Friday, 31 July 2009

அப்பாவி ஆண்களின் அலறல்...நமது நண்பர் லோகு உருகி உருகி காதல் கவிதை எழுதி கொண்டிருக்கிறார். அவர் வெகு விரைவில் இதோ உங்களுக்காக நான் படைத்த இந்த கவிதைகளையும் எழுதுவார். அவருக்கு இந்த "காதல்?" கவிதைகளை சமர்பிக்கிறேன்.

இது நண்பரின் கவுஜைக்கு, எதிர் கவிதை அல்ல. அல்ல.. அல்ல...


ராட்சசிகள்
எப்போதும்
குரூரமாகவே மட்டும்
வருவதில்லை..

நீ அன்று மணவறையில்.....


*********


தினமும் நீ
என்ன கொண்டு
அடிக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..


அன்றைய 'சேதாரத்தை'தெரிந்து கொள்ள..


***********

நீ 'கன்னம்' வைத்து
பேசும் பேச்சுக்காகவே,
ஒரு நாளில்
மணிக்கணக்கில் இயங்குகிறது


கடை வீதி 'கனகா ஒயின்ஸ்(bar attached)'..


********

பலருக்கு பல் வலியால்
வாய் இளிக்கும்..
இளிச்ச வாயே மருமகனாய் வந்தது


உன் பெற்றோருக்குத்தான்..


********

எடுத்து வீசிய
பின் தான் பிய்ந்தது,
நீ செய்து வைத்திருந்த

பேப்பர் ரோஸ்ட்டு..


********

நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சந்தையை தேர்வு
செய்து கொள்கிறது


'கோயில் யானை'..


*******

நீ 'வாங்க' என்று
இளித்துக் கொண்டு
வரவேற்கும் அழகுக்காகவே
உன் வீட்டிலிருந்து
தினமும் யாரவது வர
வேண்டிக் கொள்கிறோம்


நானும் உன் கைனடிக் ஹோண்டாவும்..


*******

ஊரிலுள்ள பைனான்சியர்கள்
எல்லாம் நம் வாசலில்..
உண்மையை சொல்
போன வாரம்


ஷாப்பிங் போய் இருந்தாயா???


********

எல்லா காட்டு யானைகளும்,
ஊருக்கு உள்ளேயே சுற்றுகின்றன..
உனக்கும்
முதுமலை தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்??


********

யார் கண்டார்?
உன் வீடு
தெற்கில் இருப்பதால் தான்
சுடுகாடா? ஊருக்கு தெற்க்கே
என்று சொல்கிறார்களோ என்னவோ??


*********

காதலுடன்????


Thursday, 30 July 2009

முடியுமா உங்களால்...?இது வரை மொக்கை போட்டு வந்த நான், இன்று உங்களுக்கு ஒரு அருமையான பொழுது போக்கு விளையாட்டு கொண்டு வந்துள்ளேன்.

சில ஆங்கில சொற்களின் வார்த்தைகள், நமது பதிவை படிச்சி பித்தம் தலைக்கு ஏறி தன்னிடத்தை விட்டு கன்னாபின்னா என்று சிதறி கிடக்கிறது. அதனை சரியாக அமைத்து அந்த வார்த்தையை கண்டு பிடியுங்கள்.

உதாரணமாக:
O N M T M E M U என்று இருப்பதை, MOMENTUM என்று அமைக்கலாம்

சரி ஆட்டத்திற்கு போகலாமா...

நீங்கள் சரியாய் அமைக்கவேண்டிய பட்டியல் கீழே படத்திலே கொடுக்கப்பட்டுள்ளது...(உங்களால் சரியாக படத்தை காண முடியவில்லை என்றால், நீங்க உங்கள் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டு படிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, போட்டிருக்கிறேன், இருந்தும் பிரவுசர் லோடு பண்ணவில்லை என்றால் பின்னூட்டத்திலே சொல்லுங்கள் மாற்று ஏற்பாடு பண்ணுகிறேன்)நீங்கள் தொடங்கலாம், யார் எவ்வளவு வார்த்தைகளை சரியாக கண்டுபிடிக்கிறார்கள் என்று பாப்போம்.


Wednesday, 29 July 2009

என்னவென்று சொல்ல...!!!மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி
மிக அருமையான கவிதை,
நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்
போன்ற எதையும் எதிர்பாராமல்
மொக்கை கவுஜைக்கு
போட்டேன் ஒரு பிள்ளையார் சுழி....!


பின் குறிப்பு:
இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். நீங்க பின்னூட்டம் இட ரொம்ப கஷ்ட படவேண்டாம்.எனது கவிதையையே பயன்படுத்தி கொள்ளலாம்.

போன கவிதைக்கு, நான் கவிதையில் குறிப்பிட்டு உள்ள வரிகளை யாருமே சுட்டி காட்டி பாராட்டவில்லை (ஒரு கவிஞனின் 'ரியல்' தாகம்)...


முக்கிய குறிப்பு:
அதெல்லாம் எதிர்பார்கலைன்னு போட்டிருக்குறது, கவிதையின் அழகிற்கு தான்... கவிதைக்கு பொய் அழகுன்னு உங்களுக்கு தெரியாதது இல்லே. அதனாலே, அதனாலே... இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு? நீங்களே பின்னூட்டத்திலே சொல்லிட்டு போங்க.

Tuesday, 28 July 2009

கவிதை மணம்.ஒருநாள் இருப்பான்,
மறுநாள் இருக்கமாட்டான்,
ஒருநாள் ஒருவன் பெரியவன்,
மறுநாள் அவனே சிறியவன்,
ஒருநாள் ஒருவன் சிறியவன்,
மறுநாள் அவனே பெரியவன்,
இதென்ன தத்துவம்?
வாழ்க்கை தத்துவம்.
அட...
நம்ம தமிழ்மண
மறுமொழியாளர்கள் தான்..!!!


பின் குறிப்பு:
1: இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.

2: நானும் கவிதை எழுத போறேன் என்று சொன்னதற்கு விழுந்து விழுந்து சிரித்தார், ஒரு "பிராபல" பதிவர். அவருக்கு சவால் விட இந்த கவிதையை எழுதினேன். எது எப்படியோ உங்க கருத்தை சொல்லிட்டு போங்க. நீங்க அவரு கட்சி என்றால் கமண்ட் சொல்லிட்டு போங்க, என்னோட கட்சி என்றால் பின்னூட்டம் போட்டுட்டு போங்க.

Monday, 27 July 2009

மூலையோர இருக்கை...
வழக்கம் போலே இதுவும் ஒரு மொக்கை கவுஜ தான்.

நல்ல சரக்கு அங்கே.
கள்ள சரக்கு இங்கே.
வழக்கமான சரக்கடிக்கும் சடங்கு,
அடித்துப் பிடித்தாவது
அமர்ந்து விடுகிறேன்
அதே மூலையோர இருக்கையில்,

ஒரு ரெண்டு மணிநேர சடங்கில்
ஓடிவந்து டேபிள் துடைக்கும்
இரட்டைச் சிறுவர்கள்,

தன் தாத்தாவோடு அமர்ந்து
5000-ஐ பதம் பார்க்கும் இளைஞன்,

பார்த்ததும் தலையாட்டும்
சிகரட்டு கடை பெரியவர் என

என்னின் வருகையை
சினேகத்தோடு எதிர் நோக்கும்
அவர்களைப் பாராது
ரெண்டு "பின்ட்" அதிகம் போய் விடுகிறது
அவ்விருக்கையை
தவற விடும் நாட்களில் ...!


சிகரட்டு மட்டும் உண்டு தீப்பெட்டி இல்லாத மாதிரி, வாட்டர் மட்டும் உண்டு குவாட்டர் இல்லாத மாதிரி, என்னடா...? பதிவு போட ஒண்ணுமே இல்லையே என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கும் போது கைகொடுத்த தெய்வம் அண்ணன் நாடோடி இலக்கியனுக்கு நன்றிகள்.

