
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஒரு டிவி வாங்கனும்னு.
"அதான் நம்ம தலிவரு கொடுக்கிறார் போய் வாங்கிக்க வேண்டியது தானே" என்று சொல்லுறீங்களா?
அந்த டிவி எல்லாம் கட்சிலே இருந்து, வருமானமே இல்லாமே, வருமானத்தையும், அவமானத்தையும் மீறி சொத்து சேர்த்து வச்சிருக்கிறவங்களுக்கு தான் கொடுப்பாங்களாம். என்னை மாதிரி ஏழை சாப்ட்வேர் எஞ்சிநீருகெல்லாம் தர மாட்டாங்களாம். அதுவும் நான் ஆசைபட்டது..... இந்த மேலே படத்திலே இருக்கிற மாதிரி ஒரு பிளாஸ்மா டிவி வாங்கனும்னு.
ஆனா ஒரு ஏழை சாப்டுவேர் எஞ்சிநீருகிட்டே அவ்ளோ பணம் இருக்குமா? அதுவும் இப்ப கம்பினி, பணம் எல்லாம் "ரீசஸ்" போகிற டைமான "ரிசஸன்" நேரம். அதனாலே எதோ என்னாலே ஒரு பிளாட் ஸ்க்ரீன் டிவி தான் வாங்க முடிஞ்சது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. இந்த பக்கத்திலே இருக்கு பார்த்துகோங்க.

என்னைக்கோ எதோ ஒரு போதை நேரத்திலே படிச்சேங்க ஒரு கவிதை, போதையிலே படிச்சதாலே சரியா ஞாபகத்திலே இல்லே இருந்தாலும் சொல்றேன்.
"இலைகள்
சும்மா
இருக்க
ஆசைப்பட்டாலும்
காற்று
விடுவதில்லை"யாம்...
சரியா? (சரியா இருந்தா இங்கேயே படிச்சிக்கங்க, இல்லேன்னா சரியா இருக்குற இடத்திலே போய் படிச்சுக்கங்க. வெய்ட்...வெய்ட்... அதுக்காக டப்புன்னு நம்ம பதிவை விட்டுட்டு வெளியிலே போயிறாதீங்க....)
அது மாதிரி, மனம், இருக்கிற பிளாட் ஸ்க்ரீன் டிவியோட சும்மா இருக்க ஆசைப்பட்டாலும், ஆசை என்ற சாத்தான் சும்மா இருக்க விட வில்லை. அதனாலே பல நாளா தூக்கம் இல்லாமே யோசிச்சேன், யோசிச்சேன், யோசிச்சேன்.... கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். ஐஸ்வர்யாராயை கல்யாணம் செய்துக்கலாம்னு ஆசை எல்லாருக்கும் இருக்கும் இருந்தாலும் பல்லுள்ளவன், பக்கோடா சாப்புடுவான். 'பொக்கை' என்ன செய்ய முடியும்? அவல நெனச்சி ஓரலைதான் இடிக்க முடியும். அதுக்கப்புறம் விதி வசத்தாலே நமக்கு அமையிற தங்கமணிகளுக்கு ஐஸ்வர்யா புடவை, நதியா கம்மலு, குஷ்பு கொண்டைன்னு வாங்கி கொடுத்து, அவங்க முகத்திலே ஐஸ்வர்யாவையும், நதியாவையும், குஷ்புவையும் தேடி தேடி சோர்ந்து மறுபடியும் தேடி தேடி கண்டடைகிற விக்கிரமாஎத்தர்கள் அல்லவா நாம. அதனாலே யோசிச்சு எடுத்த அந்த முடிவை செயல்படுதிரலாம்னு முடிவே செஞ்சிட்டேன்.
சும்மா பிளாஸ்மா டிவி, பிளாஸ்மா டிவின்னு அலையாமே நம்ம கிட்டே இருக்கிற பிளாட் ஸ்க்ரீன் டிவியையே பிளாஸ்மா டிவியா மாத்திரலாம்னு முடிவு செஞ்சிட்டேன். விளைவு சூப்பரா. ஒரு பிளாஸ்மா டிவி ரெடியாகி வீட்லே மாட்டிட்டேன். நீங்களே பாருங்களேன்.

எப்படி சூப்பரா இருக்கா???
ஆமா, நாம ஒரு படா எஞ்சிநீயறு. நம்ம மூளையிலாம் எப்படி??? யோசிக்கும். பிளாட் ஸ்க்ரீன் டிவியை பிளாஸ்மா டிவியாக மாற்ற முடிவு செஞ்சி, அதுக்குன்னு யோசிச்சு நான் கண்டு பிடிச்ச ஐடியாவை செயல் படுத்தினேன். மிக அருமையான ஐடியா.
அப்படி ஒன்னும் பெரிய வேலை எல்லாம் இல்லை ரொம்ப சிம்பிள் தான். எனக்கு தெரிஞ்ச விவரத்தை நான் யாருக்கும் சொல்லக்கூடாது ஏதாவது பெரிய கம்பனிக்காரன் கிட்டே சொல்லி பதவியும் பைசாவும் அள்ளிரலாம்னு தான் நெனச்சேன்.
ப்பச்... இருந்தாலும் நம்ம பதிவர் எல்லாரும் எவ்ளோ நல்லவங்க, அவங்களுக்கும் நாம இதை சொல்லிருவோம் அப்படின்னு நெனச்சி சொல்றேன். தயவு செய்து இந்த விவரத்தை நீங்க மட்டும் யூஸ் பண்ணுங்க. மத்தவங்க கிட்டே சொல்லனும்...னா..... கூட சொல்லிகோங்க.... பதிவை படிச்சி எழுதி என்ன சாதிச்சே அப்படின்னு கேள்வி கேட்குரவங்க முகத்துலே கரியை பூசுங்க....
பதிவருங்களா...!!! கொக்கா....???
சரி இப்ப கவனமா பார்த்து செய்யுங்க.....
இப்ப ஐடியாவை சொல்றேன்...
ப்பச் பத்து பக்கத்திற்கு வெலக்குரதுக்கு பதிலா ஒரு படமா தாரேன் பாருங்க அதுதான் சிம்பிள்.
பாருங்களேன்....
.
.
.
.
.
.
.
.
.
இந்த அருமையான ஐடியாவை நீங்க செயல்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ராயல்டீ என்ன ராயல்டீ.... ஒரு சிங்கிள்டீ கூட தர வேண்டாம் போங்க...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அன்பார்ந்த பதிவர்களே இந்த ஐடியாவுக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க. உங்களோட பிளாஸ்மா டிவி அனுபவத்தை அப்புறமா வந்து சொல்லுங்க....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *