இந்த பதிவருங்க கிட்டே நல்ல பதிவரு அப்படின்னு பேரு எடுக்குறது ரொம்ப குஷ்டமப்பா... ஆமா... கையிலே குஷ்டம் பிடிச்சி தேயிற மாதிரி மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சி போட்டா கண்டுக்க கூட மாட்டேங்குறாங்க... சரி அதை, இதை போட்டு கூட பேரு வாங்கிரலாம்ன்னு வச்சிக்கோங்களேன்... இந்த பதிவருங்க கிட்டே யூத்து பதிவருன்னு பேரு வாங்குறது கஷ்டமோ கஷ்டம்.
சும்மாவா....!!! முப்பது லைனு பதிவுலே இருபது லைனுலே தான் யூத்து, யூத்துன்னு கதறனும், அப்புறம் மூனுலைனுலே "சில்வண்டு" பொண்ணுங்களை தான் சைட்டு அடிசேம்ன்னு அடிச்சு விடனும்... அதுக்கும் அப்புறம் "பெப்சி கேன்" மாதிரி ஆண்டிங்க தன்னை சைட்டு அடிச்சாங்கன்னு பீலாவை பீளிங்ஷா ஊத்தணும் மீதி இருக்குற நாலு லைனுலே சொல்லவந்த மேட்டரை சொன்னா தான் யூத்து பதிவருன்னு ஒத்துகுறாங்க... இல்லாங்காட்டி... சூ.. சூ.. சூ.. சூ.. சூதானமா பார்த்து பதிவு போடுய்யான்னு டெர்ரர் ஆக்குறாங்க.
இதை பற்றிய மேலதிக தகவல்களுக்கு தமிழகத்தின் நிரந்தர (நயன்தாரா அல்ல) யூத்து அண்ணன் கேபிள் சங்கரை அணுகவும்.அவர் மிக அருமையாக விளக்குவார், அவரு முப்பது லைனு பேசுனாருன்னா... வேண்டாம் விட்டுருங்க... அதான் இதுக்கு முந்திய பத்திய நீங்க நல்லா தெளிவா படிசிட்டீங்கல்லோ....
நாளொரு படமும் பொழுதொரு பதிவுமா இருந்த யூத்து அண்ணன் கேபிள், பதிவு போட்டு, பதிவு போட்டு யூத்துங்கறதை நிலை நாட்டுறது எளிய வழி அல்லன்னு கண்டு, மெலிய வழி தேடலானார்.
வாக்கிங், ஜாக்கிங் மட்டுமில்லாமல் ஹாக்கிங் கூட செய்து பார்த்திட்டார், ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகலை...
ஒரு நாள் இப்படி பீளிங்ஸொட அண்ணன் "ஜலக்கிரீடையிலே" இருக்கும்போது அண்ணன் கண்ணுலே ஒரு வெளம்பரம் பட்டது.... அன்றைய நாளிதல்லே...

இதை பார்த்த வொடனே கேபிள் அண்ணனுக்கு கையும் ஓடலை காலும் ஓடலே... ஐஸ்வர்யா ராய் கால்ஷீட்டு கெடச்ச ரஜினி மாதிரி, டாக்டர் பட்டம் வாங்குன விஜய் மாதிரி, வெற்றி படம் கொடுத்த அஜீத்து மாதிரி அவருக்கே கொஞ்ச நேரம், அவரையும் அந்த பொழுதையும் நம்ப முடியலே...
அன்னிக்கு நைட்டே போனை போட்டு "நான் சீக்கிரம் ஸ்லிம் ஆகணும், இதுக்கே பலபேரு பதிவு போட்டு
அத்திரி பாச்சா ஆடுறாங்க, அதனாலே அந்த 5 நாளிலே 5 கிலோ குறைக்கிற 5000 ரூபாய் கோல்டு ப்ளான்லே நான் இப்பவே சேர்ந்துக்கறேன்" என்று சொல்லி ஆன்லைனிலே பணம் கட்டிட்டாரு.
கொஞ்ச நேரத்திலேயே "உங்கள் 'ரெஜிஸ்ற்றேசன்' உறுதி செய்யப்பட்டது, நாளை காலை ஆறு மணி முதல் உங்கள் 'கோர்ஸ்' ஆரம்பமாகும், வாழ்த்துக்கள்." என குறுஞ்செய்தியும் வந்து சேர்ந்தது...இதை கண்டவுடனே... பரமசிவன் படத்திலே வருகிற அஜீத்து மாதிரி தானும் ஸ்லிம் ஆகிட்டா மாதிரி, ஆனா லைலாவை விரட்டி விட்டுட்டு (ஏன்னு கேட்டா அது ஓல்டு பீஸாம்....) ஜெனீலியா கூட கனவுலே டூயட்டும் ஆடி முடிச்சி தூங்கி போனார்.
மறுநாள் காலை ஆறு மணி, "டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...
திறந்து பார்த்தால், அவரது பதிவுலே, ஹாட் ஸ்பாட்லே போட்டு பெரு மூச்சி விட்டாரே.... அனுஷ்கா.

