Tuesday, 30 June 2009

பதிவர் சந்திப்பும் சில கற்பனைகளும்.

படம் எண் : 1


படம் எண் : 2படம் எண் : 3


படம் எண் : 4


படம் எண் : 5


உங்களுக்கு பிடிச்சி இருக்குறதை சொல்லிட்டு போங்க கண்ணுங்களா...

அறிவிப்பு 1: இது நகைச்சுவைக்கு மட்டுமே, சம்பந்தபட்ட பதிவர்கள் கோபம் கொள்ள வேண்டா. இதனை பெரிய மனது பண்ணி நகைச்சுவையை பருகிய பிற பதிவர்களுக்கும் நன்றி.

அறிவிப்பு 2: போட்டோ சுட்டது அண்ணன் ஜாக்கி, அவர் பதிவிலே இருந்து சுட்டது நையாண்டி நைனா. அதனாலே அண்ணன் ஜாக்கிக்கும் நன்றி.

Tuesday, 16 June 2009

அண்ணன் கேபிள் அவர்களுக்கு ஒரு மலர்ச்செண்டு...

இது வரை இந்த வலை உலகத்தை மட்டுமே வளைய வந்த அண்ணன் கேபிள் சங்கர் இப்போது சின்ன திரை உலகை ஒரு கை பார்க்க கிளம்பி விட்டார்.

அண்ணனின் சினிமா விமர்சனம், நிதர்சன கதைகள், அப்பப்ப எட்டி பார்க்கும் சமுதாய பதிவுகள், வாரம் ஒருமுறை வரும் கொத்து பரோட்டா ஆகிய கலை படைப்புகளை பாராட்டி அண்ணன் கேபிள்ஸ் அவர்களுக்கு இந்த மலர் செண்டை பரிசளிக்கிறேன்.பின் குறிப்பு: இந்த மலர்ச்செண்டு ஒரு ரகசியத்தை கொண்டு உள்ளது. இந்த மலர்ச்செண்டு எதனால் செய்யப்பட்டது என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன், பாப்போம்.

Monday, 15 June 2009

ஆட்டுக்கோவணம்... இவனும் இவளும்...(9)!!!

"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார். இவனும் இவளும் தனியாக விடப்பட்டார்கள்.

இவன் இவளைப் பார்த்தான். ஒல்லியாகச் ஆனால் பெரிய பெண்ணாக இருந்தாள். மேக்கப் மட்டுமே இவளைக் கொஞ்சம் சின்ன பெண்ணாக காட்டியது. கூரான நாசி. அழகான கண்கள். உதடுகள் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தன. சின்னதொரு பயமாக இருக்கக் கூடும். இவனுக்கும் வயிற்றை எதோ பண்ணியது. இது போல பெண்ணோடு பேசுவது இவனுக்கும் முதல் தடவை. தயங்கியவனாக இவள் எதிரே நடுங்கியபடி நின்றான்.

இவள் இவனை நிமிர்ந்து பார்த்தாள். இவளுக்கு பிடித்த அரைக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து இருந்தான். நிமிர்ந்து இவன் முகத்தை பார்த்தாள். இவன் இவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். இவன் பேரழகன் இல்லை என்றபோதும் பார்க்க நன்றாக தான் இருந்தான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் அவனது நடுக்கத்தை ரசித்தவளாய்...."நீங்க என்ன செய்றீங்க...., மற்ற விஷயங்கள் எல்லாம் புரோக்கர் சொன்னாரு... என்னப் பத்தியும் அவரு உங்ககிட்டே சொல்லி இருப்பாரு உங்களுக்கு எதுவும் கேட்கனும்னா.... கேளுங்க.." என்று பேச்சை ஆரம்பித்த அவள் தொடர்ந்து....

"இப்ப உங்கள்ட்டே எவ்ளோதான் இருக்கு?" இவள் மெதுவாக கேட்டாள்.

