்டியுடன் பீச்சாங்கரையில் உண்ணாவிரதம் இருப்பார் என தெரிவித்து கொள்கிறோம்.
அண்ணன் கேபிள் எங்கு இருந்தாலும் உடனடியாக கண்டனத்தை தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கு மாறு கேட்டுக்கொள்கிறோம். (அப்படியாவது தொப்பை கொரயுதான்னு பாப்போம்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
கலக்கல் நண்பா.
கலக்கல் யோசனைகள்
சரி காமெடி.தாங்க முடியல.சூப்பர் பாசு.
இதெல்லாம் ரொம்ப ஓவர்
அண்ணாச்சி கலக்கல்....................
இருந்தாலும் தமிழக யூத்து சங்கத்தலைவரை கேலி பண்ணியதற்கு என் வலிமையான் கண்டனத்தை தெரிவிக்கிறேண்
பிளாட்டினம் பிளான் எடுத்துக்கோங்க அண்ணா
நீங்க ரொம்ப யூத் ஆகிடுவீங்க
:)
:))))))
/*டக்ளஸ்... said...
மாஸ்டர் பீஸ் நைனா...!*/
நன்றி மாப்ளே.
/* கோவி.கண்ணன் said...
தலைப்பை சரியாக படித்துவிட்டேன் !
:)*/
அது யூத்துகளின் பழக்கம் தானே...
/*
தண்டோரா ...... said...
கேபிளிடம் நானும் அடிக்கடி யூத்து,யூத்துன்னு திருப்பி திருப்பி சொன்னா வேற மாதிரி கேக்குதய்யான்னு சொல்வதுண்டு..பதிவு பின்னி பிரிச்சிட்டீங்க..
ரம்யாகிருஷ்ணன் நம்ம கேப்டனை ஹோட்டல் ரூமில முடிஞ்சா புடிச்சுக்கோன்னு ஓடினாங்களாம்.அப்ப தலைவர் வேட்டி அவிழ்ந்து “மஞ்ச ஜட்டியோட ஓடி புடிச்சாராம்(ஹீம்..)
ஜட்டியோட கேபிளை நினைச்சுப் பார்த்தேன்..சிரிச்சு...
*/
ஆகா.... அதை நினைத்து நானும் விழுந்து விழுந்து சிரிச்சேன்...
/*துபாய் ராஜா said...
:)))))))))
வலிக்குது வாயும்,வுயிறும் சிரித்து சிரித்து.நல்லாத்தான் சிந்திக்கிறிங்க.
அனுஷ்கா.ம்ம்ம்ம்.5 கிலோதானா??
பாரின் கேர்ல்ஸ் கண்ணுலே போதை.
ரெஸ்லிங் வீரர்கள் கூட கவர்ச்சி டிரெஸ் போட்டிருக்காங்க.
பாவனா படம் மட்டும் ஏன் அப்ப்பூபூபூடி ??!!
ஏமாத்திட்டே நைனா.*/
வருகைக்கு நன்றி நண்பா....
/*
வால்பையன் said...
ஹாஹாஹா!
கேபிளார் யூத்து ரகசியம் இதானா!?
*/
சத்தமா சிரிச்சி வெளியே காட்டிபோடாதீங்க....
/*
முரளிகண்ணன் said...
பட்டயக் கிளப்பீட்டீங்க நைனா
அபாரம்
*/
நன்றி நண்பா....
/*
சித்து said...
ஹா ஹா ஹா நைனா, இதுக்கு அப்புறம் கேபிள்ஆர் - "யூத் தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தைன்னு" சொன்னாலும் சொல்லுவாரு, சும்மா பின்னி பெடல் எடுத்துட்டீங்க.
*/
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி தல.
/*ghost said...
கலக்குறீரு நையாண்டி... வாரம் ஒன்னாவது இந்த மாதிரி போடவும்*/
இதென்னா. தெர்ரரா ஒரு பேரு....முயற்சி பண்ணுறேன்.
/*jackiesekar said...
யோவ் கேபிள் என்னையா பாவம் செஞ்சாறு எல்லாம் ஊடு கட்டி அடிக்கி்றீங்க....*/
அவரு எங்க வீட்டு பிள்ளைங்க... அதான்...
/*
jackiesekar said...
பதிவு கலக்கல் நைனா...
*/
Thanks Anna.
/*
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ.. சீப்பு சீப்பா வருது..!
*/
வருகைக்கு நன்றி அண்ணா...
/* பிரபாகர் said...
அன்பு அண்ணன் சங்கரினை
அழகாக நக்கல் செய்து
வம்பு செய்யும் அன்பு நைனா
வருவீர் நீர் யூத்தை தாண்டி
என்றுமே இளைஞர்கள் தாம்
இளமையதை இணைந்திருந்தால்
உண்மையினில் இணைந்திருக்கும்
எங்களுக்கு கவலையில்லை....
பிரபாகர்.*/
கவி படைத்த நண்பருக்கு நன்றி
/* பீர் | Peer said...
சூப்பர்*/
Thanks Nanba.
