Sunday, 15 September 2013

நைனாவும் சலூனும்...

உங்கள் அன்பன் நைனா மரியாதைக்குரிய விஞ்ஞானி....(அட இங்க பார்ரா தமிழ... என்னைய கூட விஞ்ஞானின்னு அர்த்தம் வார மாதிரி சொல்லுது சும்மா சொல்லி பார்த்தேன்....) சரி கதைக்கு வருவோம்... மரியாதைக்குரிய விஞ்ஞானி அப்துல் கலாம் மாதிரி முடிய வளர்த்து, ஆ! 'கலாம்' ஆகலாம்னு.. கனா கண்டுகிட்டுக்கு முடிய வளர்த்துகிட்டு

 "ஏன்மா என்னோட கேர் ஸ்டைல் எப்படி இருக்கு...?" "கேறு இருக்கு... ஸ்டைல் எங்கே?"

"சரி சரி.. ரொம்ப வாராத இருக்குற ஸ்டைலை சொல்லு..."

"எனக்கு... உங்களை மாதிரி டக்குன்னு பொய் சொல்ல வராதுங்க..." (என்னாது வராதா!!!

(வெறுமாவை வச்சிபுட்டு குருமான்னு சொல்லுவியே அதெல்லாம் எதுலம்மா சேர்த்தி... ன்னு மனசுக்குள்ளே நெனச்சிட்டே)
"சரி யோசிச்சாது சொல்லேன் ஒரு பொய்யி..."

"பொய்யி ஏங்க... உண்மையே சொல்றேன்.... எங்க வீட்டுக்கு போனா எங்கப்பா ஆடு வாங்குற செலவு மிச்சம்.."

(அடியேய் ...ஒரு உசுர எத்தனை வாட்டிடி பலி கொடுப்பீங்கன்னு வாய் வரை வந்துச்சி... அடுத்துவார சாப்பாட்டு நேரம் எம் மனசுலே வந்து மறைஞ்சதாலே..)
"ஹி..ஹி... ஹி... அவ்ளோ இளங்குட்டியா தெரியறேனா... ஹி..ஹி.. ஹி"

"அது எப்படிங்க..!!! எவ்ளோ கேவலபடுத்துனாலும்.. பாசிட்டிவா சொல்லி சிரிக்கிறீங்க"

"ஹும்... நீயும் ஒரு கார்பொரேட் கம்பனிலே வேலை செஞ்சி பாரு... பழகிரும்.. இப்ப என்ன தான் செய்யலாங்கிறே???"

"போயி முடிய வெட்டி மனுசனா வாங்க..."

(டேய் அறிவுகெட்ட நைனா... இதுக்கு மேலேயும் வம்பை வளர்க்காதே... அப்புறம் அசிங்கமா போயிரும் ... யாருக்கு? யாருக்கோ????ன்னு..நெனச்சிகிட்டு)

going for a hair cut...

(To be Continued....)

Saturday, 9 April 2011

உங்கள் திறமைக்கு ஒரு சவால்....

அன்பர்களே.. நண்பர்களே...


இந்த தொகுதிகளுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது..சொல்லுங்கள் உங்களுக்கு திறமை இருந்தால்....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Tirunelveli
Tuticorin
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Arni
Athoor
Erode
Kandamangalam (SC)
Kanyakumari
Panamarathupatti
Pernambut (SC)
Sankari (SC)
Tirunelveli
Tuticorin
Uthiramerur
Veerapandi
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சரி யாருமே பதில் சொல்லாத காரணத்தால் நானே சொல்லிவிடுகிறேன்...

அன்று முதல் இன்று வரை, அதாவது 1952 முதல் இன்று வரை ஒரு முறை கூட தப்பாது... ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினரை கொண்டது திருநெல்வேலி தூத்துக்குடி மட்டுமே....மட்டுமே....மட்டுமே....மட்டுமே....மீதி உள்ள தொகுதிகள் 1971 முதல், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த பிறகு, இந்த தொகுதியில் ஜெயிக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்கிறது...

