சில பத்திரிகைகள் தங்கள் வருமானம் பெருக வேண்டும் என்ற காரணத்திற்காகவும், சமுதாயத்தில் பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவும் சில வேடிக்கை வினோத செய்திகளை வெளியிடுவார்கள். அது போல தான் இதுவும். இதில் பாரதியையும், குஷ்புவையும் நுழைத்துள்ளார்கள்.
பாரதி என்ற பெயர் பாரதியாருக்கு மட்டும் தானா? குஷ்பு என்ற பெயர் அந்த சினிமா நடிகைக்கு மட்டும் தானா? அந்த பெயரிலே வேறு யாரும் இருக்க மாட்டார்களா? இருந்தாலும் அவர்கள் ஜாதி சான்றிதழ் வாங்கவே வரமாட்டார்களா? அப்படியே வந்தாலும் வேறு பெயரில் தான் எடுப்பார்களா? என்ன கொடுமை சார் இது?
அவர்கள் கொடுத்த தகவல் அது பாரதி தான், அது குஷ்பு தான் என்று அருதியிட்டு, உறுதிப்பட கூறுவது எப்படி?
இவர்கள் ஏதோ பரபரப்பை உண்டு பண்ண, இவ்வாறு எழுதி உள்ளார்கள் என்றே எனக்கு படுகிறது. இவர்கள் இவ்வாறு குற்றத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்றால், இவர்களுக்கு சமுதாயத்தின் மீது உண்மையில் அக்கறை உண்டு என்று சொன்னால் இந்த அசிங்கத்தை செய்வோரை கையும் மெய்யுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது தானே. அல்லது இதே நாடகத்தை சம்பந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளின் முன்னே அல்லது ஒரு மாவட்ட ஆட்சியர் முன்னோ, காவல் துறை உயர் அதிகாரிகளின் துணை உடனோ செய்யலாமே.


இது அந்த பத்திரிகையின் கற்பனையே அன்றி வேறில்லை.
இணைப்பு: இதனை முன்னிறுத்தி சில துவேச கருத்துக்கள் பரப்பபட்டதால் இன்னும் சில தொக்கி நிற்கும் கேள்விகளை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளேன்.
1: சில மாதங்களுக்கு முன்னே, ஜனாதிபதி, மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் வழங்கினார்கள், இலஞ்சம் வாங்கி கொண்டு, அது மாதிரி கைது வாரண்ட் பிறப்பித்தவர்கள், திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?
2. இந்தியாவின் பாதுகாப்பு/உளவு துறையில் இருந்து கொண்டு இந்தியாவை மற்றவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்களே அவர்கள் திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?