Friday, 24 July 2009

ஐயோ... நானும் சரக்கடிக்கணும்..."ஆண்டவனை.., மாநேஜரை.., பொண்டாட்டியை..." என நேரத்திற்கேற்றாற் போல திட்டி தன் பேச்சு, தன் காதிற்கே மருந்துக்குக் கூட விழுந்து விடக் கூடாது என நினைக்கும் ஒருவன்.

"ச்சும்மா, டைம்பாஸ் மச்சி போதை தெளிஞ்சவுடனே நானே எந்திச்சி போயிருவேன்" எனக் கூறும் ஒருவன்.

அவளின் முகம் பாராமல் அவளை ஏக வசனத்தில் "காதல் கோட்டை" பாணியில் தாலி அறுக்கும் ஒருவன்.

ஏற்கனவே ரெண்டு பீரு உள்ளே போய் இருப்பது தெரிந்தும் அடுத்து ஹாட்டுக்கு அடி போடும் மற்றொருவன்.

இப்பிடி தினுசு தினுசாய் குடிக்கும் எத்தனையோ பேரை நான் பாத்துருக்கேன். நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.

மேற்சொன்ன அனைத்தும்,"அவன்"களன்றி "அவள்"களுக்கும் பொருந்தும் என்பதில் 'சிப்ஸ'ளவும் ஐயம் வேண்டாம். "சரக்கு" இந்த வார்த்தை, இன்றைய‌ இளைஞர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் ஒரு லாகிரி வஸ்து. சரி, இப்ப எதுக்கு இந்த மேட்டர்ன்னு நீங்க கேக்கலாம்.உஹூம்..கேக்கனும். அப்பத்தான் நான் குடிச்சிபுட்டு உளர முடியும்.

இவ்வளவு பாத்ததுனால எனக்கு போதைன்னா என்ன..? நம்மளும் சரக்கடிக்கலாமா..? நமக்கும் வாங்கி கொடுக்க ஒரு இளிச்சவாயன் சிக்குவானா?..? அப்டிங்கிற சந்தேகம் வந்துச்சு. உடனே நான் இங்க முதல்ல ஒருத்தன சொல்லிருக்கிறேனே அவன்கிட்ட கேட்டேன். அவன் சொன்னான். "மாப்ள, சரக்கு புனிதமான‌து"ன்னான்."ஒருவனுக்கு ஒரு பிராண்டுன்னு இருக்கனும்டா. அதுதான் பண்பாடு.அப்பத்தான்டா சொர்க்கம், ஒடம்புக்கும் நல்லது.சும்மா டைம்பாஸ் பண்ணக் கூடாதுடா"ன்னான்.

சரி,எல்லாத்தரப்பு வாதத்தையும் கேக்கனுமா இல்லையா..? ன்னு எனக்குள்ள இருந்த பஞ்சாயாத்துப் பெருசு சொல்ல, இரண்டாவது ஆள்கிட்ட கேட்டேன். அவன்,"மச்சி, வாழ்க்கையில எல்லாமே ஒரு எதிர்பார்ப்புத்தானடா..!, ஒவ்வொரு சரக்கும் ஒவ்வொரு மாதிரி, நாம எதிர்பாக்குறது போதைன்னாலும் அதை வெரைட்டியா பார்க்கணும்டா, போதை தெளிஞ்ச பிறகு விட்டுட்டு போயிரனும்"டா. அப்பிடின்னு சொன்னான். நான் உடனே முதல் ஆளு சொன்ன‌ "ஒருவனுக்கு ஒரு பிராண்டு" மேட்டர எடுத்து விட்டேன்.

உடனே நம்மாளு. "அப்போ, என்ன மசு***டா உலகத்திலே இத்தனை பிராண்டு வகைங்க?"ன்னான். "லீகல் பிராண்டு காணாதுன்னு கள்ளச் சாராய ஊரல் வேறை"ன்னு அடுத்தடுத்து போட்டுத் தாக்கினான். எனக்கு அப்பவே கண்ணக் கட்ட ஆரம்பிச்சுருச்சு. ரைட்டு. இது வேற எங்கயோ போகுது. நம்ம ஓடிருவோம்ன்னுட்டு,மூணாவது ஆள்கிட்ட போயி அதே கேள்விய கேட்டேன்.

அவன் சொன்னான், "மாப்ள, சரக்குக்கு சாதி, மத பேதமெல்லாம் தெரியாது. யாரடிச்சாலும் போதை தன்னாலே ஏறும்டா. ஆனா மோந்து பார்த்த உடனே போதை வரக்ககூடாதுன்னான்". அவனும் முதல் ஆள் சொன்ன மாதிரியேதான் கிட்டத்தட்ட முடிச்சான். சரின்னுட்டு நாலாவது ஆள்கிட்ட போயி கேட்டா!!!, "மச்சி, அவன் எப்பிடி சரக்கடிக்கிறான்னு எனக்கு தெரியாதுடா ஆனா நான் மூடியை தொறந்த உடனே வாசம் பட்டே போதையாயி இருக்கேன்" அப்டின்னான்.

இந்த நாலு பேர்க்கிட்டயும் கேட்டுட்டு மண்டை காய்ஞ்சு போயி, "நம்ம இனிமேல் எவன்கிட்டயும் ஓசிலே சரக்கடிக்க மூச்சை போடக்கூடாது, சொந்த காசை எடுத்து போய் தாண்டா சரக்கு அடிக்கணும்டா டக்லஸ்ஸு..."ன்னு முடிவு பண்ணின கரெக்டா 2 நிமிஷத்துல "நீ எந்த பாருக்கு போய் எந்த சரக்கு வாங்கி எப்படி அடிச்சி போதை ஏத்திகிட்டு வந்தாலும் நீ அவனுங்களை பழி வாங்க முடியாதுடா @#$%^%^!.... அவனுங்க அதுக்குள்ளே மட்டையாயிருவானுங்க"ன்னு எனக்குள்ள இருந்த "சந்தானம்" சொல்லி என்னை டரியலாக்கினான்.

பின் குறிப்பு:
இந்த கதையில் வரும் "டக்லஸ்" நமது சக பிரபல பதிவர் "டக்ளஸ்..." அல்ல. மீறி யாரேனும் சிண்டு முடியும் வேலை செய்தால் அதற்கு என் கதாநாயகன் "டக்லஸ்ஸொ", நானோ பொறுப்பேற்க மாட்டோம் என்று இங்கேயே அறிவிக்கிறேன்.

முக்கிய அறிவிப்பு, இது நண்பர் ராஜு...வின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல.

Thursday, 23 July 2009

பிரபல பதிவர் டக்ளசுக்கு ஒரு மாடல்.அன்பு (இது நமது சகபதிவர் 'அன்பை'விளித்து அல்ல )டக்ளசு அவர்களே...

