Tuesday, 4 August 2009

சரக்கின் மாண்பு



நல்ல சரக்கு அங்கே, அதை தழுவி காச்சிய நல்ல சரக்கு இங்கே.

குடி போற்றுதும் குடி போற்றுதும்
என்னைத் திட்டும் சாக்கில்
ஏன் குடியை இழிவு படுத்துறீர்
குடி வளர்ப்பதை விடவும்
அதிக அக்கறையுடன்தானே
குடி வளர்க்கிறீர்

ஏழுவித சரக்கு
எட்டுவித மார்கட்டிங்
பதிமூன்று சைடு டிஸு
இருபது வகை கடைகள்
என குடி வளர்த்துவிட்டு
ஏன் போதையிலரட்டுகிறீர்கள்
கட்டாந் தரையிலும்
ஊரல் போடும்
நவீன முறை தேடித்தானே
சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்

என் உளரலைத் திட்டுங்கள்
காரி உமிழுங்கள்
இயன்றால்
எதிருளறல் எழுதுங்கள்
முடிந்தால்
குவாட்டர் விட்டுட்டு
குப்புரப்படுங்கள்

நாட்டு வருமானத்தில்
எழுபது சதவீதம்
குடியாலென்று அறிவீரோ
குடி போற்றுதும் குடி போற்றுதும்


அனுமதி வழங்கிய அண்ணன் ஜ்யோராம்ஜி அவர்களுக்கு நன்றி.

43 comments:

Raju said...

வன்மையாக கண்டிக்கிறேன்.
மயிரும் சரக்கும் ஒன்றா..?
சரக்கு ஒரு தெய்வீகப் பொருள்.
மயிரையும் தெய்வத்திற்குத்தானே கொடுக்கிறோமென சப்பைக் கட்டு கட்ட வேண்டாம் நைனா.

தமிழ் said...

கலக்கல்

அற்புதம்

குப்பன்.யாஹூ said...

oh nice

anujanya said...

நல்லா இரு. வரும்போது போத்தல்களுடன் வரவும் :)

அனுஜன்யா

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு ஆள பாக்கி வைக்கிறது இல்ல.... ரைட்டு..

துபாய் ராஜா said...

காய்ச்சிய சரக்கு.கலக்கல் சரக்கு.

குடந்தை அன்புமணி said...

எதிர் இடுகையாக இருந்தாலும் இந்த இடுகையில் எவ்வளவு விசயம் இருக்கு தெரியுமா...

என்ன தெரியிலையா...

இன்னொரு தபா படிங்க...

லோகு said...

இது எங்க போய் முடியும்னு தெரியல.. நடத்துங்க..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பேசாம நான் குவார்டர் அடிச்சுட்டு குப்புறப் படுத்துற வேண்டியதுதான் :)

தராசு said...

ஏய்யா,

இதுக்குன்னே காத்துகிட்டு இருப்பீங்களாய்யா, யாரு எதாவது எழுதுவாங்க, நாம உடனே அதுக்கு எதிர் பதிவு போடலாம்னு,

சொல்லரசன் said...

//குப்புரப்படுங்கள்//.

நைனா சரக்கு அதிகமா................

மணிஜி said...

ஒரு கற்றை மயிர்
கால் பாட்டிலுக்குள்.
வயிற்றில் சிக்கி
பேரவஸ்தை.
பரமசுகம்
வாந்தியாய் வந்தவுடன்
மயிர் மட்டுமா?
மதுவும்தான் காணிக்கை
சில சாமிகளுக்கு

சிநேகிதன் அக்பர் said...

கவிதையில் சரக்கிருக்கு. கலக்கல்

பிரபாகர் said...

அருமை நைனா...

தலையிலுள்ள மயிரோரு
தாகம் தீர்க்கும் சரக்கதனை
அழகுடனே ஒப்பிட்ட
அன்பு நண்பா நைனா

உளைச்சலதை மயிர்பிய்க்கும்
மகிழ்வாக்க சரக்கடிப்போம்
நிலை மறந்து நெடு நேரம்
மயிர் கலைந்து வீழ்ந்திருப்போம்...


பிரபாகர்.

Cable சங்கர் said...

right..

ஹேமா said...

நைனா,மயிருக்கு எதிர்க்கவிதை சரக்கு.கவிதை இரண்டுமே நல்லாயிருக்கு.
குழப்பமாவும் இருக்கு.

ஜெட்லி... said...

வன்மையாக கண்டிக்கிறேன்.
மயிரும் சரக்கும் ஒன்றா..?
சரக்கு ஒரு தெய்வீகப் பொருள்.
?????

:))

Ashok D said...

அங்க ஏழுமலையான் ஏழு சதவீதம்
//நாட்டு வருமானத்தில்
எழுபது சதவீதம்//
nice points

தண்டோரா கவித நல்லாயிருக்கு

பிகர விட மக்களுக்கு சரக்குன்னா.. என்னா சந்தோஷம்..!

Starjan (ஸ்டார்ஜன்) said...

போதை ஏறி போச்சு

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு ஆனா உங்களின் அலும்புதான் தாங்கல

RRSLM said...

super!

