Wednesday 3 June 2009

கல கல கேள்விகளும், லக லக லக பதில்களும்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பல பேரை நீண்ட ஆயுளோடு வச்சிருக்குறது அவங்களோட சந்தோசமான இதயம், அந்த இதயத்தை மகிழ்ச்சியா வச்சிக்குறது சமையல்லே வருகிற ஆருசுவைய விட எழாவது சுவையான இந்த நகைச்சுவை தாங்க.

எங்கப்பாவும், என்னோட அம்மாவும் அவங்க அவங்க வீட்லே மூத்தவங்க. அப்பாவோட சொந்த வழியிலும் சரி, அம்மாவோட சொந்த வழியிலும் சரி எங்கே என்ன பிரச்சினை என்றாலும் பஞ்சாயத்து எங்கவீட்லே தாங்க நடக்கும். அப்போ தெரிஞ்சிகிட்டேங்க மகிழ்ச்சியான வாழ்வின் முக்கியத்துவத்தையும், வழியையும். அதனாலே எல்லாரும் மகிழ்ச்சியாக வாழனும் என்று வேண்ட ஆரம்பிச்சி நானும் என்னலே முடிஞ்ச அளவு மற்றவர்களை சந்தோசமா வச்சிக்கணும் என்று முடிவு எடுத்து கோதாவிலே குதிச்சப்போ உதிச்ச பேரு தான் இது.

ரொம்ப பிடிக்கும்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் பிளாக் எழுத ஆரம்பிச்சப்ப...( சத்தியமா இந்த பதிவு உலகும் வாசகர்களுக்கும் படப்போற துன்பத்தை நெனச்சி....)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னைய விடுங்க சாமி... என்னைவிட பலபேருக்கு பிடிச்சிருக்கு...
அதை போட்டாதான்...
பேங்கிலே பணம் தர்றாங்க...
கம்பனிலே சம்பளம் தாராங்க....


4.பிடித்த மதிய உணவு என்ன?
ஓசியிலே யாரு என்ன வாங்கி கொடுத்தாலும்... ஓசியிலே பினாயிலே கிடைச்சாலும், அதுலையும் ரெண்டு லிட்டர் கூட வாங்கி ஸ்டாக் வைக்கிற தமிழனாச்சே நானு ..... அதுக்காக என்னிக்காவது பதிவர் சந்திப்புக்கு வந்தேம்னா பினாயிலை வாங்கி வச்சி குடிக்க சொல்லிப்புடாதீங்க, நல்ல கோழி பிரியாணியும், பரோட்டா சால்னாவும், மிளகு கறியும் வாங்கி கொடுங்க


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உங்களை மாதிரி ஆளுங்ககிட்டே "நட்பை" உடனே வச்சிக்கணும் என்று ஆசை படுவேன். ஆம். ஆனால் நமீதா, சினேகா மாதிரி ஆளுங்களை நட்பா உடனே "வச்சி"க்கணும் என்றும் ஆசைபடுவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பஸ்ட்டு குளிக்க பிடிக்குமா என்று கேட்டு இருக்கணும். கேள்வி கேட்பவர் இங்கே சிறிது வழுக்கி விட்டார் என்று நினைக்கிறன். அவரை முதலில் தண்ணீரில் இருந்து வெளியே தூக்கி விடுங்கப்பா...

என்னைக் குளி, குளி என்கிறார்களே, இந்தக் குளியாதவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும் காட்டாறிலே குதிக்க முடியுமா, இல்லை குளிக்கத்தான் முடியுமா?. அலையடிக்கும் கடல்கள் இல்லை என் பாதையில், காற்றை புயலாயடிக்கும் தண்ணீர் பம்புகள் நிறைந்திருக்கின்றன. தென்றலைத் தரும் அருவிகளை தீண்டியதில்லை நான். ஆனால் கூவக்கால்வாயை தாண்டியிருக்கிறேன்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அது ஆளுக்கு ஆள் மாறும் நண்பரே...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
ரெண்டுக்குமே பதில்: எதை பற்றியும் கவலைப்படாமல் (கொஞ்சம் கீழ் பகுதியின் பெயரைத்தான் போடவேண்டும்.... இருப்பினும் சபை நாகரிகம் கருதி....) முதுகில் வெயில் அடிக்குற வரை தூங்குறது


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என்னாது......என்னோட சரி பாதியா....?
நெனச்சாலே "சரி பேதி" தான்...
சரி, இருந்தாலும் சமாளிக்கிறேன்.....