மாசற்ற நமது தமிழ் தாய் பெற்றெடுத்த மாணிக்கமே, ஏன் இந்த திடீர் முடிவு? எந்த முடிவா ? இனி வலையில் எழுதுவதில்லை என்று ஒரு முடிவு எடுத்தாயே அதை தான் சொல்கிறேன். பொது கக்கூசு சுவற்றிலும், வீதி ஓர சகிலா பட போஸ்டரிலும் எழுதி வந்த சக பதிவர்கள் மத்தியில் நீ மட்டுமே வலையில் எழுதும் திடம் பெற்று இருந்தாய், திறன் பெற்று இருந்தாய், அப்படி இருந்த நீ, அந்த வளம் பெற்ற நீ, அந்த வரம் பெற்ற நீ அந்த 'தில்' (வேற்று மொழி உபயோகத்திற்கு மன்னிக்க..., யோவ் டக்கு நீ ஏன்யா எந்திருச்சு நிக்க, அய்யோ...டக்கு அது "மன்னிக்க".) பெற்று இருந்த நீ திடீரென இப்படி ஒரு முடிவெடுத்தாயே ஏன்.???? நீ வலையில் எழுத வந்ததால், மீனவர்களுக்கு புது வாழ்வு கிடைத்தது, அவர்களின் "வலை"க்கு வேலை வந்தது. ஆனால் அந்தோ.... பரிதாபம் இப்போதோ அவர்கள் கவனிப்பாறின்றி நடு வீதியில், மீண்டும் மன்னிக்க நடுக்கடலில். ஆம் துன்பமெனும் கடலில்.நிற்க. (அய்யோ டக்கு... இதுக்கும் ஏன்யா எந்திச்சி எந்திச்சி நிக்க? லெட்டர் எழுதுனா இப்படிலாம் போடணும், இதெல்லாம் தெரியாமே நீயெல்லாம் பதிவெழுத வந்துட்டே...)

நீங்கள் இதுவரை ஆற்றிய பணிகளால் விளைந்ததை நீங்கள் மறைக்கலாம் ஆனால் நாங்கள் மறக்க முடியுமா? அப்படி செய்தால் நாங்கள் தமிழர்களா?

நீங்கள் பதிவெழுத வந்த பிறகுதான் காலைக்கதிரவனும் காலம்பர எழுந்து வேலைக்கு வருகிறான்.

நீங்கள் பதிவெழுத வந்த பிறகுதான் பசுவிலே இருந்தே பசும்பால் வந்தது... குறிப்பாக நீங்கள் ஒரு தத்துவமும் சொன்னீர்களே... "பசு பல நிறம், பால் ஒரே நிறம்" என்று அட...அட.... என்ன ஒரு உண்மை !!!, என்ன ஒரு தத்துவம் !!!. இது வரலாறு குறித்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, அது விட்டது.., நாங்கள் குறித்து கொண்டோம்.

பல நிறத்தில் இருக்கிற பசு ஒரே நிறத்தில் பால் கொடுக்கும்போது, ஒரே நிறத்தில் இருக்கிற எருமை ஏன் பல நிறத்தில் பால் கொடுக்கவில்லை என்று நீங்கள் கொந்தளித்து ஒரு பதிவு எழுதி இருந்தீர்களே...!!! அதற்கு நமது விஞ்ஞானிகள் இன்னும் மண்டையை உடைத்து கொண்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றனவே....

நீங்க பதிவு எழுதி மூட்டிய உற்சாகத்தில் தான் ஒபாமாவே ஒய்யாரமாய் ஜனாதிபதி ஒபாமா என்றானார்.


இதெல்லாம் உங்க பெருமைகளில் ஒரு சிறு துளி, இதனை இங்கே இந்த சூழ்நிலையிலும் நான் சொல்லவில்லை என்றால் தமிழ் கூறும் "குட் வோல்ட்" என்னை எஸ்குஸ் பண்ணாது.

நீங்கள் இன்னும் பல சாதனைகளை செய்யவேண்டும்,

ராஜ பக்சேவை ராப்பிச்சையாக்க வேண்டும்,
ஒசாமாவை பேசாமே ஆக்க வேண்டும்,
லஞ்சபேயை மை தடவி பாட்டிலிலே அடைக்க வேண்டும்
----------------......................

என்று இன்னும் பல காரியங்களை செய்து
எதிரிகளுக்கு எனிமா கொடுக்கவேண்டும் நீங்கள்

ஆகவே... நீங்கள் மீண்டும் "வலை"யில் எழுத வரவேண்டும், "வலை"யில் எழுத வரவேண்டும், "வலை"யில் எழுத வரவேண்டும்.


சற்று முன் கிடைத்த செய்தி: நீங்கள் எழுதுவதை நிறுத்தியதால், ஒரு தொண்டர் ஒரு வினோத போராட்டத்தை ஆரம்பித்து உள்ளார்.எங்களுக்கா இல்லாவிட்டாலும், இந்த வினோத போராட்டத்தை முடித்து வைக்கவேண்டியாவது தாங்கள் வரவேண்டும்.பின்குறிப்பு: தலைப்பில் இருப்பது எழுத்து பிழை அல்ல. ஒருவேளை நண்பர் வலை உலகை விட்டு போனால் இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று வைத்திருந்த ஒரு மாடல். தறுதலை போகாமே உக்காந்து மொக்கை போட்டுகிட்டே இருக்கே. அதனாலே பொறுமை இல்லாம இந்த மாடலை, அதாங்க மடலை போஸ்ட் பண்ணிட்டேன்.


Wednesday, 22 July 2009

இயற்கை
நல்ல சரக்கு இங்கே
கள்ள சரக்கு இங்கே.


ஒரு குவாட்டர்
ஒன்றை உடைத்தேன்,
தண்ணீர் விட்டேன்....

சரக்கானது
உணவானது
போதையானது
மயக்கமானது...

நான் அடித்த
தண்ணி, ஒன்னுக்கு
தண்ணீரானது........


( நண்பர்களின் ஆலோசையின்படி ஒன்று ஐ ஒன்னுக்காய் மாற்றிவிட்டேன்)

நண்பர் ஆ.ஞானசேகரன் அவர்களே காண்டு வேண்டாம், நன்றி.
...

Tuesday, 21 July 2009

கும்பர்... சினிமாப்பாடல்கள்... பேதையழகு... சந்தம்...டி.ராஜேந்தர் என்ற பெயரை கேட்டதும் நமது குழந்தைகளின் முகமோரம் ஒரு திகிலும்... அவரின் தாடியும் அதை கோதிவிட்டுக்கொண்டே வேலை மெனக்கட்டுன்னு அவர் "தட்டி பார்த்த கொட்டாங் கச்சி..." என்று அவர் சிலுப்பும் வார்த்தையும் நமது நினைவில் அரை நொடி "டெர்ரராக" வந்து போய்விடுகிறது. என்றாலும் அவரின் கற்பனை வளம் (தமிழ் எம்.ஏ)மிகவும் ஆழமானது.

வாடா என் மச்சி..
வாழைக்காய் பச்சி...


என்று ரயில் பயணங்களில் அவரின் விருந்தோம்பல் பண்பு புருவமுயர்த்த வைத்தது அனைவரையும்..

ஹே டண்டனக்க டனக்கு னக்க
ஹே டண்டனக்க டனக்கு னக்க


என்று அடுத்தடுத்த வரிகளில் ரைமிங்கோடான சந்தங்கள் மிக மிக அற்புதமாய் இருக்கும்.அதுவும் இன்றைய நாக்க முக்க பாடலுக்கான அட்சாரம் அவர் அன்றே போட்டது, பாடியது, ரசிக்கப்பட்டது.

“அன்ன பூர்ணாவா.... ஆர்ய பவனா....’ என அவ்வப்பொழுது பிற ஹோட்டல்களை ஒப்பிட்டு ஒப்பிட்டு,ஒரு கணவனின் பார்வையில், தானே கஷ்டப்பட்டு உண்டாலும் மனைவியின் சமையலை வர்ணிப்பது. இது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, ஒவ்வொரு இல்லங்களிலும்.

"மில்லி லிட்டருக்கு கொண்டாட்டம் என்னைப் பார்க்கையிலே..."என குடிகாரர்கள் கொளரி, நாக்கை, உதட்டை கடித்து பாடும் பொழுது மனைவியர் வெட்கப்பட்டதை விட "மில்லி லிட்டர்" வெட்கப்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்திய வரிகள்..

