Thursday, 10 December 2009

கேபிள்.IPS. மே/ப. பதிவர்பண்ணையம்

நம்ம 'கேபிள்' அண்ணாத்தைக்கும் மொக்கை படமா பார்த்து...பார்த்து... விமர்சனம் போட்டு போட்டு போர் அடிச்சு போச்சு... அண்ணனுக்கு வீட்லயும் செம டோசு... அந்த வருத்தம் தாங்காம நம்ம தண்டோரா அண்ணன் ஆபீசுக்கு வந்து சரக்கை போட்டுட்டு செம அழுகாச்சி... அதை பார்த்து நம்ம தண்டோரா அண்ணனுக்கு கண்லே இருந்து ரெத்தமே வந்துட்டு...

"கேபிளு... நாம யாருன்னு காட்டனும்டா... நீ பேசாமே போலிசு வேலைக்கு சேர்ந்துறுடா... "

"அண்ணே.. என்னை எல்லாம் அந்த வேலைக்கு சேர்த்துப்பாங்களா... "

"என்ன இப்படி கேட்டுபுட்டே.. அதுக்கான அத்தனை தகுதியும் தெரமையும் உனக்கு இருக்கு... "

"அண்ணே அது சாத்தியமா... "

" எல்லா போலிசுகாரங்களுக்கும் தொப்பை இருக்கு... உனக்கும் இருக்கு... அப்புறம் அந்த பசுபதி மே/ப.ராசக்காபாளையம் படம் பார்த்தியா...? அதுலே ரஞ்சித் எப்படி போலிசு ஆகுறாரு... "

"அப்படிங்குறீங்க... "

"ஆமா.. நாளைக்கே... நீ நம்ம சிட்டி கமிஷனரை போய் பார்த்து சேர்ந்துறு..."

கமிசனர் அலுவலகம்

"யாருப்பா நீயி...."

"நான் போலிஸ் வேலைக்கு சேர வந்திருக்கேன்.. "

"இப்படி திடு திப்புன்னு போலிசு வேலைக்குன்னு வந்திருக்கியே... இப்படி திடீர்னு வேலைக்கு எடுக்க மாட்டோம்.. அதுக்கு பெரிய புராசஸ் இருக்கு"

"ஐயா நீங்க பெரியவங்க..... இப்படில்லாம் தட்டி கழிக்க கூடாது... ஏதாவது கொறை இருந்தா சொல்லுங்க டெவலப் பண்ணிக்கிறேன்... ஆனா வேலை இல்லன்னு மட்டும் சொல்லிராதீங்க.. "

"ஆமா இவ்ளோ தெளிவா பேசுறீங்களே... உங்களை யாரு இங்கே அனுப்பிச்சாங்க... "

"அதுவா அது எங்க அண்ணன் தண்டோரா தான் அனுப்பி வச்சாரு..."

"அவரை நான் பார்க்கணும் அவரை கொஞ்சம் இங்கே கூட்டிட்டு வா..."

" நீங்க மட்டும் வேலை தரேன்னு சொல்லிட்டீங்கன்னா....... எங்க அண்ணன் என்ன? நான் வீரப்பனையே பொடனிலே தட்டி இழுத்துட்டு வந்திருவேன்"

"சரி.. சரி... இப்ப போய் உங்க அண்ணனை வர சொல்லு..."

இதை கேட்ட உடனே அப்படியே நம்ம கேபிள் அண்ணனுக்கு பாட்சா படம் புரொஜக்டர் இல்லாமையே மனசுலே ஒடிச்சு... தண்டோரா அண்ணன் சும்மா சிங்கம் மாதிரி நடக்குற மாதிரியும், அதை பார்த்து போலிசு டரியல் ஆனா மாதிரியும்... ஆனா அங்கே அப்படில்லாம் நடக்கலை...

நம்ம தண்டோரா அண்ணன் 'மாமன் மகள்' படத்துலே வருற கவுண்ட மணி மாதிரி வீட்லே இருந்தே நடக்க ஆரம்பிச்சிட்டார்... இதை பார்த்து கேபிள் அண்ணன் டென்சன் ஆகிட்டாப்ப்லே... சும்மா மானிட்டர் அடிச்சா மானிட்டர் மாதிரி வருவீங்கன்னு பார்த்தா ஜானி வால்கர் அடிச்சா சாணி வாக்கர் மாதிரி வாறீங்களே... நானே என்னோட தெறமைய வச்சி வாங்கிக்கறேன்.. நீங்க ஆணியே புடுங்க வேணாம் அப்படின்னு திட்டி விட்டுட்டு போய்ட்டாப்லே..


மறுபடியும் கமிசனர் அலுவலகம்:

"என்ன உங்க அண்ணனை வர சொல்லலை.. "

"கூப்பிட்டேன் அவரு நெப்போலியன் கூட இப்ப பிசியா இருக்காராம்.."

