Thursday, 23 July 2009

பிரபல பதிவர் டக்ளசுக்கு ஒரு மாடல்.அன்பு (இது நமது சகபதிவர் 'அன்பை'விளித்து அல்ல )டக்ளசு அவர்களே...

மாசற்ற நமது தமிழ் தாய் பெற்றெடுத்த மாணிக்கமே, ஏன் இந்த திடீர் முடிவு? எந்த முடிவா ? இனி வலையில் எழுதுவதில்லை என்று ஒரு முடிவு எடுத்தாயே அதை தான் சொல்கிறேன். பொது கக்கூசு சுவற்றிலும், வீதி ஓர சகிலா பட போஸ்டரிலும் எழுதி வந்த சக பதிவர்கள் மத்தியில் நீ மட்டுமே வலையில் எழுதும் திடம் பெற்று இருந்தாய், திறன் பெற்று இருந்தாய், அப்படி இருந்த நீ, அந்த வளம் பெற்ற நீ, அந்த வரம் பெற்ற நீ அந்த 'தில்' (வேற்று மொழி உபயோகத்திற்கு மன்னிக்க..., யோவ் டக்கு நீ ஏன்யா எந்திருச்சு நிக்க, அய்யோ...டக்கு அது "மன்னிக்க".) பெற்று இருந்த நீ திடீரென இப்படி ஒரு முடிவெடுத்தாயே ஏன்.???? நீ வலையில் எழுத வந்ததால், மீனவர்களுக்கு புது வாழ்வு கிடைத்தது, அவர்களின் "வலை"க்கு வேலை வந்தது. ஆனால் அந்தோ.... பரிதாபம் இப்போதோ அவர்கள் கவனிப்பாறின்றி நடு வீதியில், மீண்டும் மன்னிக்க நடுக்கடலில். ஆம் துன்பமெனும் கடலில்.நிற்க. (அய்யோ டக்கு... இதுக்கும் ஏன்யா எந்திச்சி எந்திச்சி நிக்க? லெட்டர் எழுதுனா இப்படிலாம் போடணும், இதெல்லாம் தெரியாமே நீயெல்லாம் பதிவெழுத வந்துட்டே...)

நீங்கள் இதுவரை ஆற்றிய பணிகளால் விளைந்ததை நீங்கள் மறைக்கலாம் ஆனால் நாங்கள் மறக்க முடியுமா? அப்படி செய்தால் நாங்கள் தமிழர்களா?

நீங்கள் பதிவெழுத வந்த பிறகுதான் காலைக்கதிரவனும் காலம்பர எழுந்து வேலைக்கு வருகிறான்.

நீங்கள் பதிவெழுத வந்த பிறகுதான் பசுவிலே இருந்தே பசும்பால் வந்தது... குறிப்பாக நீங்கள் ஒரு தத்துவமும் சொன்னீர்களே... "பசு பல நிறம், பால் ஒரே நிறம்" என்று அட...அட.... என்ன ஒரு உண்மை !!!, என்ன ஒரு தத்துவம் !!!. இது வரலாறு குறித்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, அது விட்டது.., நாங்கள் குறித்து கொண்டோம்.

பல நிறத்தில் இருக்கிற பசு ஒரே நிறத்தில் பால் கொடுக்கும்போது, ஒரே நிறத்தில் இருக்கிற எருமை ஏன் பல நிறத்தில் பால் கொடுக்கவில்லை என்று நீங்கள் கொந்தளித்து ஒரு பதிவு எழுதி இருந்தீர்களே...!!! அதற்கு நமது விஞ்ஞானிகள் இன்னும் மண்டையை உடைத்து கொண்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றனவே....

நீங்க பதிவு எழுதி மூட்டிய உற்சாகத்தில் தான் ஒபாமாவே ஒய்யாரமாய் ஜனாதிபதி ஒபாமா என்றானார்.


இதெல்லாம் உங்க பெருமைகளில் ஒரு சிறு துளி, இதனை இங்கே இந்த சூழ்நிலையிலும் நான் சொல்லவில்லை என்றால் தமிழ் கூறும் "குட் வோல்ட்" என்னை எஸ்குஸ் பண்ணாது.

நீங்கள் இன்னும் பல சாதனைகளை செய்யவேண்டும்,

ராஜ பக்சேவை ராப்பிச்சையாக்க வேண்டும்,
ஒசாமாவை பேசாமே ஆக்க வேண்டும்,
லஞ்சபேயை மை தடவி பாட்டிலிலே அடைக்க வேண்டும்
----------------......................

என்று இன்னும் பல காரியங்களை செய்து
எதிரிகளுக்கு எனிமா கொடுக்கவேண்டும் நீங்கள்

ஆகவே... நீங்கள் மீண்டும் "வலை"யில் எழுத வரவேண்டும், "வலை"யில் எழுத வரவேண்டும், "வலை"யில் எழுத வரவேண்டும்.


சற்று முன் கிடைத்த செய்தி: நீங்கள் எழுதுவதை நிறுத்தியதால், ஒரு தொண்டர் ஒரு வினோத போராட்டத்தை ஆரம்பித்து உள்ளார்.எங்களுக்கா இல்லாவிட்டாலும், இந்த வினோத போராட்டத்தை முடித்து வைக்கவேண்டியாவது தாங்கள் வரவேண்டும்.பின்குறிப்பு: தலைப்பில் இருப்பது எழுத்து பிழை அல்ல. ஒருவேளை நண்பர் வலை உலகை விட்டு போனால் இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று வைத்திருந்த ஒரு மாடல். தறுதலை போகாமே உக்காந்து மொக்கை போட்டுகிட்டே இருக்கே. அதனாலே பொறுமை இல்லாம இந்த மாடலை, அதாங்க மடலை போஸ்ட் பண்ணிட்டேன்.