.
.
.
.
.
ஹூம்.....
.
.
.
.
ம்ம்ம்...... மொத்தத்திலே பிடிச்சிருக்குற காரணத்தினாலே தானே சரி பீதியா....
சாரி...
சாரி...
சரி பாதியா ஏத்துகிட்டோம்.
(எப்பாடா... தப்பிச்சாச்சு)
(இந்த மாதிரி டெர்ரர் கேள்விகளை இனி வரும் கேள்வி பதில்களில் தவிர்த்தால் தான் ஆட்டத்திற்கு வருவேன்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இதுவும் சூழ்நிலை சூழ்நிலைக்கு, மாறும் நண்பரே...
இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் அல்லவா?


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெள்ளை கலர் சட்டையும், வெளிர் பிரவுன் கலர் பேண்டும்.

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்து சீட்டு பிகரை பார்த்து இன்னிக்கு டிஸ்கோ போலாமான்னு

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ரோஸ்

14.பிடித்த மணம்?
உழைப்பாளியின் வியர்வை மணம். ( ஓவரா இருக்கா....??? சரி சரி.. அடிக்க வராதீங்க...) குழந்தையின் பால், வருமே ஒரு பால்மணம் அதுதாங்க.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அண்ணன் ஜோதி பாரதி
நல்ல ஒரு இன உணர்வாளர், கட்டுரை, கவிதை என்று எதை எழுதினாலும் அருமையாக இன உணர்வுடன் எழுதுவார் அருமை அண்ணன் ஜோதி பாரதி இவரை நான் முதலாவதாக அழைக்கிறேன்.

அடுத்து
நண்பர் ராம் CM
அது இனிசியல் தான் உடனே எந்த ஸ்டேட்டுக்கு என்று கேட்டு அவரை டரியலாக்க வேண்டாம். எனது ஊருக்கு பக்கத்துக்கு ஊர்காரர்.

அடுத்து
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் புதிதாக பாட வந்த பாரதி. புதியவர்களை ஆதரிக்கும் முகமாக...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
எல்லா பதிவும்.... இதை என்ன எழுத கூப்பிட்டு உங்க எல்லாரையும் படுத்தி எடுத்தவர் அருமை நண்பர் . சொல்லரசன்( இப்படி சொன்னா தானே அடுத்த ஆட்டத்திற்கு கூபிடுவாறு என்று நினைத்து சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்றேன் அவரோட சமூக சிந்தனை பிடிக்கும் அதனாலே எல்லா பதிவுகளுமே...)

17. பிடித்த விளையாட்டு?
சதுரங்கம் (இதுலே தான் ராணியை எல்லா பக்கமும் அலைய விட்டுட்டு நாம பேசாம ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கலாம்)


18.கண்ணாடி அணிபவரா?
இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
போரடிக்காத

20.கடைசியாகப் பார்த்த படம்?
99

21.பிடித்த பருவ காலம் எது?
13 to 21

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ரொம்ப பெருமையா இருக்குப்பா....
என்னையும் ஒரு பெரிய புத்திசாலியா நெனைச்சு இந்த கேள்வி கேட்குறீங்க....
ரொம்ப பெருமையா இருக்கு...
இப்படில்லாம் கேள்வி கேட்குற உங்ககிட்டே பல புஸ்தகங்களின் பேரை சொல்லி குழப்பலாம்... அப்படி சொல்றதுக்கு கூட இந்த அப்பாவிக்கு ஒரு பொஸ்தவதொட பேரும் தெரியாதே..... தெரியாதே...


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படில்லாம் மாத்த மாட்டேன், பின்னே இதெல்லாம் மாத்திகிட்டு இருந்தா நான் வேலை வெட்டி இல்லாமை இருக்குறதை எங்க மானேஜர் கண்டு பிடிசுற மாட்டார்???

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மனேஜர் விடும் குறட்டை, பக்கத்துக்கு சீட்டு பெண்ணோடு அவர் போடும் அரட்டை

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இலண்டன் மாநகர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
என்னைய வச்சி காமடி கீமடி பண்ணலையே...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அதுதான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆகி போச்சே அப்புறம் எப்படி என்கிட்டே இருக்கும்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அவன்தானே இந்த வலைத்தளத்தையே நடத்தி கொண்டு உள்ளான்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
எந்த சுற்றுலா தலத்திற்கு போனாலும் அங்குள்ள பெண்களின் இடுப்பையே சுற்றுகிறதே கண்கள்... அப்போ நான் என்ன சொன்னா பொருத்தமா இருக்கும்.

