Wednesday, 27 May 2009

எதுவரை நண்பனாய் இருக்க!!!வெயில் மங்கிய ஒரு மாலை வேளையில்...
இடுப்பை தழுவும் கைகளை வருடியவாறே..
போதையின் நினைவுகளில் கை கோர்த்தவர்களாய்..
நீயும் நானும் ஆடி கொண்டிருந்தோம்..!!

ஏதோ நினைவு வந்தவளாய்
சட்டெனக் கேட்டாய்
"நான் யார் உனக்கு..?"
என்னவென்று சொல்ல முடியாத
மௌனத்தில் நான் உறைந்து போனேன்..!!
உன் கண்கள் பார்த்து சொன்னேன்..
"கவர்ச்சியை கவர் பண்ணாமல், என்னை கவர்ந்த
கவரி மான் நீ..!!
அனைப்பை பொழியும் அருவியாய்...
கண்ணடிப்பில் சிருங்காரியாய்...
சுக துக்கங்களை 'சேர்ந்து'
பகிரும் மனைவியாய்...
நீ என் எல்லாமுமாக இருக்கிறாய்..
உன்னோடு இருக்கும் பொழுதுகளில்
மட்டுமே நான் என்னை
நானாக உணருகிறேன்..!!
கவனமாயும் இருக்கிறேன்..!!"

வழிந்து ஓடிய உன் கோப்பையில்
நிரம்பி இருந்தன ஜின்னும்,
என் உழைப்பும் மற்றும் ஏமாளித்தனமும்..!!
பின்பு நான் உன்னைக் கேட்டேன்..
"எனக்காக இத்தனை செய்தாய்..
உனக்காக நான் என்ன
செய்யப் போகிறேன்..?"
இறுக்கி என் கைகளை பிடித்து..
என் தோள்களில் சாய்ந்து
கொண்டு நீ சொன்னாய்..
"என் கூடவே இரு..
'ராமசேனா' வரும் வரை... நண்பனாக இரு..!!!"

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

உண்மையை சொன்னேன்.

இதை அண்ணன் கார்த்திகை பாண்டி அவர்களின் கவிதைக்கு எதிர் கவிதை என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பு ஏற்காது.

நண்பர்களே உங்க கருத்தை பின்னூட்டமா சொல்லுங்க.... மறக்காதீங்க.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

30 comments:

ரமேஷ் வைத்யா said...

1st

நையாண்டி நைனா said...

/* ரமேஷ் வைத்யா said...
1st*/

thanks anna...

சொல்லரசன் said...

இப்படி ஒரு பதிவு வரும் என்றுதான் நேற்று உங்களை பற்றி பின்னுட்டம் இட்டேன் அங்கே.

நையாண்டி நைனா said...

/*இப்படி ஒரு பதிவு வரும் என்றுதான் நேற்று உங்களை பற்றி பின்னுட்டம் இட்டேன் அங்கே.*/

இந்த பதிவை பத்தி ஒன்னும் சொல்லாமே நழுவுறீங்களே????


/*நாங்கள் பொறுத்துகொள்கிறோம்,ஆனால் நீங்கள் இல்லாமல் நையான்டியைதான்
எங்களால் பொறுத்துகொள்ளமுடியவில்லை.*/

அடப்பாவிகளா.... அவ்வளவு கொடுமையாவா இருக்கு???? ஆவ்வ்வ்வ் .....

T.V.Radhakrishnan said...

:-))))

அத்திரி said...

நைனாவோட நையாண்டி நடக்கட்டும்

வேத்தியன் said...

:-)

வசந்த் ஆதிமூலம் said...

நைனா மெய்யாலுமாவே கலக்குற..... நமீதாவ மட்டும் மறந்துடாதடா செல்லம்....

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல் நண்பா

தேனீ - சுந்தர் said...

இதை பேராசிரியர் பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன்.

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
:-))))*/

Thank You sir.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
நைனாவோட நையாண்டி நடக்கட்டும்*/

அண்ணாச்சி... அடிக்கடி வாங்க அண்ணாச்சி...

மிக நன்றி அண்ணாச்சி.

