Friday, 30 January 2009

முத்துக்குமரா: உனக்கு காணிக்கை

அன்பின் முத்துக்குமாரா,
நீ செய்தது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை.
நீ கண்ட பாதையை ஏதும்? சொல்ல தகுதி, இல்லாதவன் நான்.

என் கண்ணீரை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

Thursday, 22 January 2009

வில்லு பார்த்த அஜீத்தும், விஜயும் என்ன பேசி இருப்பார்கள்?

நேற்று, நம்ம தல, நம்ம இளைய தளபதி படமான 'வில்லு' பார்த்தாராம். பார்த்த பிறகு என்ன பேசி இருப்பாங்க? அப்படின்னு நீங்க ஒண்ணும் மண்டைய பிச்சுக்க வேணாம். ஏற்கனவே படம் பார்த்து மண்டைய பிச்சுருப்பீங்க. அதனால உங்களோட சுமையா குறைக்க எங்களோட "வெள்ளை எலி" படை அந்த தகவலை உங்களுக்கு தருகிறது.

Wednesday, 21 January 2009

டிஸ்கோ போகும் பெண்கள்...கும்பர் வாழ்க.

மும்பை, ஏழு நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி, வெள்ளி இரவு.. இளைஞர்களின் கொண்டாட்டம்.. குடும்பஸ்தர்களின் திண்டாட்டம்..(குடும்பத்தோடு போனால் உள்ளே விட மாட்டாங்க.) நிறைய காதலர்கள்.. அதைவிட நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் குரூப் என பட்டாம்பூச்சி(விட்டில்?)மயம்.. ஆட்டம், பாட்டம், பெல்லி ஆட்டம், பாட்டம் ஆட்டம்..... என அடுத்த கட்ட முயற்சி.. அங்கே தான் நம் கதை நாயகர்கள் நைனாவும் அவனோட மைனாவும் மது கோப்பையை நுனிவிரலில் எடுத்து முன் உதடுகளில் வைத்து..இப்படி நுனிநளினங்கள் எல்லாம் வெளியேதான்..டிஸ்கொ அரங்கினுள் அதே அவர்கள் கெட்ட ஆட்டம் தான்..அட இதில் என்ன ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

"என்ன...பாலிவுட் பகல் கனவு கன்னி ஜில்லிகா ஜிக்காவத் வருவாளா? நம்ம உள்ள போகலாமா?"

" வருவா.... வெயிட்பண்ண வேண்டாம்...நாம உள்ளே போவோம்....அங்க பார்த்தியா.. குத்து ஆட்டம் போடுற பாக்கி பாவண்த் .." என்று சொல்லிக்கொண்டே ஒரு 'வினோத' சைகை காட்டி சிரித்தாள்.

ஒரு சிகப்பு டீ சர்ட் இளைஞன் க்ராஸ் செய்தான்..

"நல்லா இருக்கான் இல்ல.."
"இல்ல.. செளவ்செளவ் காய் மாதிரி இருக்கான்.. நீ இன்னும் அவன் முகத்தை பார்க்கல....நீதான் சூப்பரு நைனா.... அதனாலே தானே உன்னை புடிச்சேன்." -

"ஹே...நைனா.... ஆமா.. நீ ஏன்? இந்த பக்கமாவே பார்த்து பேசிட்டு இருக்க? அங்கே பாரு ஜில்லிகா ஜிக்காவத் வந்தாச்சு,"
"ஸோ வாட்? நம்ம பக்கத்து பில்டிங் சேட்டு பொண்ணு, வந்திருக்கா, செம செக்சியா இருக்கால்லோ, அவளை பார்த்து கிட்டு இருக்கேன்"

"ஹேய்... ஜில்லிகா ஜிக்காவத்தோட ஹிப் மூவ்மென்டை பாரேன், அவளோட எடுப்பான இடுப்பை பாரேன்..."
"நான் எங்க அதப்பார்த்தேன்.. இன்னும் சேட்டு பொண்ணத்தான் பார்த்துட்டே இருக்கேன்.. "

இதைக் கேட்டுக்கொண்டே இருந்த மைனா....
"ஆமா.. இவரு பெரிய டாஸ்மாக் "டங்குவாரு"... ஒரு ஐட்டம் டேஸ்ட் பண்ணிட்டாருண்னா வேற ஐட்டத்தை தொடவே மாட்டாறு .... காசை கொட்டி வந்தத்துக்கு... கூட நாலு ஃபிகரை ரசிச்சிட்டு போவியா...!."

