Friday, 29 May 2009
"சாதா" பிளாட் டிவியை, "வால் மவுண்ட்" பிளாஸ்மா டிவியாக மாற்ற ஒரு அருமையான வழி
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஒரு டிவி வாங்கனும்னு.
"அதான் நம்ம தலிவரு கொடுக்கிறார் போய் வாங்கிக்க வேண்டியது தானே" என்று சொல்லுறீங்களா?
அந்த டிவி எல்லாம் கட்சிலே இருந்து, வருமானமே இல்லாமே, வருமானத்தையும், அவமானத்தையும் மீறி சொத்து சேர்த்து வச்சிருக்கிறவங்களுக்கு தான் கொடுப்பாங்களாம். என்னை மாதிரி ஏழை சாப்ட்வேர் எஞ்சிநீருகெல்லாம் தர மாட்டாங்களாம். அதுவும் நான் ஆசைபட்டது..... இந்த மேலே படத்திலே இருக்கிற மாதிரி ஒரு பிளாஸ்மா டிவி வாங்கனும்னு.
ஆனா ஒரு ஏழை சாப்டுவேர் எஞ்சிநீருகிட்டே அவ்ளோ பணம் இருக்குமா? அதுவும் இப்ப கம்பினி, பணம் எல்லாம் "ரீசஸ்" போகிற டைமான "ரிசஸன்" நேரம். அதனாலே எதோ என்னாலே ஒரு பிளாட் ஸ்க்ரீன் டிவி தான் வாங்க முடிஞ்சது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. இந்த பக்கத்திலே இருக்கு பார்த்துகோங்க.
என்னைக்கோ எதோ ஒரு போதை நேரத்திலே படிச்சேங்க ஒரு கவிதை, போதையிலே படிச்சதாலே சரியா ஞாபகத்திலே இல்லே இருந்தாலும் சொல்றேன்.
"இலைகள்
சும்மா
இருக்க
ஆசைப்பட்டாலும்
காற்று
விடுவதில்லை"யாம்...
சரியா? (சரியா இருந்தா இங்கேயே படிச்சிக்கங்க, இல்லேன்னா சரியா இருக்குற இடத்திலே போய் படிச்சுக்கங்க. வெய்ட்...வெய்ட்... அதுக்காக டப்புன்னு நம்ம பதிவை விட்டுட்டு வெளியிலே போயிறாதீங்க....)
அது மாதிரி, மனம், இருக்கிற பிளாட் ஸ்க்ரீன் டிவியோட சும்மா இருக்க ஆசைப்பட்டாலும், ஆசை என்ற சாத்தான் சும்மா இருக்க விட வில்லை. அதனாலே பல நாளா தூக்கம் இல்லாமே யோசிச்சேன், யோசிச்சேன், யோசிச்சேன்.... கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். ஐஸ்வர்யாராயை கல்யாணம் செய்துக்கலாம்னு ஆசை எல்லாருக்கும் இருக்கும் இருந்தாலும் பல்லுள்ளவன், பக்கோடா சாப்புடுவான். 'பொக்கை' என்ன செய்ய முடியும்? அவல நெனச்சி ஓரலைதான் இடிக்க முடியும். அதுக்கப்புறம் விதி வசத்தாலே நமக்கு அமையிற தங்கமணிகளுக்கு ஐஸ்வர்யா புடவை, நதியா கம்மலு, குஷ்பு கொண்டைன்னு வாங்கி கொடுத்து, அவங்க முகத்திலே ஐஸ்வர்யாவையும், நதியாவையும், குஷ்புவையும் தேடி தேடி சோர்ந்து மறுபடியும் தேடி தேடி கண்டடைகிற விக்கிரமாஎத்தர்கள் அல்லவா நாம. அதனாலே யோசிச்சு எடுத்த அந்த முடிவை செயல்படுதிரலாம்னு முடிவே செஞ்சிட்டேன்.
சும்மா பிளாஸ்மா டிவி, பிளாஸ்மா டிவின்னு அலையாமே நம்ம கிட்டே இருக்கிற பிளாட் ஸ்க்ரீன் டிவியையே பிளாஸ்மா டிவியா மாத்திரலாம்னு முடிவு செஞ்சிட்டேன். விளைவு சூப்பரா. ஒரு பிளாஸ்மா டிவி ரெடியாகி வீட்லே மாட்டிட்டேன். நீங்களே பாருங்களேன்.
