Tuesday, 15 December 2009

அரைமூடி போதையில்கள்ள சரக்கு அங்கே..
நல்ல சரக்கு இங்கே..

ஆழ்ந்த போதையில்
கிடைத்ததொரு போத்தல்
பச்சிளம் பாலகனாய்
ஒரு பாத்திரம் ஏற்கிறேன்
எத்தனை திருகிப் பார்த்தும்
நேர்த்தியாய் திறக்க வரவில்லை
அருகிலிருந்த தண்டோரா வேடமேற்றவர்...
வாந்தி எடுப்பது போல் காட்சி
ஓ..ஆ..இ.. என்று அவர்
ராகம் எடுத்தபோது
உண்மையில் தொலைந்து போனது
போதை


Friday, 11 December 2009

காதல் கிறுக்கர்கள்....எனக்கான
உன்
சமையலை
நீ
என் மூலமாக
சமைத்துக்
கொண்டிருக்கிறாய்..!!


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இன்றேனும்
உன்னை அழகாய் பார்க்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
பயங் காட்ட வருபவளாக
இருக்கிறாய் நீ..!!


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மைக்கும்
ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..

நீ சாந்தமாக வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!


$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $தோழிகளோடு போய் வந்த
ஷாப்பிங்... பில்களை
என்னை நெருங்கி அமர்ந்தவளாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..

எதையுமே கவனிக்காமல்
கூடப் போகும் வட்டியை
கணக்கிட்டபடி இருக்கிறேன்

உனக்கு மிகவும் பிடித்த
உடையொன்றை காட்ட
யோசிக்காமல் "கிளிஞ்சது..!"
என்று சொல்கிறேன்..

"ஹூக்ம் ...." என்றவாறே
கோபம் கொண்டவளாக
என் தாடையை பதம்
பார்த்து 'கொல்கிறாய்'..!!


! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !


எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு நெலையிலே எழுதினது... (மாவு கட்டு போட்டுகிட்டுன்னு யாராவது உண்மைய சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு..) கண்டுகோங்கப்பா..ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))


இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல...

Thursday, 10 December 2009

கேபிள்.IPS. மே/ப. பதிவர்பண்ணையம்

நம்ம 'கேபிள்' அண்ணாத்தைக்கும் மொக்கை படமா பார்த்து...பார்த்து... விமர்சனம் போட்டு போட்டு போர் அடிச்சு போச்சு... அண்ணனுக்கு வீட்லயும் செம டோசு... அந்த வருத்தம் தாங்காம நம்ம தண்டோரா அண்ணன் ஆபீசுக்கு வந்து சரக்கை போட்டுட்டு செம அழுகாச்சி... அதை பார்த்து நம்ம தண்டோரா அண்ணனுக்கு கண்லே இருந்து ரெத்தமே வந்துட்டு...

"கேபிளு... நாம யாருன்னு காட்டனும்டா... நீ பேசாமே போலிசு வேலைக்கு சேர்ந்துறுடா... "

"அண்ணே.. என்னை எல்லாம் அந்த வேலைக்கு சேர்த்துப்பாங்களா... "

"என்ன இப்படி கேட்டுபுட்டே.. அதுக்கான அத்தனை தகுதியும் தெரமையும் உனக்கு இருக்கு... "

"அண்ணே அது சாத்தியமா... "

" எல்லா போலிசுகாரங்களுக்கும் தொப்பை இருக்கு... உனக்கும் இருக்கு... அப்புறம் அந்த பசுபதி மே/ப.ராசக்காபாளையம் படம் பார்த்தியா...? அதுலே ரஞ்சித் எப்படி போலிசு ஆகுறாரு... "

"அப்படிங்குறீங்க... "

"ஆமா.. நாளைக்கே... நீ நம்ம சிட்டி கமிஷனரை போய் பார்த்து சேர்ந்துறு..."

கமிசனர் அலுவலகம்

"யாருப்பா நீயி...."

"நான் போலிஸ் வேலைக்கு சேர வந்திருக்கேன்.. "

"இப்படி திடு திப்புன்னு போலிசு வேலைக்குன்னு வந்திருக்கியே... இப்படி திடீர்னு வேலைக்கு எடுக்க மாட்டோம்.. அதுக்கு பெரிய புராசஸ் இருக்கு"

"ஐயா நீங்க பெரியவங்க..... இப்படில்லாம் தட்டி கழிக்க கூடாது... ஏதாவது கொறை இருந்தா சொல்லுங்க டெவலப் பண்ணிக்கிறேன்... ஆனா வேலை இல்லன்னு மட்டும் சொல்லிராதீங்க.. "

"ஆமா இவ்ளோ தெளிவா பேசுறீங்களே... உங்களை யாரு இங்கே அனுப்பிச்சாங்க... "

"அதுவா அது எங்க அண்ணன் தண்டோரா தான் அனுப்பி வச்சாரு..."