"இல்லைங்க.. என்கிட்டே ரொம்பலாம் பணம் கிடையாது... என்னோடது ஒரு பக்கா மிடில் கிளாஸ் பேமிலி.. நான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கோம்.. எனக்கும் கல்யாணம் ஆக இன்னும் ஒரு ஆறு வருஷம் ஆகும் போலே இருக்கு.... அதான்.... "

"அதுக்கு நான் இப்ப என்ன செய்யனும்னு நெனைகிறீங்க, என்கிட்டே என்ன எதிர்பார்கிறீங்க????"

"கண்டிப்பா.. யாரும் நான் இப்படி கேட்குறதை கேட்டாங்கன்னா சிரிப்பாங்க, ஒதுக்க மாட்டாங்க இருந்தாலும் வாழ்கை என்று வந்த பிறகு நான் கேட்காம இருக்க கூடாது என்ற முடிவுக்கு நான் வந்துட்டேன்"

"ரொம்ப கதைய பேசவேண்டாம், நான் புரிஞ்சிகிட்டேன்.... உங்களுக்கு.. என்ன பிடிச்சிருக்கா?.. என்ன எதிர் பார்க்குறீங்க???" தயங்கியவாறே கேட்டாள்.

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க.. நிஜமாவே உங்களை பிடிச்சு இருக்கு.. குறிப்பா வெளிப்படையா பேசுற உங்க குணம்.. இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா..? ஆனா நான் ஒரு நூத்தம்பது ரூபா குறையா தான் வச்சிருக்கேன்"

"ம்ம்ம்..... ஒக்கே சரி வாங்க, ரெண்டு நாளா ஒரு கிராக்கியும் வரலை, எதோ இப்ப வருகிற காசை வைத்து இன்னும் ரெண்டு நாள் ஓட்டனும் வாங்க பேசி பார்க்கலாம்..."

இவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து புரோக்கர்களிடம் இவளுடைய சம்மதத்தை சொன்னான். இவளுடைய சக தோழிகள் இவள் சம்மதத்தை கேட்டு ஆச்சரியப்பட்டு போனார்கள்.

புரோக்கர்களில் ஒருவர் ஆரம்பித்தார். "அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசிடுவோம்.. எங்க கமிசனை பத்தி ஒண்ணுமே சொல்லலியே...!!!?"

"நீங்க வழக்கமா வாங்குறதை விட கொஞ்சம் குறைவா வாங்கிகோங்க...."

"அப்படி இல்லீங்க.. நீ என்ன நினைக்குரீங்கன்னு சொன்னாதான் நல்லா இருக்கும்.. எப்போதும் நாங்க தான் பேசி விடுவோம்... இப்போ இது புது கதையா இருக்கு..."

"ஒரு ஐம்பது ரூபா வாங்கிகங்க டிப்ஸா, சரக்குக்கு ஒரு ஐம்பது ரூபா வாங்கிகோங்க இடத்திற்கு ஒரு நூத்தம்பது ரூபா வாங்கிக்கங்க"

'இது ரொம்ப கம்மி... இன்னைக்கு சரக்கு விக்குற விலை என்ன? போலிசு மாமூல் என்ன? நாங்க நானூறு ரூபா எதிர் பார்க்கிறோம்.""யோவ் சும்மா ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க.. என்று வெட்டி கதை பேசிகிட்டு இருந்தா வந்த ஒரு கஸ்டமரையும் அனுப்பி வைக்க வேண்டியது தான்.... எதோ வந்த கிராக்கிய அமுக்கி நாலு காசு தேத்த பார்பியா அதை உட்டுட்டு...."

பேரம் வளர்ந்து கொண்டே போய் கடைசியில் பெண்ணுக்கு கொடுப்பதில் ஒரு நூறு ரூபாயை குறைத்து கொண்டும், புரோக்கர்களுக்கு முன்னூத்தி ஐம்பது என்றும் முடிவானது. அப்புறம் "'கச்சேரி' எங்கே வைப்பது" பற்றிய பேச்சு ஆரம்பித்தது. இவனின் ஆசை ஹோட்டல் "நீல மேகத்தில்" என்பதாய் இருந்தது, புரோக்கரோ, அங்கே எல்லாம் முடியாது, இங்கே பக்கத்திலே தார்ப்பா கொட்டாயிலே தான் என்று குறைவாய் கொடுத்ததை குத்தி காட்டினார். அங்கே வைத்து ஒண்ணுமே செய்ய முடியாது என்று வாதிடத் தொடங்கினான் பையன். பேச்சு வளர்ந்து கொண்டே போனது.

