Monday, 24 November 2008

த்தூ... த்தேறி... ஐ. டி நாய்களா.....

த்தூ... தேறி... ஐ. டி நாய்களா..... என்ன மசுருக்குடா... ஐ. டி கம்பனிலே சேர்ந்தீங்க...?

அதான் படிச்சேல்லோ.... பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில். படிச்சிப் புட்டு... இங்கே என்ன மயிர தூக்கி நிறுத்த வந்தே? உங்களுக்கு எல்லாம், நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள்லாம் இங்கே வந்து வெள்ளைக்காரானுங்களுக்கு செருப்பு தொடைகக வந்துட்டா? அந்த பாழாப் போன TNPSC. UPSC, RRB, Bank Probationary Officers இதெல்லாம் எவனுக்குடா நடத்தறது? இந்த தேர்வை எல்லாம் தொங்கி சாகிறது தானேடா உங்க தலை எழுத்து.... அதை யாருடா மாற்ற சொன்னது....

படித்தது ஒன்று செய்வது ஒன்று, வெக்கம் இல்லை..... பரதேசி நாய்ங்களா?

உங்கப்பன் தோப்பிலும் துறவிலும் இருந்து சம்பாதிக்கிறான்.... நீங்களும் அவர்களுக்கு போய் உதவி செய்து வயிரை கழுவ வேண்டியது தானே... உங்களுக்கு எதற்கு பணம் சம்பாதிக்க வேண்டிய எண்ணம்? கஞ்சிகே வழி இல்லாத கூமுட்டைக்கு பொறந்த பண்னாடை நீயி. உனக்கு தன்மானம் இருக்கலாமா?

கஞ்சி, கஞ்சி என கத்தியே பசியை மறந்து கொண்டிருந்த உனக்கு Cathey Pacific-ல் பயணமா?
ஏர் பிடித்து பிழைத்து வந்த உனக்கு Air India ஒரு கேடா...?

என்னது? நீ சம்பாதிச்சி தான் உங்கப்பனை குடிசையில் இருந்து கோபுரத்துக்கு கொண்டு வர போறியா?....ஏண்டா... அறிவில்லெ உனக்கு, அதுக்கு தானேடா.... தேசத்தில் பலபேரு திட்டம் போட்டு, திட்டம் அறிவிக்கிறாங்க... அதை எல்லாம் நீயே செஞ்சுகிட்டா ... போடுற திட்டம் எல்லாம்.. எவனுக்குடா? இந்த சின்ன அறிவு கூட இல்ல... நீ எல்லாம்....த் தூ...

என்னது, இருந்த சின்ன கடையையும் வித்து உன்னை படிக்க வச்சாரா உங்க அப்பா?... என்ன கொடுமைடா ..இது... அவர்தான் புத்தி கெட்டு வித்தார் என்றால்..நீ அவரை விட பெரிய கூமுட்டையா இருக்கே... அவரே வேண்டாம்ணு தானே வித்துட்டார்... நீ அதை திருப்பி வாங்கி அவர் கைலே கொடுக்கணும்னு நினைக்கிறீயே .. நீ எல்லாம் ஒரு பிள்ளை....? உனக்கு ஒரு மூஞ்சி....?

இப்படி பொறாமையில் எத்தனை விமர்சனங்களும், வசவுகளும் வந்தாலும்,
நான் ஐ.டி-இல் சம்பாதித்து, தன்னை தேய்த்து என்னை வளர்த்த என் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த உலகில் என்ன வசதிகள் உள்ளதோ அத்தனையும் அனுபவிக்க செய்வேன், என்ன விலை என்றாலும் கொடுத்து.

நானோ அவர்களோ இறந்த பிறகு சொர்க்கத்தில் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று காண முடியாது. அதனால் இப்போ என் கண் முன்னே அத்தனையும் நடத்தி பார்ப்பேன்.

( இதன் பிறகும் ஐ.டி.யை பலவாறு தூற்றி அநேக பதிவுகள் வரும், வரட்டும்...
"வாழ்ந்தாலும் ஏசும்.. வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...... "
என்ற பாடலை எப்போதும் என் மனத்தில் நிறுத்துகிறேன், அது போல் நீங்களும்....)

Thursday, 20 November 2008

பெருந்தொகை... ரம்மு.... ஆம் அந்த ஃபேமஸ் பார் தான்....

"அண்ணே..."
"ஹ்ம் என்ன?"
"அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே"
"ஹ்ம்.."
"என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..."
"ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? தம்பி... பொம்பளைங்களே நம்பவே கூடாது.. நம்பினே நடு ரோடு தான்.."
"ஆமாண்னே...."

இப்படி தொடங்கும் டாஸ்மாக் உரையாடல் பெரும்பாலும் பேச்சில் தொடங்கி நட்பில் முடிகிறது என்பது வரலாறு.