நெல்லை தான் எனக்கு பிடிச்ச சுற்றுலா தலம்


30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஆசை தானே, ஆசை என்றால், கண்ணதாசன் சொல்வானே எப்படி இல்லையென்றால் இறைவன் ஏன் பிறந்தாய் என்று கேட்பான் என்று அப்படி....

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
மனைவியை போட்டு திட்டுறது தாங்க.... ( எவ்வளவு பெரிய வீரன் நான்னு இப்பவாவது புரிஞ்சுகோங்க)

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அந்த அளவுக்கு நமக்கு அறிவு இருக்கானு தெரியலே... இருந்தாலும் சொல்றேன், ஒரு வரி என்ன பல வரி சொல்றேன் கேட்டுகோங்க.
எல்லாரும் நல்லா இருக்க வருமான வரி, சொத்து வரி, விற்பனை வரி, தண்ணீர் வரி போன்ற வரிகளை அரசாங்கத்தை ஏமாற்றாமல் கட்டுங்க போதும்.

41 comments:

sarathy said...

\\ மனேஜர் விடும் குறட்டை, பக்கத்துக்கு சீட்டு பெண்ணோடு அவர் போடும் அரட்டை \\


சரியான நக்கல்..
குப்புறப் படுத்து யோசிச்சீங்களோ???

தினேஷ் said...

//என்னைக் குளி, குளி என்கிறார்களே, இந்தக் குளியாதவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும் காட்டாறிலே குதிக்க முடியுமா, இல்லை குளிக்கத்தான் முடியுமா?. அலையடிக்கும் கடல்கள் இல்லை என் பாதையில், காற்றை புயலாயடிக்கும் தண்ணீர் பம்புகள் நிறைந்திருக்கின்றன. தென்றலைத் தரும் அருவிகளை தீண்டியதில்லை நான். ஆனால் கூவக்கால்வாயை தாண்டியிருக்கிறேன்.
//

ஏன் இந்த ஒப்பாரி .. இனிமே யாரும் உங்கள குளிக்க சொல்லமாட்டாங்க இல்ல குளிச்சியானு கேக்கமாட்டாங்க..

சந்தோசமா ? அதுக்குதானே இவ்ளோ மெனக்கெடல்..

குசும்பன் said...

//17. பிடித்த விளையாட்டு?
சதுரங்கம் (இதுலே தான் ராணியை எல்லா பக்கமும் அலைய விட்டுட்டு நாம பேசாம ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கலாம்)//

ஹா ஹா செம கலக்கல் பதில்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சரியான நக்கல் நையாண்டி

கோவி.கண்ணன் said...

//14.பிடித்த மணம்?
உழைப்பாளியின் வியர்வை மணம்.//

தம்பி அதுல ஒரு செண்டு பாட்டில் அளவுக்கு கிடைச்சா ஊரையே கலக்கி புடுவிக !
:)

அத்திரி said...

அண்ணாச்சி சென்னைக்கு வந்தா உங்களுக்கு கண்டிப்பா பினாயில்தான்

ஆ.ஞானசேகரன் said...

//அந்த அளவுக்கு நமக்கு அறிவு இருக்கானு தெரியலே... இருந்தாலும் சொல்றேன், ஒரு வரி என்ன பல வரி சொல்றேன் கேட்டுகோங்க.
எல்லாரும் நல்லா இருக்க வருமான வரி, சொத்து வரி, விற்பனை வரி, தண்ணீர் வரி போன்ற வரிகளை அரசாங்கத்தை ஏமாற்றாமல் கட்டுங்க போதும். //

நச்.......

நண்பா நல்ல நையாண்டி நடை சூப்பர்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கொஞ்சம் சீரியஸ்.. நிறைய நக்கல்.. கலக்கல் பதில்கள் நைனா

வேத்தியன் said...

அந்த 2வது கேள்விக்கு பதில் உண்மைய சொன்னதுக்கு ஒரு “ஓ”...

வேத்தியன் said...

அந்த 6வது கேள்விக்குரிய பதில்...

என் இனம் சார் நீங்க...
:-)

வேத்தியன் said...