"யோவ்... நீ என்ன காசை கொட்டியா கொடுத்திருக்கே... ரொம்ப ஓவரா எதிர்பார்க்காதே.. எங்க புள்ளை முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு புரோக்கர் கிழம்.

பையனின் முகம் சிவந்து போனது. "நீங்க இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் உங்க இவளை கூட்டிட்டு போனும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல... நான் போறேன்..."

புரோக்கர்கள் கமிசனுக்காக அடித்து கொண்டதில் கடைசியில் இவர்களின் ஆசை கருகிப் போனது. இந்தப் பெண் இவனை பாவமாக பார்த்தாள். ஏதும் செய்ய இயலாதவனாக, மறுநாள் பிளாக்கிற்கு ஒரு மேட்டரும் தேறிவிட்டதால்... இவன் நடக்கத் தொடங்கினான். மறுநாளும் பட்டினி கிடப்பது எப்படி என்று இவள் சிந்திக்க தொடங்கினாள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

டிஸ்கி:
இது அண்ணன் கார்த்திகை பாண்டியின் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல. மீறி நம்பினால் கம்பனி பொறுப்பு ஏற்கா...

Thursday, 11 June 2009

நடந்தது என்ன? படமும், பதிவர்களும்.

உலகப்படம் பார்க்க சென்ற நமது பதிவர்கள் என்ன பேசி இருப்பார்கள்? என்ன நினைத்திருப்பார்கள் என்று சிந்தனை செய்ததன் விளைவே இந்த பதிவு.

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு வேண்டி கற்பனை செய்யப்பட்டவை. சம்பந்தபட்ட பதிவர்கள் இதனை கண்டு கொண்டு காண்டு கொள்ளாது, ரசித்து மகிழ்வாராக.


போட்டோ சுட்டது: நையாண்டி நைனா,
{ஜாக்கி அண்ணன்ட்டே இருந்து ((நன்றி ஜாக்கி அண்ணே)}

உங்களுக்கு பிடிச்சி இருக்கிறதை பின்னூட்டத்திலே சொல்லிட்டு போங்க...

பிளீஸ்.

Tuesday, 9 June 2009

இதுக்கு பேரு என்னாது...?நேற்றே நண்பர் டக்குளசு தளத்திலே அறிவித்து இருந்தேன், அவரது கவுஜயின் உண்மை வடிவை இங்கே எனது தளத்திலே தருகிறேன் என்று...
அதன் உண்மை களமும் வடிவும் இது தான். அதனை இங்கே தருவதில் பெருமை கொள்கிறான் உங்கள் அன்பன் நையாண்டி நைனா

இனி கவுஜ


சிறு சிறு சண்டைகள் ப‌ற்பல போட்டு,
கன்னம் வைக்கும் ஏரியா பங்கு போட்டு,
நீதிமன்ற வளாகத்தில் ஒன்பைடூ டீ அடித்து,
பஸ்ஸடாப்பில் பல பாக்கட்டுகளை அடித்து,
ஸ்டேசனில் புரபைல் திருடி கிழித்து,
பெட்டிக்கடை பில்டருமாய்,
டாஸ்மாக் பீருமாய்,
ஜெயில் வளாகத்தில் வெட்டிப்பேச்சுமாய்,
இன்னும் ஞாபகம் உள்ளது நண்பா,என்னுள்.
நீ அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம்.

"ஸ்ஸ்ஸ்யெப்பா..சென்ட்ரா ஏத்திட்டாங்கடா......!"

