Thursday, 9 July 2009

கேமிராமேனும் தேவதையும் - நீதிக்கதை

ஜாக்கி அண்ணன் தெரியுமா, நம்ம ஜாக்கி அண்ணன். ஆமா ஆமா.... இந்த பதிவர் சந்திப்புலே எல்லாம் படம் எடுத்து பிலிம் காட்டுவாரே அவரே தான். அவரு ஒரு நா, தன்னோட kodak KB10 கேமிராவே எடுத்துகிட்டு, அப்படியே நகர்வலம் போனாரு அப்படியே கண்ணுலே கண்டதெல்லாம், படம் பிடிச்சி படம் பிடிச்சி சும்மா போட்டு தாக்கிகினே வந்தாரு.....

அப்படியே அவரு காட்டு பக்கம் வந்தாரு.... அதை பார்த்தவொடனே அவருக்கு அப்பிடியே ஊட்டி நெனப்பு வந்துட்டு.... அதனாலே தன்னோட சூழ்நிலைய மறந்து படம் புடிச்சிகினே இருந்தாரு.... இப்படி இருக்கப்போ... ஒரு அழகான ஏரி அதனோட அழகு அப்படின்னு அவரு படம் புடிச்சிகிட்டே இருந்தப்போ...திடீர்னு அவரோட கேமிரா ஏரிலே விழுந்துட்டு.... அதை அவராலே தாங்க முடியலே... உடனே அந்த ஏரி கரையிலே உக்காந்து.... அழ ஆரம்பிச்சி.... கோடாலி விழுந்த மரம் வெட்டிக்கு... எதோ தேவதை வந்து எடுத்து கொடுத்துச்சாம் இப்ப மட்டும் ஏன் வரலே.... அப்புறம் என்ன மசு*க்குடா.. இந்த பாடம்லாம் வைக்கிறீங்க என்று... தன்னோட ஸ்டைலில் திட்டி அழுதுகிட்டு இருந்தாரு.... இவரு சொல்ற வார்த்தைகளை கேட்க பொறுக்காமே.... அந்த பழைய கதையிலே வந்த தேவதையோட எள்ளு பேத்தி தேவதை வந்து....

எப்பா... ஜாக்கி... கவலை படாதே... உன்னோட நம்பிக்கையும் உன்னோட "தமிழும்" ஏரிக்குள்ளே சீரியல் பார்த்துகிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு... எங்க பூட்டி மரம்வெட்டிக்கு செஞ்ச மாதிரியே... நான் உனக்கு... செய்றேன்னு சொல்லி ஏரிக்குள்ளே போய் ரெட் ஒன் கேமிரா ஒன்னை கொண்டு வந்து கொடுத்துச்சி...அதை பார்த்து ரொம்ப சந்தோசம் ஆயிட்டாரு நம்ம ஜாக்கி அண்ணே.... இது தான்... இது தான்... இதை தான் எதிர்பார்த்தேன்... இதே எனக்கு போதும் என்று சந்தோசமா துள்ளி குதிச்சி.... வாங்கி வச்சிகிட்டாரு....

இதை பார்த்த தேவதை... கொளம்பி போச்சி... "ஏய் ..ஜாக்கி... என்ன நீ? கதையை எல்லாம் கரெக்டா சொன்னே... ஆனா இப்ப ராங்கா பிஹெவ் பண்றே...??? நீ முழுசா படிக்கலியா..!!!!" அப்படின்னு கேட்டுச்சு...

அப்போ நம்ம ஜாக்கி அண்ணன் சொன்னாரு.... "அதெல்லாம், ஒன்னும் இல்லே... நீயும் சரி உங்க பாட்டியும் சரி... அந்த கதைய மட்டும் தான் முழுசா படிச்சிருக்கீங்க... பட் நான் அந்த தமிழ் புக்கை புல்லா படிச்சிருக்கேன்..."

அப்புறம் ஏன் இப்படி பிஹெவ் பண்றே...???

அடங்கொக்கா மக்க... நான் எல்லாம் கரீட்டா தான் படிச்சிருக்கேன்... அந்த புத்தகத்திலே.. இந்த கதைக்கு அடுத்த பக்கத்திலே....
"அதிஷ்டம் ஒரு முறை தான் தட்டும்"...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"
இப்படில்லாம், போட்டிருந்துச்சி.... அத நான் பாலோ பண்றேன்... ஆமா... உங்க பரம்பரைக்கே... கரெக்டான பொருளை எடுத்து வர தெரியாதா....? இருந்தாலும் நன்றி. நான் கெளம்புறேன்.... ஜாக்கியா கொக்கா....

தேவதை "நீ முன்னே விறகு வெட்டி பண்ண மாதிரி செஞ்சிருந்தா உனக்கு மூனும் கெடசிருக்குமே...ன்னுச்சு..."

எல்லாம் சரிதான், ஆனா எனக்கு தேவையானது எல்லாம் இதுலே இருக்கு... பட் உங்க பாட்டி செஞ்ச காரியத்தாலே அவன் உழைக்கிறதே விட்டுட்டான். ஆனா நான் அப்படி இல்லே... இதுக்கு மேல என்னாலே பதில் சொல்ல முடியாது.... நேரம் இல்லே.. முடிஞ்சா அடுத்த கதையிலே மீட் பண்ணலாம்...

உன்னாலே முடிஞ்சா, கதையோட எண்டுலே, இந்த நைனா பய மொக்கையா ஒரு மெசேஜ் சொல்வான் நீதிங்கிற பேருலே... உக்காந்து அதை படிச்சிட்டு போ... அப்படின்னு சொல்லி நடைய கட்டிட்டாரு...தேவதை சீரியல் பாக்குற அவசரத்துலே ஒன்னும் சொல்லாமே போயிருச்சி... ஆனா நீங்க முழுசா படிச்சி பின்னூட்டமும் போட்டுட்டு போங்க.

கதை சொல்லும் நீதி:

1.எல்லாரும் இன்னும் பாட்டன் பூட்டன் காலத்திலேயே இருக்கிற மாதிரி இருப்பாங்கன்னு நெனைக்க கூடாது.

2.நம்ம தாத்தாவோ பாட்டியோ தெரிஞ்சோ தெரியாமலோ சிலது செஞ்சிருப்பாங்க அதை கண்ணை மூடிகிட்டு நாமும் பாலோ பண்ண கூடாது.

3.எதை படிச்சாலும் முழுசா படிக்கணும், அதுக்கு முன்னே என்ன இருக்கு? அதுக்கு அப்புறம் என்ன இருக்கு அப்படின்னு பார்த்து படிக்கணும்.

4.படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.குறிப்பு: கதை எழுத அனுமதி கொடுத்த அண்ணன் ஜாக்கிக்கு நன்றி.


.

37 comments:

jackiesekar said...

இது கதையாக இருந்தாலும் அதில் வரும் பேச்சு வார்த்தைகள் அத்தனையும் என்னை அப்படியே பிரதிபலிக்கின்றன...என் பதிவை முழுசாக வாசித்தால் மட்டுமே இப்படி எழுத முடியும் நன்றி நைனா....

jackiesekar said...

கதை சொல்லும் நீதி:

1.எல்லாரும் இன்னும் பாட்டன் பூட்டன் காலத்திலேயே இருக்கிற மாதிரி இருப்பாங்கன்னு நெனைக்க கூடாது.

2.நம்ம தாத்தாவோ பாட்டியோ தெரிஞ்சோ தெரியாமலோ சிலது செஞ்சிருப்பாங்க அதை கண்ணை மூடிகிட்டு நாமும் பாலோ பண்ண கூடாது.

3.எதை படிச்சாலும் முழுசா படிக்கணும், அதுக்கு முன்னே என்ன இருக்கு? அதுக்கு அப்புறம் என்ன இருக்கு அப்படின்னு பார்த்து படிக்கணும்.

4.படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.//


என்னை பொறுத்த வரை கதையைவிட இந்த நீதியில் உன்னை ஒரு பெரியாராகவே பார்க்கின்றேன்...

ரொம்ப புடிச்ச வரி படித்ததை அப்படியே வாந்தி எடுக்காம யோசி என்பது...ரொம்ப அருமை...

விக்னேஷ்வரி said...

இன்னொரு முக்கியமான நீதி: பொம்பளைங்க சீரியல் பாக்குற நேரத்துல அவங்கள ஈசியா ஏமாத்திடலாம். :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டேய்..

இன்னாங்கடா நடக்குது இங்க..?!!!