Thursday, 6 January 2011

பேய்க்குட்டி....

எங்கேயும் செல்லாமல்,அண்ணன் செல்வேந்திரனிடம்... சுட்டது.
வழக்கம் போலே இதுவும் எதிர் கவுஜை கிடையாது...


என் குவாட்டர்களும்
நீ வாங்கிய குவாட்டர்களும்
என் குவாட்டர்களாகவே
இருப்பதைக் கவனித்தாயா?!


நண்பேண்டா...!

***

எனக்கான குவாட்டர்
எல்லா இடங்களிலுமிருந்து
வந்து கொண்டேயிருக்கிறது
நானோ
உனக்கான பாட்டலோடு
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்


நண்பேண்டா...!

***

மாடியை கிழித்து
அடியில் இறங்குகிறது
இடியோசை
நீ அடித்து கிழித்து
என்னை சுருக்கும்
தருணங்களை
நினைத்துக்கொள்கிறேன்.


மனைவிடா...!

***

எங்கு அனுப்பி வைத்தாலும்
இதயத்திலே முளைக்கின்ற
பேய்க்குட்டி..
நீ!


காதலிடா...!

***

துணைவி யெனும்...
மதயானை
எதைக் கொண்டு அடக்க
எதைக்கொண்டு மறைக்க?!


நோ காமன்ட்ஸுடா...(ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......)

***

மொழி
கலைத்து ஆடும்
என் தத்துவ
விளையாட்டை
நீ போதையுளறலென்கிறாய்…!


என்னமோ போடா...!
***

(தினமுமல்ல... தீபாவளி போதையில் வெளியானவை)

Monday, 20 December 2010

உலகப்படவிழாவில் பதிவர்களின் சேட்டை(எக்ஸ்க்லூசிவ்)

ஒன்னு...ரெண்டு...
மூணு...நாலு...அஞ்சி...ஆறு...
பஸ்கி: படத்திலே இருக்கும் பெரியவர்கள் என்மீது காண்டு கொள்ள வேணாம். நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தி உள்ளேன் என்று உங்கள் முன்னே பஸ்கி எடுத்து சொல்லி கொள்கிறேன்.


படம் சுட்டது உங்கள் நையாண்டி நைனா. (ஆமா அண்ணன் ஜாக்கி அவர்களின் தளத்திலே இருந்து.. ஹி ஹி ஹி ) அண்ணன் ஜாக்கி அவர்கள் கோபம் கொண்டால், என்னை ரெண்டு போடோ எடுத்து அவரது தளத்திலே போட்டு கொள்ள அனுமதி கொடுக்கிறேன்.

Thursday, 16 December 2010

பயடேட்டா-பதிவுலகம்

பெயர் : பதிவுலகம்

நிஜ பெயர் : மொக்கைராசு.

புனை பெயர்: ஆளுக்கு ஆள் மாறும்

பால் : ஆண்பால் (பதி - ஆண்பால் தானே; பெண்ணிய வாதிகள் இதற்க்கு போட்டியாக சதிஉலகம் உண்டாக்கலாம்)

சமீபத்திய சாதனை : சினிமாவிற்க்கே எனிமா கொடுத்தது.

நீண்ட நாள் சாதனை : கக்கூசில் கிறுக்கியவரை எல்லாம் எழுத்தாளர் ஆக்கியது.

வேதனை : அடிக்கடி நடக்கும் சண்டைகள், அதனால் உடையும் மண்டைகள்.

ரோதனை : ஒரு மொக்கை பதிவை போட்டுட்டு, போன் பண்ணி வேற (படிக்க) சொல்றது.

