Monday 13 July 2009

சதகுப்பை (ஜூலை/13/09/திங்கள்)

இப்ப தான் நம்ம குப்பைய கொட்டி முடிச்சா மாதிரி இருக்கு அதுக்குள்ளே அடுத்த சதகுப்பை எழுத வேண்டிய வேளை வந்துட்டு.... அந்த கடமைய தலை மேல் கொண்டு இதோ உங்களுக்காகா இந்த வார சதகுப்பை.

சதகுப்பைன்னா என்னா?
சதகுப்பை என்பது நமது பாட்டி வைத்தியத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய மூலிகை ஆகும். இதன் பயன்பாடு, சொல்லி முடிப்பது பெரும்பாடு. அதனாலே கொஞ்சம் கொஞ்சமா உங்ககிட்டே இதை பத்தி அறிமுக படுத்துகிறேன். இனி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பு இடம்பெறும்.



தற்போது நடந்து முடிந்த தேர்வும், தேர்வு முடிவுகளும் சில ஆரவாரங்களை எழுப்பி சென்றுள்ளது. தேர்வும் தேர்வு முடிவுகளும் ஆசிரியப்பணி வாழ்க்கை என்னும் சீரியப்பணியில் ஒரு சிறிய பணி ஆனால் மாணவர்களுக்கு...? அது தான் வாழ்க்கை. ஆகவே சக ஆசிரிய நண்பர்களே, ஆசிரிய பெரு மக்களே சற்றே சிரத்தை எடுத்து இந்த பணிகளை செய்யுங்கள்.

நான் சொல்ல வந்ததும் இதல்ல... அந்த மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணாக்கர்களின் தன்னம்பிக்கை என்னை வியப்புற வைக்கிறது. தான் ஆயிரத்திற்கு மேல் மதிபெண்கள் பெற்ற பின்னரும், எனக்கு இதையும் விட அதிகம் வரும் என்று ஒரு நம்பிக்கை. தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை கொண்டு மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து தன்னை நிரூபித்தார்களே அந்த தன்னம்பிக்கையை நான் வியக்கிறேன். வணங்குகிறேன்.



இந்த தன்னம்பிக்கை கொண்ட மாணவனை பெருமிதமாக எண்ணி கொண்டிருக்கையிலே, நேற்று ஒரு செய்தியும் கண்ணில் பட்டது. இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தோல்வி அடைந்ததால் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டாராம். அந்தோ பரிதாபம்..! என்ன குறைந்து விட்டது? அடுத்த முயற்சி இல்லையா... அல்ல இந்த பணி ஒன்றுதான் வாழக்கையா? இந்த மாணவனின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.



இந்த பிரகாஷ் படுகோனே என்று ஒரு அறிவு ஜீவி இருக்காரு. அவரு சொல்லி இருக்காரு. சானியாவை விட சாய்னா சிறந்தவர் என்று. இது ஏற்று கொள்ள முடியாத ஒரு கருத்து. இந்தியாவில் கிரிக்கட்டை தவிர வேறு எதுவுமே பிரபலமாக இல்லாத போது சானியா நிகழ்த்திய சாதனைகள் மேலும் அவர் சந்தித்த சோதனைகளும் பிரமிக்க தக்கது. அடுத்து சானியா டென்னிஸ் வீராங்கனை. இவர் பேட்மின்டன். பிறகு எப்படி ஒப்பிடுகிறார் என்று அந்த அறிவு ஜீவியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். அவரது கூற்று என்னை பொறுத்தவரை கண்டிக்க தக்க ஒன்று...

சரி... இன்னும் எழுதலாம் என்று பார்த்தல் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.... அதனாலே நாம அடுத்த பகுதிக்கு போறோம்.


சென்ற சதகுப்பைலே கேட்டிருந்தோம்,
ரோஜா படத்திலே வரும் "புது வெள்ளை மழை பொழிகிறது..." பாடலில் "அந்த சொல்லாத இடம் கூட குளிர்கின்றது...." இதற்கு என்ன அர்த்தம் என்று.... பல பேரு பல கருத்துக்கள் சொல்லி இருந்தார்கள்.... இப்ப நாம் அதற்கு உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு பார்க்க போறோம்.