"பாளையங்கோட்டை களிதானோ, கூழ் தானோ, புழல் ஜெயில் வார்டனும் நீதானோ.. என ஒரு பாதிக்கப்பட்ட பாடலாசிரியரின் சாரி.. சாரி.. மன்னிக்க, கணவனின் கற்பனையில் அனைத்து ஜெயிலையும் மனைவியுடன் ஒப்பிடப்பட்ட பாடலும் அந்த வகையே.

நவீன வாழ்க்கைக்கு ஏற்ப.. இந்த ஒப்பிடல் மாறிக்கொண்டே வந்து..

ஓல்ட்மாங் சுவை போல் புளிப்பவள் இவளா
ஓல்ட்காஸ்க் கலரில் முத்துன மகளா


என ஒப்பீடுகள் காலத்தோடு ஒத்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.

இது இன்று நேற்றல்ல..சங்க காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட பழக்கமாகவே படுகிறது.

இதோ ஒரு பேதையின் "அழகை" கும்பரின் வரிகள் சொல்லும் இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று.

விளக்கம்.

பெருத்த இடையைக் கண்ட வஞ்சி நாட்டுக் கொடியானது நாம் அவள் இடை பற்றும் அளவிற்கு கூட இல்லையே என வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, அட... இதை கூட விட்டு தள்ளுங்க அவள் நடை கண்டு களிறு என்று கூறப்படும் யானையும் மிரள, அவள் அடிக்கு, துறவிலே துவைக்கும் போது விழும் அடியே மென்மையானது, மேன்மையானது என எண்ணி இடுப்பு கச்சையும் நீரிலே மறைய, உழைத்து களைத்து வரும் நம்ம பயலுக்கு கஞ்சுடன் சில சொல்லடியையும் கொடுக்கும் பெண் நீராடினாள்.

பாடலின் சிறப்பு

பெண் நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்ற போதிலும், தண்ணீரில் அரசியலை கலந்து நமக்கு தண்ணீர் தராது வஞ்சிக்கும் பக்கத்துக்கு நாட்டு கொடி நம் பெண்களின் இடையை விட சிறிதானது என்றும் எள்ளி நகையாடுவது, களிரையும் விரட்டும் தளிர் எங்கள் பெண்கள் என்பது, கச்சையே மிரளும் அடி கொடுத்தாலும், தான் கொண்ட கணவனுக்கு கஞ்சி பரிமாறும் வேளையில் மட்டுமே சொல்லடி மட்டுமே கொடுப்பாள் என்று முடித்திருப்பது. கும்பரின் கற்பனையாக மட்டும் இருக்க முடியாது என்ற கேள்வியை நமக்கு விட்டு செல்கிறது...

பாடல்.


வஞ்சி மிரள இடைக்கு, அடநடைக்கு
அஞ்சி களிரொதுங்க, அடியன்னக்
கச்சம் நீரில் ஒளிப்பப் பயலுகப்
பச்சம் சொல்லடிப் பாவையும் ஆடினாள்

எப்பா...என்னா அடி....!!!.


.
அண்ணன் நர்சிம் அவர்களுக்கு நன்றி.

Monday, 20 July 2009

ஜலதரங்கம்


சப்தம் சூழ் தனிமை,
வம்பாய் வந்தமர்ந்து
போட்டிக்கு போதையேற்றும்
முறுக்கேறிய மீசைக்காரன்,

ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,

சிதறிக் கிடக்கும்
சுண்டல்களில் கண்ணும்,
சண்டைகளுக்கு காதும்
கொடுத்து முடியாது,

ஒழுங்கிலா டாஸ்மாக்கை
சுற்றி பார்கிறேன்.....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் சிறுநீரை
அடக்குவதென
இயற்கையை அடக்க
முயல்கிறேன்,

திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மேலும் இரண்டு பியரை,
ஏற்றி இருக்கலாம்...!


(இதன் கருவை கவிதையாக்க அனுமதி தந்த நாடோடி இலக்கியனுக்கு நன்றி).

-

Friday, 17 July 2009

உன்னநான் தோஸ்தாக்கிகிட்டு...!நல்ல சரக்கு இங்கே.
கள்ள சரக்கு இங்கே.உன்னநான் தோஸ்தாக்கிகிட்டு
என்னாத்த சுகங்கண்டேன்

கோட்டருண்டா கோழியுண்டா
கையிலாவது வாயிலாவது

வேலையுண்டா வெட்டியுண்டா
ஊருகுல்ல உலகத்தில

ஓடாத்தேஞ்சு போனேன் -நீ பிகர் மடிக்க
நான் காத்து கிடந்து

எலும்பா உருகிப்போனேன் - லோகல் சரக்கும்
துண்டு பீடியும் நானடிச்சு

ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்

பத்து தேதி மேலே
வெட்டிப்பயலேன்னு வையுறியே

ஆயிரந்தான் வஞ்சாலும்
உன்போல தோஸ்து வருமா

ஊருள்ளே நடக்கையில
உனையாரும் சேர்ப்பாரோ

பிகர்பார்க்க போனேயே
வழுக்கு மண்டைய தடவிகிட்டு

ராவும் வந்துருச்சே
கீழ்வானம் இருண்டுருச்சே

அடி சத்தம் போலிசாலே
கீறல் ஒண்ணு மார்மேலே

பழைய புண்ணு ஆறுது
உன் உடம்பும் காயுது

கண்ண மட்டும் காப்பாத்திட்டு
ஓடி வாயேன் என் ராசா

நமது சக பதிவர் வால்பையனுக்கு நன்றிகள்.
.

Monday, 13 July 2009

நர்சிம், கார்த்திகை பாண்டியன், ஆதவா, மற்றும் ஷி-நிசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கல்கி பத்திரிகையால் அடையாளம் காணப்பட்டு சுட்டி காட்டப்பட்ட நமது சகபதிவர்கள்,
நர்சிம், கார்த்திகை பாண்டியன், ஆதவா, ஷி-நிசி மற்றும் முத்துவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.கல்கி பத்திரிக்கைக்கு நன்றி.

படம் சுட்டது: நையாண்டி நைனா.(அண்ணன் வடகரை அவர்களின் பதிவில் இருந்து. நன்றி அண்ணாச்சி.)

சதகுப்பை (ஜூலை/13/09/திங்கள்)

இப்ப தான் நம்ம குப்பைய கொட்டி முடிச்சா மாதிரி இருக்கு அதுக்குள்ளே அடுத்த சதகுப்பை எழுத வேண்டிய வேளை வந்துட்டு.... அந்த கடமைய தலை மேல் கொண்டு இதோ உங்களுக்காகா இந்த வார சதகுப்பை.

சதகுப்பைன்னா என்னா?
சதகுப்பை என்பது நமது பாட்டி வைத்தியத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய மூலிகை ஆகும். இதன் பயன்பாடு, சொல்லி முடிப்பது பெரும்பாடு. அதனாலே கொஞ்சம் கொஞ்சமா உங்ககிட்டே இதை பத்தி அறிமுக படுத்துகிறேன். இனி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பு இடம்பெறும்.தற்போது நடந்து முடிந்த தேர்வும், தேர்வு முடிவுகளும் சில ஆரவாரங்களை எழுப்பி சென்றுள்ளது. தேர்வும் தேர்வு முடிவுகளும் ஆசிரியப்பணி வாழ்க்கை என்னும் சீரியப்பணியில் ஒரு சிறிய பணி ஆனால் மாணவர்களுக்கு...? அது தான் வாழ்க்கை. ஆகவே சக ஆசிரிய நண்பர்களே, ஆசிரிய பெரு மக்களே சற்றே சிரத்தை எடுத்து இந்த பணிகளை செய்யுங்கள்.