" ஒ.... நெப்போலியன் எம்.பி. கூடல்லாம் இருப்பாரா.. "

(ஹூ....க்கும்... அவரு நெப்போலியன், எம்.சி, கூட தான் பிசியா இருப்பார்.... ஆகா நாம ஒன்னு நெனச்சா தெய்வம் ஒன்னு நெனைக்கும்னு சொல்வாங்களே... அது இது தானா...) ஆ....மா...ஆமா...இதென்னா... அவரு நெனச்சா எட்டு பி. எம். அவரு காலடிலே...

(ஆகா... பெரிய எடத்து ஆள் போலே இருக்கே... நேக்கா தான் டீல் பண்ணனும்)"சரி போலிசு வேலைக்கு சேரனும்னு வந்திருக்கியே... அவங்களை பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"அப்படி கேளுங்க... கேபிளா கொக்கா... நீங்க இப்படில்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சு தான்.... இதுக்குன்னே... நேத்து நைட்டு புல்லா.. உக்காந்து.. என் கடமை, தங்கபதக்கம், ரகசிய போலீஸ், ரகசிய போலீஸ் நூத்தி பதினஞ்சு, புலன் விசாரணை, நூறாவது நாள், சாமி.. அது பத்தாதுன்னு... ஜாக்கி சான் நடிச்ச போலிசு கதை அதாங்க போலிசு ஸ்டோரி எல்லாம் பார்த்துட்டு... இன்னிக்கு வந்திருக்கேன்"

(அவனா நீயி..? என்று எண்ணியவாறே..) சரி போலிசு வேலைலே சேர்ந்து நீ என்னவெல்லாம் செய்வே..?

"நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுனாலும் செய்யலாம்னு... "

(இடை மறித்த ஆபீசர்)
"நாயகன் படத்துலே வசனம் இருக்குதா... ?"

(அடப்பாவி... நாம படம் பாக்குற ஆளுன்னு மேட்டரை கரெக்டா புடிச்சிட்டான் போலே இருக்கே...) இல்லே எங்க அண்ணன் தண்டோரா சொல்வாரு..

"நல்லா சொன்னாரு... உங்க அண்ணன்...( பார்ட்டி வேற பெரிய எடம்...) ஓகே... தமிழ்நாட்டில், தலை நகரம் எது?"

(ஹூ... ம்... தமிழ் நாட்லே 'தல'ன்னா அது அஜீத்து தான் அவரு எங்கே இருக்காரு...? இங்கே சென்னையிலே தான் இருக்காரு... அப்படின்னா இது தான் அவரு கேட்குறதுக்கு ஆன்சறு...) "சென்னைங்க..."

(அட... சரியா சொல்லிபுட்டாரே...)"சரி.. இது துப்பாக்கி...இதை மாதிரி வேற என்ன இருக்கு?"

(ஹையோ... டக்குன்னு ஞாபகத்திற்கு வர மாட்டேங்குதே... ஹான்.. ஞாபகம் வந்திடுச்சி...) "ரெட்டை குழல் துப்பாக்கி"

(அடப்பாவி... இதையும் சரியா சொல்லிட்டாரே... இவரை எப்படி சமாளிச்சு அனுப்புறது......!!!)"சரி... காந்திய சுட்டு கொன்னது யாரு..?"

"என்னது? காந்திய சுட்டு கொன்னுட்டாங்களா...!!! நானில்லே... நானில்லே.... ஆமா இது எப்ப நடந்துச்சி...?"

"இப்ப நீங்க வீட்டுக்கு போய், நாளைக்கு வந்து கூட சொல்லுங்க... இப்ப போங்க..."

தண்டோரா அண்ணன் அலுவலகம்

(அண்ணன், தண்டோரா அண்ணன் ஆபீஸ்லே உக்காந்து ஜாலியா சீட்டி அடிச்சிகிட்டு இருக்காரு... )

"என்ன.. கேபிளு... சீக்கிரம் வந்துட்டே... போன காரியம் என்னாச்சு.... வேலை கெடச்சுதா... ?"

"வேலை கெடச்சுதாவா.. வேலை கெடச்சு... முதல் கேசும் கெடச்சிட்டு....மொத கேஸே ஒரு கொலை கேசு.. நம்ம காந்திய யாரோ கொன்னுட்டாங்களாம்.. அது யாருன்னு நான்தான் கண்டுபிடிச்சி சொல்லணுமாம்..."


----------------இந்த கேசை கண்டு பிடிக்க அவரு உங்களுக்கு கூட போன் பண்ணலாம் அதனாலே பதிவர்களே.... உசார்... உங்களுக்கும் போன் வந்தாலும் வரலாம்--------------

46 comments:

தண்டோரா ...... said...