இது தான் நண்பர் டக்கு சாரி...சாரி....மாண்புமிகு டக்கு அவர்கள் (எந்த நேரத்திலே யாரு எப்படி, என்ன, ஆவாங்கன்னே தெரியலே.... அதுவும் வேற பயபுள்ளை "மதுரக்கார" பயபுள்ள நானு..." என்று பதிவுலே போட்டு பயங்காட்டுது... அதான்... இவ்ளோ மரியாதை ) தன்னோட ஜெயில் செல்லிலே ஒக்காந்து இருக்கும் போது அவரோட நண்பர் அவரை பற்றி சுவத்திலே எழுதுனது. ஒருவேளை இதுக்கு பேருதான் கவுஜயோ..?

பி.கு.1: இதை நம்ம டக்கு எப்படி மாத்தி போட்டுருக்கு என்று பார்க்க வேண்டும் என்றால் இங்கே போய் பாருங்க. இது எதிர் பதிவோ கவுஜயோ அல்ல, உண்மையை சொல்லும் கவுஜ.

பி.கு. 2: ஹலோ... "டக்கு" மேலே கொடுத்திருக்கும் படம் சாம்பிளுக்கு தான்.... நீ உடனே என்னோட செல்லுலே இந்த தங்கையர்(உனக்கு தான் தங்கை, அந்த புள்ளைங்க தான் இப்படி போட சொல்லிச்சுங்க) எல்லாம் இல்லை என்று புரச்சி பண்ண வேண்டாம்....

Monday, 8 June 2009

பதிவு படித்த குரங்குகள் (பகுதி - 2)

Friday, 5 June 2009

பதிவு படித்த குரங்குகள் (பகுதி - 1)

நியுயார்க் நகரத்தில் சில குரங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர் விஞ்ஞானிகள். அவர்களை நமது நாட்டிற்கும் அழைத்து ஆராய்ச்சி செய்ய கோரியது நமது அரசு, அந்த ஆராச்சியின் ஒரு பகுதியாக குரங்குகளுக்கு படிக்க சொல்லி கொடுத்து ஆராய்ந்தது... அந்த வரிசையில் பள்ளி பாடபுத்தகங்களை கொடுத்து பார்த்ததில் அவை புத்தகத்தி திறந்த சில நிமிடங்களிலேயே விடுகின்றன. அதனால் விஞ்ஞானிகள் நமது பதிவர்களின் பதிவை படிக்க வைத்து அதன் எண்ண ஓட்டங்களையும் முகபாவங்களையும் பதிவு செய்தனர். அந்த ஆராச்சியின் முடிவை நமது சிறப்பு நிருபர் எப்படியோ சுட்டு கொண்டு வந்துள்ளார். அவற்றின் சில பகுதிகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

சம்பந்தப்பட்ட பதிவர்கள் கம்பனி மீது காண்டு கொள்ளாது, இது ஆராச்சியின் முடிவு என்று ஏற்று பெரிய மனதுடன் பொறுத்து எங்கள் கம்பனி மேலும் மேலும் வளர ஆதரவு தாருங்கள் என்று கேட்டு கொள்கிறோம்.

Wednesday, 3 June 2009

கல கல கேள்விகளும், லக லக லக பதில்களும்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பல பேரை நீண்ட ஆயுளோடு வச்சிருக்குறது அவங்களோட சந்தோசமான இதயம், அந்த இதயத்தை மகிழ்ச்சியா வச்சிக்குறது சமையல்லே வருகிற ஆருசுவைய விட எழாவது சுவையான இந்த நகைச்சுவை தாங்க.

எங்கப்பாவும், என்னோட அம்மாவும் அவங்க அவங்க வீட்லே மூத்தவங்க. அப்பாவோட சொந்த வழியிலும் சரி, அம்மாவோட சொந்த வழியிலும் சரி எங்கே என்ன பிரச்சினை என்றாலும் பஞ்சாயத்து எங்கவீட்லே தாங்க நடக்கும். அப்போ தெரிஞ்சிகிட்டேங்க மகிழ்ச்சியான வாழ்வின் முக்கியத்துவத்தையும், வழியையும். அதனாலே எல்லாரும் மகிழ்ச்சியாக வாழனும் என்று வேண்ட ஆரம்பிச்சி நானும் என்னலே முடிஞ்ச அளவு மற்றவர்களை சந்தோசமா வச்சிக்கணும் என்று முடிவு எடுத்து கோதாவிலே குதிச்சப்போ உதிச்ச பேரு தான் இது.

