Wednesday, 8 April 2009

அயனும் - மாற்றுப்பார்வையில் சில கருத்துகளும்


அயன், அயன், அயன் இப்போதைக்கு நல்லா கல்லா கட்டுற சரக்கு இது தாங்க. கோபுரத்துலே இருந்தாலும் குடிசையிலே இருந்தாலும் அயனுக்கு மயங்காதவங்க யாரு? இப்போ, சும்மா இருந்தாலும் மிடுக்கு மற்றும் பகட்டுக்காக அயன். பெரிய வேலையில் இருந்தால் பந்தாவிற்காக அயன், என்று அயன் பெருமை எங்கும் இருக்கிறது.

சரி, இப்படி இருக்கிற அயன் என்ன? என்ன? நல்ல பலன்களை தருகிறது என்று பார்ப்போமா? நீங்க இப்ப வேலை தேடுகிற நபரா இருந்தா அயன் பண்ணாத ஷர்ட்டை போட்டுட்டு போனா உங்களுக்கு வேலை கிடைக்குமா? நீங்க, உங்க லவ்வரை பார்க்க போறீங்க அயன் பண்ணாம நீங்க போவீங்களா? நீங்க கல்யாணம் ஆகி தங்கமணி, ரங்கமணியா இருக்கீங்கன்னு வையுங்க, நீங்க தான் எல்லா வேலையும் செஞ்சு வைப்பீங்கன்னு நீங்க சொல்லாமலே எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும், உங்க தங்கமணி விரும்பி கட்டுற அவங்க அம்மா வாங்கி கொடுத்த புடவையை சஸ்பன்ஸா அயன் பண்ணிவைங்க, அப்புறம் பாருங்க உங்களுக்கு வீட்லே கிடைக்கிற மரியாதையை. அவசரத்திலே வேலைக்காரி புடவையை அயன் பண்ணிவைத்து, ஏற்படும் விபத்துகளுக்கு கம்பனி பொறுப்பு ஏற்காது?

இவ்ளோ நல்ல பலன்களை கொடுக்கிற அயனை எப்படி பண்றது? அதை பற்றி நீங்க ஒன்னும் ரொம்ப அலட்டவேண்டாம், வெளியே போய் பார்தீங்கன்னா...? நம்ம அன்பர் ஒரு வண்டியை வச்சிக்கிட்டு, கூடவே ஒரு அயன் பெட்டியும் வச்சிருப்பார் அவர்கிட்டே கொடுங்க அவர் சூப்பரா அயன் பண்ணி தருவார். அவருக்கு ஒரு மூணு ரூபாயை கொடுங்க, முடிஞ்சது. மூணு நிமிசத்துக்கு உள்ளேயே உங்க வேலையும் முடியும் அவருக்கும் கொஞ்சம் கல்லா கட்டும். நீங்களும் சந்தோசமா இருப்பீங்க அவரும் சந்தோசமா இருப்பாரு.

இப்படி அயன் பண்ணி போட்டீங்கன்னா, கல்யாணம் ஆகாத கட்டிளம் காளையர் இந்த சூர்யா போல, தமன்னா மாதிரி ஒரு பிகரோட செட்டாவீங்க. கல்யாணம் ஆன, மூக்கணாங்கயிறு போட்ட காளைகள், இந்த படத்திலே இருக்கிற மாதிரி ஒரே ரொமான்சா இருக்கலாம். தமன்னா கூட இல்லை சாமிகளா....! உங்களோட தங்கமணிகளோட.

அப்புறம் எதுக்குடா 'அயன்' படத்தோட போட்டோ போட்டிருக்கே அப்படின்னு கேக்குறீங்களா. அது சும்மா விளம்பரத்திற்கு. என்னோட விளம்பரத்திற்கு என்று நினைக்காதீங்க. படத்தோட விளம்பரத்திற்கு. அப்புறம் ரொமான்சிற்கும், பிகருக்கும் சாம்பிள் காட்டவேண்டாம்...! அதுக்குதான்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஹேய்... ஹேய்.... பேச்சு.. பேச்சா தான் இருக்கணும்... என்னை அடிக்க விறகு கட்டையெல்லாம் தேடி எடுத்து வரக்கூடாது. ஆமா சொல்லிப்புட்டேன். உங்களுக்கு அவ்ளோ கோபம் வருதா? உங்க கோபத்தை கொஞ்சம் பின்னூட்டத்திலே காட்டிட்டு போங்க, கோபம் இல்லை என்றாலும் பின்னூடத்திலே சொல்லிட்டு போங்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

16 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அயனுக்கு இப்படி ஒரு விளக்கமா.. இது கே. வி. ஆனந்துக்குத் தெரிஞ்சா மனுஷன் நொந்து போய்டுவார்..