கொலை....கொலை

எறும்பு said...

joooparu

பிரகாஷ் said...

சார் இந்த காந்தி காந்தினு சொல்றிங்களே அவர் யாரு ?

ஷாகுல் said...

துப்பறியும் நிபுணர் கேபிள் சூப்பர்.

நமக்கும் எதாவது போலிஸ் இல்லனாலும் ஒரு டாஸ்மாக்லயாவது வேலை வாங்கி குட்ங்க நைனா.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கேபிள் கையில குடுத்திருக்கற கேசைப் பத்தி இப்படி பப்ளிக்கா சொல்லிட்டீங்களே, இதுனால குற்றவாளியைக் கண்டுபிடிக்கற வேலை இன்னும் கஷ்டம் ஆயிடாதா....? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. கேபிள் அண்ணே, முதல்ல இந்த நைனாவ தூக்கி உள்ள போடுங்க, அப்பத்தான் உங்க வேலை கெடாம இருக்கும்.

ஸ்ரீ said...

:-))))))))))

இளைய கவி said...

மருவாதியா வயித்துவலி மாத்திரவாங்க காசி தந்துருங்க ஆமா!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதுக்கு எதும் மருந்து உண்டா

சிரிப்பதற்கு ( நாங்கெல்லாம் உசார் பார்ட்டி ... )

Cable Sankar said...

தம்பிய உள்ளேயெல்லாம் தூக்கி போட முடியாது.. எனக்கு இந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு..:)

Cable Sankar said...

கேபிள் சங்கர் துப்பறியும்..

சொல்லும்போதே ந்ல்லாருக்கே..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// Cable Sankar said...
தம்பிய உள்ளேயெல்லாம் தூக்கி போட முடியாது.. எனக்கு இந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு..:)
//
but, உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நீ மெட்ராஸ்ல காலை வைடி.. கொலையாகுறது யாரு..? கேஸை விசாரிக்கிறது யாருன்னு அப்பால பார்ப்போம்..!

தராசு said...

நைனா,

அடங்கவே மாட்டிங்களா?????

பூங்குன்றன்.வே said...

பார்த்துங்க..நம்ம கேபிள் அண்ணா நாளைக்கு இதை படிச்ச நினைப்புல வடபழனி ஸ்டேஷன்ல போய் இன்ஸ்பெக்டர் சார்ல உட்கார போறாரு :)

jackiesekar said...

கற்பனையிலும் சாத்தியமாகாத கற்பனை...

இரும்புத்திரை அரவிந்த் said...

IPS full form enna

அத்திரி said...

அண்ணாச்சி கலக்கல்

சுப.தமிழினியன் said...

கேபிள் அண்ணனுக்கு இன்னும் +2 படிக்கிற வயசே வரலை அவரு அவ்ளோ யூத்து அப்புறம் எப்புடி அவரை போலிஸ் வேலைல சேர்ப்பாங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))))

செ.சரவணக்குமார் said...

கலக்கல் தலைவரே..

cheena (சீனா) said...

அன்பின் நைனா

நல்லாவே இருக்கு கத - ஆமா காந்தி தற்கொலை செஞ்சிக்கிடாரா -இல்ல கொலைதானா - கேபிளு மறு நா போய் பதில் சொன்னாரா

நல்வாழ்த்துகள் நைனா

பட்டிக்காட்டான்.. said...

ஹா.. ஹா..

நையாண்டி நைனா said...

/* தண்டோரா ...... said...
கொலை....கொலை*/

இதென்னா கலாட்டா

நையாண்டி நைனா said...

/*எறும்பு said...
joooparu*/

Thanks Nanbare...

நையாண்டி நைனா said...

/*பிரகாஷ் said...
சார் இந்த காந்தி காந்தினு சொல்றிங்களே அவர் யாரு ?*/

கொஸ்டின் பார்வாடடு டு அண்ணன் கேபிள்

நையாண்டி நைனா said...

/* ஷாகுல் said...
துப்பறியும் நிபுணர் கேபிள் சூப்பர்.

நமக்கும் எதாவது போலிஸ் இல்லனாலும் ஒரு டாஸ்மாக்லயாவது வேலை வாங்கி குட்ங்க நைனா.*/

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்....

நையாண்டி நைனா said...

/* பெயர் சொல்ல விருப்பமில்லை said...
கேபிள் கையில குடுத்திருக்கற கேசைப் பத்தி இப்படி பப்ளிக்கா சொல்லிட்டீங்களே, இதுனால குற்றவாளியைக் கண்டுபிடிக்கற வேலை இன்னும் கஷ்டம் ஆயிடாதா....? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. கேபிள் அண்ணே, முதல்ல இந்த நைனாவ தூக்கி உள்ள போடுங்க, அப்பத்தான் உங்க வேலை கெடாம இருக்கும்.*/

கூடவே இருந்து குழி பறிக்குறதுன்னா இதுதானா... நல்லா இருங்க...