நான் சொல்ல வந்ததும் இதல்ல... அந்த மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணாக்கர்களின் தன்னம்பிக்கை என்னை வியப்புற வைக்கிறது. தான் ஆயிரத்திற்கு மேல் மதிபெண்கள் பெற்ற பின்னரும், எனக்கு இதையும் விட அதிகம் வரும் என்று ஒரு நம்பிக்கை. தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை கொண்டு மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து தன்னை நிரூபித்தார்களே அந்த தன்னம்பிக்கையை நான் வியக்கிறேன். வணங்குகிறேன்.இந்த தன்னம்பிக்கை கொண்ட மாணவனை பெருமிதமாக எண்ணி கொண்டிருக்கையிலே, நேற்று ஒரு செய்தியும் கண்ணில் பட்டது. இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தோல்வி அடைந்ததால் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டாராம். அந்தோ பரிதாபம்..! என்ன குறைந்து விட்டது? அடுத்த முயற்சி இல்லையா... அல்ல இந்த பணி ஒன்றுதான் வாழக்கையா? இந்த மாணவனின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.இந்த பிரகாஷ் படுகோனே என்று ஒரு அறிவு ஜீவி இருக்காரு. அவரு சொல்லி இருக்காரு. சானியாவை விட சாய்னா சிறந்தவர் என்று. இது ஏற்று கொள்ள முடியாத ஒரு கருத்து. இந்தியாவில் கிரிக்கட்டை தவிர வேறு எதுவுமே பிரபலமாக இல்லாத போது சானியா நிகழ்த்திய சாதனைகள் மேலும் அவர் சந்தித்த சோதனைகளும் பிரமிக்க தக்கது. அடுத்து சானியா டென்னிஸ் வீராங்கனை. இவர் பேட்மின்டன். பிறகு எப்படி ஒப்பிடுகிறார் என்று அந்த அறிவு ஜீவியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். அவரது கூற்று என்னை பொறுத்தவரை கண்டிக்க தக்க ஒன்று...

சரி... இன்னும் எழுதலாம் என்று பார்த்தல் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.... அதனாலே நாம அடுத்த பகுதிக்கு போறோம்.


சென்ற சதகுப்பைலே கேட்டிருந்தோம்,
ரோஜா படத்திலே வரும் "புது வெள்ளை மழை பொழிகிறது..." பாடலில் "அந்த சொல்லாத இடம் கூட குளிர்கின்றது...." இதற்கு என்ன அர்த்தம் என்று.... பல பேரு பல கருத்துக்கள் சொல்லி இருந்தார்கள்.... இப்ப நாம் அதற்கு உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு பார்க்க போறோம்.

ஒரு இடத்திருக்கு போகிறோம்னா என்ன பண்ணுவோம் ? இப்ப ஊட்டின்னு வச்சிக்கோங்களேன்.. அதை பத்தி கொஞ்சம் விசாரிப்போம், அதுக்கு அப்புறம் அங்கே போய் கைடு, கைடு ன்னு சொல்லுகிறவரை கூப்பிட்டு சில தகவல்களை கேட்போம். அப்புறம் நாம நேரிலே போய் அந்த இடங்களை கண்டு களித்து அனுபவித்து விட்டு வருவோம். நாம அறிஞ்ச தகவலும், அனுபவித்ததும் ஒன்றானால் மிகுந்த சந்தோசம் அடைவோம்.

அதை மாதிரி இந்த நாயகியும் செஞ்சிருக்கா. அவ அந்த தகவல்களோட.. வந்து காஷ்மீரை பாக்கிறா... அப்போ அவளுக்கு அந்த இடம் குளிரும், ஏரிப்பக்கம் குளிரும், இந்த மலை உச்சி நல்லா குளிர் எடுக்கும், அந்த ஹோட்டல் பக்கமா நல்ல குளிர் எடுக்கும் என்று மற்ற மக்கள் குறிப்பிட்டு சொல்லாத இடம்லாம் குளிருதாம் அதை தான் அவ அப்படி பாடுறா...

அந்த சொல்லாத இடம் எல்லாம் குளிருது.... காஷ்மீர் எங்கும் வெள்ளை மழை பொழிகிறது.... அதனாலே அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று இருந்துவிடாமல் இங்கே வந்து பாருங்க அப்ப உங்களுக்கு புரியும் சொல்லாத இடம்லாம் குளிர்கிறது என்று.....

ஹேய்.... ஹேய்.... அடிக்கலாம் வரக்கூடாது....

(அப்புறம் உங்களுக்கு இப்படி ஏதாவது பாட்டுலே ஏதாவது டவுட்டுன்னா நையாண்டி அண்ணனோட பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க... அடுத்த சதகுப்பைலே சொல்றேன்.)

Friday, 10 July 2009

கவுஜைகள்... மாதிரி சில...
நல்ல சரக்கு இங்கே
இது கள்ள சரக்கு.


57.ரூ. குவாட்டருக்காக
கொடுத்த நூறு ரூபாயில்,
மூணு ரூபா சில்லறை
வாட்டர் பாக்கட்டுக்கு,
நாப்பது ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டாஸ்மாக் கவுண்டரில்
கத்தும் இதே மனதுதான்
நட்சத்திர விடுதிகளில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பேன்ட் பாக்கடிலிருந்து
நழுவி விழப்போகும் குவாட்டரைக்
கவனியாது பயணிக்கும்
முகமறியா நண்பனிடம்
சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்
அலுவலகம் வந்த பிறகும்
அந்தக் குவாட்டரைப் பற்றிய
சிந்தனையிலேயே மனம்..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

முன் எப்போதோ
குடித்து, விழுந்து
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
யாருமறியாரென தெரிந்தும்
அனிச்சையாய் பிறரை தவிர்க்கும்
விழுந்து தொலைத்தவனின் கண்கள்..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ஓல்ட் மங் அடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி ..அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
VAT 69 ....!


அனுமதி அளித்த அண்ணன் நாடோடி இலக்கியனுக்கு நன்றிகள்.

/THE END.

Thursday, 9 July 2009

கேமிராமேனும் தேவதையும் - நீதிக்கதை

ஜாக்கி அண்ணன் தெரியுமா, நம்ம ஜாக்கி அண்ணன். ஆமா ஆமா.... இந்த பதிவர் சந்திப்புலே எல்லாம் படம் எடுத்து பிலிம் காட்டுவாரே அவரே தான். அவரு ஒரு நா, தன்னோட kodak KB10 கேமிராவே எடுத்துகிட்டு, அப்படியே நகர்வலம் போனாரு அப்படியே கண்ணுலே கண்டதெல்லாம், படம் பிடிச்சி படம் பிடிச்சி சும்மா போட்டு தாக்கிகினே வந்தாரு.....

அப்படியே அவரு காட்டு பக்கம் வந்தாரு.... அதை பார்த்தவொடனே அவருக்கு அப்பிடியே ஊட்டி நெனப்பு வந்துட்டு.... அதனாலே தன்னோட சூழ்நிலைய மறந்து படம் புடிச்சிகினே இருந்தாரு.... இப்படி இருக்கப்போ... ஒரு அழகான ஏரி அதனோட அழகு அப்படின்னு அவரு படம் புடிச்சிகிட்டே இருந்தப்போ...திடீர்னு அவரோட கேமிரா ஏரிலே விழுந்துட்டு.... அதை அவராலே தாங்க முடியலே... உடனே அந்த ஏரி கரையிலே உக்காந்து.... அழ ஆரம்பிச்சி.... கோடாலி விழுந்த மரம் வெட்டிக்கு... எதோ தேவதை வந்து எடுத்து கொடுத்துச்சாம் இப்ப மட்டும் ஏன் வரலே.... அப்புறம் என்ன மசு*க்குடா.. இந்த பாடம்லாம் வைக்கிறீங்க என்று... தன்னோட ஸ்டைலில் திட்டி அழுதுகிட்டு இருந்தாரு.... இவரு சொல்ற வார்த்தைகளை கேட்க பொறுக்காமே.... அந்த பழைய கதையிலே வந்த தேவதையோட எள்ளு பேத்தி தேவதை வந்து....