அந்த அனுஷ்கா மாதிரியே ஒரு பொண்ணு மிக குறைவா உடையுடன்... ஆனா கழுத்துலே ஒரு டாலர், அதை தன் கையில் பிடித்தவாறே ஒயிலாக போஸ் கொடுத்து நிற்க, அண்ணன் கேபிள் அப்படியே மெய் மறந்து நிற்க, "ஹே... ராசாத்தி... ரோசாப்பூ... வா... வா...." என்று பேக்-கிரவுண்ட்ல் மீசிக் மட்டுந்தான் பாக்கி......
அந்த பெண் தன் கைலே பிடிச்சிருந்த அந்த டாலரை அவரது முகத்துக்கு நேரா காட்டி, முடியுமா உன்னாலே??? என்று சவாலாக ஒரு கிறக்க பார்வை பார்க்க அந்த டாலர்லே "என்னை பிடித்தால் நான் உன்னவள், எங்கே.. பிடி பார்ப்போம்" என்று இருக்க. சைகையால் அவரை சுண்டி இழுத்து ஓட்டம் பிடித்தாள் அந்த பெண். அண்ணனும் தொடர்ந்து ஓடினார்...ஆனால் அவள் ஓடியே மறைந்தாள். இப்படி அஞ்சி நாள் போச்சி... அஞ்சு நாளும் ஓட்டம் தான் பெருசாச்சே தவிர... வேற ஒன்னும் நடக்கலே... ஆனா ஆச்சரியப்பட தக்க வகையிலே அவரும் அஞ்சு கிலோ குறைஞ்சி போனாரு.
அஞ்சு நாலு கழிச்சி... இது சரி பட்டு வராது, நாம பத்து கிலோ குறையனும்னு சொல்லி 10 நாளிலே 10 கிலோ குறையிற 9,000 ரூபாய் ப்ளான் எடுத்துக்கறேன் என்று சொல்லி பணமும் கட்டுனாரு.. இதுக்கும் வழக்கம் போல குறுஞ்செய்தியும் எல்லாம் வந்துச்சு... இவருக்குத்தான் இப்ப மேட்டர் எல்லாம் புரிஞ்சு போச்சே... நாளைக்கு பாவனா,

கார்த்திகா மாதிரி எவளாவது வருவா... வந்து... பார்க்கட்டுமே... நாளைக்கு எப்படியும் 'மேட்டரை' முடிச்சிறனும் என்று முடிவோட இருந்தாரு...
மறுநாள் காலை ஆறு மணி;
"டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...
திறந்து பார்த்தால், ஏஞ்சலினா ஜூலி, நவோமி கேம்பல் மாதிரி சும்மா செம அல்ட்ரா மாடர்ன் பாரின் கேர்ல்ஸ் ரெண்டு பேரு வந்திருந்தாங்க...இவங்க கிட்டேயும் அதே மாதிரி அறிவிப்பு உள்ள டாலர், சீண்டல்....