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்து சீட்டு பிகரை பார்த்து இன்னிக்கு டிஸ்கோ போலாமான்னு
//

அண்ணியும் கூட வராங்களா???
:-)

வேத்தியன் said...

17. பிடித்த விளையாட்டு?
சதுரங்கம் (இதுலே தான் ராணியை எல்லா பக்கமும் அலைய விட்டுட்டு நாம பேசாம ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கலாம்)
//

வித்தியாசமான ஆள் நீங்க...

வேத்தியன் said...

23,24 ரசித்தேன்...

நல்லா இருக்குங்க...

:-)

கலையரசன் said...

தமிழன்டா நானு!
நா மட்டும் படிச்சிட்டு நொந்தா போதுமா?
அடுத்தவனுங்கள, தப்பிக்க விட்டுடுவோமா?
அதான் தமிழிஷ் ல கோத்துவிட்டுடேன்! வர்டா..
(எது தி்ட்டுறதா இருந்தாலும், மனசுகுள்ளயே திட்டுக்கோ!)

தமிழிச்சி said...

லக லக பதில்கள் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். இப்போ புரியுது. நல்லா இருக்கு.

Anbu said...

கலக்கல் பதில்கள் நைனா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு நன்று!

என்னையும் போய் அழைத்திருக்கிறீர்களே...!
கண்கள் பனிக்கின்றன!
ஒரு கேள்விக்கு பதிலை இங்கயே கொடுத்திட்டேன்!

சொல்லரசன் said...

26 வது கேள்விக்குக் உஙக தனி திறமையை நையான‌டியாக சொல்லி நையான்டிக்கெல்லாம் நைனா நான்தான் சொல்லிட்டீங்கோ.

லக லக லக பதில்கள் கலக்கல்

"உழவன்" "Uzhavan" said...

//21.பிடித்த பருவ காலம் எது?
13 to 21//

ம்ம்ம்.. 22 வயசுக்கு மேல ஆச்சுனா, அவங்கெல்லாம் ஆண்டி ஆயிடுறாங்களோ??

//31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
மனைவியை போட்டு திட்டுறது தாங்க.... ( எவ்வளவு பெரிய வீரன் நான்னு இப்பவாவது புரிஞ்சுகோங்க)//

கட்டபொம்மன் பரம்பரயாக்கும்..

//நெல்லை தான் எனக்கு பிடிச்ச சுற்றுலா தலம்//

நைனா நமக்கு நெல்லையா??

நையாண்டி நைனா said...

/* sarathy said...
சரியான நக்கல்..
குப்புறப் படுத்து யோசிச்சீங்களோ???
*/

நண்பர் சாரதி...
வருகை மற்றும் பாராட்டிற்கு நன்றி... தொடர்ந்து ஆதரவு தரவும்.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
ஏன் இந்த ஒப்பாரி .. இனிமே யாரும் உங்கள குளிக்க சொல்லமாட்டாங்க இல்ல குளிச்சியானு கேக்கமாட்டாங்க..

சந்தோசமா ? அதுக்குதானே இவ்ளோ மெனக்கெடல்..*/

இது படிச்ச புள்ளை... உடனே புரிஞ்சுகிச்சே....!!!

நையாண்டி நைனா said...

/*
குசும்பன் said...
//17. பிடித்த விளையாட்டு?
சதுரங்கம் (இதுலே தான் ராணியை எல்லா பக்கமும் அலைய விட்டுட்டு நாம பேசாம ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கலாம்)//

ஹா ஹா செம கலக்கல் பதில்!
*/
அட இங்கே பார்ரா நம்ம துறையின் "ஹெட் ஆப் தி டிப்பார்ட்மேன்ட்"... வாங்க வாங்க

அடிக்கடி வாங்க தலைவரே...

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
சரியான நக்கல் நையாண்டி*/

நன்றி ஐயா.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

என்னை அழைத்ததிற்கு நன்றி நையாண்டி நைனா.. உங்களின் நக்கல் ரொம்ப ..ரொம்ப பிடிச்சிருக்கு ...

நையாண்டி நைனா said...

/*
கோவி.கண்ணன் said...
//14.பிடித்த மணம்?
உழைப்பாளியின் வியர்வை மணம்.//

தம்பி அதுல ஒரு செண்டு பாட்டில் அளவுக்கு கிடைச்சா ஊரையே கலக்கி புடுவிக !
:)
*/
வருகைக்கு நன்றி அண்ணே..