எப்பா... ஜாக்கி... கவலை படாதே... உன்னோட நம்பிக்கையும் உன்னோட "தமிழும்" ஏரிக்குள்ளே சீரியல் பார்த்துகிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு... எங்க பூட்டி மரம்வெட்டிக்கு செஞ்ச மாதிரியே... நான் உனக்கு... செய்றேன்னு சொல்லி ஏரிக்குள்ளே போய் ரெட் ஒன் கேமிரா ஒன்னை கொண்டு வந்து கொடுத்துச்சி...அதை பார்த்து ரொம்ப சந்தோசம் ஆயிட்டாரு நம்ம ஜாக்கி அண்ணே.... இது தான்... இது தான்... இதை தான் எதிர்பார்த்தேன்... இதே எனக்கு போதும் என்று சந்தோசமா துள்ளி குதிச்சி.... வாங்கி வச்சிகிட்டாரு....

இதை பார்த்த தேவதை... கொளம்பி போச்சி... "ஏய் ..ஜாக்கி... என்ன நீ? கதையை எல்லாம் கரெக்டா சொன்னே... ஆனா இப்ப ராங்கா பிஹெவ் பண்றே...??? நீ முழுசா படிக்கலியா..!!!!" அப்படின்னு கேட்டுச்சு...

அப்போ நம்ம ஜாக்கி அண்ணன் சொன்னாரு.... "அதெல்லாம், ஒன்னும் இல்லே... நீயும் சரி உங்க பாட்டியும் சரி... அந்த கதைய மட்டும் தான் முழுசா படிச்சிருக்கீங்க... பட் நான் அந்த தமிழ் புக்கை புல்லா படிச்சிருக்கேன்..."

அப்புறம் ஏன் இப்படி பிஹெவ் பண்றே...???

அடங்கொக்கா மக்க... நான் எல்லாம் கரீட்டா தான் படிச்சிருக்கேன்... அந்த புத்தகத்திலே.. இந்த கதைக்கு அடுத்த பக்கத்திலே....
"அதிஷ்டம் ஒரு முறை தான் தட்டும்"...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"
இப்படில்லாம், போட்டிருந்துச்சி.... அத நான் பாலோ பண்றேன்... ஆமா... உங்க பரம்பரைக்கே... கரெக்டான பொருளை எடுத்து வர தெரியாதா....? இருந்தாலும் நன்றி. நான் கெளம்புறேன்.... ஜாக்கியா கொக்கா....

தேவதை "நீ முன்னே விறகு வெட்டி பண்ண மாதிரி செஞ்சிருந்தா உனக்கு மூனும் கெடசிருக்குமே...ன்னுச்சு..."

எல்லாம் சரிதான், ஆனா எனக்கு தேவையானது எல்லாம் இதுலே இருக்கு... பட் உங்க பாட்டி செஞ்ச காரியத்தாலே அவன் உழைக்கிறதே விட்டுட்டான். ஆனா நான் அப்படி இல்லே... இதுக்கு மேல என்னாலே பதில் சொல்ல முடியாது.... நேரம் இல்லே.. முடிஞ்சா அடுத்த கதையிலே மீட் பண்ணலாம்...

உன்னாலே முடிஞ்சா, கதையோட எண்டுலே, இந்த நைனா பய மொக்கையா ஒரு மெசேஜ் சொல்வான் நீதிங்கிற பேருலே... உக்காந்து அதை படிச்சிட்டு போ... அப்படின்னு சொல்லி நடைய கட்டிட்டாரு...தேவதை சீரியல் பாக்குற அவசரத்துலே ஒன்னும் சொல்லாமே போயிருச்சி... ஆனா நீங்க முழுசா படிச்சி பின்னூட்டமும் போட்டுட்டு போங்க.

கதை சொல்லும் நீதி:

1.எல்லாரும் இன்னும் பாட்டன் பூட்டன் காலத்திலேயே இருக்கிற மாதிரி இருப்பாங்கன்னு நெனைக்க கூடாது.

2.நம்ம தாத்தாவோ பாட்டியோ தெரிஞ்சோ தெரியாமலோ சிலது செஞ்சிருப்பாங்க அதை கண்ணை மூடிகிட்டு நாமும் பாலோ பண்ண கூடாது.

3.எதை படிச்சாலும் முழுசா படிக்கணும், அதுக்கு முன்னே என்ன இருக்கு? அதுக்கு அப்புறம் என்ன இருக்கு அப்படின்னு பார்த்து படிக்கணும்.

4.படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.குறிப்பு: கதை எழுத அனுமதி கொடுத்த அண்ணன் ஜாக்கிக்கு நன்றி.


.

Tuesday, 7 July 2009

"பு(fu)ல்"லாலான உலகம்மடக்கி மடக்கிகவிதை இங்கே
மடக் மடக் கவுஜை இங்கே


வீட்டிற்குள் நுழையும்முன்
சோதனை செய்யப்படும்
சுவாசங்கள், சகவாசங்கள்

எதிர்படுபவன் கண்கள் தவிர்க்க
வேறெங்கோ பார்வைகள்

நாகரீகம் காக்க
"இன்று ஒரு பார்ட்டி"

தவறான இடத்தில் கிடைத்த
சரியான உறவு

சரியான உறவையும்
தடம் மாற்றும் துர்நாற்றம்

எனக்கு கிடைத்திருந்தால்
வேலையாவது வெட்டியாவது

என்றாலும்
என்னைச் சொல்லச் சொல்லும்
தலைப்ப
..Thanks To Our beloved Blogger Mr.Narsim. (சரக்கு அடிச்சா இங்கிலிபிஸ் தானா வருதே......!!!!)

Monday, 6 July 2009

நாடோடிகள்: அரிப்பும்... சொரிந்ததால் வந்த புண்ணும்.

நாடோடிகள் படம் சிறப்பாக வந்திருப்பதாக வலை பக்கங்களில் தொடர்ந்து விமர்சனங்கள்.. அச்சு ஊடகங்களிலும் அதன்படியே ஒரு நல்ல கண்ணோட்டம் இருந்ததால் தவறவிடாமல் பார்த்தாகி விட்டது... ஆனால் மதிப்பிற்குரிய அண்ணன் அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களின் இந்த வலைப்பூவில் மட்டும் வித்தியாசமான பூ பூத்திருந்தது அதனை நுகர்ந்தத்கால் எழுந்த எண்ணங்களை சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அன்பின் நண்பரே... கதை, சினிமா, கவிதை, பாடல், காட்சி, ஆடல், சோகம், சுகம், ஆனந்தம், பேரானந்தம், விமர்சனம் அது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதன்மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை ஆனால் உங்கள் இந்த விமர்சனத்தில் உள்ள கருத்துக்களை நான் மறுக்கிறேன், மறுக்கிறேன், மறுக்கிறேன்.

அரசுப் பணியில் சேர்ந்தால் மட்டுமே மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் சசிக்குமார், பி.ஏ.. அவன் மீது வெறித்தனமாக காதலில் இருக்கும் மாமன் மகள் அனன்யா.
கணிணி மையம் ஆரம்பிக்கும் முயற்சி செய்து கொண்டே, சசியின் தங்கையை காதலித்துக்கொண்டிருக்கும் சசியின் நண்பன் விஜய்.
வெளிநாட்டில் வேலைக்குப் போக விரும்பும் மற்றொரு நண்பன் பரணி.
இவர்கள் மூவரும் சசிக்குமாருடன் படித்த வகுப்புதோழன் சரவணன் காதலை நிறைவேற்றப் போராடி உதவி உடல், மன ரீதியான இழப்புக்குப் ஆளாகிறார்கள்.
பிறகு, அந்த காதலர்கள் பிரிந்ததைக் கேட்டு கொந்தளித்து அவர்களை சேர வற்புறுத்துகிறார்கள்.
படம் முடிந்து விடுகிறது.
-பொன்.வாசுதேவன்.