"என்னோட காசிலே ஓசிக்கு வந்ததும் இல்லாம ஆரம்பிச்சுட்டியா.... ஹே அந்த டாஸ்மாக் "டங்குவாரு" புரியலடி.. எக்ஸ்பைளைன் ப்ளீஸ்.."

"சில டாஸ்மாக் டங்குவாருங்களை சரக்கு அதிகமா அடுக்கி வச்சிருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போய் விட்டாங்கலாம், எதுனாலும் எவ்ளோனாலும் அடிச்சிக்கலாம் என்று சொல்லி. ஆனாலும் அந்த டங்குவாருங்க அதது, அதது அடிக்கிற சரக்கை மட்டுமே எடுத்து அடிச்சிசாம்... அடிச்சி கொஞ்ச நேரததிலையே மட்டையாகி போச்சாம்."

இப்படி நடந்துச்சோ இல்லையோ.. ஆனா கும்பரோட பார்வையும், வார்த்தைகளும்.. ஒரு சம்பவத்தோட அழக வர்ணிக்கிறதுனா இதைவிட சிறப்பா யாரும் எழுத முடியாதுங்கறதும் மட்டும் உண்மையோ உண்மை..
பேசிக்கொண்டே ஒரு அறைக்குள் நுழைந்து மறைந்துபோனார்கள்..

அந்த பாடல்..


கோர்பெல் கண்டார் கோர்பெலே கண்டார்
கோர்தழல் கங்குணை அன்ன
பகார்டிகண்டார் பகார்டியே கண்டார்
பர்னட்ஸ் கண்டாரும் அஃதே
விழிகொண்ட கண்ணார் யாரே
விடியவிடிய முடியக் கண்டார்விளக்கம்:
கோர்பெல் சரக்கு அடிப்பவர்கள் கோர்பெலே அடித்தார்கள், அதை மட்டுமே அடித்தார்கள். தன்னை ஒட்டி இருக்கும் அனைத்தையும் கோர்த்து எரியும் கங்கு போன்ற பகார்டி குடிப்பவர்கள் அதனையே குடித்தார்கள், பர்னட்ஸ் சரக்கை சுவைப்பவர்களின் நிலையும் அதுதான்.... விழிப்பாய் இரு என்று பாடம் சொல்லும், விழி கொண்ட கண்களை உடைய, யாரும் விடியும் வரை கூட இருக்க முடியவில்லை? என்னே காதல் மக்களுக்கு, சரக்கின் மேல்.


மிகைப்படுத்தி வர்ணித்தாலும், எத்தனை அழகான சொற்கள்..எவ்வளவு கற்பனை..அதுதான் கும்பர்..!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அனுமதி வழங்கிய திரு.நர்சிம் அவர்களுக்கு நன்றி...

Tuesday, 20 January 2009

தமிழன், அப்படியா? பதில். திரு.கோவியாருக்கு மட்டுமல்ல...

வணக்கம், மரியாதைக்குரிய அண்ணன் திரு.கோவி.கண்ணன் அவர்கள் தமிழர்களின் பாலியல் பால் உள்ள பற்றை பற்றி ஒரு பதிவு பதிந்து இருந்தார். பதிவின் சுட்டியை இந்த பதிவின் இறுதியில் இணைத்து உள்ளேன். அதன் கருத்தை ஏற்க முடியவில்லை. அவ்வளவு மோசமாகவா நாம் இருக்கிறோம்? என்று எண்ணிய போது... ஜீரணிக்கவும் முடியவில்லை. அண்ணணுடைய ஆதங்கம் போற்றுதலுக்குரியது. அந்த செய்தி உண்மையாய் இருந்தால். படங்கள், மற்றும் புள்ளி விவரங்களும் இருக்கிறதே அப்படியானால் உண்மை தானே என்றால், அதற்கு மாற்று கோணமும் இருக்கலாம் என்பதை வலியுறுததவே இந்த பதிவு. ஒன்றல்ல பல உள்ளன, அதில் என் சிறு அறிவுக்கு எட்டிய சில

பார்வை ஒன்று:


அண்ணணுடைய கோபம் என்ன? தமிழர்கள், இணையத்தில் பாலியல் தகவல்களை தேடுகிறார்கள் என்று தானே? இது எவ்ளோ நல்ல செய்தி, இதற்காக நாம் வருத்தப்பட வேண்டியதில்லை. சந்தோசமே பட வேண்டும். நாம் எப்பொழுது ஒரு பொருளை தீவிரமாக தேடுவோம்? அந்த பொருள் நமக்கு மிக எட்டும் தூரத்தில் இல்லை என்றால் தானே. அப்படி என்றால், இந்த பொருளும் நமக்கு எட்டும் தூரத்தில் இல்லை, நமது சமூகம், இதனை இன்னும் பரவலாக்க வில்லை என்று தானே தெரிகிறது.