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
:-)*/

:-)
:-)
:-)

நையாண்டி நைனா said...

/*வசந்த் ஆதிமூலம் said...
நைனா மெய்யாலுமாவே கலக்குற..... நமீதாவ மட்டும் மறந்துடாதடா செல்லம்....*/

நான் மறந்தாலும் நீ மறக்க மாட்டே போலே இருக்கே செல்லம்.

நானும் மறக்க மாட்டேன்.

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
கலக்கல் நண்பா*/

மிக நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*தேனீ - சுந்தர் said...
இதை பேராசிரியர் பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன்.*/

சரி நண்பா நீ ஆசை பட்டுட்டே.... செஞ்சிருவோம்

வேத்தியன் said...

ஏதாச்சும் நுண்ணரசியல் இருக்காண்ணே???
:-)

வேத்தியன் said...

ரொம்ப நன்னா கீது...

வேத்தியன் said...

இதை அண்ணன் கார்த்திகை பாண்டி அவர்களின் கவிதைக்கு எதிர் கவிதை என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பு ஏற்காது.
//

இது மேட்டர்...
நம்பீட்டேனுங்க...
:-)

" உழவன் " " Uzhavan " said...

சபாஷ்.. சரியான போட்டி..

//"கவர்ச்சியை கவர் பண்ணாமல், என்னை கவர்ந்த
கவரி மான் நீ..!! //

கலக்கல் வரிகள் நைனா..

நையாண்டி நைனா said...

/*
வேத்தியன் said...
ஏதாச்சும் நுண்ணரசியல் இருக்காண்ணே???
:-)
*/

"நுண்ணரசியல்" அப்படின்னா என்ன?

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
ரொம்ப நன்னா கீது...*/

நொம்ப தாங்க்ஸ்

நையாண்டி நைனா said...

/*இது மேட்டர்...
நம்பீட்டேனுங்க...
:-)*/

இப்பதான் நீங்க உடன்பிறப்பு.
நன்றி.

நையாண்டி நைனா said...

/* " உழவன் " " Uzhavan " said...
சபாஷ்.. சரியான போட்டி..
கலக்கல் வரிகள் நைனா..*/

நன்றி அண்ணா.

நையாண்டி நைனா said...

25.
(இந்த ஐடியாவிற்கு, வேத்தியனுக்கு நன்றி)

Suresh Kumar said...

இறுக்கி என் கைகளை பிடித்து..
என் தோள்களில் சாய்ந்து
கொண்டு நீ சொன்னாய்..
"என் கூடவே இரு..
'ராமசேனா' வரும் வரை... நண்பனாக இரு..!!!"///////////////////

கலக்கல் நையாண்டி .......... நைனா

நையாண்டி நைனா said...

Thanks Dear Friend Suresh Kumar.
Visit blog regularly daily or in periodic intervels.

நையாண்டி நைனா said...

என்ன இது நம்ம கானா பானா வை காணும் இன்னும்???

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் வந்துட்டேன்.. ஒழுங்கா, நிம்மதியா ஒரு கவுஜ எழுத விடுறீங்களா என்னை? வர வர லொள்ளு ஓவராப் போகுது.. ஆனா பாருங்க.. ரசிக்கிற மாதிரி செய்றதால ஒன்னும் சொல்ல முடியல..:-)

நையாண்டி நைனா said...

/*
கார்த்திகைப் பாண்டியன் said...
நான் வந்துட்டேன்.. ஒழுங்கா, நிம்மதியா ஒரு கவுஜ எழுத விடுறீங்களா என்னை? வர வர லொள்ளு ஓவராப் போகுது.. ஆனா பாருங்க.. ரசிக்கிற மாதிரி செய்றதால ஒன்னும் சொல்ல முடியல..:-)
*/
நண்பா! நீங்க நிறைய எழுதுங்க, அப்படின்னா தான் எங்க வண்டி ஓடும்.

நண்பா! நீங்க சொல்லுறது ஐடியல் கேசஸ் நான் சொல்றது ரியல் கேசஸ்.

நன்றி நண்பா.