எரிச்சல் : நாலு ஷாட்டு நடிச்சவன் எல்லாம் முதல்வர் கனவு காணுவது மாதிரி, நாலு மொக்கை போட்டுட்டு சாகித்ய அகாடமிக்கும், பாரத் ரத்னா கமிட்டிக்கும் போன் போட்டு என் பேரு இருக்காண்ணே அப்படின்னு அப்பாவியா கேட்குறது...

வசதி : யாரையாவது நல்லா திட்டி எழுதுறது.., அப்புறமா அதை நீக்கிடறது.

அசதி : சில பதிவுகளை படிக்கும்போது வறது.

வாய்ப்பு: அங்கே கண்டது இங்கே கண்டது என்று எதையாவது எழுதிபுட்டு, மண்டையில் வெட்டிய மின்வெட்டு, குளிக்கும் போது அழுக்கான பின்புறம் என்று எப்படியாவது பேரு வச்சி மற்றவனை மண்ட காய வைக்கறது எவனாவது ரொம்ப கொடைஞ்சா முன்னே-பின்னே மேலே கீழே நவீன பழசுன்னு சொல்லி அவன கிறுக்கா ஆக்கிடறது

காய்ப்பு : அதை இதை எழுதி மிளகு ரசம், தக்காளி ரசம், பாதரசம் அதிரசம் பாயசம் என பல இசங்களை பாடம் எடுத்து காய்ச்சி எடுக்கறது.

ஆப்பு : பதிவு நல்லா இருந்து, கொஞ்சம் பேரு வாங்கிட்டா, நீங்க மக்கள் பிரச்சினை எழுதுறது இல்லேன்னு சொல்லிடறது.

காப்பு : டிஸ்க்கி, முஸ்க்கி, கிஸ்கி, டஸ்கி,பஸ்கி.......... குறிப்பா வாக்கி டாக்கி தவிர எதுனாலும் போட்டு டிக்கியை காப்பாற்றி கொள்றது.

டாப்பு : நம்ம பேரு இல்லாமே நம்ம பதிவு சில பத்திரிகைலே வந்திடறது.

Tuesday, 14 December 2010

அமேரிக்கா, இந்திய தூதர்களை தூர் வாரியது சரியா?

மிக சமீபத்தில் கடந்து சென்ற நாட்களில் அனைவரையும் பதட்டம் கொள் என பதட்டம் கொள்ள வைத்த செய்தி அமெரிக்காவில் நம்ம தூதர்களை தூர்வாரிய செய்தி. ஆமா அதிலே என்ன தப்பு? தப்பே கிடையாது. அது அவன் நாட்டோட பாதுகாப்பு சம்பந்த மான விஷயம் அவன் அப்படி தான் செய்வான்.

அப்படி அவன் சோதனை பண்றது, பிடிக்கலையா... வேண்டாம்ப்பா... உன் சங்காத்தமே வேண்டாம்... இந்த கோட்டை தாண்டி நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கணும். அதை விட்டுட்டு,. "டேய் அமெரிக்கதொரை... என் தூதன் அங்கே வருவான் ஒரு வெள்ளையனுக்கு பொறந்திருந்தா சோதனை பண்ணி பாரு"-ங்க வேண்டியது. அவன் அன்டர்வேரை கழட்டி சோதனை பண்ண பிறகு "ஒத்துக்கறேன், உன் தாய் பத்தினி தான்னு ஒத்துக்கறேன் உனக்கு உன் நாடு தான் முக்கியம் அப்படின்னு ஒத்துக்கறேன் ஆனா ஒரே ஒரு சாரி மட்டும் சொல்லிரு "ன்னு... சொல்லிக்கிட்டு கூவுறது வின்னர் வடிவேலை விட ரொம்ப கேவலமா இருக்கு

முடிந்தா நீங்க இங்கே ஒபமா டவுசரை கழட்டி பாருங்க, அப்புறம் சாவகாசமா ஒரு சாரி சொல்லுங்க.. அந்த துணிவு உங்க கிட்டே இல்லே அப்படின்னா பொத்திகிட்டு இருங்க.