//அது சும்மா விளம்பரத்திற்கு. என்னோட விளம்பரத்திற்கு என்று நினைக்காதீங்க. படத்தோட விளம்பரத்திற்கு. அப்புறம் ரொமான்சிற்கும், பிகருக்கும் சாம்பிள் காட்டவேண்டாம்...! //

என்ன ஒரு தாரள குணம்..

Raju said...

இன்னா நைனா, இப்டி கலாய்ச்சிட்டயே..!
ஷோக்காகீதுபா உன்கூட..!
என்னாமா போ!

கோவி.கண்ணன் said...

மொக்க மொக்க ...
செல்லாது செல்லாது ...
:)

சொல்லரசன் said...

//அவங்க அம்மா வாங்கி கொடுத்த புடவையை சஸ்பன்ஸா அயன் பண்ணிவைங்க. அப்புறம் பாருங்க உங்களுக்கு வீட்லே கிடைக்கிற மரியாதையை.//

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க நைனா.

Anbu said...

\\\\கார்த்திகைப் பாண்டியன் said...\ அயனுக்கு இப்படி ஒரு விளக்கமா.. இது கே. வி. ஆனந்துக்குத் தெரிஞ்சா மனுஷன் நொந்து போய்டுவார்..\\\

repeat

நையாண்டி நைனா said...

/*அயனுக்கு இப்படி ஒரு விளக்கமா.. இது கே. வி. ஆனந்துக்குத் தெரிஞ்சா மனுஷன் நொந்து போய்டுவார்.. */

வருகைக்கு மிக நன்றி, நண்பரே.
அதெல்லாம் அவருக்கும் தெரியும். அவரும் அயன் செஞ்சி தானே பொழப்பை கவனிக்குறார்.

/*என்ன ஒரு தாரள குணம்..*/

என்னைய ஓவரா புகழாதீங்க பாசு... ஒரே வெக்கம், வெக்கமா வருது.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
இன்னா நைனா, இப்டி கலாய்ச்சிட்டயே..!
ஷோக்காகீதுபா உன்கூட..!
என்னாமா போ!*/

வருகைக்கு மிக நன்றி.
கருத்துக்கு மிக மிக நன்றி.
இது உங்க முதல் வருகை. தொடர்ந்து ஆதரவு தாங்க பாசு.

நையாண்டி நைனா said...

/* கோவி.கண்ணன் said...
மொக்க மொக்க ...
செல்லாது செல்லாது ...
:)*/

நாட்டாமை..... தீர்ப்பை மாத்தி சொல்லு.

நையாண்டி நைனா said...

/*உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க நைனா.*/

எதோ, பதிவர்கள் எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்.

நையாண்டி நைனா said...

/* Anbu said...
\\\\கார்த்திகைப் பாண்டியன் said...\ அயனுக்கு இப்படி ஒரு விளக்கமா.. இது கே. வி. ஆனந்துக்குத் தெரிஞ்சா மனுஷன் நொந்து போய்டுவார்..\\\

repeat*/

அப்படியா.
நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு போட்ட பதில்தான் உங்களுக்கும் ரிப்பீட்டு.

விவேக் said...

சமீபத்தில் கிடைத்த செய்தி இந்த பதிவ படிச்சிட்டு கே வி ஆனந்த் சட்டை அயன் பண்ணி போடறதையே நிறுத்திட்டாராம் :-)

நையாண்டி நைனா said...

/*விவேக் said...
சமீபத்தில் கிடைத்த செய்தி இந்த பதிவ படிச்சிட்டு கே வி ஆனந்த் சட்டை அயன் பண்ணி போடறதையே நிறுத்திட்டாராம் :-)*/

அப்படியா....? அப்படி என்றால் என் பதிவிற்கு இது பெரிய்ய்ய்ய்ய்ய்ய வெற்றி.
வருகை மற்றும் உங்கள் தகவலுக்கு மிக நன்றி நண்பரே.

Cable சங்கர் said...

நல்ல அயனான பதிவு..

அத்திரி said...

//உங்க தங்கமணி விரும்பி கட்டுற அவங்க அம்மா வாங்கி கொடுத்த புடவையை சஸ்பன்ஸா அயன் பண்ணிவைங்க, //

நல்ல அனுபவமோ.................

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
நல்ல அயனான பதிவு..*/

வருகைக்கு நன்றியோ நன்றி அண்ணா,

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
//உங்க தங்கமணி விரும்பி கட்டுற அவங்க அம்மா வாங்கி கொடுத்த புடவையை சஸ்பன்ஸா அயன் பண்ணிவைங்க, //

நல்ல அனுபவமோ.................*/

Please keep the company secrets...