எப்படி சூப்பரா இருக்கா???
ஆமா, நாம ஒரு படா எஞ்சிநீயறு. நம்ம மூளையிலாம் எப்படி??? யோசிக்கும். பிளாட் ஸ்க்ரீன் டிவியை பிளாஸ்மா டிவியாக மாற்ற முடிவு செஞ்சி, அதுக்குன்னு யோசிச்சு நான் கண்டு பிடிச்ச ஐடியாவை செயல் படுத்தினேன். மிக அருமையான ஐடியா.
அப்படி ஒன்னும் பெரிய வேலை எல்லாம் இல்லை ரொம்ப சிம்பிள் தான். எனக்கு தெரிஞ்ச விவரத்தை நான் யாருக்கும் சொல்லக்கூடாது ஏதாவது பெரிய கம்பனிக்காரன் கிட்டே சொல்லி பதவியும் பைசாவும் அள்ளிரலாம்னு தான் நெனச்சேன்.
ப்பச்... இருந்தாலும் நம்ம பதிவர் எல்லாரும் எவ்ளோ நல்லவங்க, அவங்களுக்கும் நாம இதை சொல்லிருவோம் அப்படின்னு நெனச்சி சொல்றேன். தயவு செய்து இந்த விவரத்தை நீங்க மட்டும் யூஸ் பண்ணுங்க. மத்தவங்க கிட்டே சொல்லனும்...னா..... கூட சொல்லிகோங்க.... பதிவை படிச்சி எழுதி என்ன சாதிச்சே அப்படின்னு கேள்வி கேட்குரவங்க முகத்துலே கரியை பூசுங்க....
பதிவருங்களா...!!! கொக்கா....???
சரி இப்ப கவனமா பார்த்து செய்யுங்க.....
இப்ப ஐடியாவை சொல்றேன்...
ப்பச் பத்து பக்கத்திற்கு வெலக்குரதுக்கு பதிலா ஒரு படமா தாரேன் பாருங்க அதுதான் சிம்பிள்.
பாருங்களேன்....
.
.
.
.
.
.
.
.
.
இந்த அருமையான ஐடியாவை நீங்க செயல்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ராயல்டீ என்ன ராயல்டீ.... ஒரு சிங்கிள்டீ கூட தர வேண்டாம் போங்க...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அன்பார்ந்த பதிவர்களே இந்த ஐடியாவுக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க. உங்களோட பிளாஸ்மா டிவி அனுபவத்தை அப்புறமா வந்து சொல்லுங்க....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
லக லக லக
கல கல கல
க்யூட் தம்பி...
வருகைக்கு மற்றும் உங்களோட ஆதரவிற்கு நன்றி.
TV pinnadi yetho kathavu idikkirappla irruke
இப்படியே டபுள் டோர் பிரிட்ஜ்,ஹோம் தியேட்டர் இதெல்லாம் எப்படின்னு சொல்லிட்டிங்கன்னா இங்க ரிச்சி தெருவில ஒரு கடை வச்சு பொழச்சுகிறன்.. நைனா
:)
சாதா மூஞ்சியை மன்மதனாக மாற்ற ஏதும் டிப்ஸ் இருக்கா ?
g
சூப்பர் ஜடியா நைனா தொடரட்டும் உங்க சேவை.
/*
Anonymous said...
TV pinnadi yetho kathavu idikkirappla irruke
*/
அது பக்கத்து ரூமு கதவுதான் பாஸ்.
இப்படி ஒரு சின்ன "டெக்னிகல் பால்ட்" ஆகி போச்சு. இதை என்னோட டெக்னிகல் டீம் பார்த்துட்டு இருக்காங்க.
ஆனா
உங்களோட நுண்ணிய பார்வையையும், ஆர்வத்தையும் நெனைச்சா.... அய்யோ... அப்படியே...... புல்லரிக்குது....
/*
தண்டோரா said...
இப்படியே டபுள் டோர் பிரிட்ஜ்,ஹோம் தியேட்டர் இதெல்லாம் எப்படின்னு சொல்லிட்டிங்கன்னா இங்க ரிச்சி தெருவில ஒரு கடை வச்சு பொழச்சுகிறன்.. நைனா
*/
இவ்ளோ ஆர்வமா கேக்குறீங்க.... முயற்சி பண்றேன்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
/*
கோவி.கண்ணன் said...