நண்பனின் வீட்டு திருமணத்தில், உற்சாக பாண விருந்தில், ஏமாற்றிய பெண்ணை நினைத்து (பூ மாதிரி பொண்ணு???)... நினைத்து... நினைத்து.. பார்த்துக் கொண்டே.. சரக்கை போட்டுக்கொண்டு சிகரட்டை... ஊதுவதில்... தொடங்கி

பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, பின் எந்த கல்யாணம் வந்தாலும், முடிந்த வரை சரக்கை போட்டுக் கொண்டு இருந்து, எப்படா இன்னொருவனுக்கு கல்யாணம் வரும் என்றும் காத்திருந்து, அந்த வீட்டு திருமண, உற்சாக பாண விருந்திற்கு எதேச்சையாக செல்வது போல் திட்டமிட்டு(திட்டமிட்டா அப்புறம் என்ன எதேச்சை?) செல்வது.... பின்னர் டேமேஜரிடம் திட்டு வாங்கின, பதவி உயர்வு வாங்கின என்று சகல நிகழ்வுகளுக்கும் சென்று தண்ணி அடித்து..நட்பை தொடர்வது

நார்மலாக கல்பா... இழுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் பிறர் முன் சிப், சிப்பாக சிப்பி.. முன் உதட்டாலேயே முகர்ந்து கொண்டிருந்து விட்டு, அவர்கள் கை கழுவவோ அல்ல வேறு ஏதேனும் இயற்கை செயலுக்காகவோ எழுந்ததும் இயல்பாய் குடிப்பது போல் பாவனை காட்டி ஒரு கல்பில் இழுத்து விட்டு அடுத்த ரவுண்டை தொடர்வது...

பின்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பொதுநண்பர் மூலம் அறிமுகமாகி, ஒரு சினேகப் புன்னகையில் மெயில் அட்ரஸ் வாங்கி, போன் நம்பர் வாங்கி, ஈ என்று இளித்துக்கொண்டே நீங்க என்ன அடிப்பீங்க? என்று கேட்டு அதை பெற்றும் கொடுத்து, யார் எவர் என்பதை முழுமையாக தெரியாமல் குத்து மதிப்பாக தகவல்களை பரிமாறி..பின் சிகரட் , சைய்டு-டிஸ் பரிமாறிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கிறது..

இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் யார் எவர் என்றே தெரியாமல் கிலாசோடு கிலாசு உரசி.. சகலமும் பகிர்ந்த... நட்பு... திருமணம் முடிந்தாலும் முற்று பெறாமல் இறுதி வரை செல்வதை பார்த்தோ, அனுபவித்தோ, அனுப‌வத்தை கேட்டோ இருக்கிறோம்...

இந்த மேட்டரை எந்த பிரபலமான பாடலும் விளக்க வில்லை என்றே தெரிகிறது..
அதனால் நானே ஒரு சிறந்த குறுந்தொகை பாடலை உல்டா செய்து விட்டேன்..

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...
மற்றவர்கள் குடித்து விட்டு ஸ்ட்டெடியா நிக்க...


பாடல்..

நீயும் நானும் யார் ஆகியரோ
பியரும் பிராந்தியும் எம்முறை கேளிர்
யானும் நீயும் வேறு வழி வந்தும்
ரம் மிடை கலந்த கோக் போல
குடியரிடை நெஞ்சம் தாம் கலந்தனவேஒரு குடிமகன், இன்னொரு குடிமகனிடம் கூறும் குடிப்பாடல்..
ரம்மி ஆடினார் ரம்மி என்ற புலவர்..(ரம் அடித்துவிட்டு ரம்மி ஆடுபவராக இருக்கும், அதனால் வந்த பெயராக இருக்கும்..)

இது இந்த பதிவின் எதிர் பதிவு அல்ல, அதனை ஒட்டி வந்தது......

Monday, 17 November 2008

வாழ்க்கைப் போராட்டம்

அணிஅணியாய் வீரர்கள்,
ஒரே அடி,
செத்து விழுந்தன எறும்புகள்.


(மொக்கையா இருந்தாலும் பொறுத்துக் கொள்க....)

Thursday, 13 November 2008

பொறுப்பை மறந்தது காவல்துறை மட்டுமா????

நேற்று சட்ட கல்லூரியில், மன்னிக்க சென்னை, அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் ( என்ன சரிதானா ? )நடந்த வன்முறை சம்பவம் கண்டனத்திற்கு உரியதே, இதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை.

இதனை நான் மாணவர்களின் மோதலாக கருதவில்லை. மோதல் நடந்த இடம் கல்லூரியாக போய் விட்டதே என்றே வருந்துகிறேன். வேறு எங்காவது இந்த மோதல் நடந்திருந்தால் நாம் என்ன? நினைத்திருப்போம். இரண்டு மாணவ குழுவுக்கு இடையே நடந்த மோதல் என்றா???