நையாண்டி நைனா said...

/* ஸ்ரீ said...
:-))))))))))*/

Thanks..:-))))

நையாண்டி நைனா said...

/* இளைய கவி said...
மருவாதியா வயித்துவலி மாத்திரவாங்க காசி தந்துருங்க ஆமா!*/

என்னிய வச்சி காமெடி கீமடி பண்ணலியே...

நையாண்டி நைனா said...

/* Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இதுக்கு எதும் மருந்து உண்டா

சிரிப்பதற்கு ( நாங்கெல்லாம் உசார் பார்ட்டி ... )*/

நானும் சிரிக்க வைக்க தான் முயற்சி பண்றேன்... முடியலியே...

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
தம்பிய உள்ளேயெல்லாம் தூக்கி போட முடியாது.. எனக்கு இந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு..:)*/

அப்படி சொல்லுங்கண்ணா...
எங்கள் அண்ணன் கேபிள் வாழ்க...

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
கேபிள் சங்கர் துப்பறியும்..

சொல்லும்போதே ந்ல்லாருக்கே..*/

ஆமாண்ணே.. சூப்பரு.....

நையாண்டி நைனா said...

/* பெயர் சொல்ல விருப்பமில்லை said...
// Cable Sankar said...
தம்பிய உள்ளேயெல்லாம் தூக்கி போட முடியாது.. எனக்கு இந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு..:)
//
but, உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு.*/

எனக்குந்தான்...

நையாண்டி நைனா said...

/*உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நீ மெட்ராஸ்ல காலை வைடி.. கொலையாகுறது யாரு..? கேஸை விசாரிக்கிறது யாருன்னு அப்பால பார்ப்போம்..!*/

அண்ணே... என்ன இது...!!!

பொழச்சி போ-ன்னு என்னை விட்டுருங்க

நையாண்டி நைனா said...

/* தராசு said...
நைனா,

அடங்கவே மாட்டிங்களா?????*/

என்ன கொடுமை இது... உண்மைய கூட சொல்லக்கூடாதா...

நையாண்டி நைனா said...

/* பூங்குன்றன்.வே said...
பார்த்துங்க..நம்ம கேபிள் அண்ணா நாளைக்கு இதை படிச்ச நினைப்புல வடபழனி ஸ்டேஷன்ல போய் இன்ஸ்பெக்டர் சார்ல உட்கார போறாரு :)*/

அடப்பாவமே... அப்படியும் நடந்திருமா...

நையாண்டி நைனா said...

/* jackiesekar said...
கற்பனையிலும் சாத்தியமாகாத கற்பனை...*/

கதையல்ல நிஜம்

நையாண்டி நைனா said...

/* இரும்புத்திரை அரவிந்த் said...
IPS full form enna*/

இப்படியும் போலீசில் சேரலாம்

நையாண்டி நைனா said...

/* அத்திரி said...
அண்ணாச்சி கலக்கல்*/
நன்றி அண்ணாச்சி...

நையாண்டி நைனா said...

/* சுப.தமிழினியன் said...
கேபிள் அண்ணனுக்கு இன்னும் +2 படிக்கிற வயசே வரலை அவரு அவ்ளோ யூத்து அப்புறம் எப்புடி அவரை போலிஸ் வேலைல சேர்ப்பாங்க?*/

இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் வயசுக்கு மீறி தானே ஆசைப்படுத்துங்க..

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
:-)))))))))*/

Thanks Nanbaaa...

நையாண்டி நைனா said...

/* செ.சரவணக்குமார் said...
கலக்கல் தலைவரே..*/

நன்றி தல.....

நையாண்டி நைனா said...

/* cheena (சீனா) said...
அன்பின் நைனா

நல்லாவே இருக்கு கத - ஆமா காந்தி தற்கொலை செஞ்சிக்கிடாரா -இல்ல கொலைதானா - கேபிளு மறு நா போய் பதில் சொன்னாரா

நல்வாழ்த்துகள் நைனா*/

அண்ணா... கேபிள் அண்ணா... நம்ம ஐயா சந்தேகத்தை தீருங்க..

நையாண்டி நைனா said...

/* பட்டிக்காட்டான்.. said...
ஹா.. ஹா..*/

Thanks

சூர்யா - மும்பை said...

நக்கல் ,நய்யாண்டி

சூப்பரப்பு


அன்புடன் சூர்யா

Mohan Kumar said...

செம கலக்கல்ங்க ஆட்களை நேர்ல பார்த்ததால நல்லா ரசிக்க முடியுது இதே போல் மற்ற பதிவர்களையும் கலாயுங்க