30 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட நையாண்டி

Suresh Kumar said...

சூப்பர் நையாண்டி நைனா

Suresh Kumar said...

படம் எல்லாம் எப்படி நைனா செலக்ட் பண்ணுறீங்க .

அந்த கடைசி போராட்டம் எழுறுதுக்கா இல்ல எழுதாம போறதுக்கா ............ டவுட் தான்

டக்ளஸ்... said...

ரைட்டு.

குடந்தை அன்புமணி said...

ம்...ம்... நடத்துங்க...

தராசு said...

நைனா,

எப்பிடி இப்பிடி எல்லாம்,

அடிச்சு ஆடுங்க.

சூரியன் said...

நல்ல மாடல் ..

அக்மார்க் 88888:767676 நையாண்டி குத்தபட்ட மாடல். சீ மடல்

பிரியமுடன்.........வசந்த் said...

நைனா உங்க கிண்டலுக்கு அளவே இல்லாம போச்சு.........

கீழை ராஸா said...

நல்ல காமெடியாயிருக்கு...ந நை

ஒரு வேண்டுகோள்...பல வண்ணத்தில் எழுதுவதை விட கருப்பு வெள்ளையில் எழுதி தேவையானதை வண்ணப்படுத்தினால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்

கார்த்திக் said...

கல கல கல-னு சிரிக்க வைக்கிறீங்க போல.. கலக்குங்க....

சொல்லரசன் said...

உங்க கவுஜையை அவரு போடுவதும் அவரு பதிவை நீங்க போடுவதும்
என்ன கூத்து நடத்தறிங்க இரண்டு பேரும் சேர்ந்து.

டவுசர் பாண்டி said...

//நிற்க. (அய்யோ டக்கு... இதுக்கும் ஏன்யா எந்திச்சி எந்திச்சி நிக்க?//

சோக்கு , தான் போ !! சொம்மா, மெர்சலா கீதுபா, பெரி டமாஸ் கார ஆளுப்பா நீ,நம்ப ஏரியா, கிட்ட இருந்தேன்னு வெச்சிக்கோ, சொம்மா மாரியாத்தா, கூட டிஸ்கோ ஆடும் போல கீதே, உடு அலேக்.

ஜெட்லி said...

டவுசர் கிளிஞ்சது போ....

வால்பையன் said...

செம கலாய்த்தல் நைனா!

வரிகள் ஒவ்வோன்னும் சிரிப்பு தேன் தடவியது!

வாழ்க நீர் பலநூறாண்டு!

(டக்ளஸுக்கு டவுசர் அவுந்ததா இல்லையா)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏண்ணே இந்த இடுகையை போடுற அளவுக்கெல்லாம் நாங்க ஓஸ்து கிடையாதில்ல?

T.V.Radhakrishnan said...

:-)))

ஆ.ஞானசேகரன் said...

நையாண்டினா அது நைனாதான்....

டக்ளஸ்... said...

பாவிகளா, யாராச்சும் ஒரு ஆள், ஒரே ஒரு ஆளாவது, காமெடிக்காகவாவது கண்டனம் சொல்லுவீங்கன்னு பார்த்தா, கவுத்தீட்டீங்களேயா...?
அந்தளவுக்கு.....!
ம்ம்.. நடத்துங்கய்யா.

Anbu said...

\\அன்பு (இது நமது சகபதிவர் 'அன்பை'விளித்து அல்ல )டக்ளசு அவர்களே...\\\\


இது நானா...இல்லை வேற யாருமா..

Anbu said...

நல்லா இருக்குங்க நையாண்டி..

நையாண்டி நைனா said...

/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட நையாண்டி*/

நன்றி நண்பரே...
அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
சூப்பர் நையாண்டி நைனா*/

தேங்க்ஸ் தோழரே.
தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கும்.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
படம் எல்லாம் எப்படி நைனா செலக்ட் பண்ணுறீங்க .

அந்த கடைசி போராட்டம் எழுறுதுக்கா இல்ல எழுதாம போறதுக்கா ............ டவுட் தான்*/

நமக்கு எழுததான் வரமாட்டேங்குது.(அஆவ்வ்வ்வ்)படமாவது கொஞ்சம் நல்லா போடலாம்னு முயற்சி செய்யுறது தான்.

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
ரைட்டு.*/
எச்சூஸ் மீ நீங்க என்ன வாத்தியார் வேலை பார்த்துகிட்டு இருக்கீங்க... பதில் கடிதம் போடுய்யா வென்று.

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
ம்...ம்... நடத்துங்க...*/

நன்றி நண்பரே.

Suresh said...

Sema Nayandi :-) Kalakal ithu unga style pathivu kalakunga nanba

Suresh said...

oru oru varikkum nalla sirichaen sema nakkal :-)

Suresh said...

kadasi padam final touch nu solluvangalae athu mathiri he he he sema touch.. eppadi thovachu kaya pottu thonga podurathu .. pavam ya namma duck romba kalutha pudichi thukkitinga ;)

நாஞ்சில் நாதம் said...

:))

cheena (சீனா) said...

எம்பா டக்ள்சு பதில் இடுகை போட்ட்டானா இல்லையா

நல்லாருக்கு நைனா - நல்வழ்த்துக்ள்