மேற்கூறியதில் நீங்கள் குறிப்பு முகமாக குறிப்பிட்டிருந்தால், குறிப்பிட்டு கூற என்னிடம் ஒன்றும் இல்லை.

விரக்தியாக இருந்தால்....??? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன எதிர்பார்த்து சென்றீர்கள்?

இது போல் நீங்கள் எங்குமே கண்டதில்லையா...? அல்லது இதெல்லாம் ஒரு கரு...??? தேவையா இதற்க்கு ஒரு உரு...??? இதனை ரசிப்பவன் வெட்டியாய் நிற்கும் தரு. என்றே முடிவு கட்டி விட்டீர்களா? அப்படியெனில், இல்லை, இல்லை, நான் தொடுத்து நிற்பேன் ஒரு செறு.

சில முயற்சிகளை பாராட்டி, பல நிகழ்வுகளை தொகுத்து அருமையான வார்த்தைகளால் அறைந்து, கூறி இருக்குறீர்கள். நன்றி. நன்றி. நன்றி.

அவர்களது புது முயற்சிகளையும் வெற்றிகளையும் பாராட்டி கூறிவிட்டு, அவர்களை அடுத்து சாடுவது ஏன்? யாவருமே வாழ்க்கை ஓட்டத்தில் ஒன்றை பிடிக்க ஓடி, மற்றதை பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் குரங்கு மனம் கொண்டவர்கள் தான்.

அதற்கு பின் ஆசை யாரை விட்டது என்றொரு கேலி வேறு... அவரது முயற்சி அது, அதனை நாம் ஏன் பகடி செய்ய வேண்டும்? யாருக்கில்லை ஆசை???

மிகவும் சராசரி இயக்குநரின் மனோபாவத்தில் எடுக்கப்பட்ட படம். உண்மை தான். சாதாரண மக்களின் உணர்வையும் எண்ணங்களையும் சொல்லும் விதம் எடுக்கப்பட்ட படம் மிக சாதாரணமாகவே இருக்கும், இருக்கிறது. இதில் அசாதாரணமாக எவ்வாறு சிந்திப்பது? நீங்கள் கொஞ்சம் கோடிட்டு கொடுத்தால் மிக புண்ணியமாக போகும் உங்களுக்கு, உங்களால் நாங்களும் முதிர்ச்சி பெற முயலுவோம், புது முயற்சிகளும் வளர்ச்சி பெற ஏதுவாகும். அதற்காக பிடியுங்கள் நன்றிகள் பல, முன்னே.

நீங்கள் சொல்லும் சார்பு தத்துவமும் எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். ஒப்பீடு இல்லையெனில் வாழ்வே சுவையற்று போகும், சுறுசுறுப்பும் குன்றி போகும்.

அடுத்து நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்,


மிக மோசமான கதையமைப்பு, அடுத்து பாடல் வரும், சண்டை வரும், வில்லனிடம் மாட்டிக்கொள்வார்கள் என்று சராசரி ரசிகன் கூட கண்டுபிடித்துவிடும் விதமாக அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள், நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுவதும் எல்லா காட்சியிலும் ஒரு வசனம், கஞ்சா கருப்பு செய்யும் சகிக்க முடியாத நகைச்சுவை, உடலிச்சையை காதல் என்று நண்பன் சொல்லித்திரிவதைக்கூட கண்டறியாத, காதலில் பிரிய வசதியாக வாழ்ந்த சூழ்நிலையும், பொருளாதார சிக்கலும்தான் காரணம் என்பதைக்கூட உணர இயலாத மனமுதிர்ச்சியற்ற கதாநாயகன் சசிக்குமார் இவையெல்லாம் திரைப்படத்தை பலவீனப் படுத்துகின்றன.இயல்பாக இருக்க பலமுறை முயற்சித்து, அனைவருமே நன்றாக ‘நடித்தி‘ருக்கிறார்கள்.
-பொன்.வாசுதேவன்


நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும், அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் சில சம்பவங்கள் எல்லார் வாழ்க்கையிலும் நடந்திருக்கும், நடந்து கொண்டிருக்கும், நடக்கும். அந்த சம்பவங்களை கோர்த்து ரசனையாக சொல்வதே, ஒரு படைப்பாளியின் வெற்றி. அந்த வகையில் அவர் செய்திருப்பது பாராட்ட தகுந்த ஒன்றே. இதில் நீங்கள் குறை கூறுவது ஏன்? என்பது அந்த பதிவாண்டவருக்கே வெளிச்சம்.

ஒரு சொல்லை வைத்து காமடி செய்வதற்கு திறன் வேண்டும். உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றால் தவறில்லை. "டாம் அண்ட் ஜெர்ரி" பார்த்து உங்களுக்கு சிரிப்பு வராது ஆனால் எங்களுக்கு வரும்.

கதையில் காதலை சொல்ல எத்தனிக்கும் யாவருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்பது சொல்பவருக்கும் தெரியும், கேட்பவருக்கும் தெரியும். இருப்பினும் காதல் இன்றும் பேசு பொருள் ஆகும்.

அடுத்து, உடல் இச்சை என்றால் அதை தீர்க்க வழி இல்லாத சூழலில் இருந்து அவரது நண்பர் வரவில்லை. இருப்பினும் வந்திருக்கிறான் என்றால் அது உண்மை காதலாகவே இருக்கும் என்றே யாவரும் எண்ணுவர். இருப்பினும் நண்பனின் காதலை உயர்வாகவே என்னும் பாரம்பரியம் நம்முடையது... கல்லூரியில் கூட நண்பனின் காதலியை பற்றி கேலி கிண்டல் செய்து வருவர், காதலிக்க ஆரம்பித்த பிறகு அந்த பேச்சுக்கள் குறைவதை நாம் கண்டதில்லையா?

சரி உங்கள் வாதத்திற்கே வந்தாலும், மன முதிர்ச்சி இல்லாத கதாநாயகன் இருக்கவே கூடாதா? கதாநாயகன் என்றால் எல்லா சித்து வேலைகளும் கைவந்தவனாகவும், ஏய்... ஊய்... ஆய் வசனங்களை பேசுபவனாக எதிர் பார்குறீர்களோ?

அவர்கள் சினிமாவில் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள் அது பாராட்டப்பட வேண்டியது... ஏன் என்றால் தற்கால திரை சூழலில் யாரும் அப்படி பட்ட முயற்சி எடுக்கவில்லை ஒரு சிலரை தவிர, ஆனால் நீங்கள் செய்திருக்கும் இந்த முயற்சி பாராட்ட தக்கதல்ல.

மாமன் மகளின் அளவில்லா நேசம், நண்பர்களின் நெருக்கம், பெற்றவர்களின் ஆதரவு என மனநெகிழ்வளிக்கக்கூடிய காட்சிகளை வைத்து மட்டுமே படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. பக்கம் பக்கமாய் அறிவுரை கூறுகிறார் சசிக்குமார். விரைவில் இவரது குரலையும் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு என அரைத்து தோசை வார்ப்பார்கள் என்பது நிச்சயம். டி.ராஜேந்தரை சின்னதாக மினியேச்சர் பண்ணது போலவே அவரை நினைவூட்டுகிறார் சசி. என்ன பற்களைக் கடிப்பதில்லை.
- பொன்.வாசுதேவன்


நீங்கள் சொன்ன கூறுகள் அனைத்தும் இருக்கிறது, ஆனால் உங்கள் பார்வை சற்றே விலகி போய் விட்டது. இந்த படத்தில் அவர், (சமுத்திரக்கனி) எங்கேயும் நீங்கள் சொன்ன அந்த விடயங்களை சார்ந்து இல்லை. மாமன் மகள் பெரிய வசனங்களும் சொல்ல வில்லை, மணந்தால் மகாதேவன் இல்லை மரண தேவன் என்றும் முட்டாள்தனமாக சிந்திக்க வில்லை. நடந்தது எதார்த்தம், அதனால் தான் வெற்றி தேடி வந்திருக்கிறது அந்த படத்திற்கு.
அந்த அசத்தபோவது யாரு, கலக்க போவது யாரு அவர்களை விடுங்கள்...இதோ நீங்களே ஆரம்பித்து விட்டீர்களே... நன்றி. இது தான் எங்களுக்கும் வேண்டும்.