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
அண்ணாச்சி சென்னைக்கு வந்தா உங்களுக்கு கண்டிப்பா பினாயில்தான்*/

இப்படில்லாம் நீங்க செய்வீங்கன்னு தெரியும், அதனாலே தான் அங்கேயே விளக்கம் கொடுத்துட்டேன். அப்புறம் கூட இப்படி முரண்டு பிடிச்சா எப்படி???

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...

நச்.......

நண்பா நல்ல நையாண்டி நடை சூப்பர்...
*/
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
கொஞ்சம் சீரியஸ்.. நிறைய நக்கல்.. கலக்கல் பதில்கள் நைனா*/

நன்றி கா.பா

நையாண்டி நைனா said...

/* வேத்தியன் said...
அந்த 2வது கேள்விக்கு பதில் உண்மைய சொன்னதுக்கு ஒரு “ஓ”...*/

Thanks Nanbaa

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
அந்த 6வது கேள்விக்குரிய பதில்...

என் இனம் சார் நீங்க...
:-)*/

அப்படியா? இப்பதான் எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு.

நண்பா... இப்போதைக்கு நம்ம கட்சி தான் ஸ்ட்ராங்

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்து சீட்டு பிகரை பார்த்து இன்னிக்கு டிஸ்கோ போலாமான்னு
//

அண்ணியும் கூட வராங்களா???
:-)
*/

அண்ணி முன்னாடி வீட்லேயே டிஸ்கோ ஆடுவேனே, அப்புறமும் அவங்க எதுக்கு அங்கே.

நையாண்டி நைனா said...

/*
வேத்தியன் said...
வித்தியாசமான ஆள் நீங்க...
*/

நொந்து போய்சொன்னாலும் ரசிக்க ஆளுங்க..... நான் என்ன செய்யட்டும்

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
23,24 ரசித்தேன்...

நல்லா இருக்குங்க...

:-)
*/

Thanks dear NANBA.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
தமிழன்டா நானு!
நா மட்டும் படிச்சிட்டு நொந்தா போதுமா?
அடுத்தவனுங்கள, தப்பிக்க விட்டுடுவோமா?
அதான் தமிழிஷ் ல கோத்துவிட்டுடேன்! வர்டா..
(எது தி்ட்டுறதா இருந்தாலும், மனசுகுள்ளயே திட்டுக்கோ!)*/

நல்ல காரியம். நன்றி.
தொடர்ந்து வந்து ஆதரவு தாங்க.

நையாண்டி நைனா said...

/* தமிழிச்சி said...
லக லக பதில்கள் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். இப்போ புரியுது. நல்லா இருக்கு*/

பாராட்டிற்கு நன்றி. அடிக்கடி வந்து ஆதரவு தாங்க

நையாண்டி நைனா said...

/*
Anbu said...
கலக்கல் பதில்கள் நைனா
*/
Thanks Anbu.

நையாண்டி நைனா said...

/*ஜோதிபாரதி said...
பதிவு நன்று!

என்னையும் போய் அழைத்திருக்கிறீர்களே...!
கண்கள் பனிக்கின்றன!
ஒரு கேள்விக்கு பதிலை இங்கயே கொடுத்திட்டேன்!
*/
நன்றி...

உங்களை பற்றி நான் சில தகவல்களும், மற்றவர் பல தகவல்களும் தெரிஞ்சுக்க தான்.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
லக லக லக பதில்கள் கலக்கல்*/

"L"ஆம் உங்க அன்பு தான்.

நையாண்டி நைனா said...

/*" உழவன் " " Uzhavan " said...
நைனா நமக்கு நெல்லையா??*/

தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி.

ஆம், நெல்லை தான் எனது ஊர்.

நையாண்டி நைனா said...

/*நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
என்னை அழைத்ததிற்கு நன்றி நையாண்டி நைனா.. உங்களின் நக்கல் ரொம்ப ..ரொம்ப பிடிச்சிருக்கு ...*/

நன்றி நண்பரே...
வாங்க... வந்து ஊடு கட்டி அடிங்க.

ராம்.CM said...

என்னை தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு மகிழ்ச்சியும்,நன்றியும். தங்கள் நையாண்டியான பதில்கள் அருமை. இப்படியெல்லாமா கேள்வி கேட்பீங்க? என் மனதில் தோன்றியதை சொல்லியுள்ளேன்.