Tuesday, 21 July 2009

கும்பர்... சினிமாப்பாடல்கள்... பேதையழகு... சந்தம்...டி.ராஜேந்தர் என்ற பெயரை கேட்டதும் நமது குழந்தைகளின் முகமோரம் ஒரு திகிலும்... அவரின் தாடியும் அதை கோதிவிட்டுக்கொண்டே வேலை மெனக்கட்டுன்னு அவர் "தட்டி பார்த்த கொட்டாங் கச்சி..." என்று அவர் சிலுப்பும் வார்த்தையும் நமது நினைவில் அரை நொடி "டெர்ரராக" வந்து போய்விடுகிறது. என்றாலும் அவரின் கற்பனை வளம் (தமிழ் எம்.ஏ)மிகவும் ஆழமானது.

வாடா என் மச்சி..
வாழைக்காய் பச்சி...


என்று ரயில் பயணங்களில் அவரின் விருந்தோம்பல் பண்பு புருவமுயர்த்த வைத்தது அனைவரையும்..

ஹே டண்டனக்க டனக்கு னக்க
ஹே டண்டனக்க டனக்கு னக்க


என்று அடுத்தடுத்த வரிகளில் ரைமிங்கோடான சந்தங்கள் மிக மிக அற்புதமாய் இருக்கும்.அதுவும் இன்றைய நாக்க முக்க பாடலுக்கான அட்சாரம் அவர் அன்றே போட்டது, பாடியது, ரசிக்கப்பட்டது.

“அன்ன பூர்ணாவா.... ஆர்ய பவனா....’ என அவ்வப்பொழுது பிற ஹோட்டல்களை ஒப்பிட்டு ஒப்பிட்டு,ஒரு கணவனின் பார்வையில், தானே கஷ்டப்பட்டு உண்டாலும் மனைவியின் சமையலை வர்ணிப்பது. இது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, ஒவ்வொரு இல்லங்களிலும்.

"மில்லி லிட்டருக்கு கொண்டாட்டம் என்னைப் பார்க்கையிலே..."என குடிகாரர்கள் கொளரி, நாக்கை, உதட்டை கடித்து பாடும் பொழுது மனைவியர் வெட்கப்பட்டதை விட "மில்லி லிட்டர்" வெட்கப்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்திய வரிகள்..

"பாளையங்கோட்டை களிதானோ, கூழ் தானோ, புழல் ஜெயில் வார்டனும் நீதானோ.. என ஒரு பாதிக்கப்பட்ட பாடலாசிரியரின் சாரி.. சாரி.. மன்னிக்க, கணவனின் கற்பனையில் அனைத்து ஜெயிலையும் மனைவியுடன் ஒப்பிடப்பட்ட பாடலும் அந்த வகையே.

நவீன வாழ்க்கைக்கு ஏற்ப.. இந்த ஒப்பிடல் மாறிக்கொண்டே வந்து..

ஓல்ட்மாங் சுவை போல் புளிப்பவள் இவளா
ஓல்ட்காஸ்க் கலரில் முத்துன மகளா


என ஒப்பீடுகள் காலத்தோடு ஒத்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.

இது இன்று நேற்றல்ல..சங்க காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட பழக்கமாகவே படுகிறது.

இதோ ஒரு பேதையின் "அழகை" கும்பரின் வரிகள் சொல்லும் இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று.

விளக்கம்.

பெருத்த இடையைக் கண்ட வஞ்சி நாட்டுக் கொடியானது நாம் அவள் இடை பற்றும் அளவிற்கு கூட இல்லையே என வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, அட... இதை கூட விட்டு தள்ளுங்க அவள் நடை கண்டு களிறு என்று கூறப்படும் யானையும் மிரள, அவள் அடிக்கு, துறவிலே துவைக்கும் போது விழும் அடியே மென்மையானது, மேன்மையானது என எண்ணி இடுப்பு கச்சையும் நீரிலே மறைய, உழைத்து களைத்து வரும் நம்ம பயலுக்கு கஞ்சுடன் சில சொல்லடியையும் கொடுக்கும் பெண் நீராடினாள்.