ஒரு இடத்திருக்கு போகிறோம்னா என்ன பண்ணுவோம் ? இப்ப ஊட்டின்னு வச்சிக்கோங்களேன்.. அதை பத்தி கொஞ்சம் விசாரிப்போம், அதுக்கு அப்புறம் அங்கே போய் கைடு, கைடு ன்னு சொல்லுகிறவரை கூப்பிட்டு சில தகவல்களை கேட்போம். அப்புறம் நாம நேரிலே போய் அந்த இடங்களை கண்டு களித்து அனுபவித்து விட்டு வருவோம். நாம அறிஞ்ச தகவலும், அனுபவித்ததும் ஒன்றானால் மிகுந்த சந்தோசம் அடைவோம்.

அதை மாதிரி இந்த நாயகியும் செஞ்சிருக்கா. அவ அந்த தகவல்களோட.. வந்து காஷ்மீரை பாக்கிறா... அப்போ அவளுக்கு அந்த இடம் குளிரும், ஏரிப்பக்கம் குளிரும், இந்த மலை உச்சி நல்லா குளிர் எடுக்கும், அந்த ஹோட்டல் பக்கமா நல்ல குளிர் எடுக்கும் என்று மற்ற மக்கள் குறிப்பிட்டு சொல்லாத இடம்லாம் குளிருதாம் அதை தான் அவ அப்படி பாடுறா...

அந்த சொல்லாத இடம் எல்லாம் குளிருது.... காஷ்மீர் எங்கும் வெள்ளை மழை பொழிகிறது.... அதனாலே அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று இருந்துவிடாமல் இங்கே வந்து பாருங்க அப்ப உங்களுக்கு புரியும் சொல்லாத இடம்லாம் குளிர்கிறது என்று.....

ஹேய்.... ஹேய்.... அடிக்கலாம் வரக்கூடாது....

(அப்புறம் உங்களுக்கு இப்படி ஏதாவது பாட்டுலே ஏதாவது டவுட்டுன்னா நையாண்டி அண்ணனோட பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க... அடுத்த சதகுப்பைலே சொல்றேன்.)

17 comments:

Raju said...

\\அந்த இடங்களை கண்டு களித்து அனுபவித்து விட்டு வருவோம்.\\

யோவ்..என்னைய ஏன்யா சேக்குற..?
நான் யோக்கியன்யா..!

நையாண்டி நைனா said...

/*யோவ்..என்னைய ஏன்யா சேக்குற..?
நான் யோக்கியன்யா..!*/

ஐயைய்யோ.... சொம்பு போச்சே....
முதல்லே சொல்லி இருந்தா சொம்பை தூக்கி உள்ளே வச்சிருப்பேனே....???

:(

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவு தான்.. ஆனா இதை எழுதறது யாரு. அண்ணன் நைனா.. உங்க ஏரியா கிண்டலும் கேலியும்.. அத விட்டுட்டு.. அண்ணே.. உங்களுக்கு எதுக்கு இந்த ஆகாத வேலை எல்லாம்? எப்பவும் போல உள்ள புகுந்து கலாயுங்க தல..

நையாண்டி நைனா said...

/*
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல பதிவு தான்.. ஆனா இதை எழுதறது யாரு. அண்ணன் நைனா.. உங்க ஏரியா கிண்டலும் கேலியும்.. அத விட்டுட்டு.. அண்ணே.. உங்களுக்கு எதுக்கு இந்த ஆகாத வேலை எல்லாம்? எப்பவும் போல உள்ள புகுந்து கலாயுங்க தல..
*/

நாய்க்கு எலும்புத்துண்டை காட்டி வெளியே இழுத்து விட்டுட்டு... இப்பா நாலா பக்கமும் இருந்து கல்லாலே அடிக்கிறீங்களே.... சாமிகளா.... நல்லா இருங்கப்பு....

வால்பையன் said...

மொக்கை தாங்க முடியல!

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
மொக்கை தாங்க முடியல!*/


ரொம்ப நன்றி பாசு....
இந்த மாதிரி பெயர் வாங்க நான் எவ்ளோ போராடுறேன்....
அது தெரியாமே சில சின்ன புள்ளைங்க நம்மலே சீண்டுதுங்க....

தராசு said...