"அவரை நான் பார்க்கணும் அவரை கொஞ்சம் இங்கே கூட்டிட்டு வா..."

" நீங்க மட்டும் வேலை தரேன்னு சொல்லிட்டீங்கன்னா....... எங்க அண்ணன் என்ன? நான் வீரப்பனையே பொடனிலே தட்டி இழுத்துட்டு வந்திருவேன்"

"சரி.. சரி... இப்ப போய் உங்க அண்ணனை வர சொல்லு..."

இதை கேட்ட உடனே அப்படியே நம்ம கேபிள் அண்ணனுக்கு பாட்சா படம் புரொஜக்டர் இல்லாமையே மனசுலே ஒடிச்சு... தண்டோரா அண்ணன் சும்மா சிங்கம் மாதிரி நடக்குற மாதிரியும், அதை பார்த்து போலிசு டரியல் ஆனா மாதிரியும்... ஆனா அங்கே அப்படில்லாம் நடக்கலை...

நம்ம தண்டோரா அண்ணன் 'மாமன் மகள்' படத்துலே வருற கவுண்ட மணி மாதிரி வீட்லே இருந்தே நடக்க ஆரம்பிச்சிட்டார்... இதை பார்த்து கேபிள் அண்ணன் டென்சன் ஆகிட்டாப்ப்லே... சும்மா மானிட்டர் அடிச்சா மானிட்டர் மாதிரி வருவீங்கன்னு பார்த்தா ஜானி வால்கர் அடிச்சா சாணி வாக்கர் மாதிரி வாறீங்களே... நானே என்னோட தெறமைய வச்சி வாங்கிக்கறேன்.. நீங்க ஆணியே புடுங்க வேணாம் அப்படின்னு திட்டி விட்டுட்டு போய்ட்டாப்லே..


மறுபடியும் கமிசனர் அலுவலகம்:

"என்ன உங்க அண்ணனை வர சொல்லலை.. "

"கூப்பிட்டேன் அவரு நெப்போலியன் கூட இப்ப பிசியா இருக்காராம்.."

" ஒ.... நெப்போலியன் எம்.பி. கூடல்லாம் இருப்பாரா.. "

(ஹூ....க்கும்... அவரு நெப்போலியன், எம்.சி, கூட தான் பிசியா இருப்பார்.... ஆகா நாம ஒன்னு நெனச்சா தெய்வம் ஒன்னு நெனைக்கும்னு சொல்வாங்களே... அது இது தானா...) ஆ....மா...ஆமா...இதென்னா... அவரு நெனச்சா எட்டு பி. எம். அவரு காலடிலே...

(ஆகா... பெரிய எடத்து ஆள் போலே இருக்கே... நேக்கா தான் டீல் பண்ணனும்)"சரி போலிசு வேலைக்கு சேரனும்னு வந்திருக்கியே... அவங்களை பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"அப்படி கேளுங்க... கேபிளா கொக்கா... நீங்க இப்படில்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சு தான்.... இதுக்குன்னே... நேத்து நைட்டு புல்லா.. உக்காந்து.. என் கடமை, தங்கபதக்கம், ரகசிய போலீஸ், ரகசிய போலீஸ் நூத்தி பதினஞ்சு, புலன் விசாரணை, நூறாவது நாள், சாமி.. அது பத்தாதுன்னு... ஜாக்கி சான் நடிச்ச போலிசு கதை அதாங்க போலிசு ஸ்டோரி எல்லாம் பார்த்துட்டு... இன்னிக்கு வந்திருக்கேன்"

(அவனா நீயி..? என்று எண்ணியவாறே..) சரி போலிசு வேலைலே சேர்ந்து நீ என்னவெல்லாம் செய்வே..?

"நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுனாலும் செய்யலாம்னு... "

(இடை மறித்த ஆபீசர்)
"நாயகன் படத்துலே வசனம் இருக்குதா... ?"

(அடப்பாவி... நாம படம் பாக்குற ஆளுன்னு மேட்டரை கரெக்டா புடிச்சிட்டான் போலே இருக்கே...) இல்லே எங்க அண்ணன் தண்டோரா சொல்வாரு..

"நல்லா சொன்னாரு... உங்க அண்ணன்...( பார்ட்டி வேற பெரிய எடம்...) ஓகே... தமிழ்நாட்டில், தலை நகரம் எது?"

