தமிழ் கூறும் நல்லுலக சான்றோரே,
பதிவு, பதிவுலகம், பதிவர் என்ற வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டு வந்துட்டேன்.
பதிவு போடலாம். எப்படிப்பட்ட பதிவு போடலாம்? அப்படின்னு யோசிக்கிறேன்.
நமக்குன்னு என்ன கொள்கை வைத்து போடலாம்னு யோசிச்சேன், அதுககப்புறம்தான் தோணிச்சு தமிழ் நாட்டுலெ எவன் கொள்கை வச்சிருக்கான் நாம வச்சிக்கிறததுக்கு?
அதனாலே கொள்கை வச்சுக்கபுடாது என்ற கொள்கை வச்சுக்கிட்டேன். சரிதானே? ( ஐயோ... நம்ம "விசய"காந்து கோவிசுப்பாரோ? )
சரி கொள்கை இல்லைன்னு ஆகி போச்சு
அப்புறம் என்ன எழுதலாம்?
ஏழை, பணக்காரன் வித்தியாசம் எழுதலாமா?, கம்யூனிஸம் தெரியாதே?
முற்போக்கு , பிற்போக்குன்னு அசுரத்தனமா எழுதலாமா? அதுவும் நமக்கு வராதே, நமக்கு அவ்ளோ மூளை இருந்த நான் ஏன் பொட்டி தட்டுற பொழப்புக்கு வறேன். அதை முயலு, இதை முயலாதேன்னு ரத்னமா எழுதலாமா? கோவிலுக்கு போ, போகாதே என்று காலத்தின் வழியை எழுதலாமா?
என்ன ஏலவ பண்றது. ABCD-யே ஒண்ணும் புரியல தயவு செய்து வெலகுங்கன்னு கேக்கலாம். வெலகாம ஊரு வெலெக்கீ வச்சிட்டாங்கன்னா???? அப்புறம் நாம போட்ட கணக்கு தலைகீழ்விகிதமா போய், வவ்வாலாட்டம் ஊருக்கு வெளியே தொங்க வேண்டியது தான்.
ஐயா....குசும்பொன்னும் பண்ணாம, யோசிப்பவர், யோசிக்காதவர்.... யாராவது... ஒரு நல்ல யோசனை சொல்லூங்கப்பு.....
நம்ம குருதி தான் தமிழ்க் குருதி ஆயிற்றே? நமக்கு யாராவது சொன்னால் தானே சுரனையே வரும், புத்தியும் வரும்.
ஒண்ணும் சொல்லவில்லை என்றால் மொக்கை பதிவுதான் வரும்...