அண்ணன்...ஆகா... இன்னிக்கு செம வேட்டை தான் எப்படியும் ரெண்டுல ஒன்னை பாத்திரலாம்னு வெரட்ட ஆரம்பிச்சாரு... ஆனா ஒன்னத்தையும், ஒன்னும் பண்ண முடியலே... ஏன் தொட்டு கூட பார்க்க முடியலை.... இப்படியே பத்து நாளும் போயிட்டு, ஒன்னும் வேலைக்கு ஆகலை, இவரு 10 கிலோ கொரஞ்சதை தவிர.
அண்ணன் திருப்பியும் அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உங்க பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. நான் 3 நாளிலே 30 கிலோ குறைக்கிற 30,000 ருபாய் பிளாட்டினம் பிளானை எடுத்துக்க விரும்புகிறேன் என்று சொன்னார்.
அதுக்கு அடுத்த முனையிலே இருந்து, நீங்க ஒரு முறைக்கு, இரு முறை யோசிச்சு முடிவு பண்ணுங்க இது கொஞ்சம் தீவிரமா இருக்கும் அப்படின்னு சொல்ல... அதுக்கு நம்ம அண்ணன்... இந்த
"ஸ்ட்ராங் வீர் மகா வீருக்கு எல்லா பீருமே சர்பத்து தாண்டா புக்கு பண்ணுறா அந்த பிளாட்டினம் பிளானை" என்று கர்ஜித்து போனை துண்டித்தார்.
அண்ணன் அப்படியே படுக்கையிலே கிடந்து கற்பனை பண்ண ஆரம்பிச்சார். நாளைக்கு எப்படியும்... எப்படியும்... குறைஞ்சது மூணு பேராவது வருவாளுங்க... ஆபீஸ்லே வேற இது தீவிர ப்ளானுன்னு சொன்னானுங்க... அய்யய்யோ... அய்யய்யோ... நம்ம கொத்து பரோட்டாவிலே எழுதுவோமே அதுமாதிரி எதுவும் நடக்குமோ.. என்று தனக்கு தானே பேசிகிட்டே கனவு கண்டே தூங்கி போனார்.
மறுநாள் அதிவிரைவா எழுந்து கொஞ்சம் "வார்ம் அப்" பண்ணிக்கிட்டு சும்மா படுத்திருக்கிற மாதிரி பாவ்லா காட்டிகிட்டு இருந்தார்...
அவரு ஆவலுடன் எதிர் பார்த்து கிட்டு இருந்த அந்த ஒலி..."டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...
மிக ஆவலுடன் திறந்து பார்த்தால்......., சும்மா சிக்ஸ் பேக்குடன் அஜானபாகுவான தோற்றத்திலே, இந்த "ரெஸ்லிங்க்கு" வருவாங்கல்லோ கரு கரு தேகத்துடன், அந்த மாதிரி நாலு முரட்டு ஆசாமிங்க கையிலே டாலருடன்....
அந்த டாலரிலே
"மவனே என்னாண்டே மாட்னே, நீ எனக்கு தாண்டா... முடிஞ்சா தப்பிச்சு ஓடு"ன்னு இருந்துச்சு.... அதை படிச்சப்புறம் அண்ணன் ஏன் அங்கே நிற்க போகிறார்??????
அப்ப ஓடி போனவருதான் இப்ப வரைக்கும் காணோம்...

ஆனா இப்ப இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணாமே பழைய மாதிரியே நான் யூத்து... நான் யூத்துன்னு பதிவுக்கு பதிவு, பக்கத்துக்கு பக்கம்.... கூவிகிட்டு இருக்கா மாதிரி ஒரு தகவல் வந்தது..... இவரு கெட்டது போதாதுன்னு... இன்னும் பலபேரை.....
யாராவது பார்த்தீங்கன்னா.. தகவல் கொடுங்க... பிளீஸ்....
ஏன்னு கேட்குறீங்களா?
அவருகிட்டே இருந்து நான் தப்பிச்சு ஓடத்தான் கேட்குறேன்...