அவன், அவன் நாட்டோட பாதுகாப்பிலே எந்த வித சமரசத்திற்கும் இடம் இல்லே என்று இருக்கிறான். அதை பார்த்து நாம கத்துகிடனுமே ஒழிய கத்திகிட்டு இருக்கபிடாது.

"நாங்க என்ன சும்மாவா கத்துறோம், அவன் டவுசரை அவுத்து பார்த்தது எங்க நாட்டு தூதரை. சாமானிய ஆளை இல்லே. உனக்கு நாட்டு பற்றே இல்லே" அப்படிங்குறீலா...

ஐயா அவன் அங்கே போற வார ஆளுக டவுசரை கழட்டி பாக்குறது, அவனோட கடமை, வேலை, பொறுப்பு... தேச பற்று அவன் நாட்டு பற்றை பார்த்து நாம பெருமிதம் கொள்ளனும்.

அப்புறம் தூதர், தூதர் அப்படின்னு விண்ணுக்கும் மண்ணுக்கும் சேது மாதிரி குதிசிங்கன்னா அவரை ஏன் சோதனை பண்ண கூடாதுன்னு நீங்க சொல்லணும்,

அவரு பெரிய பொறுப்புலே இருக்குற ஆளு... அவரு அந்த மாதிரி தப்பு தண்டா எல்லாம் பண்ண மாட்டாரு அப்படின்னு நீங்க நெனச்சா மட்டும் போதுமா? அவன், அவன் நாட்டுக்குள்ளே அனுப்புற முன்னே அவன் நெனக்கணும். அவன் நெனப்பானா? அவன் நெனைக்குற மாதிரி நாம நடந்திருக்கமா? அப்படின்னு நாம யோசிக்க முற்படனும்.

நாம இது வரைக்கும் என்ன பண்ணி இருக்கோம்? (இதெல்லாம் செஞ்சது கஞ்சிக்கு காவடி தூக்குற குப்பனோ சுப்பனோ செய்தது இல்லிங்க)

1. உண்மையிலேயே மக்களுக்கு என்ன நல்லது அப்படின்னு பார்த்து ஏதாவது செஞ்சி இருக்கோமா? ஒரு திட்டம் போட்டா அதுலே நமக்கு எத்தனை பெர்சண்டு ஒதுக்க முடியும்? இதை தானே பார்த்து இருக்கோம்?

2. சரி ஒரு திட்டம் போட்டாச்சி, அதிலே எதிர் பாரா விதமா ஒரு விபத்து நடந்து போகுது? அதற்கான இழப்பீடு நாம பொறுப்பா வாங்கி கொடுதிருக்கோமா? நாம தான் குற்றவாளியையும் பாதுகாப்பா அனுப்பி வச்சிடுறோம். அனுப்பி வச்சி அதுலேயும் கொஞ்சம் காசு பார்திடுறோம் இல்லே ஆதாயம் பார்திடுறோம

3. சரி அடுத்து பாப்போம், நம்ம நாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்குற ராணுவம் அதுக்காவது ஒழுங்கா நேர்மையா இருக்கோமா? அதுக்கும் பெர்சண்டேசு பார்த்து தரம் இல்லாத ஆயுதங்கள தானே வாங்கி கொடுக்குறோம்.

4. அந்த வீணா போன பக்கி நம்ம நாட்லே பொறந்து தொலச்சதாலே அதை வச்சி சண்டை போட்டு செத்து போய்டுரான்னு வைங்க, அவனை அடக்கம் பண்ண தேச பக்திய வெதைக்க வாங்குரோமே சவப்பொட்டி, அதுலயும் தானே kai வைக்குறோம்.