பார்வை இரண்டு:


தமிழகத்தில் ஓடும் வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஆனா சினிமாவில் எத்தனை படம் தமிழ் படம்? என்னால், நான் ஒரு தமிழ் படம் பார்த்தேன் என்று தைரியமாக சொல்ல முடியும், ஆனால் என்னால் மலையாள படம் பார்த்தேன் என்று சொல்ல முடியவில்லையே, ஏன்? என்ன! தான் அவர்கள் வாழ்க்கையை புரட்டி புடம் போட்ட நல்ல படங்களை எடுக்கிறார்கள் என்றாலும்.

தமிழனின் ரசனை அவ்வாறு உள்ளது. அதனால் தான் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்வீர்களே ஆனால், நாம் அந்த மாதிரி படங்கள் வெளி இடப்படும் அரங்கங்களை கண்டாலே தெரியும், நாம் அந்த மாதிரி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. இன்னும் உங்களின் வாதம் நிறைவு செய்யப்பட வில்லை என்றால், மேலும் கூறுகிறேன். மலையாளப்பட முன்னணி நடிகர்களே அவர்களின் படம் வெளியிடும் நாள் 'இந்த மாதிரி' படம் வெளியிடப்படும் நாளில் அமைவததில்லை என்பதும், அவர்களே அந்த மாதிரி படங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோர்களை கண்டித்திருக்கிறார்கள் என்பதும் நாம் அறியாததா? அந்த கண்டிப்பும், சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல, தமது சம்பாத்தியம் பாதிக்கிறது என்ற அக்கறை என்பதும், நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

ஹிந்தி படங்கள், மற்றும் அவர்களின் காட்சி அமைப்பையும், உடையையும் நான் விளக்க வேண்டியது இல்லை என்று எண்ணுகிறேன். மேலும் தமிழ் திரை உலகிலும் அதிகமான மும்பை நடிகைகள் வந்து இருப்பதன் காரணமும் அவர்களின் "திறமையை" வெளிப்படுத்தும் திறமையே அன்றி வேறில்லை என்றும் நாம் அறிவோமே.

பார்வை மூன்று:


நமது நாட்டின் முக்கிய வருவாயாக இருப்பது சுற்றுலாத் துறை. நம்மை காணவரும் வெளி நாட்டவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பது நமது பாரம்பரிய கட்டிட கலை என்றால், அவர்களுக்கு மிக அதிசயமாக இருப்பது நமது குடும்ப முறையும், உடை கலாசாரமும். பெரு நகரங்களில் இருக்கும், பிற நாட்டு கலாசாரத்தை பேண நினைக்கும் நம் நாட்டு கோமாளிகளை விட்டு விடுங்கள்..ப்ளீஸ்.

இந்த நாட்டு மக்களின் உடையும் சரி, நடையும் சரி பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இல்லையே. பின்னே அவர்களின் பாலியல் வாழ்க்கையும், தாம்பத்யமும் எவ்வாறு இருக்கும் என்பதினை அறியும் முயற்சியாக கூட இருக்கலாமே!


முடிவாக, தேடிய விவரங்கள் தானே உள்ளது. அதன் முடிவு என்ன? என்பது இல்லையே. தமிழில் சமுதாயத்தை சீர் படுத்தும் எண்ணங்களே, செய்திகளே, இலக்கியங்களே இருக்கும். சீர் கெடுக்கும் செய்திகள், பதிவுகள் 'வலை' வீசி தேடினாலும் கிடைக்காது.டெயில் பீஸ்:


இங்கு மும்பையில், ஒரு கருத்தடை மாத்திரைக்கான விளம்பரம் வருகிறது. அது இன்னும் தமிழகத்தில் வரவில்லை என்று எண்ணுகிறேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மதிப்பிற்குரிய திரு கோவி, அண்ணணுடைய பதிவு: தமிழர்களுக்கு பாலியலில் ஏன் இவ்வளவு ஆர்வம் ?

