Friday, 3 July 2009

சதகுப்பை (ஜூலை/03/09/வெள்ளி)

கடந்த சில நாட்களாக வேலைப்பளுவின் அழுத்தம் மிக அதிகம். நேற்று சில முக்கிய அலுவல் காரணமா, இந்த பக்கம் வர முடியாமே போயிடுச்சு.... நான் தொலஞ்சு போனேன்னு பல பேரு சந்தோசமாயும், சில பேரு வருத்தமாயும் இருந்ததாக ஏஜென்சி செய்திகள் மூலமா கேள்வி பட்டேன்.

அன்பு கொண்ட அண்ணன்களுக்கு நன்றி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அப்புறம் இப்ப எழுதுறதுக்கு ஒன்னும் தேறலைன்னா... அங்க படிச்சது. இங்க படிச்சது, அதுலே புடிச்சது, இதுலே புடிச்சது என்றும் கண்டது கேட்டது கெட்டது என்றும் ஒட்டு மொத்தமா எதையாவது எழுதி... தின்பண்டங்களின் பேரா வச்சி... நம்மளை டெர்ரர் ஆக்குறாங்க... இதுலேயும் சில பேரு, பேரு கிடைக்காம உக்காந்து யோசிச்சி... அப்புறம் அதையே தலைப்பா வச்சி... அதுக்கும் பின்னூட்டம் போடுறது எப்படி என்று குப்புற படுத்து யோசிக்க வைக்கிறாங்க...

அப்படி யோசிச்சிகிட்டு இருக்கும்போது இந்த ஜோதிலே நானும் கலக்காமே போனா.. அது நியாயமாகுமா... தர்மமாகுமா... அதனாலே நானும் உங்கள் எல்லாம் படுத்தி எடுக்கலாம்னு முடிவு செஞ்சி பிடிச்சேன் ஒரு பேரு "சதகுப்பை".

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


அனில்: எச்சூஸ் மீ, கம்பனிலே கொடுக்குற பீ.எப்ப். சிலிப் வாங்குறதுக்கு தானே நாங்களும் இவ்ளோ பெரிய க்யூலே நிக்கிறோம்... நீங்க மட்டும் என்ன? முன்னாடி வரைக்கும் போய் பார்த்துட்டு வாறீங்க....

முகேஷ்: ஒன்னும் இல்லே.... நான் பின்னா....டி போய் நிக்க போறேனே... நெறைய கொண்டுவந்திருக்காங்களா... எனக்கும் கிடைக்குமா இல்லே தீர்ந்து போய்ருமான்னு பார்த்துட்டு வாறேன்...

அனில்: ?...!...?...!...????

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒருவன்: என்ன? இது... எவ்ளோ சம்பாதிக்கிறீங்க, செலவு பண்ணுறீங்க... இப்படி இத்து போன குடையா வச்சிருக்கீங்க...

மற்றவன்: என்ன.. பண்றது... நம்மை மாதிரி குடைக்கும் வயசாயிடுச்சு...

ஒருவன்: சும்மா சால்ஜாப்பு சொல்லாதீங்க... குடைய நல்லா பாருங்க... துணி தையல் விட்டிருக்கு, கைப்பிடியும் குட்டையா இருக்கு....

மற்றவன்: யோவ்... சும்மா... வயித்தெரிச்சளை கெலப்பாதைய்யா... விட்டுட்டு போனவன் இந்த குடையத் தானே விட்டு போனான்... அவன்கிட்டே போய் நான் இதெல்லாம் கேட்க முடியுமா....

ஒருவன்: ................

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நைனாவின் சந்தேகம்:
இந்த ரோஜா படம் பார்த்தீயளா..?
அதுலே ஒரு பாட்டு வருமே... "புது வெள்ளை மழை... "

அந்தப்பாட்டுலே ஒரு இடத்திலே...." அந்த சொல்லாத இடம் கூட குளிர்கின்றது..." இதுக்கு என்ன அர்த்தம் யாராவது சொல்லுங்களேன்???

என்னோட விளக்கத்தை அடுத்த சதகுப்பைலே பார்க்கலாம்... அதுவரை பதிவர்கள் நீங்கள் உங்க வெலக்கத்தை வெலக்கு வெலக்குனு வெலக்கலாம்.

32 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சதகுப்பையா? உக்கார்ந்து யோசிச்சிங்களா? உனைய டரியலாக்காம விடுறது இல்லை மகனே..:-)))))

தண்டோரா said...

நைனா..அந்த இடம்..அந்த இடம்...மதுபாலாவோட..
மதுபாலாவோட.......கொண்டைதானே....

பீர் | Peer said...

தலைப்பிற்கும் கடைசி கேள்விக்கும் ஏதும் தொடர்புண்டா?

டக்ளஸ்....... said...

நைனா, என்னைய மாதிரி உத்தமங்கக்கிட்டல்லாம் இப்பிடி கேக்கலாமா..?
50 ஃபாலோயர்ஸ் தொட்டதுக்கு (என்னாது, தொடலையா.? ) வாழ்த்துக்கள்.

டக்ளஸ்....... said...