இதனை ஒட்டி நம் பதிவர்கள் அனைவரும் தங்கள் கருத்தை வைதாயிற்று, வைத்தாயிற்று. இதில் பலரும் தங்கள் வாதத்தை வைக்கும் போது காவல் துறையையும் தங்கள் வார்த்தை குண்டுகளால் தைக்க தவற வில்லை. அவர்களின் சமூக அக்கறை பெருமிதம் கொள்ள வைக்கிறது. வாழ்க பொது ஜனம்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அனைவரின் வேண்டுகோளும்/குற்றச்சாட்டும் அந்த காவலர்கள் நம்ம செல்லுலாய்டு நாயகர்கள் போல் பாய்ந்து பிடித்து நிறுத்த வேண்டுமாம். முடியுமா அது? காவலர்கள் வேலையும் சில சட்ட திட்டத்திற்கு அடங்கியே தான் இருக்கும், இருக்கிறது. ( உடனே, அவர்கள் எல்லா விடயத்திலும் சட்ட திட்டத்திற்கு அடங்கியா செய்கிறார்கள் என்று புலி பாய்ச்சல் பாய வேண்டாம், அநேக விடயங்களில் இல்லை என்றே எனக்கும் தெரியும்).

ஒரு கல்லூரியில் சென்று சும்மா ஒரு சில மாணவர்களை கைத்து செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நீங்களும், மற்ற ஊடாக புலிகளும் விட்டு விடுவீர்களா? "காவல்துறையின் அராஜாகம். காவல்துறையின் ஆணவ போக்கு. காவல் துறையின் திமிர், காவல் துறையின் ... அது.... காவல் துறையின் ..இது..." என்று போட்டு நுங்கு எடுக்க மாட்டீங்க????

மாணவர்களே என்ன சொல்வார்கள்? இன்னைக்கு நாங்க அடிசிப்போம், நாளைக்கு நாங்க ஒண்ணா சேர்ந்ததுப்போம். இடையிலே நீ என்ன? அப்படி என்று தானே கேப்பார்கள். அதே போல் கல்லூரியின் உள்ளே ஹாக்கி மட்டை வைத்திருந்தார்கள், கிரிக்கட் மட்டை வைத்திருந்தார்கள் என்று சொல்லி கைது செய்ய முடியுமா? பின்னே கல்லூரியில் இதெல்லாம் இல்லாமெ வேற என்ன இருக்கும்?

சும்மா கத்தியை வைத்திருப்பதற்கெல்லாம் கைது செய்யிய முடியாது? என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியே கைது செய்யலாம் என்றாலும் அது ஏதும் அறியாத அப்பாவி வேண்டும் என்றால் கைது செய்யலாம். ஆனால் அவர்கள் அப்படியா? அவர்கள் சட்டத்தை அறிந்தததை விட சட்டத்தின் ஓட்டைகளையே அறிந்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? சரி அப்படியே ஒரு காவல்காரார் பாய்ந்து போகிறார் என்று வையுங்கள்; அவர் என்ன ஆயுதம்? யுக்தி கொண்டு அவனை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சுட்டு விடலாமா? தடி கொண்டு தாக்கி விடலாமா? இல்லை நம்ம கைய்ப்புள்ள மாதிரி வேண்டாம் அழுதிருவேன் என்று மிரட்டல்(?) விடலாமா?

சரி அப்படியே ஒருவர் பாய்ந்து ஏதாவது ஆகி விட்டால், அந்த காவலரின் நிலை என்ன? அந்த காவலரின் குடும்பத்தின் நிலை என்ன? இதை கேட்டால் உடனே நீங்கள் அது அவர்களின் கடமை என்று சொல்வீர்கள். அப்படி சொல்லும் நாம் நம் கடமையை சரி வர செய்திருக்கிறோமா? செய்கிறோமா? செய்வோமா? நாம் நம்முடைய குற்றத்திற்கு, இயலாமைக்கு பிறரையே குற்றம் சாட்டி பழகி விட்டவர்கள். அதனாலேயே இப்படியும் சொல்லி கொண்டிருக்கிறோம்.

சட்டம் என்ன சொல்கிறது? இன்னது செய்தால் நாம் இன்ன தண்டனைக்கு, இன்ன நிலமைக்கு ஆளாவோம் என்று அறியாதவர் செய்தால் அவர்களுக்கு தண்டனை இல்லை என்று சொல்கிறது. (சரிதானே... தவறா இருந்தால், பிழை பொறுத்து அருள்க. அதாவது தான் செய்வத்தின் விளைவு அறியாத குழந்தைகளையும், மன நலம் பாதித்தவரையும் சட்டம் தண்டிக்காது என்று சொல்ல வந்தது...) ஆனால் இவர்கள் அப்படி அல்ல. பொறுத்திருந்து பார்ப்போம் சட்டம் என்ன செய்கிறது என்று?

அந்த இடத்தில், உங்கள் தகப்பனாரோ, மகனோ காவல் பணியில் இருந்திருந்தால் நீங்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எதிர் பார்த்திருப்பீர்கள்???? ( தயவு செய்து மன சாட்சியுடன் சொல்லவும்.......)

நாம் ரோட்டில் விபத்து இன்றி வாகனம் ஒட்ட " உங்கள் குடும்பம் உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறது" என்று எழுதி வைத்திருக்கிறாரே காவலர், அந்த அறிவிப்பு அவருக்கும் தானே?