Friday, 16 January 2009

'சோ'-வாலே வந்த வினை

பல பேருக்கு, சில பிரச்சினை. சில பேருக்கு, பல பிரச்சினை. பிரச்சினை இல்லாத ஆளு யாரு? உங்களுக்கு இல்லையா? எனக்கு இல்லையா? எல்லாருக்கும் இருக்கு பிரச்சினை. எவ்வளவு! தான் பிரச்சினை இருந்தாலும், நமக்கு அடுத்தவன் பிரச்சினைய எட்டி பார்க்கிறத்துலெ உள்ள சுகமே தனி தான். சரி தானே. இல்லைன்னா, நீங்கள்லாம் நம்ம வலைப்பதிவுக்கு இப்ப படிக்க வந்திருபீங்களா?... ஹி..ஹி.. அதுக்குள்ளே கோவிச்சுக்கிட்டா எப்படி?

அப்போ நான் பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த நேரம்...

எனக்கு ஒரு பிரச்சினைன்னு சொல்ல முடியாது.

இந்த பக்கத்துவீட்டு 'அல்டாப் அழகேசி'... அவ, கே.ஆர்.விஜயாத் தனமா போட்டிருக்கிற அலங்காரம் எல்லாருக்கும் தெரியனும்னு சாயந்திரம் 4.00 மணிக்கே வந்திருவா மொட்ட மாடிக்கு, படிக்கிறேன் பேர்வழின்னு ஒரு புஸ்தகத்தை தூக்கிக்கிட்டு. அதை பார்த்துட்டு எங்க நைனா, என்னை போட்டு திட்டுவாரு " ஹூம்... அது புள்ளை, இங்க நம்ம வீட்டிலே ஒரு எருமையல்லோ வளர்கிறேன்" என்று. அவருக்கு எங்கே தெரிய போகுது, அவளோட ஓய்.விஜயாத் தனம்.

பக்கத்து தெருவில் இருக்கிற 'முட்டை கண்ணு முருகெசனை' எப்படியாவது காலை வாரி விட்டு அவுட் ஆக்கிட்டா அவுங்க டீம் தோத்திரும், அடுத்த வாரம் நம்ம டீம் தான் சாம்பியன், கபடியிலே.

என்று எனக்கு இருக்கிற சில பிரச்சினைலெ இது ஒண்ணு,அதாங்க.... "இங்கிலீஷூ பீரியடு"

தமிழ் நாட்டில் பிறந்தவன் நான், பேச ஒரு மொழி, அடி வாங்கி கொடுப்பது வேறு ஒரு மொழி என்ற தமிழனின் தலையெழுத்துக்கு...நான் மட்டும் விதிவிலக்கா என்ன? எங்க பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஒரு ஆங்கில ஆசிரியர் தான், அவர் அன்று வகுப்பு எடுப்பதாக இருந்தது. அதனாலே அடியிலே இருந்து தப்பிக்க நெனச்சி லீவ் லெட்டர் எழுதி வழக்கம் போல எங்க நைனா கையெழுத்தையும் நானே போட்டு கொடுத்துட்டேன்.

மறுநாள், கிளாஸ் வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போது, பியூன் ஒரு சீட்டை கொண்டுவந்து அவர்கிட்டே கொடுத்தார். வாத்தியார்,'டேய், நையாண்டி நைனா, உன்னை ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார் போய் பார்த்துட்டு வா' என்றார்.எனக்கு அப்பவே கிலி பிடிச்சிட்டு, "ஆகா இன்னைக்கு நமக்கு சங்கு தாண்டா, இங்கே இவரு போட்டு வாங்குவாறு அப்புறம் நம்ம நைனாவும். அட..ச்..சே, பேசாமே வேற எவனையாவது வைச்சு கையெழுத்து போட்டு கொடுத்திருக்கணும், இப்ப அடிவாங்குறததுக்கு அவனும் நம்ம கூட வந்திருப்பான்..." என்று எண்ணியவாறு சென்றேன்.