5.சரி இந்த எழவு பிரச்சினை எல்லாம் போகட்டும் அவன் கூண்டோடு கைலாசம் போன பிறகு, அவன் குடும்பத்தையாவது நாம ஒழுங்கா கவனிச்சது உண்டா? செத்து போன அவன் பொணத்த காட்டி எல்லா அப்ப்ரூவலும் வாங்கி வீட்டை கட்டி யாரு போய் இருக்கா? நல்ல வாயனுக்கு பாலூத்தி வாக்கரிசி போட்டு நாரவாயனுக்கு தானே ஜவ்வரிசி... பால்...பாயாசம் கொடுக்குறோம்.இதுலே ரொம்ப சுத்தம், செஞ்ச கபோதிங்க எல்லாம் யாருன்னு பார்த்து அந்த எழவு வீட்டுக்காரன் தலைவனா தானே இருக்கான்.

6.அட போங்க சார்... ஒவ்வொன்னா டைப் பண்ண பண்ண பிளட் பிரசர் தான் எகிறுது... அந்த கருமம் பிடிச்ச பிளட் பிரசறை கொறைக்கலாம்னு பார்த்தா...! அவன் நாட்லே தடை பண்ண எத்தனை கெமிக்கல், மருந்து, உரம் என்ற பெயரில் நம்ம நாடலே தங்கு தடை இன்றி விற்பனை செய்து கிட்டு இருக்கோம் என்ற எண்ணம் வருது. இதை எல்லாம் அவனும் தானே தின்னு அங்கே கொண்டு போய் பரப்புவான் அதனாலே தான் அவன் அப்படி சோதனை பண்றான்.

இப்படி சொந்த நாட்டு மக்களையே மதிக்காதவன்களா அங்கே போய் அவன் நாட்டு மக்களை மதிக்க போறாங்க அதனாலே தான் அவன் அப்படி சோதனை பண்றான்.

ஆகையினாலே அமெரிக்கா அந்த மாதிரி சோதனை செய்வது தவறு இல்லே தவறு இல்லே... என்று சொல்கிறேன்.

இதற்க்கு மறுப்பு தெரிவிக்க, என் மீது கல் எறிய வாருங்கள்,

உண்மையிலேயே சுத்தமானவர்கள் வாருங்கள்.

எந்த சூழ்நிலையிலும் தன் நிலை தாழாதவர்கள் வாருங்கள்,

அகத்தாலும் புறத்தாலும் நம் மக்களுக்கு நன்மை செய்தவர்கள் வாருங்கள்

என் மீது எறிய, உங்கள் பொற்கரங்களுக்கு நானே கல்லெடுத்து தருகிறேன்.

Monday, 13 December 2010

போதை ஏற்றியும் ஏற்றாமலும்...இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு.. அல்ல... அல்ல... அல்ல...


***************

ஒவ்வொரு முறையும்
போதையேற்றி தோற்கும்போது
இதுவேயென்
கடைசி கட்டிங்காய்
இருக்க வேண்டுமென
பிரார்த்தித்துக் கொள்கிறேன்
காலக்கொடுமைக்கு
என் பிரார்த்தனைகளும்
தோற்றே போகின்றன


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
நீ
நான்
ன்நா
நீ
நான் நீ
நீ நான்
எப்படிப் பார்த்தாலும்
பாருக்கு
இரண்டு பேர்
தேவையாய் இருக்கிறது


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
நேற்றோரு டாஸ்மாக்கில் இதைத்தான்
குடித்துக்கொண்டிருந்தேன்
இன்று இந்த டாஸ்மாக்கில் இதைக்
குடித்துக்கொண்டிருக்கிறேன்
இது தீர்ந்தபின்
நாளை வேறோருடாஸ்மாக்கில்
நான் இதை குடிக்கக் கூடும்
டாஸ்மாக் மாறிக் கொண்டிருக்கிறதே
தவிர
மாறாமலே இருக்கிறதென் போதை

! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !


எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு நெலையிலே எழுதினது... (மாவு கட்டு போட்டுகிட்டுன்னு யாராவது உண்மைய சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு..) கண்டுகோங்கப்பா..ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))