(ஹூ... ம்... தமிழ் நாட்லே 'தல'ன்னா அது அஜீத்து தான் அவரு எங்கே இருக்காரு...? இங்கே சென்னையிலே தான் இருக்காரு... அப்படின்னா இது தான் அவரு கேட்குறதுக்கு ஆன்சறு...) "சென்னைங்க..."

(அட... சரியா சொல்லிபுட்டாரே...)"சரி.. இது துப்பாக்கி...இதை மாதிரி வேற என்ன இருக்கு?"

(ஹையோ... டக்குன்னு ஞாபகத்திற்கு வர மாட்டேங்குதே... ஹான்.. ஞாபகம் வந்திடுச்சி...) "ரெட்டை குழல் துப்பாக்கி"

(அடப்பாவி... இதையும் சரியா சொல்லிட்டாரே... இவரை எப்படி சமாளிச்சு அனுப்புறது......!!!)"சரி... காந்திய சுட்டு கொன்னது யாரு..?"

"என்னது? காந்திய சுட்டு கொன்னுட்டாங்களா...!!! நானில்லே... நானில்லே.... ஆமா இது எப்ப நடந்துச்சி...?"

"இப்ப நீங்க வீட்டுக்கு போய், நாளைக்கு வந்து கூட சொல்லுங்க... இப்ப போங்க..."

தண்டோரா அண்ணன் அலுவலகம்

(அண்ணன், தண்டோரா அண்ணன் ஆபீஸ்லே உக்காந்து ஜாலியா சீட்டி அடிச்சிகிட்டு இருக்காரு... )

"என்ன.. கேபிளு... சீக்கிரம் வந்துட்டே... போன காரியம் என்னாச்சு.... வேலை கெடச்சுதா... ?"

"வேலை கெடச்சுதாவா.. வேலை கெடச்சு... முதல் கேசும் கெடச்சிட்டு....மொத கேஸே ஒரு கொலை கேசு.. நம்ம காந்திய யாரோ கொன்னுட்டாங்களாம்.. அது யாருன்னு நான்தான் கண்டுபிடிச்சி சொல்லணுமாம்..."


----------------இந்த கேசை கண்டு பிடிக்க அவரு உங்களுக்கு கூட போன் பண்ணலாம் அதனாலே பதிவர்களே.... உசார்... உங்களுக்கும் போன் வந்தாலும் வரலாம்--------------

Wednesday, 9 December 2009

கேட்டேன்...கேட்டேன்...கேட்டேன்...மொக்கை இல்லாத பதிவு கேட்டேன்
மொத்தல் இல்லாத விமர்சனம் கேட்டேன்
நெட்டில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியம் இல்லாத கிசு கிசு கேட்டேன்

உயிரை கிள்ளாத வாதம் கேட்டேன்
ஒற்றை வரியில் பின்னூட்டம் கேட்டேன்
வலிகள் செய்யாத விவாதம் கேட்டேன்
வயதுக்கு சரியான வெப்சைட் கேட்டேன்

கடிகள் இல்லாத "நையாண்டி" கேட்டேன்
இளமை கெடாத "கேபிள்" கேட்டேன்
பறந்து பறந்து "தமிலிஷ்" கேட்டேன்
பாசாங்கு இல்லாத "தமிழ்மணம்" கேட்டேன்

விரலின் நுனியில் பதிவை கேட்டேன்
பதிவின் மத்தியில் மொக்கை கேட்டேன்
தானே விழுந்திடும் ஓட்டை கேட்டேன்
தலையை கோதும் பாராட்டு கேட்டேன்

நிலவில் நடக்க சாலை கேட்டேன்
ஒல்லிக் குயிலியின் நாடகம் கேட்டேன்
நடந்து போக ரோட்டை கேட்டேன்
கிடந்து உருள சரக்கு கேட்டேன்

தொட்டுப்பார்க்க நமீதா கேட்டேன்
எட்டி பிடிக்க சங்கீதா கேட்டேன்
துக்கம் மறக்க சுனைனா கேட்டேன்
பக்கம் பார்க்க பாவனா கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு புல்(full) கேட்டேன்
புல்(full)லுகெல்லாம் சைட்டிஷ் கேட்டேன்
மனிதர்கெல்லாம் ஒரு பானம் கேட்டேன்
பறவையையெல்லாம் பொறித்துக் கேட்டேன்

குறைந்த பட்சம் முட்டை கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று கவுஜை கவுஜை கேட்டேன்


இன்னும் எழுதலாம்... பதிவர்களே... நீங்களும் கொஞ்சம் பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க.. (பி.கு. நைனாவிடம் கைமாத்து கேட்டேன் என்ற வரி ஏற்றுகொள்ள படாது... )

Monday, 7 December 2009

உரையாடல் போட்டிக்கு அல்ல....

Number 1:


Number 2:


Number 3:


Number 4:


Number 5:தயவு செய்து யாரும் காண்டாக வேண்டாம், வேண்டாம், வேண்டாம் என்று விழா கமிட்டியார் சார்பாக கேட்டு கொள்ளபடுகிறார்கள்

Wednesday, 2 December 2009

எனது ஆசான் அண்ணன் தண்டோராவிற்கு சமர்ப்பணம்
நீரும், நீரோக்களும்

மாநிலங்களுக்கு இடையே...
பிரச்சினை
"பிரச்சினை தீர்ப்பது "நீரோ"!

மாநில தலைவர்களிடேயே...
பிரச்சினை
"பிரச்சினை தீர்ப்பது "நீ"ரோ?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மரமும் பெண்ணும்மரமே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்ந்து பட்டவளா?

பெண்ணே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்க்கை பட்டவளா?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சந்தேகம் இல்லாமல்...

உன் தேகம்?
உனக்கு இல்லை!

என் தேகம்?
எனக்கு இல்லை!

உன் தேகம்?
எனக்கும் இல்லை!

என் தேகம்?
உனக்கும் இல்லை

எல்லார் தேகத்திலும்
சந்தேகம் மட்டும்.
சந்தேகமின்றி!!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பொறுப்பு துறப்பு:

நேற்று
அலை பேசியில் ஒரு அலை

பேசியது
ரமேஷ் வைத்யா எனும் தலை

சொல்லியது
உன்னுள் உறங்குது ஒரு கலை

அதனால்
இன்று நடந்தது இந்த கொலை

வேண்டாம்
எனக்கு பீச்சில் ஒரு சிலை


Tuesday, 1 December 2009

வேட்டை ஆரம்பிச்சிடுச்சி.. டோய்...


உடைத்தது எதுவென்று
தெரியாமலும்
உடைத்தது தீர்ந்ததென்று
அறியாமலும்
இன்னமும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்
உருண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னார்கள் என்று சொல்ல
இயல்பாய் ஒரு பதத்தைத் தேடி
போதையின் சுழலில் சிக்கித் தவிக்கிறேன்.
குடிகாரரின் குழந்தைகள் என்கிறார்கள் சிலர்.
அதுவாயின்
குடிகாரனுக்கு உடனடியாய் தேவை
மூனு கிலோ அரிசியும்
முன்னூறு ரூபாயும்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *"எம்.கே.டி".யுடன் வந்தேன்.
தந்தேன்.
முகம் சுளித்துக் கொண்டு வந்தாள்
"சிவாஜி கணேசனை"
தத்துக் கொடுத்தேன்.
சோர்ந்து போய் வந்தாள்.
இவனை விட்டு "ஜெமினியை" பிடியென்றேன்
சிவனே என்று திரும்பினாள்.
முன்னரே
"கமல் ஹாசனை" தந்திருந்தால்
முத்தமிட்டிருக்கலாம்
என்றேன் நண்பனிடம்.
"விஜய்" என்றான் அவன்..
நான் செருப்பணிந்த பெண்ணிடம் பேசியதை
நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி:
"அது என்னடா.. உ... ஊ... ?"
" சரக்கு போட்டு ஊதுரியா...."
"இல்லே.. வேட்டை ஆரம்பிச்சாச்சு... அதான் சங்கு ஊதுறேன்..."
"யாருக்கு..?"
"யாருக்கோ!"

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
"சூரையாடல்" போட்டி ஆரம்பம் ஆகி விட்டது... அதற்க்கு மக்கள் சூளுரைத்து களம் காண புறப்பட்டு விட்டார்கள்... அதனால் நானும் எனது... மேற்கண்ட துதி பாடலுடன் களம் இறங்கியாச்சு....

ஒ... நான் இன்னும் போட்டிய பத்தி சொல்லவே இல்லே பாருங்க... போட்டி ரொம்ப சிம்பிள். இது எங்கே இருந்து சூரையாடப்பட்டதுன்னு கண்டு பிடிச்சி நீங்க மனசுக்குள்ளே வச்சிக்கணும்... பின்னூட்டத்திலே என்னை மட்டும் பாராட்டி பின்னூட்டம் போடணும்... யாரும் ரொம்ப அதிகம் பின்னூட்டம் போட்டிருக்காங்களோ அவங்களுக்கு...... அஸ்க்கு புஸ்க்கு... பரிசு பின்னர் அறிவிக்கப்படும்...


"வேட்டை ஆரம்பிச்சிடுச்சி.. டோய்..."