ரொம்ப பிடிக்கும்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் பிளாக் எழுத ஆரம்பிச்சப்ப...( சத்தியமா இந்த பதிவு உலகும் வாசகர்களுக்கும் படப்போற துன்பத்தை நெனச்சி....)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னைய விடுங்க சாமி... என்னைவிட பலபேருக்கு பிடிச்சிருக்கு...
அதை போட்டாதான்...
பேங்கிலே பணம் தர்றாங்க...
கம்பனிலே சம்பளம் தாராங்க....


4.பிடித்த மதிய உணவு என்ன?
ஓசியிலே யாரு என்ன வாங்கி கொடுத்தாலும்... ஓசியிலே பினாயிலே கிடைச்சாலும், அதுலையும் ரெண்டு லிட்டர் கூட வாங்கி ஸ்டாக் வைக்கிற தமிழனாச்சே நானு ..... அதுக்காக என்னிக்காவது பதிவர் சந்திப்புக்கு வந்தேம்னா பினாயிலை வாங்கி வச்சி குடிக்க சொல்லிப்புடாதீங்க, நல்ல கோழி பிரியாணியும், பரோட்டா சால்னாவும், மிளகு கறியும் வாங்கி கொடுங்க


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உங்களை மாதிரி ஆளுங்ககிட்டே "நட்பை" உடனே வச்சிக்கணும் என்று ஆசை படுவேன். ஆம். ஆனால் நமீதா, சினேகா மாதிரி ஆளுங்களை நட்பா உடனே "வச்சி"க்கணும் என்றும் ஆசைபடுவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பஸ்ட்டு குளிக்க பிடிக்குமா என்று கேட்டு இருக்கணும். கேள்வி கேட்பவர் இங்கே சிறிது வழுக்கி விட்டார் என்று நினைக்கிறன். அவரை முதலில் தண்ணீரில் இருந்து வெளியே தூக்கி விடுங்கப்பா...

என்னைக் குளி, குளி என்கிறார்களே, இந்தக் குளியாதவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும் காட்டாறிலே குதிக்க முடியுமா, இல்லை குளிக்கத்தான் முடியுமா?. அலையடிக்கும் கடல்கள் இல்லை என் பாதையில், காற்றை புயலாயடிக்கும் தண்ணீர் பம்புகள் நிறைந்திருக்கின்றன. தென்றலைத் தரும் அருவிகளை தீண்டியதில்லை நான். ஆனால் கூவக்கால்வாயை தாண்டியிருக்கிறேன்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அது ஆளுக்கு ஆள் மாறும் நண்பரே...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
ரெண்டுக்குமே பதில்: எதை பற்றியும் கவலைப்படாமல் (கொஞ்சம் கீழ் பகுதியின் பெயரைத்தான் போடவேண்டும்.... இருப்பினும் சபை நாகரிகம் கருதி....) முதுகில் வெயில் அடிக்குற வரை தூங்குறது


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என்னாது......என்னோட சரி பாதியா....?
நெனச்சாலே "சரி பேதி" தான்...
சரி, இருந்தாலும் சமாளிக்கிறேன்.....

.
.
.
.
.
ஹூம்.....
.
.
.
.
ம்ம்ம்...... மொத்தத்திலே பிடிச்சிருக்குற காரணத்தினாலே தானே சரி பீதியா....
சாரி...
சாரி...
சரி பாதியா ஏத்துகிட்டோம்.
(எப்பாடா... தப்பிச்சாச்சு)
(இந்த மாதிரி டெர்ரர் கேள்விகளை இனி வரும் கேள்வி பதில்களில் தவிர்த்தால் தான் ஆட்டத்திற்கு வருவேன்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இதுவும் சூழ்நிலை சூழ்நிலைக்கு, மாறும் நண்பரே...
இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் அல்லவா?