//ஹேய்.... ஹேய்.... அடிக்கலாம் வரக்கூடாது.... //

என்னிக்காவது மாட்டாமலா போயிருவ, அப்ப இருக்குடி உனக்கு

சொல்லரசன் said...

//அது தெரியாமே சில சின்ன புள்ளைங்க நம்மலே சீண்டுதுங்க....//

டக்ளஸ்தானே சொல்லறிங்கோ

RRSLM said...

//அப்புறம் உங்களுக்கு இப்படி ஏதாவது பாட்டுலே ஏதாவது டவுட்டுன்னா நையாண்டி அண்ணனோட பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க... அடுத்த சதகுப்பைலே சொல்றேன்//
குளிருக்கு விளக்கம் நல்லா இருந்தது நைனா.

இப்போ என்னோட கேள்விக்கு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்.

"பெண்களுக்கு சுருட்டை முடி எங்க அதிகமா இருக்கும்?"

அடுத்த சதகுப்பை வர வரைக்கும் நம்மால பொறுமையா இருக்கு முடியாது நைனா, முடிஞ்சா பின்னூட்டத்திலே பதில் சொல்லுங்க, தெரியவில்லை என்றால் Rs1001 மொய் வெச்சிட்டு என்கிட்டயா கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நையாண்டி நைனா said...

/*Anbu said...
நல்லா இருக்குங்க*/

ரொம்ப நன்றி தம்பி.

நையாண்டி நைனா said...

/*தராசு said...
//ஹேய்.... ஹேய்.... அடிக்கலாம் வரக்கூடாது.... //
என்னிக்காவது மாட்டாமலா போயிருவ, அப்ப இருக்குடி உனக்கு */

இதுக்கெல்லாம் எதுக்கு அண்ணா...
நம்மலே கண்ணி வச்சி பிடிக்கிறீங்க...
ஒரு போன். போக்குவரத்து செலவையும் கொடுத்தா இந்த தம்பி உங்க வீட்டு முன்னாலே..

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//அது தெரியாமே சில சின்ன புள்ளைங்க நம்மலே சீண்டுதுங்க....//
டக்ளஸ்தானே சொல்லறிங்கோ */

ஆமாம்னே யோக்கியன் சொம்பை வேற தூக்கிட்டு போய்ட்டான்.

ஆமா இன்னொரு மேட்டர்... அவனுக்கு குரு நீங்கலாமே அப்படியா....?

நையாண்டி நைனா said...

/*RR said...

//அப்புறம் உங்களுக்கு இப்படி ஏதாவது பாட்டுலே ஏதாவது டவுட்டுன்னா நையாண்டி அண்ணனோட பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க... அடுத்த சதகுப்பைலே சொல்றேன்//
குளிருக்கு விளக்கம் நல்லா இருந்தது நைனா.

இப்போ என்னோட கேள்விக்கு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்.

"பெண்களுக்கு சுருட்டை முடி எங்க அதிகமா இருக்கும்?"

அடுத்த சதகுப்பை வர வரைக்கும் நம்மால பொறுமையா இருக்கு முடியாது நைனா, முடிஞ்சா பின்னூட்டத்திலே பதில் சொல்லுங்க, தெரியவில்லை என்றால் Rs1001 மொய் வெச்சிட்டு என்கிட்டயா கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.*/

முதற்கண் முதல் வருகை மற்றும் பாராட்டிற்கு நன்றி,நன்றி.

அப்புறம் இந்த கேள்வி எல்லாம் நம்ம சிலபஸ் படி ரொம்ப ஜுஜுபி...

பெண்களுக்கு சுருள் சுருளா முடி ஆப்ரிக்காவிலே இருக்கும்.

சரியா...

அடிக்கடி வாங்க நண்பா.

"உழவன்" "Uzhavan" said...

சென்னையில சொல்லாத இடம் கூட சுடுதப்பா :-)

அத்திரி said...

இந்த பதிவை எழுதியது நைனாவா?????????????

நையாண்டி நைனா said...

/*
" உழவன் " " Uzhavan " said...
சென்னையில சொல்லாத இடம் கூட சுடுதப்பா :-)
*/
அப்புடியா....???

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
இந்த பதிவை எழுதியது நைனாவா?????????????*/

என்ன நண்பா.... அம்புட்டு மொக்கையாவா இருக்கு...?
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்