/*
Cable Sankar said...
ஐநூறு ரூபாய்க்கு அனுஷ்கா வந்தால் இளைக்கிறது ரெடி தலைவரே.. ரம்யாகிருஷண் கதை கடைசியா விஜயகாந்த ஜெயிச்சிட்டார்.. மஞச ஜட்டியா முக்கியம்
*/
ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகம்.
ஐந்நூறு ரூபா அனுஷ்கா வை சொல்லவில்லை... நீங்க மெலிவேன்னு சொல்லுறீங்க பாருங்க அதை சொல்றேன்.
சூப்பர்..
/*
ஹேமா said...
நைனா,எப்பவுமே யூத்தா இருக்கமுடியாது.உங்களையும் கலாய்க்க பின்னுக்கு காத்திட்டு இருக்காங்க.கவனம்.
*/
அப்படி யாரும் நம்ம ஒன்னும் செய்ய மாட்டேங்குறாங்களே....
/* sriram said...
எங்கள் அகில உலக யூத்து சங்கத்தின் நிரந்தர தலைவர், நாளைய Mr. Universe அண்ணன் கேபிளை கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்,தொப்பை கொரயுதான்னு பாப்போம்)
.....................
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
*/
யூத்து அங்கிள் வாழ்க.
வருகைக்கு நன்றி நண்பரே.. தொடர்ந்து வாங்க.
/*வண்ணத்துபூச்சியார் said...
கலக்கல் நண்பா.*/
நன்றி நண்பா...
/* ஆ.ஞானசேகரன் said...
கலக்கல் யோசனைகள்*/
இந்த பிளானை மெய்யாலும் நடை முறை படுத்துவோமா ?
/*ஸ்ரீ said...
சரி காமெடி.தாங்க முடியல.சூப்பர் பாசு.*/
மிக நன்றி நண்பரே...
/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இதெல்லாம் ரொம்ப ஓவர்*/
உங்களுக்காக ரேட்டை குறைக்க சிபாரிசு பண்றேன்.
/*அத்திரி said...
அண்ணாச்சி கலக்கல்....................
இருந்தாலும் தமிழக யூத்து சங்கத்தலைவரை கேலி பண்ணியதற்கு என் வலிமையான் கண்டனத்தை தெரிவிக்கிறேண்
*/
நீங்க அத்திரி பாச்சா ஆடும்போது நாங்க ஆடக்கூடாதா?
/*MAHA said...
பிளாட்டினம் பிளான் எடுத்துக்கோங்க அண்ணா
நீங்க ரொம்ப யூத் ஆகிடுவீங்க*/
இப்படி நல்ல ஐடியா கொடுக்குற உங்களை எங்களோட மார்கட்டிங் டீமில் சேர்த்து.... வைக்கிறோம்
/*
கடையம் ஆனந்த் said...
:)*/
Thanks Nanba.
/* நாஞ்சில் நாதம் said...
:))))))*/
:))))))
/* ராஜன் said...
சூப்பர்..*/
நன்றி நண்பரே..
அடிக்கடி வாங்க.
நைனா மேட்டர் ஜோக்கையும் சூப்பரா மாத்தி மசாலா சேர்த்து கலக்கிட்டீங்க!
ஆனா கடைசியில் கேபிள் மாட்டிப்பது போல் இருந்திருக்கலாம்:)))
/*குசும்பன் said...
நைனா மேட்டர் ஜோக்கையும் சூப்பரா மாத்தி மசாலா சேர்த்து கலக்கிட்டீங்க!
ஆனா கடைசியில் கேபிள் மாட்டிப்பது போல் இருந்திருக்கலாம்:)))*/
நன்றி... சார்..
அப்படி கலக்கலைன்னா... வாத்தியாரு சரி இல்லேன்னு சொல்லிருவாங்க...
/நைனா மேட்டர் ஜோக்கையும் சூப்பரா மாத்தி மசாலா சேர்த்து கலக்கிட்டீங்க!
ஆனா கடைசியில் கேபிள் மாட்டிப்பது போல் இருந்திருக்கலாம்:)))
//
குசும்பா என்ன மேட்டர்னாலும் நாம பேசி தீத்துக்கலாம்.. ரைட்டா..
/*Cable Sankar said...
/நைனா மேட்டர் ஜோக்கையும் சூப்பரா மாத்தி மசாலா சேர்த்து கலக்கிட்டீங்க!
ஆனா கடைசியில் கேபிள் மாட்டிப்பது போல் இருந்திருக்கலாம்:)))
//
குசும்பா என்ன மேட்டர்னாலும் நாம பேசி தீத்துக்கலாம்.. ரைட்டா..*/
மேலே சாமிகிட்டே அப்புறம் பேசிக்கலாம்.... இப்ப இந்த பூசாரிய கொஞ்சம் கவனிங்க... மூணு புல்லு ரம்மு, நாலு சிக்கன்... அப்புறம்... அப்புறம்... அனுஷ்ஷ்ஷ்ஷ்___
Post a Comment