ஒருத்தன் அடிக்கிற மாதிரி அடிங்குறான்.. இன்னொருத்தன் அடி வாங்குற மாதிரி நடிக்கிறான்..

இங்க யாருக்கு யாரு கொ.ப.செ...?

வால்பையன் said...

ஒருவேளை அந்த தேவதை, நீ பேராசைக்காரன் உனக்கு எதுவுமே கிடையாதுன்னு சொல்லிருச்சுனா!

தண்டோரா said...

//உன்னோட "தமிழும்" ஏரிக்குள்ளே சீரியல் பார்த்துகிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு..///

நைனா ”பிராண்ட்’ நக்கல்...நகம் பட்ருச்சுங்கோ...

அ.மு.செய்யது said...

//ஏரிக்குள்ளே சீரியல் பார்த்துகிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு//

ஹா..ஹா...

ரசித்து சிரித்தேன் ..கலக்கல்.

Cable Sankar said...

/இங்க யாருக்கு யாரு கொ.ப.செ...?//

எப்பப்பார்த்தாலும் சந்தேகம்.. நல்லதே மனசுல நினைக்காத இருக்கீரூ.

பீர் | Peer said...

;)

சொல்லரசன் said...

//படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.//

இது யாருக்கு உங்க‌ பாலோய‌ருக்கா?

டக்ளஸ்....... said...

ஆஹா, இன்னைக்கு ஜாக்கியா...?
வெயிட்டிங் ஃபார் சதக்குப்பை.....!
:)

சூரியன் said...

:)

குவாட்டர் கோயிந்தன் said...

கதை நல்லா இருக்கு.

கதைய விட நீதி "சரக்கு" நிறைந்தது.

செந்தழல் ரவி said...

4.படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.


ஹி ஹி !!!!!!!! இங்கதான் மாட்டினேன்...!!!

ஜெட்லி said...

கூட்டு சதி நடக்கதுங்கோ....

ஆ.ஞானசேகரன் said...

கதையும் நீதியும் அருமைங்கோ

நையாண்டி நைனா said...

/*
jackiesekar said...
இது கதையாக இருந்தாலும் அதில் வரும் பேச்சு வார்த்தைகள் அத்தனையும் என்னை அப்படியே பிரதிபலிக்கின்றன...என் பதிவை முழுசாக வாசித்தால் மட்டுமே இப்படி எழுத முடியும் நன்றி நைனா....
*/

நன்றி நன்றி....

உங்களோட பதிவை விடாமே படிப்பேன் அண்ணே...

நையாண்டி நைனா said...

/*
jackiesekar said...
கதை சொல்லும் நீதி:

.........
ரொம்ப புடிச்ச வரி படித்ததை அப்படியே வாந்தி எடுக்காம யோசி என்பது...ரொம்ப அருமை...
*/

அண்ணே...
பெரியார் மிகப் பெரியவர். நாமெல்லாம் சாதாரணம்.

நையாண்டி நைனா said...

/*
விக்னேஷ்வரி said...
இன்னொரு முக்கியமான நீதி: பொம்பளைங்க சீரியல் பாக்குற நேரத்துல அவங்கள ஈசியா ஏமாத்திடலாம். :)
*/
வாங்க அக்கா... வாங்க....

அட... உங்களோட இந்த வரிகளும் நல்லா தான் இருக்கு.

தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
டேய்..

இன்னாங்கடா நடக்குது இங்க..?!!!

ஒருத்தன் அடிக்கிற மாதிரி அடிங்குறான்.. இன்னொருத்தன் அடி வாங்குற மாதிரி நடிக்கிறான்..

இங்க யாருக்கு யாரு கொ.ப.செ...?
*/

அண்ணே... இப்படில்லாம் சந்தேக படாதீங்கண்ணே....
உலகில் ஆயிரம் நடந்தாலும், நான் உங்களை விட்டு எப்படின்னே போவேன்.

இப்படிக்கு
நையாண்டி நைனா.
பொருளாளர்
அகில இந்திய உண்மைதமிழன் பதிவு படிப்போர் பேரவை

நையாண்டி நைனா.
தலைவர்
அகில இந்திய உண்மைதமிழன் பதிவு படிப்போர் பேரவை - மும்பை கிளை

cc: 1. திரு.டக்லஸ்.
தலைவர்
அகில இந்திய உண்மைதமிழன் பதிவு படிப்போர் பேரவை - குஜராத் கிளை.