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
வன்மையாக கண்டிக்கிறேன்.
மயிரும் சரக்கும் ஒன்றா..?
சரக்கு ஒரு தெய்வீகப் பொருள்.
மயிரையும் தெய்வத்திற்குத்தானே கொடுக்கிறோமென சப்பைக் கட்டு கட்ட வேண்டாம் நைனா.*/

சும்மா கேட்டா தகராறு, சரக்கோடு வந்து கேட்டா வரலாறு. அதனாலே சரக்கோடு வந்து கண்டிக்கவும்.

நையாண்டி நைனா said...

/*திகழ்மிளிர் said...
கலக்கல்
அற்புதம*/
நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*குப்பன்_யாஹூ said...
oh nice*/
Thanks Dear friend.

நையாண்டி நைனா said...

/*அனுஜன்யா said...
நல்லா இரு. வரும்போது போத்தல்களுடன் வரவும் :)*/

சரி செஞ்சிட்டா போச்சி...

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
ஒரு ஆள பாக்கி வைக்கிறது இல்ல.... ரைட்டு..*/

ஆமா நண்பா... என்ன பண்றது.. கடைய நடத்தனுமே..!

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
காய்ச்சிய சரக்கு.கலக்கல் சரக்கு.*/

நன்றி நண்பா

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
எதிர் இடுகையாக இருந்தாலும் இந்த இடுகையில் எவ்வளவு விசயம் இருக்கு தெரியுமா...

என்ன தெரியிலையா...

இன்னொரு தபா படிங்க...*/

நீங்க சொல்றது தான் சரி... ஆனா நெறைய பேருக்கு அது தெரிய மாட்டேங்குது.

நையாண்டி நைனா said...

/*லோகு said...
இது எங்க போய் முடியும்னு தெரியல.. நடத்துங்க..*/

நானும் இந்த கேள்வி யை உங்களை கேக்கணும் என்று நெனச்சேன்...

நையாண்டி நைனா said...

/*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பேசாம நான் குவார்டர் அடிச்சுட்டு குப்புறப் படுத்துற வேண்டியதுதான் :)*/
சரி தல...
அப்புறம்... நீங்க அனுமதி கொடுத்ததிற்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*தராசு said...
ஏய்யா,

இதுக்குன்னே காத்துகிட்டு இருப்பீங்களாய்யா, யாரு எதாவது எழுதுவாங்க, நாம உடனே அதுக்கு எதிர் பதிவு போடலாம்னு,*/

அப்புறம் கடை நடத்த வேண்டாமா நானு..!!!

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//குப்புரப்படுங்கள்//.

நைனா சரக்கு அதிகமா................*/

தல அதெல்லாம் இலக்கியம் அப்படிதான் இருக்கும்.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
ஒரு கற்றை மயிர்
கால் பாட்டிலுக்குள்.
வயிற்றில் சிக்கி
பேரவஸ்தை.
பரமசுகம்
வாந்தியாய் வந்தவுடன்
மயிர் மட்டுமா?
மதுவும்தான் காணிக்கை
சில சாமிகளுக்க*/

தல அற்புதம், அற்புதம்.
நீங்க தான் தல வித்தக கவி.

நையாண்டி நைனா said...

/*அக்பர் said...
கவிதையில் சரக்கிருக்கு. கலக்கல்*/

ஆமா நண்பா... சரக்கை உள்ளே ஏத்த ரொம்ப கஷ்டமா இருக்கு...

நையாண்டி நைனா said...

/*Prabhagar said...
அருமை நைனா...

தலையிலுள்ள மயிரோரு
தாகம் தீர்க்கும் சரக்கதனை
அழகுடனே ஒப்பிட்ட
அன்பு நண்பா நைனா

உளைச்சலதை மயிர்பிய்க்கும்
மகிழ்வாக்க சரக்கடிப்போம்
நிலை மறந்து நெடு நேரம்
மயிர் கலைந்து வீழ்ந்திருப்போம்...

பிரபாகர்.*/

நண்பா அடுத்த "பேரரசு" நீங்க தான் தல, அதாவது கவி பேரரசு.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
right..*/

Thanks anna.

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா,மயிருக்கு எதிர்க்கவிதை சரக்கு.கவிதை இரண்டுமே நல்லாயிருக்கு.
குழப்பமாவும் இருக்கு.*/

இதெல்லாம் இலக்கியம் புரிய கொஞ்சம் சங்கடமாதான் இருக்கும்.

வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
வன்மையாக கண்டிக்கிறேன்.
மயிரும் சரக்கும் ஒன்றா..?
சரக்கு ஒரு தெய்வீகப் பொருள்.
?????

:))*/
Thanks Nanba, for your visit.

நையாண்டி நைனா said...

D.R.Ashok said...
/*அங்க ஏழுமலையான் ஏழு சதவீதம்
//நாட்டு வருமானத்தில்
எழுபது சதவீதம்//
nice points

தண்டோரா கவித நல்லாயிருக்கு

பிகர விட மக்களுக்கு சரக்குன்னா.. என்னா சந்தோஷம்..!*/

மிக மகிழ்ந்தேன் தங்கள் வரவால்.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
:)*/
:-))) Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
போதை ஏறி போச்சு*/
lemon use pannunga.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கு ஆனா உங்களின் அலும்புதான் தாங்கல*/

கொறசுக்குவோம் நண்பா...
ஆனா உங்களை மாதிரி தீவிரமா சிந்திக்க முடியலே...

நையாண்டி நைனா said...

/*RR said...
super!*/
Thanks Dear Friend.