பாடலின் சிறப்பு

பெண் நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்ற போதிலும், தண்ணீரில் அரசியலை கலந்து நமக்கு தண்ணீர் தராது வஞ்சிக்கும் பக்கத்துக்கு நாட்டு கொடி நம் பெண்களின் இடையை விட சிறிதானது என்றும் எள்ளி நகையாடுவது, களிரையும் விரட்டும் தளிர் எங்கள் பெண்கள் என்பது, கச்சையே மிரளும் அடி கொடுத்தாலும், தான் கொண்ட கணவனுக்கு கஞ்சி பரிமாறும் வேளையில் மட்டுமே சொல்லடி மட்டுமே கொடுப்பாள் என்று முடித்திருப்பது. கும்பரின் கற்பனையாக மட்டும் இருக்க முடியாது என்ற கேள்வியை நமக்கு விட்டு செல்கிறது...

பாடல்.


வஞ்சி மிரள இடைக்கு, அடநடைக்கு
அஞ்சி களிரொதுங்க, அடியன்னக்
கச்சம் நீரில் ஒளிப்பப் பயலுகப்
பச்சம் சொல்லடிப் பாவையும் ஆடினாள்

எப்பா...என்னா அடி....!!!.


.
அண்ணன் நர்சிம் அவர்களுக்கு நன்றி.

24 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்றைய போணி.. நர்சிம்மா? ஆனா சரக்கு கொஞ்சம் எபிக்ட் கம்மியா இருக்கே நைனா..

டக்ளஸ்... said...

முன்னவெல்லாம் கவிதை தான் எழுதுனீங்க பாஸூ..
இப்ப கட்டுரையுமா..?
கம்பர் பாவம்யா...!
எனக்கும் எதுவும் எபெக்ட் இல்லையேப்பா..!

தண்டோரா said...

காம்ரேட் வம்பர்
ஆம்லேட் சும்பர்
ஆப்படிச்ச அன்பர்
அடிச்சாரு பம்பர்
ஆணியடிச்ச ஜம்பர்
கோள்மூட்டி கொம்பர்
தேள்கொட்டிய தெம்பர்
நையாண்டி ஒண்ணாம் நம்பர்

Suresh Kumar said...

நல்ல விளக்கம்

sollarasan said...

சினிமாவிமர்சனத்தையும் எதிர்பதிவு போடுவார் என்று நான் சொன்னது நிஜம் ஆகிவிடும்போல்தான் இருக்கிறது, இந்த பதிவ‌ பார்க்கும்போது,வாழ்க எதிர்பதிவு
ஏகாம்பரம்.

வால்பையன் said...

ஹா ஹா ஹா ஹா

எல்லாம் சரிதான்!
பின்னாடியே கரளிமுண்ணன் எப்படி நீங்க அவரை கலாய்ச்சு பதிவு போடலாம்னு ஒரு பதிவு போடுவாரே!


(பத்த வச்சிட்டியே பரட்ட)

கலையரசன் said...

//காம்ரேட் வம்பர்
ஆம்லேட் சும்பர்
ஆப்படிச்ச அன்பர்
அடிச்சாரு பம்பர்
ஆணியடிச்ச ஜம்பர்
கோள்மூட்டி கொம்பர்
தேள்கொட்டிய தெம்பர்
நையாண்டி ஒண்ணாம் நம்பர்//

அ..அஅ.ஆஆ பாட்டாவே பாடிட்டீங்களா?

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....ஹா....... ஹா....

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
இன்றைய போணி.. நர்சிம்மா? ஆனா சரக்கு கொஞ்சம் எபிக்ட் கம்மியா இருக்கே நைனா..*/

Thanks Nanbaa

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
முன்னவெல்லாம் கவிதை தான் எழுதுனீங்க பாஸூ..
இப்ப கட்டுரையுமா..?
கம்பர் பாவம்யா...!
எனக்கும் எதுவும் எபெக்ட் இல்லையேப்பா..!
*/
நன்றி தம்பி....
ஆனா உனக்கு எபெக்டு வரதுக்காக நமீதா படந்தான் போடணும்...