படத்தின் தேவையற்ற இரைச்சல், வாகன உபயோகம், காலம்காலமாக பழக்கத்திலிருக்கும் கதை சொல்லும் உத்தி, வில்லன் வீட்டுக்குள் நாய் இருப்பது, நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தறுப்பது, முக்கியமான வேலையாகச் செல்லும் வழியில் சாலையில் நின்றிருக்கும் எவளோ ஒருத்திக்கு வாகனத்தில் இடம் கொடுத்து, அவளுடன் மது அருந்தி நடனம் ஆடுவது, கதாநாயகனின் நண்பர்களுக்கு மட்டும் உடல் உறுப்பு இழப்பு, காது செயலிழப்பு, அதை வைத்து நகைச்சுவை, கதாநாயகனின் பாட்டியை சாகடித்து அனுதாபம் பெற முயல்வது என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை சமுத்திரக்கனி.
வசந்த ராகம், ரயில் பயணங்களில், ஒருதலை ராகம், பாலைவனச் சோலை காலத்துக்கதையை சற்றே நவீனப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். காதலை பிரதான மூலதனமாக கொண்டு இயங்கிவரும் தமிழ் திரைப்படச் சூழலில் எதையெதையோ சொல்லி சலித்துப் போய் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புளித்துப்போன திரைக்கதைதான் நாடோடிகள் திரைப்படம். 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால், 500 நாட்கள் வரை ஓடியிருக்கும்..
-பொன்.வாசுதேவன்


ஒரு சின்ன விஷயம், குறை கூறுவது என்று முடிவு எடுத்து விட்டால், எதனையும் குறை கூறலாம். அந்த மனோபாவத்தில் தான் நீங்களும் இதனை எழுதி இருக்குறீர்கள். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் சேவை.

மாற்று சிந்தனையை எங்கள் மனதில் விதைத்து செல்லுங்கள் அத்தனை நாங்கள் வரவேற்கிறோம். எங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் உங்களை எங்கள் குருவாகவும் ஏற்று கொள்கிறோம். ஆனால் இது போல் எதோ எழுதவேனும் என்று எழுதி எங்களை.......................

இப்போதும் அந்த படம் வெற்றிப்படம் தான் சார்....

இது ஒரு முதிர்ச்சியான பதிவாக இல்லாது இருக்கலாம், வாள்வீச தெரிந்த உங்களுக்கு எதிரே, கல்வீச மட்டுமே தெரிந்த என்னோட கல்லாய் இருக்கட்டும், சிறு கல்லாய் இருக்கட்டும், நன்றி.

Friday, 3 July 2009

சதகுப்பை (ஜூலை/03/09/வெள்ளி)

கடந்த சில நாட்களாக வேலைப்பளுவின் அழுத்தம் மிக அதிகம். நேற்று சில முக்கிய அலுவல் காரணமா, இந்த பக்கம் வர முடியாமே போயிடுச்சு.... நான் தொலஞ்சு போனேன்னு பல பேரு சந்தோசமாயும், சில பேரு வருத்தமாயும் இருந்ததாக ஏஜென்சி செய்திகள் மூலமா கேள்வி பட்டேன்.

அன்பு கொண்ட அண்ணன்களுக்கு நன்றி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அப்புறம் இப்ப எழுதுறதுக்கு ஒன்னும் தேறலைன்னா... அங்க படிச்சது. இங்க படிச்சது, அதுலே புடிச்சது, இதுலே புடிச்சது என்றும் கண்டது கேட்டது கெட்டது என்றும் ஒட்டு மொத்தமா எதையாவது எழுதி... தின்பண்டங்களின் பேரா வச்சி... நம்மளை டெர்ரர் ஆக்குறாங்க... இதுலேயும் சில பேரு, பேரு கிடைக்காம உக்காந்து யோசிச்சி... அப்புறம் அதையே தலைப்பா வச்சி... அதுக்கும் பின்னூட்டம் போடுறது எப்படி என்று குப்புற படுத்து யோசிக்க வைக்கிறாங்க...

அப்படி யோசிச்சிகிட்டு இருக்கும்போது இந்த ஜோதிலே நானும் கலக்காமே போனா.. அது நியாயமாகுமா... தர்மமாகுமா... அதனாலே நானும் உங்கள் எல்லாம் படுத்தி எடுக்கலாம்னு முடிவு செஞ்சி பிடிச்சேன் ஒரு பேரு "சதகுப்பை".

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


அனில்: எச்சூஸ் மீ, கம்பனிலே கொடுக்குற பீ.எப்ப். சிலிப் வாங்குறதுக்கு தானே நாங்களும் இவ்ளோ பெரிய க்யூலே நிக்கிறோம்... நீங்க மட்டும் என்ன? முன்னாடி வரைக்கும் போய் பார்த்துட்டு வாறீங்க....

முகேஷ்: ஒன்னும் இல்லே.... நான் பின்னா....டி போய் நிக்க போறேனே... நெறைய கொண்டுவந்திருக்காங்களா... எனக்கும் கிடைக்குமா இல்லே தீர்ந்து போய்ருமான்னு பார்த்துட்டு வாறேன்...

அனில்: ?...!...?...!...????

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒருவன்: என்ன? இது... எவ்ளோ சம்பாதிக்கிறீங்க, செலவு பண்ணுறீங்க... இப்படி இத்து போன குடையா வச்சிருக்கீங்க...

மற்றவன்: என்ன.. பண்றது... நம்மை மாதிரி குடைக்கும் வயசாயிடுச்சு...

ஒருவன்: சும்மா சால்ஜாப்பு சொல்லாதீங்க... குடைய நல்லா பாருங்க... துணி தையல் விட்டிருக்கு, கைப்பிடியும் குட்டையா இருக்கு....

மற்றவன்: யோவ்... சும்மா... வயித்தெரிச்சளை கெலப்பாதைய்யா... விட்டுட்டு போனவன் இந்த குடையத் தானே விட்டு போனான்... அவன்கிட்டே போய் நான் இதெல்லாம் கேட்க முடியுமா....

ஒருவன்: ................

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நைனாவின் சந்தேகம்:
இந்த ரோஜா படம் பார்த்தீயளா..?
அதுலே ஒரு பாட்டு வருமே... "புது வெள்ளை மழை... "

அந்தப்பாட்டுலே ஒரு இடத்திலே...." அந்த சொல்லாத இடம் கூட குளிர்கின்றது..." இதுக்கு என்ன அர்த்தம் யாராவது சொல்லுங்களேன்???

என்னோட விளக்கத்தை அடுத்த சதகுப்பைலே பார்க்கலாம்... அதுவரை பதிவர்கள் நீங்கள் உங்க வெலக்கத்தை வெலக்கு வெலக்குனு வெலக்கலாம்.

Thursday, 2 July 2009

நையாண்டி நைனாவிற்கு என்னாச்சு...!!! ஒரு அறிவிப்பு.
படத்தில் கிளிக்கி முந்திய பதிவிற்கு செல்க.