:)
சாதா மூஞ்சியை மன்மதனாக மாற்ற ஏதும் டிப்ஸ் இருக்கா ?
*/
அது தெரியாமே தானே, நானே 'மிஸ்டர்.பீன்' மாஸ்கை மாட்டிகிட்டு அலையுறேன்...
இருந்தாலும் இதற்கும் ஒரு டீம் போட்டு ஆராச்சி பண்றேன்.
/*
Anonymous said...
g
*/
இதுக்கு என்ன அர்த்தம் அனானிG?
/*சொல்லரசன் said...
சூப்பர் ஜடியா நைனா தொடரட்டும் உங்க சேவை.*/
உங்களை மாதிரி ஆர்வமான "கஷ்ட"மர்ஸ் இருக்கும் போது, கேட்கும் போது எங்க டீம் இன்னும் ஆர்வமா ஆராயும்...
//"இலைகள்
சும்மா
இருக்க
ஆசைப்பட்டாலும்
காற்று
விடுவதில்லை"யாம்...///
ஆமா ஆம்மா....
அப்பறம் உங்க ஐடியா சூப்பர் நைனா...
//அவல நெனச்சி ஓரலைதான் இடிக்க முடியும். //
இதில் த்ரிபிள் மீனிங் எதுவும் இல்லையே?
ஸ்ஸ்ஸ்ப்பா ,
சனிகெழமையும் நாளும் எனக்கு தேவையா இது?
அவங்க முகத்திலே ஐஸ்வர்யாவையும், நதியாவையும், குஷ்புவையும் தேடி தேடி சோர்ந்து மறுபடியும் தேடி தேடி கண்டடைகிற விக்கிரமாஎத்தர்கள் அல்லவா நாம.//
பெரிய அரசியல்வாதியா வரலாம் நீங்க...
என்னா உவமை???
எதிர்க்கட்சிகளை போட்டுத் தாக்கிரலாம்ல..
:-)
இந்த அருமையான ஐடியாவை நீங்க செயல்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ராயல்டீ என்ன ராயல்டீ.... ஒரு சிங்கிள்டீ கூட தர வேண்டாம் போங்க...
//
குத்திருக்க யோசனைக்கு இதெல்லாம் கேக்குதா???
இந்த ஐடியாவுல எத்தனை பேர் மண்டை ஒடையப் போகுதோ தெரியலையே...
ஐயோ பாவம்..
:-)
வர வர உன் லொள்ளுக்கு அளவே இல்லாமல் போவுது...ஜாக்கிரதை
/*
ஆ.ஞானசேகரன் said...
//"இலைகள்
சும்மா
இருக்க
ஆசைப்பட்டாலும்
காற்று
விடுவதில்லை"யாம்...///
ஆமா ஆம்மா....
அப்பறம் உங்க ஐடியா சூப்பர் நைனா...
*/
வருகை மற்றும் ஆதரவிற்கு நன்றி.
/*
//அவல நெனச்சி ஓரலைதான் இடிக்க முடியும். //
இதில் த்ரிபிள் மீனிங் எதுவும் இல்லையே?
*/
எத்தனை மீனிங்கு வேணுன்னாலும் எடுத்துகோங்க...
காசா பணமா...
என்ஜாய்.
/*
மதிபாலா said...
ஸ்ஸ்ஸ்ப்பா ,
சனிகெழமையும் நாளும் எனக்கு தேவையா இது?
*/
எதுக்கைய்யா.. இப்படி நொந்துகுறீங்க...
என்ஜாய் பண்ணுங்க... பிளாஸ்மா டிவியை..
தொடர்ந்து ஆதரவு தாங்க... அம்புட்டுதான்
/* வேத்தியன் said...
அவங்க முகத்திலே ஐஸ்வர்யாவையும், நதியாவையும், குஷ்புவையும் தேடி தேடி சோர்ந்து மறுபடியும் தேடி தேடி கண்டடைகிற விக்கிரமாஎத்தர்கள் அல்லவா நாம.//
பெரிய அரசியல்வாதியா வரலாம் நீங்க...
என்னா உவமை???
எதிர்க்கட்சிகளை போட்டுத் தாக்கிரலாம்ல..