அட, 50 நம்ம பீர்தானா...?

ஜெட்லி said...

50 க்கு வாழ்த்துக்கள் நையாண்டி....
எந்த இடம் குளிருது......?
இது கூட தெரியாம கேள்வி கேக்குறியே
மாமு....

கலையரசன் said...

கொண்டை சூடான இடம் தேடி அலையுமா?

T.V.Radhakrishnan said...

:-))

Cable Sankar said...

உன்னிய மாரி சின்னபுள்ளோங்க எல்லாம் டபுள் மீனீங் சாங் கேக்க கூடாது நைனா..

ஆ.ஞானசேகரன் said...

என்ன கொடுமை நைனா.. கண்டதை பார்த்து கண்ட கண்ட கேள்வி எல்லாம் ????????

குளிச்சுட்டு வாங்க பாஸ்

Anbu said...

:-)

சொல்லரசன் said...

குப்பறபடுத்து யோசிக்கறதும் நல்லாதான் இருக்கு

லோகு said...

சொல்லாத இடம்னா.. எனக்கு தெரியல.. உங்களுக்குமா தெரியல..

Guru said...

Ellam Sathaikuppai than Naina.. Laka Laka Laka

வால்பையன் said...

சதகுப்பைன்னா என்ன?

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
சதகுப்பையா? உக்கார்ந்து யோசிச்சிங்களா? உனைய டரியலாக்காம விடுறது இல்லை மகனே..:-)))))
*/
அதான் குப்புற கிடந்தது யோசிச்துன்னு சொல்ரோம்லோ

நையாண்டி நைனா said...

/*
தண்டோரா said...
நைனா..அந்த இடம்..அந்த இடம்...மதுபாலாவோட..
மதுபாலாவோட.......கொண்டைதானே....
*/
அட... அப்படியா.... ?
நான் அப்புறமா வந்து விளக்கம் சொல்றேன்.
அடுத்த சதகுப்பைளே...

நையாண்டி நைனா said...

/*பீர் | Peer said...
தலைப்பிற்கும் கடைசி கேள்விக்கும் ஏதும் தொடர்புண்டா?*/

அப்படியும் இருக்குமோ....???

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்....... said...
நைனா, என்னைய மாதிரி உத்தமங்கக்கிட்டல்லாம் இப்பிடி கேக்கலாமா..?
50 ஃபாலோயர்ஸ் தொட்டதுக்கு (என்னாது, தொடலையா.? ) வாழ்த்துக்கள்.
*/
உனக்கு சந்தேகம் எல்லாமே தொடுறதுலையே இருக்கே..???? ஏன் அப்படி ???

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்....... said...
அட, 50 நம்ம பீர்தானா...?*/

ஆமா நண்பா... அவரு ரொம்ப நல்லவரு....

நையாண்டி நைனா said...

/*
ஜெட்லி said...
50 க்கு வாழ்த்துக்கள் நையாண்டி....
எந்த இடம் குளிருது......?
இது கூட தெரியாம கேள்வி கேக்குறியே
மாமு....
*/

வெளக்கம் கொடுக்காமே எல்லாரும் என்கிட்டேயே கேட்குறீங்க....

நையாண்டி நைனா said...

/*
கலையரசன் said...
கொண்டை சூடான இடம் தேடி அலையுமா?
*/
இருக்கலாம்,

நையாண்டி நைனா said...

/*
T.V.Radhakrishnan said...
:-))
*/

Thanks sir.

நையாண்டி நைனா said...

/*
Cable Sankar said...
உன்னிய மாரி சின்னபுள்ளோங்க எல்லாம் டபுள் மீனீங் சாங் கேக்க கூடாது நைனா..
*/
அப்படியா.... இது டபுள் மீனிங்கா...????

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
என்ன கொடுமை நைனா.. கண்டதை பார்த்து கண்ட கண்ட கேள்வி எல்லாம் ????????

குளிச்சுட்டு வாங்க பாஸ்
*/
காணாததாலே தான் பாஸ் கேள்வி கேட்குறேன்.

நையாண்டி நைனா said...

/*Anbu said...
:-)*/
Thanks Thambi.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
குப்பறபடுத்து யோசிக்கறதும் நல்லாதான் இருக்கு*/

அந்த படத்தை பார்த்துதானே சொல்றீங்க.

நையாண்டி நைனா said...

/*
லோகு said...
சொல்லாத இடம்னா.. எனக்கு தெரியல.. உங்களுக்குமா தெரியல..
*/
Yes. Nanbaa.

நையாண்டி நைனா said...

/*Guru said...
Ellam Sathaikuppai than Naina.. Laka Laka Laka*/

What can I do? Namma kitte sarakku kidaiyaathu... Only kuppai thaan.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
சதகுப்பைன்னா என்ன?*/

சொல்லிட்டா போச்சி...

ரமேஷ் வைத்யா said...

அந்தப் பாட்டில் காஷ்மீர் என்கிற பெயரைச் சொல்லமாட்டார் வைரமுத்து. அதுதான் சொல்லாத இடம்.

செந்தழல் ரவி said...

வாட் ஈஸ் திஸ் சதகுப்பை