நையாண்டி நைனா said...

/*
தண்டோரா said...
காம்ரேட் வம்பர்
ஆம்லேட் சும்பர்
ஆப்படிச்ச அன்பர்
அடிச்சாரு பம்பர்
ஆணியடிச்ச ஜம்பர்
கோள்மூட்டி கொம்பர்
தேள்கொட்டிய தெம்பர்
நையாண்டி ஒண்ணாம் நம்பர்
*/
அண்ணே உங்க பாடல்களை சிறார்களுக்கு பாடமா வைக்கலாம்.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
நல்ல விளக்கம்*/

நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*sollarasan said...
சினிமாவிமர்சனத்தையும் எதிர்பதிவு போடுவார் என்று நான் சொன்னது நிஜம் ஆகிவிடும்போல்தான் இருக்கிறது, இந்த பதிவ‌ பார்க்கும்போது,வாழ்க எதிர்பதிவு
ஏகாம்பரம்.
*/

வாங்க "வோர்டு கிங்"
உங்க ஆசை நிறைவேற்றப்படும்.

அக்னி பார்வை said...

அடடே

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
ஹா ஹா ஹா ஹா

எல்லாம் சரிதான்!
பின்னாடியே கரளிமுண்ணன் எப்படி நீங்க அவரை கலாய்ச்சு பதிவு போடலாம்னு ஒரு பதிவு போடுவாரே!


(பத்த வச்சிட்டியே பரட்ட)
*/

சிரிப்பு மட்டும் வீரப்பா சிரிப்பில்லை....

நீங்க இப்ப செய்யிறதும் வீரப்பா வேலை தான்.

என்னா ஒரு வில்லத்தனம்???

சாமி விடுங்க சாமி...நல்லா இருப்பீக.

நையாண்டி நைனா said...

/*
கலையரசன் said...
//காம்ரேட் வம்பர்
ஆம்லேட் சும்பர்
ஆப்படிச்ச அன்பர்
அடிச்சாரு பம்பர்
ஆணியடிச்ச ஜம்பர்
கோள்மூட்டி கொம்பர்
தேள்கொட்டிய தெம்பர்
நையாண்டி ஒண்ணாம் நம்பர்//

அ..அஅ.ஆஆ பாட்டாவே பாடிட்டீங்களா?
*/

ஆமா...
பாட்டு அருமை...

நையாண்டி நைனா said...

/*நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
ஹா....*/

எப்பா... நண்பா ஏதாவது பிரச்சினைன்னா பேசி தீர்த்துக்கலாம்...இப்படி பயங்காட்ட வேண்டாம்

நையாண்டி நைனா said...

/* அக்னி பார்வை said...
அடடே*/
அடடே... வாங்க... வாங்க.
நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

அந்த அளவிற்கு இந்த நையாண்டி எனக்கு மட்டும் பிடிபடல

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
அந்த அளவிற்கு இந்த நையாண்டி எனக்கு மட்டும் பிடிபடல*/

அப்படியா நண்பா....

வருகைக்கு நன்றி நண்பா..

இன்னிக்கு ஒன்னு போட்டிருக்கேன், அது எப்படின்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

நர்சிம் said...

வழக்கமான கலக்கல் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும் கலக்கல் தல..

@ வால்பையன்.. நன்றி.

நையாண்டி நைனா said...

/*
seidhivalaiyam.in said...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
*/

நன்றி.
இணைப்பு பெற்று கொண்டாச்சு.

நையாண்டி நைனா said...

/*நர்சிம் said...
வழக்கமான கலக்கல் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும் கலக்கல் தல..

@ வால்பையன்.. நன்றி.*/

மிக மிக மிக நன்றி தல.