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெள்ளை கலர் சட்டையும், வெளிர் பிரவுன் கலர் பேண்டும்.

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்து சீட்டு பிகரை பார்த்து இன்னிக்கு டிஸ்கோ போலாமான்னு

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ரோஸ்

14.பிடித்த மணம்?
உழைப்பாளியின் வியர்வை மணம். ( ஓவரா இருக்கா....??? சரி சரி.. அடிக்க வராதீங்க...) குழந்தையின் பால், வருமே ஒரு பால்மணம் அதுதாங்க.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அண்ணன் ஜோதி பாரதி
நல்ல ஒரு இன உணர்வாளர், கட்டுரை, கவிதை என்று எதை எழுதினாலும் அருமையாக இன உணர்வுடன் எழுதுவார் அருமை அண்ணன் ஜோதி பாரதி இவரை நான் முதலாவதாக அழைக்கிறேன்.

அடுத்து
நண்பர் ராம் CM
அது இனிசியல் தான் உடனே எந்த ஸ்டேட்டுக்கு என்று கேட்டு அவரை டரியலாக்க வேண்டாம். எனது ஊருக்கு பக்கத்துக்கு ஊர்காரர்.

அடுத்து
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் புதிதாக பாட வந்த பாரதி. புதியவர்களை ஆதரிக்கும் முகமாக...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
எல்லா பதிவும்.... இதை என்ன எழுத கூப்பிட்டு உங்க எல்லாரையும் படுத்தி எடுத்தவர் அருமை நண்பர் . சொல்லரசன்( இப்படி சொன்னா தானே அடுத்த ஆட்டத்திற்கு கூபிடுவாறு என்று நினைத்து சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்றேன் அவரோட சமூக சிந்தனை பிடிக்கும் அதனாலே எல்லா பதிவுகளுமே...)

17. பிடித்த விளையாட்டு?
சதுரங்கம் (இதுலே தான் ராணியை எல்லா பக்கமும் அலைய விட்டுட்டு நாம பேசாம ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கலாம்)


18.கண்ணாடி அணிபவரா?
இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
போரடிக்காத

20.கடைசியாகப் பார்த்த படம்?
99

21.பிடித்த பருவ காலம் எது?
13 to 21

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ரொம்ப பெருமையா இருக்குப்பா....
என்னையும் ஒரு பெரிய புத்திசாலியா நெனைச்சு இந்த கேள்வி கேட்குறீங்க....
ரொம்ப பெருமையா இருக்கு...
இப்படில்லாம் கேள்வி கேட்குற உங்ககிட்டே பல புஸ்தகங்களின் பேரை சொல்லி குழப்பலாம்... அப்படி சொல்றதுக்கு கூட இந்த அப்பாவிக்கு ஒரு பொஸ்தவதொட பேரும் தெரியாதே..... தெரியாதே...


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படில்லாம் மாத்த மாட்டேன், பின்னே இதெல்லாம் மாத்திகிட்டு இருந்தா நான் வேலை வெட்டி இல்லாமை இருக்குறதை எங்க மானேஜர் கண்டு பிடிசுற மாட்டார்???

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மனேஜர் விடும் குறட்டை, பக்கத்துக்கு சீட்டு பெண்ணோடு அவர் போடும் அரட்டை

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இலண்டன் மாநகர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
என்னைய வச்சி காமடி கீமடி பண்ணலையே...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அதுதான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆகி போச்சே அப்புறம் எப்படி என்கிட்டே இருக்கும்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அவன்தானே இந்த வலைத்தளத்தையே நடத்தி கொண்டு உள்ளான்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
எந்த சுற்றுலா தலத்திற்கு போனாலும் அங்குள்ள பெண்களின் இடுப்பையே சுற்றுகிறதே கண்கள்... அப்போ நான் என்ன சொன்னா பொருத்தமா இருக்கும்.