:-)
*/
நண்பா நான் மனசுலே வச்சிருக்கேன். நீங்க சொல்லிட்டீங்க.
அடுத்து கட்சி ஆரம்பிக்கத்தான் போறேன்.
/*
இந்த அருமையான ஐடியாவை நீங்க செயல்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ராயல்டீ என்ன ராயல்டீ.... ஒரு சிங்கிள்டீ கூட தர வேண்டாம் போங்க...
//
குத்திருக்க யோசனைக்கு இதெல்லாம் கேக்குதா???
இந்த ஐடியாவுல எத்தனை பேர் மண்டை ஒடையப் போகுதோ தெரியலையே...
ஐயோ பாவம்..
:-)
*/
அதான் எதுவும் வேணாம் அப்படின்னு தானே சொல்லி இருக்கேன்.
ஆமா இதுலே சுவரு தானே உடையனும், மண்டை ஏன் உடையனும்?
/*
jackiesekar said...
வர வர உன் லொள்ளுக்கு அளவே இல்லாமல் போவுது...ஜாக்கிரதை
*/
நல்லதுக்கே காலம் இல்லைன்னு இதுக்குதான் சொல்றாங்க....
இப்படி எல்லாம் உக்கார்ந்து யோசிக்கிற நைனா தலையில இடி விழ..:-)
சூப்பர் தமிழன் யொசிக்க ஆரம்பித்துவிட்டான்....
/*
கார்த்திகைப் பாண்டியன் said...
இப்படி எல்லாம் உக்கார்ந்து யோசிக்கிற நைனா தலையில இடி விழ..:-)
*/
ஹலோ எச்சூஸ் மீ....
நான் யோசிக்கிறதுக்கு நீங்க ஏன் சாமி காண்டு ஆகுறீங்க.
/* vipoosh said...
சூப்பர் தமிழன் யொசிக்க ஆரம்பித்துவிட்டான்....*/
வாங்க நண்பரே... வாங்க
முதல் வருகை என்று எண்ணுகிறேன். தங்கள் வருகை நல்வருகை ஆகுக.
தொடர்ந்து ஆதரவு தாருங்க.
நம்ம கடைக்கு வாங்க,வந்து கேள்விக்கு விடை சொல்லுங்க
அட நல்லாருக்கே - செஞ்சு பாத்துடுவோமா
நையாண்டி நைனா - பீனே தேவலை போல இருக்கே
நல்வாழ்த்துகள்
பக்கத்து வீட்டுக்காரர் சண்டைக்கு வந்துட்டார். உங்க முகவரி கொடுத்திருக்கேன். அது என்னன்னு பாத்துக்கங்க ......
/*சொல்லரசன் said...
நம்ம கடைக்கு வாங்க,வந்து கேள்விக்கு விடை சொல்லுங்க
*/
சரி நண்பா... வந்து பார்த்துட்டேன்.
முயற்சி செய்து பார்த்துவிடுவோம்.
/*
cheena (சீனா) said...
அட நல்லாருக்கே - செஞ்சு பாத்துடுவோமா
நையாண்டி நைனா - பீனே தேவலை போல இருக்கே
நல்வாழ்த்துகள்
*/
மிக நன்றி ஐயா...
உங்களை மாதிரி பெரியவர்களின் ஆசீர்வாதங்களுடன்
"நைனா என்னிக்கும் கெலிப்பான்".
/*தருமி said...
பக்கத்து வீட்டுக்காரர் சண்டைக்கு வந்துட்டார். உங்க முகவரி கொடுத்திருக்கேன். அது என்னன்னு பாத்துக்கங்க ......
*/
மிக மிக நன்றி ஐயா...
தங்கள் அன்பும் ஆதரவும் என் கண்களை பணிக்க செய்கிறது இதயத்தை இனிக்க செய்கிறது.
இப்படியும் ஒரு "டெக்னிகல் பால்ட்" இருக்குறதை விளக்கியதற்கு நன்றி. இனி வரும் கண்டு பிடிப்புகளுக்கு இதுபோல் வராமல் ஒரு "யூசர் கைடு" போடவும் கம்பனி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீங்களும் வேணும் என்றால் எங்கள் குழுமத்தில் இணைந்து மக்கள் தொண்டாற்றலாம்.
Post a Comment