(பொருளாலரை சந்தேகிப்பது தவறு என்பதை தலைமைக்கு நினைவூட்டுகிறோம்.)

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
ஒருவேளை அந்த தேவதை, நீ பேராசைக்காரன் உனக்கு எதுவுமே கிடையாதுன்னு சொல்லிருச்சுனா!*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அண்ணே.

நையாண்டி நைனா said...

/*
தண்டோரா said...
//உன்னோட "தமிழும்" ஏரிக்குள்ளே சீரியல் பார்த்துகிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு..///

நைனா ”பிராண்ட்’ நக்கல்...நகம் பட்ருச்சுங்கோ...
*/
அண்ணே... வருகைக்கு மிக மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*
அ.மு.செய்யது said...
//ஏரிக்குள்ளே சீரியல் பார்த்துகிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு//

ஹா..ஹா...

ரசித்து சிரித்தேன் ..கலக்கல்.
*/
நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க....

நையாண்டி நைனா said...

/*
Cable Sankar said...
/இங்க யாருக்கு யாரு கொ.ப.செ...?//

எப்பப்பார்த்தாலும் சந்தேகம்.. நல்லதே மனசுல நினைக்காத இருக்கீரூ.
*/

அமாம்ண்ணே.. தலைமை சரி இல்லை... ரொம்ப சந்தேகபடுறாரு....

நையாண்டி நைனா said...

/* பீர் | Peer said...
;)*/
Thanks Nanba.
:-)))))))

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.//

இது யாருக்கு உங்க‌ பாலோய‌ருக்கா?*/

உங்களுக்கு தான்...

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்....... said...
ஆஹா, இன்னைக்கு ஜாக்கியா...?
வெயிட்டிங் ஃபார் சதக்குப்பை.....!
:)*/

இனியாவது முழுசா படிச்சிட்டு சொல்லு...
குப்பை இப்பத்தான் பெருக்கிட்டு இருக்கேன்.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
:)*/

::--))

நையாண்டி நைனா said...

/*குவாட்டர் கோயிந்தன் said...
கதை நல்லா இருக்கு.

கதைய விட நீதி "சரக்கு" நிறைந்தது.*/

மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*செந்தழல் ரவி said...
4.படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.


ஹி ஹி !!!!!!!! இங்கதான் மாட்டினேன்...!!!
*/
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே...
அடிக்கடி வாங்க. உங்க ஆதரவை தாங்க.

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
கூட்டு சதி நடக்கதுங்கோ....*/

அடியேய்... கூட்டு சதியும் இல்லே, குழம்பு சதியும் இல்லே...
நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
கதையும் நீதியும் அருமைங்கோ*/

Nandri Nanba.

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனா ஜி.. கதை ஜி.. கும்கான் ஜி.. அச்சா ஜி.. சூப்பர் ஜி.. அவ்வவ்.. சாச்சாஜி..

சுந்தர் said...

//படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.//

நச் வரிகள். நீங்க கூட கருத்து கந்த சாமி யா மாறினதுதான், வியப்பளிக்கிறது.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
நைனா ஜி.. கதை ஜி.. கும்கான் ஜி.. அச்சா ஜி.. சூப்பர் ஜி.. அவ்வவ்.. சாச்சாஜி..
*/
என்னா இது பாராட்டி கிட்டே உள்ளூர அழுவுறீங்க...
மனசிலே பெரிய சிவாஜி கணேசன்னு நெனப்பா...
நேரிலே வந்தேன்??? ... சொல்லரசங்கிட்டே பிடிச்சி கொடுத்துருவேன்... ஆமா சொல்லிபுட்டேன்.

நையாண்டி நைனா said...

/* சுந்தர் said...
//படிச்ச விஷயங்களை கேனத்தனமா பாலோ பண்ணாமே, புத்திசாலி தனமா பாலோ பண்ணனும்.//

நச் வரிகள். நீங்க கூட கருத்து கந்த சாமி யா மாறினதுதான், வியப்பளிக்கிறது.*/

ஐயா சாமிகாளா...
ஒரு லைனு கூட நம்மளை இந்த மாதிரி எழுதவுட மாட்டீங்களா?????
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல கதை - நல்ல நக்கல் - இப்படித்தான் எங்கள் சமுதாயம் கிணற்றுத் தவளையாக இருக்கிறது....