நெல்லை தான் எனக்கு பிடிச்ச சுற்றுலா தலம்


30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஆசை தானே, ஆசை என்றால், கண்ணதாசன் சொல்வானே எப்படி இல்லையென்றால் இறைவன் ஏன் பிறந்தாய் என்று கேட்பான் என்று அப்படி....

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
மனைவியை போட்டு திட்டுறது தாங்க.... ( எவ்வளவு பெரிய வீரன் நான்னு இப்பவாவது புரிஞ்சுகோங்க)

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அந்த அளவுக்கு நமக்கு அறிவு இருக்கானு தெரியலே... இருந்தாலும் சொல்றேன், ஒரு வரி என்ன பல வரி சொல்றேன் கேட்டுகோங்க.
எல்லாரும் நல்லா இருக்க வருமான வரி, சொத்து வரி, விற்பனை வரி, தண்ணீர் வரி போன்ற வரிகளை அரசாங்கத்தை ஏமாற்றாமல் கட்டுங்க போதும்.

Monday, 1 June 2009

வந்தேண்டா பால்காரன்... (மாறுபட்ட வடிவில்...)இதனை சூப்பர் ஸ்டார் நடித்த "அண்ணாமலை" படத்தில் உள்ள "வந்தேண்டா பால்காரன்..." பாட்டு மெட்டில் பாடி அண்ணன் கேபிலாரை குஷி படுத்தவும்


வந்தே.....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்....
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

"புல்"லு கொடுத்தா பதிவ கொடுப்பார்
ஒன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள... பதிவ..தொரக்குதப்பா
ஹாட்ஸ்ப்பாட்டை "மலை"போல நம்பி

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

தன் பரோட்டாவில் ஒரு பாதி A-ஜோக்கா கொடுப்பது
கேபிளோட வேலையப்பா
அவர் கொடுத்தாலும் ஜோக்கோடு விரசத்தை கலப்பது
வாசகரின் மூளையப்பா
தன் பாரோட்டாவில் ஒரு பாதி A-ஜோக்கா கொடுப்பது
கேபிளோட வேலையப்பா
அவர் கொடுத்தாலும் ஜோக்கோடு விரசத்தை கலப்பது
வாசகரின் மூளையப்பா

தடுக்கி விழுந்தா படம்பாரு
பார்த்து வந்தா பதிவாரு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராரு
நீ கேபிள் போல உழைக்கலியே - நீ
டீவிடி வைச்சு பொழைக்கிருயே...

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

அட நான் போட்டா.. மொக்கபதிவு நீ போட்டா.. பெரும் பதிவு
தமிழ்வெளி சொன்னதுங்க
பதிவு இருந்தாலும் தூக்கப்படும், செத்தாலும் நீக்கப்படும்
தமிழ்மணம் சொன்னதுங்க

அன்னல் காந்தி படிச்சதெல்லாம்
சண்டை வளர்க்கும் "சாரு" பதிவுங்க

நையாண்டிநைனா நான் கொடுப்பதெல்லாம்
மண்டை யொடைக்கும் மொக்கைதானுங்க

அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....இந்தப் பாடல் திரை உலகின் முப்பத்திரெண்டாம் குலோத்துங்கன், வலை உலகின் எழுபதாம் புலிகேசி, A-ஜோக்கின் சாம்ராட் என் அண்ணன் திரு.கேபிள்சங்கரின் பாத கமலங்களுக்கு சமர்ப்பணம்.எச்சரிக்கை: என்னோட பதிவுகளை உதாசீன படுத்தும், என்னோட பதிவுகளுக்கு வந்து ஆதரவு தெரிவிக்காத பெரும் பதிவர்களின் புகழை இவ்வாறு பரப்புவேன் என்று சூளுரைக்கிறேன்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உங்களுக்கு என்னையோ என் அண்ணனையோ பிடிக்காட்டி கூட பரவா இல்லை, இந்த பாடல் கூட பிடிக்காட்டியும் பரவா இல்லை ஆனா உங்க கருத்தை சொல்லிட்டு போங்க, இல்லன்னா உங்களுக்கும் இந்த மாதிரி பாட்டு எழுதப்படும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *