Friday, 29 May 2009

"சாதா" பிளாட் டிவியை, "வால் மவுண்ட்" பிளாஸ்மா டிவியாக மாற்ற ஒரு அருமையான வழி
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஒரு டிவி வாங்கனும்னு.

"அதான் நம்ம தலிவரு கொடுக்கிறார் போய் வாங்கிக்க வேண்டியது தானே" என்று சொல்லுறீங்களா?

அந்த டிவி எல்லாம் கட்சிலே இருந்து, வருமானமே இல்லாமே, வருமானத்தையும், அவமானத்தையும் மீறி சொத்து சேர்த்து வச்சிருக்கிறவங்களுக்கு தான் கொடுப்பாங்களாம். என்னை மாதிரி ஏழை சாப்ட்வேர் எஞ்சிநீருகெல்லாம் தர மாட்டாங்களாம். அதுவும் நான் ஆசைபட்டது..... இந்த மேலே படத்திலே இருக்கிற மாதிரி ஒரு பிளாஸ்மா டிவி வாங்கனும்னு.


ஆனா ஒரு ஏழை சாப்டுவேர் எஞ்சிநீருகிட்டே அவ்ளோ பணம் இருக்குமா? அதுவும் இப்ப கம்பினி, பணம் எல்லாம் "ரீசஸ்" போகிற டைமான "ரிசஸன்" நேரம். அதனாலே எதோ என்னாலே ஒரு பிளாட் ஸ்க்ரீன் டிவி தான் வாங்க முடிஞ்சது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. இந்த பக்கத்திலே இருக்கு பார்த்துகோங்க.என்னைக்கோ எதோ ஒரு போதை நேரத்திலே படிச்சேங்க ஒரு கவிதை, போதையிலே படிச்சதாலே சரியா ஞாபகத்திலே இல்லே இருந்தாலும் சொல்றேன்.


"இலைகள்
சும்மா
இருக்க
ஆசைப்பட்டாலும்
காற்று
விடுவதில்லை"யாம்...


சரியா? (சரியா இருந்தா இங்கேயே படிச்சிக்கங்க, இல்லேன்னா சரியா இருக்குற இடத்திலே போய் படிச்சுக்கங்க. வெய்ட்...வெய்ட்... அதுக்காக டப்புன்னு நம்ம பதிவை விட்டுட்டு வெளியிலே போயிறாதீங்க....)

அது மாதிரி, மனம், இருக்கிற பிளாட் ஸ்க்ரீன் டிவியோட சும்மா இருக்க ஆசைப்பட்டாலும், ஆசை என்ற சாத்தான் சும்மா இருக்க விட வில்லை. அதனாலே பல நாளா தூக்கம் இல்லாமே யோசிச்சேன், யோசிச்சேன், யோசிச்சேன்.... கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். ஐஸ்வர்யாராயை கல்யாணம் செய்துக்கலாம்னு ஆசை எல்லாருக்கும் இருக்கும் இருந்தாலும் பல்லுள்ளவன், பக்கோடா சாப்புடுவான். 'பொக்கை' என்ன செய்ய முடியும்? அவல நெனச்சி ஓரலைதான் இடிக்க முடியும். அதுக்கப்புறம் விதி வசத்தாலே நமக்கு அமையிற தங்கமணிகளுக்கு ஐஸ்வர்யா புடவை, நதியா கம்மலு, குஷ்பு கொண்டைன்னு வாங்கி கொடுத்து, அவங்க முகத்திலே ஐஸ்வர்யாவையும், நதியாவையும், குஷ்புவையும் தேடி தேடி சோர்ந்து மறுபடியும் தேடி தேடி கண்டடைகிற விக்கிரமாஎத்தர்கள் அல்லவா நாம. அதனாலே யோசிச்சு எடுத்த அந்த முடிவை செயல்படுதிரலாம்னு முடிவே செஞ்சிட்டேன்.

சும்மா பிளாஸ்மா டிவி, பிளாஸ்மா டிவின்னு அலையாமே நம்ம கிட்டே இருக்கிற பிளாட் ஸ்க்ரீன் டிவியையே பிளாஸ்மா டிவியா மாத்திரலாம்னு முடிவு செஞ்சிட்டேன். விளைவு சூப்பரா. ஒரு பிளாஸ்மா டிவி ரெடியாகி வீட்லே மாட்டிட்டேன். நீங்களே பாருங்களேன்.எப்படி சூப்பரா இருக்கா???

ஆமா, நாம ஒரு படா எஞ்சிநீயறு. நம்ம மூளையிலாம் எப்படி??? யோசிக்கும். பிளாட் ஸ்க்ரீன் டிவியை பிளாஸ்மா டிவியாக மாற்ற முடிவு செஞ்சி, அதுக்குன்னு யோசிச்சு நான் கண்டு பிடிச்ச ஐடியாவை செயல் படுத்தினேன். மிக அருமையான ஐடியா.

அப்படி ஒன்னும் பெரிய வேலை எல்லாம் இல்லை ரொம்ப சிம்பிள் தான். எனக்கு தெரிஞ்ச விவரத்தை நான் யாருக்கும் சொல்லக்கூடாது ஏதாவது பெரிய கம்பனிக்காரன் கிட்டே சொல்லி பதவியும் பைசாவும் அள்ளிரலாம்னு தான் நெனச்சேன்.

ப்பச்... இருந்தாலும் நம்ம பதிவர் எல்லாரும் எவ்ளோ நல்லவங்க, அவங்களுக்கும் நாம இதை சொல்லிருவோம் அப்படின்னு நெனச்சி சொல்றேன். தயவு செய்து இந்த விவரத்தை நீங்க மட்டும் யூஸ் பண்ணுங்க. மத்தவங்க கிட்டே சொல்லனும்...னா..... கூட சொல்லிகோங்க.... பதிவை படிச்சி எழுதி என்ன சாதிச்சே அப்படின்னு கேள்வி கேட்குரவங்க முகத்துலே கரியை பூசுங்க....

பதிவருங்களா...!!! கொக்கா....???

சரி இப்ப கவனமா பார்த்து செய்யுங்க.....

இப்ப ஐடியாவை சொல்றேன்...

ப்பச் பத்து பக்கத்திற்கு வெலக்குரதுக்கு பதிலா ஒரு படமா தாரேன் பாருங்க அதுதான் சிம்பிள்.

பாருங்களேன்....
.
.
.
.
.
.
.
.
.
இந்த அருமையான ஐடியாவை நீங்க செயல்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ராயல்டீ என்ன ராயல்டீ.... ஒரு சிங்கிள்டீ கூட தர வேண்டாம் போங்க...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அன்பார்ந்த பதிவர்களே இந்த ஐடியாவுக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க. உங்களோட பிளாஸ்மா டிவி அனுபவத்தை அப்புறமா வந்து சொல்லுங்க....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, 28 May 2009

"சாரு" சாருக்காக ஒரு கதை.

சாரு அண்ணே.... வணக்கமுங்க.

உங்களோட "வன்முறையின் தோல்வி" படிச்சேன். ஆகா என்ன ஒரு எழுத்து, நடை, கருத்து ? சும்மா சொல்ல கூடாது. எல்லாமே அருமை. அருமை. என்ன ஒரு அலசல், தகவல் ஆராச்சி!!! நான் படிச்ச வரலாற்று பொஸ்தவத்திலெ கூட இப்படி எழுதி வைக்கலை அதற்காக உங்களுக்கு ஓராயிரம் கோடி நன்றிகள்.

நீங்க ஊருக்கே கதை எழுதி யாவாரம் பண்ணுற ஆளு. ஆனா நான் உங்கள மாதிரி ஆளுங்க சொல்லுற கதைகளை கேட்டு, படிச்சி பொழுத ஓட்டுற வெட்டிப்பய. நீங்க ஏற்கனவே இந்த கதைய கேட்டு இருப்பீங்க, நான் உங்க கிட்டே இந்த கதைய சொல்லுறதா நெனைக்கபுடாது. ஞாபகப்படுத்துறேன் அம்புட்டுதான்.

சரி இனி நாம கதைக்கு போலாமா...

ஒரு ஊருலே ஒருத்தன் இருந்தான். ஒரு ஊருனாலே பலபேரு இருப்பாங்க ஆனா ஏன் ஒருத்தன் இருந்தான் என்று சொல்லுறாங்க? அதை பற்றி நாம ரொம்ப விவாதிக்காமே சட்டுன்னு சொல்றேன், ஏன்னா அவன் நம்ம கதாநாயகன். நம்ம கதாநாயகன், நல்லவன் வல்லவன் ஏழைபங்காளன் தயாள குணம் உள்ளவன். அவன் பல பேருக்கு பல உதவிகள் செஞ்சிருக்கான். செய்வான். அவன் ஒரு நா ஒரு மருத்துவமனைக்கு சென்று உதவிகள் செய்யலாம்னு போனான். அங்கே இருந்த மருத்துவரும் அவனை கூட்டிகிட்டு போய் வார்டு வார்டா காமிச்சாரு.

ஒரு வார்டிலே ஒருத்தன் 'சேது' கணக்கா ஒருத்தன் இருந்தான் அவன் "மாயம்மா", "மாயம்மா" என்று கத்திகிட்டே இருந்தான்.

நம்ம கதாநாயகன், "இவன் யாரு? இவன் ஏன் மாயம்மா... மாயம்மான்னு கத்திகிட்டே கிடக்கான்" என்று கேட்டான்.

அதுக்கு அந்த டாக்டரு சொன்னாரு "இவன் ஒரு பயங்கர படிப்பாளி, இவன் படிச்சிகிட்டு இருக்கும் போது அந்த மாயம்மாங்குற பொண்ணை காதலிச்சான் ஆனா அவனோட காதல் நிறைவேறலை, அப்புறம் அந்த பொண்ணுக்கு போன வருஷம் மார்ச்சு மாசம் ரெண்டாம் தேதி கல்யாணம் ஆயிட்டு அன்னிலேருந்து இப்படி பைத்தியமா ஆயிட்டான்"னாறு.

"அச்..சச்சோ..ச்சோ.... ஐயோ பாவம்" அப்படின்ட்டு அடுத்த வார்டுக்கு போனாங்க, அங்கே போய் பார்த்தா அங்கே 'குணா' கமல் கணக்கா ஒருத்தன் இருந்தான் அவனும் சும்மா இல்லாமே "மாயம்மா" "மாயம்மா" ன்னு பொலம்பிகிட்டு இருந்தான்.

இதை பார்த்த வொடனே நம்ம கதாநாயகன் மூளை பயங்கரமா யோசிச்சிட்டு இப்ப உங்க மூளை யோசிச்சிருக்கே அந்தா மாதிரி "அட பார்ரா, இங்கேயும் ஒருத்தன் பொலம்பிகிட்டு இருக்கானே, அந்த மாயம்மா ஒரு அம்சமான பிகரா இருந்திருக்கணும் இப்படி பலபேரை பயித்தியமா அலைய வச்சிருக்காளே" என்று மனசுக்குள்ளே எண்ணி கிட்டு "என்ன....டாக்டர் அந்த மாயம்மா பெரிய பிகரோ? இப்படி பலபேரை அலைய வச்சிருக்காளே? இங்கே பாருங்க, இங்கேயும் அவளை காதலிச்சி ஏமாந்த ஒருத்தன் பொலம்பிகிட்டு இருக்கான் பாருங்க." ன்னானாம்.

அதை கேட்ட டாக்டரு சிரிச்சிகிட்டே சொன்னாராம் "ஐயோ, ஐயோ உங்களோட ஒரு தமாசா இருக்கே, இவனும் படிப்பாளிதான் அறிவாளிதான் ஆனா இவன் மாயம்மாவை காதலிச்சவன் இல்லே, அந்த மார்ச்சு மாதம் ரெண்டாம்தேதி மாயம்மா கழுத்திலே தாலி கட்டுன புருஷன் தான் அவன்"ன்னாராம்.


கதை சொல்லும் நீதி: ஒரே மேட்டரு எல்லா பக்கமும் ஒர்க் அவுட் ஆகாது. நல்லா விசாரிக்கணும் அதுக்கு அப்புறம் தான் சொல்லணும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நானும் தவறு செய்திருக்கலாம் மதிப்பிற்குரிய சாருவும் தவறு செய்திருக்கலாம், அதற்காக கண்டிப்பாக உங்க கருத்தை பதிஞ்சி சொல்லிட்டு போங்க.

அன்பார்ந்த பதிவர்களே இந்த பதிவுக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Wednesday, 27 May 2009

எதுவரை நண்பனாய் இருக்க!!!வெயில் மங்கிய ஒரு மாலை வேளையில்...
இடுப்பை தழுவும் கைகளை வருடியவாறே..
போதையின் நினைவுகளில் கை கோர்த்தவர்களாய்..
நீயும் நானும் ஆடி கொண்டிருந்தோம்..!!

ஏதோ நினைவு வந்தவளாய்
சட்டெனக் கேட்டாய்
"நான் யார் உனக்கு..?"
என்னவென்று சொல்ல முடியாத
மௌனத்தில் நான் உறைந்து போனேன்..!!
உன் கண்கள் பார்த்து சொன்னேன்..
"கவர்ச்சியை கவர் பண்ணாமல், என்னை கவர்ந்த
கவரி மான் நீ..!!
அனைப்பை பொழியும் அருவியாய்...
கண்ணடிப்பில் சிருங்காரியாய்...
சுக துக்கங்களை 'சேர்ந்து'
பகிரும் மனைவியாய்...
நீ என் எல்லாமுமாக இருக்கிறாய்..
உன்னோடு இருக்கும் பொழுதுகளில்
மட்டுமே நான் என்னை
நானாக உணருகிறேன்..!!
கவனமாயும் இருக்கிறேன்..!!"

வழிந்து ஓடிய உன் கோப்பையில்
நிரம்பி இருந்தன ஜின்னும்,
என் உழைப்பும் மற்றும் ஏமாளித்தனமும்..!!
பின்பு நான் உன்னைக் கேட்டேன்..
"எனக்காக இத்தனை செய்தாய்..
உனக்காக நான் என்ன
செய்யப் போகிறேன்..?"
இறுக்கி என் கைகளை பிடித்து..
என் தோள்களில் சாய்ந்து
கொண்டு நீ சொன்னாய்..
"என் கூடவே இரு..
'ராமசேனா' வரும் வரை... நண்பனாக இரு..!!!"

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

உண்மையை சொன்னேன்.

இதை அண்ணன் கார்த்திகை பாண்டி அவர்களின் கவிதைக்கு எதிர் கவிதை என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பு ஏற்காது.

நண்பர்களே உங்க கருத்தை பின்னூட்டமா சொல்லுங்க.... மறக்காதீங்க.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Tuesday, 26 May 2009

இதுவரை வெளிவரா நமீதா மசாலா படங்கள். (ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்...ஜொள்லாமல் பார்க்கவும்)

"இதுவரைக்கும் மக்களுக்கு ஆக்கமா என்ன செஞ்சிருக்கேன்?"
"ஒன்னும் இல்லை"
இதுவரை மக்கள் பார்க்காத ஒரு விசயம் செய்யணும், தரனும் அப்படின்னு முடிவு எடுத்து இந்த படங்களை தருகிறேன். இந்த படங்களை பார்த்தவுடன் வாயில் ஜொள் வரும், மட்டுப்படுத்தி கொள்ளவும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

தோழர்களே, இப்படி ஒரு விஷயம் செஞ்சா நீங்க ஆதரவு தருவீங்களா?
உங்க ஆதரவை பின்னூட்டமா போடுங்களேன்.