அங்கே போனால் நான் எதிர் பார்த்தவாறே, ஹெட்மாஸ்டரோட ஒரு கையில் என்னோட லீவ் லெட்டர் , மறு கையில் பிரம்பு. நான் சென்றதும், டக்கென பிரம்பை வீசி விட்டு என் காதை பிடித்து திருக ஆரம்பித்தார், லெட்டரை காட்டியாவாறே
"அதான் அங்கே "ஆஸ், ஐ யெம் ஸபரிங்...." -ன்னு போட்டிருக்கியே, அப்புறம் எதுக்கு? "சோ, ஐ ரிக்வெஸ்ட் ...", -ன்னு இங்கே ஒரு "சோ" போட்டிருக்கே, "சோ" சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டும், நீக்க வேண்டிய இடத்தில் நீக்க வேண்டும் இல்லை என்றால் மண்டை வீங்கி விடும் ( இது ஆங்கில பாடம் தான், அரசியல் பாடம் அல்ல ) என்று சொல்லி, சொல்லி காதை திருகினார். "எத்தனை தடவைடா சொல்லி தாரது...." என்றாவாறே என் தலையிலும் குட்டினார். அன்று என் தலை மாட்டியதா? இல்லை தப்பியதா? என்று எனக்கே தெரியாது. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? பின்னே வெளியே வரும்போது " அட..ச்...சே... இந்த 'சோ'-வாலே வினையாகி போச்சேன்னு" நொந்து வெளியே வந்தேன்.

Thursday, 15 January 2009

"வில்லு" படம் பார்த்த பதிவர்களுக்கு...

என்னை விஜயின் வில்லிலிருந்து காப்பாற்றிய பதிவுலக தந்தங்களுக்கு....( எத்தனை நாளைக்குத்தான் தங்கங்கள் என்று சொல்வது?)

விஜய் - பிரபுதேவா கூட்டணி கொண்ட "போக்கிரி" நான் பார்க்கவில்லை. அதனால் காத்திருந்தேன் பார்க்க, "வில்லை".

உங்கள் கருத்துக்கு பின் பார்க்கலாம் என்று இருந்தேன். இப்போது அதன் விமர்சனங்களை பார்க்கும் போது " நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்... " என்ற வாத்தியார் பாடல் காதிலே தேன் பாச்சி செல்கிறது.

"சரி என்னதான்?" எடுத்திருக்காங்கன்ணு போய் பார்க்கலாம் என்றால், "பாவி மக்கா....! வச்சிருக்கிற விலை????". "அடங்கொக்கா மக்க" என்று சொல்ல வைக்கிறது. 200 ரூபாயாம்..! மல்டி பிலக்ஸில். இது என்னை போல், பிச்சைக் காசு சம்பளம் வாங்குகிற சாதாரண தகவல் தொழில் நுட்ப பொறியாளனுக்கு சாத்தியமா? C.E.O-வா இருந்தா மட்டும் தான் சாத்தியம், இது சத்தியம் என்று, படம் பார்க்கிற எண்ணத்தை குழி தோண்டாமலே புதைத்தேன்.

அதுலெ ஒரு 100 ரூபாய எடுத்து, ஆதரவற்ற சிறுவர்களுக்கு படிக்க ஏதோ நூலகம் கட்ராங்கலாம் அதுக்கு கொடுத்திட்டு. மீதம் இருக்கிற 100 ரூபாயிலே, சமத்துவபுரம் சென்று ஒரு குவாட்டர் அடிக்கலாம் என்று முடிவு செய்தேன். "சரி... நல்லது எல்லாம் பண்றே, மொத்தமா 200 ரூபாயையும் கொடுத்திட்டு நிம்மதியா இருக்கலாமே...?." என்று தோன்றுகிறதா? உங்களுக்கு. உங்களோட இந்த இந்த நல்ல எண்ணம் தாங்க என்னை உலுக்கி எடுக்குது.

என்னையும், என்னோட 200 ரூபாயையும் காப்பாத்த நீங்க என்ன..! ஒரு மரண வேதனைய அனுபவிச்சிருப்பீங்க... வில்லு படம் பார்த்து. அந்த துக்கம் என் தொண்டைய அடைகிதுங்க, அதை தொரக்க தான் இந்த முயற்சி. கண்டிப்பா உங்க சார்பாகவும் ஒரு கப் வச்சி, அதையும் நானே அடிச்சிறுவேன்.

இங்கு வில்லு படத்தை பார்க்க நான் வைத்திருந்த 200 ரூபாயை காப்பாற்றி, என்னையும் காப்பாற்றிய சக பதிவுலக தந்தங்களே, உங்களுக்கு நன்றி.