Saturday, 23 May 2009

சுண்டாமல் இழுக்கும் விளம்பர உலகம்

நடப்பு காலம் பெரிய பெரிய கார்பொரேட் கம்பனிகளின் காலமா போச்சி... எங்கே பார்த்தாலும் கார்பொரேட் கம்பனிகளின் ஆதிக்கம் தான். முன்னே எல்லாம் கிராமத்து சுவர்களிலே "போடுங்கம்மா ஒட்டு மைனா சின்னத்தை பார்த்து"என்றும் "நமது சின்னம் மைனா சின்னம்" என்றும் "நமது வேட்பாளர் நைனா" என்றும் தான் இருக்கும் ஆனா இன்று அந்த விளம்பரங்களுக்கு தேர்தல் கமிசனால் சில கட்டுப்பாடுகள் வந்தது காரணத்தினாலும் மேலும் "வரும்படியும்" இல்லாத காரணத்தால் இப்போது பல வர்த்தக விளம்பரங்கள் காணப்படுகிறது. (மக்கள் கொஞ்ச கொஞ்சமா உசாராயிட்டு இருக்காங்க???)

நாட்கள் செல்ல செல்ல இந்த மாதிரி விளம்பரங்கள் எல்லாம் சரிபடாது... இது மக்களை ரொம்ப ரீச் ஆகலை... மக்களை நல்லா சென்று அடைய வேண்டும் என்றால் மக்கள் உற்று நோக்கும் சில நிகழ்வுகள், சம்பவங்கள் மற்றும் இடங்களிலே விளம்பரங்கள் இடம்பெறவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. இந்த எண்ணத்தின் வெளிப்பாடே இப்போது நம்மை எரிச்சலடைய வைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மொக்கை படங்களில் இருந்து நமக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் " கமர்சியல் பிரேக்கு" கள்.

பின்னர் இதுவும் சரிப்பட்டு வரலே. மக்கள் சேனல் மாத்திட்டு போய்விடுகிறார்கள். விளம்பரக்காரர்கள் விடுவார்களா? சேனலை மாத்திட்டு போன மக்கள் எப்படியும் திரும்பி வருவாங்க, அவர்களை விடக்கூடாது எப்படியும் திரும்பி வரும்போது அவர்களை விடாமே அமுக்கணும். நம்ம விளம்பரம் இல்லாட்டாலும் நம்ம "லோகோ"வையாவது மக்களை பார்க்க வச்சிரணும் என்று சிந்தித்ததின் விளைவு பல டிசைன்களில் "லோகோ" கொண்ட விளையாட்டு ஆட்டக்காரர்களின் உடைகள்.

இப்போ... இதுவும் சரி இல்லை, கால்பந்தட்டக்காரன் கிரிக்கட்டு பாக்குறது இல்லை, கிரிகெட்டுகாரன் கூடைபந்து பாக்குறது இல்லை என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள்.... அதனாலே எல்லாரும் ஆர்வமா பார்குற ஒன்னு வேணும் என்று தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கிறார்கள்.

விளம்பரக்காரர்கள் தேடி... தேடி... இதோ கீழே இருக்கிற மாதிரி பண்ணிருவாங்கலோன்னு பயமா இருக்கு... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.................மறக்காமே, உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

Friday, 22 May 2009

இது எப்படி இருக்கு?

அடக் கொடுமையே.... இப்படியும் நடக்குமா???!!!

Thursday, 21 May 2009

இது A-ஜோக்கு தானே?

அடப்பாவமே... இங்க பாருங்க இவன் நிலமைய!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Wednesday, 20 May 2009

எப்படி??? இருந்த நான் இப்படி!!! ஆகிட்டேன் - ராமதாஸ் மற்றும் வைகோ

தேர்தல் முடிவுக்கு முன்னே நம்ம தலைவர்கள் எல்லாம் இப்படி இருந்தாங்க...தேர்தல் முடிவுக்கு அப்புறம்.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *