Monday 9 March 2009

தமிழக அரசியலில் மாற்றம் வருமா?

வோட்டு சந்தை கூடும் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. பெரும் முதலாளிகள் முதல் சில்லறை முதலாளிகள் வரை தங்கள் டேரா மற்றும் பதாகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்கள். சில பல கவர்ச்சி சலுகை, கவர்ச்சி திட்டம் மற்றும் கவர்ச்சி நடிகைகள், நடிகர்கள் என்று கிளம்பிவிட்டார்கள்.

சரி.. ஆட்டம் துவங்கியாச்சு. நம் பதிவர்கள் முதல் சலூன் கடையில் கிடந்தது தந்தி யை புரட்டும் முதியவர்கள் வரை ஆட்டத்தில் பங்கு பெரும் முதலாளிகளையும் அவர்களின் அல்லக்கைகளையும் ஒரு வழி பண்ணும் அளவிற்கு கருத்துகளும் வழங்கியாச்சு. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று மாறாமல் கூவியாச்சு.

பெட்டி தூக்கி, வேட்டி கட்டி கிளம்பியிருக்கும் இந்த முதலாளிகளின் இலக்கு நீங்களா? உங்கள் ஒட்டா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை, என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

கூகுளாண்டவரை தொழும் நீங்களும் நானும் அல்ல அவர்கள் இலக்கு, கூழையே ஆண்டவனாக கொண்ட அப்பாவிகள் தான் அவர்கள் இலக்கு.

வாழ்கை சக்கரத்தில் 'யு-ட்யூபை' இணைத்து கொண்ட நீங்களோ அவர்களின் வலையில் சிக்க போகிறீர்கள்? வழுக்கை சைக்கில் சக்கரத்தில் உள்ள வால்-ட்யூபை மாற்ற வக்கில்லாத வறியவர்கள் அல்லவோ அவர்கள் வலையில் சிக்க போகிறார்கள்!

வாயிலே பராக் ஒபாமாவை மெல்லும், அறிவாளியாக காட்டி கொள்ளும் சிறிய கூட்டம் அல்ல அவர்களது குறி, வாயிலே வெற்றிலை பாக்கை, பாண் பராக்கை மெல்லும் வறிய கூட்டமே அவர்கள் குறி.

இன்னும் எம்ஜீயாரும், என்டீயாரும் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பும் பாமர கூட்டத்தை நம்பிதானே இவர்கள் கடை விரிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை உரைக்காமல் நாம் என்ன சாதிக்க முடியும்.? அவர்களுக்கு அவர்கள் நிலைமையை உணர்த்தாமல் நாம் என்ன பெற்றிட முடியும்? என்ன மாற்றத்தை நாம் ஏற்படுத்தி விட முடியும்? அதனால் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி கொடுத்தாரே மாபெரும் தலைவர் அம்பேத்கர்.அந்த அம்பேத்கரும் வெறுமனே புரட்சி செய் என்று சொல்லவில்லை, கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். இன்றைய நமது சூழலில் புரட்சியெல்லாம் கூட தேவை இல்லை, கற்பித்தாலே போதும், சமூக மாற்றம் தானே நடக்கும்.

நீங்கள் யாருக்கு ஒட்டு போடுவீர்கள்? என்று கேட்டால் "நான் ஜெயலலிதாவிற்கெல்லாம் ஒட்டு போட மாட்டேன், ரெட்டை இல்லை எம்ஜியாருக்கு தான் ஒட்டு போடுவேன்" என்று பெருமையாக சொல்லும் குடி மக்களை வைத்து தானே, இங்கே இப்போ நாம் ஜனநாயகத்தை வளர்த்து கொண்டுள்ளோம்.

என் நாடு, என் சமூகம், அனைத்து மக்களும் அமைதியுடனும், பொருளாதார தன்னிறைவோடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறன். அனைவரும் அறிதல், அதுவும் உண்மை நிலை அறிதல் என்ற சமூக மாற்றம் இல்லாது வெறும் அரசியல் மாற்றம் மட்டும் நம்மை, நம் சமூகத்தை, நம் நிலையை முன்னேற்றாது என்பது என் நம்பிக்கை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒட்டு போடுங்கன்னு உங்ககிட்டே கேட்டாலே... எவ்வளவு தருவே என்று என்கிட்டேயே கேப்பீங்க...
அதனாலே பின்னூட்டம் மட்டுமாவது போட்டுட்டு போங்க... ஹி ஹி ஹி

17 comments:

விவேக் said...

http://nrvivek.blogspot.com/2009/03/blog-post_09.html

நண்பரே ,
தமிழ்மணத்தில் கிட்டத்தட்ட இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பதிவுகள் இட்டுள்ளோம் . உங்களுடையது நையாண்டி என்னுடையது :-) நீங்களே படித்து பார்த்து சொல்லுங்கள்!!

ராஜ நடராஜன் said...

//நீங்கள் யாருக்கு ஒட்டு போடுவீர்கள்? என்று கேட்டால் "நான் ஜெயலலிதாவிற்கெல்லாம் ஒட்டு போட மாட்டேன், ரெட்டை இல்லை எம்ஜியாருக்கு தான் ஒட்டு போடுவேன்" என்று பெருமையாக சொல்லும் குடி மக்களை வைத்து தானே, இங்கே இப்போ நாம் ஜனநாயகத்தை வளர்த்து கொண்டுள்ளோம்.//

நிதர்சனமான உண்மைங்க.ஒருமுறை ஈரோடு பஸ்ல போய்க் கொண்டிருக்கும் போது கேட்ட வார்த்தைகள்.

நையாண்டி நைனா said...

/*விவேக் said...
http://nrvivek.blogspot.com/2009/03/blog-post_09.html

நண்பரே ,
தமிழ்மணத்தில் கிட்டத்தட்ட இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பதிவுகள் இட்டுள்ளோம் . உங்களுடையது நையாண்டி என்னுடையது :-) நீங்களே படித்து பார்த்து சொல்லுங்கள்!!*/

வருகைக்கு நன்றி... நன்றி.. நன்றி.

நையாண்டி நைனா said...

/*ராஜ நடராஜன் said...
//நீங்கள் யாருக்கு ஒட்டு போடுவீர்கள்? என்று கேட்டால் "நான் ஜெயலலிதாவிற்கெல்லாம் ஒட்டு போட மாட்டேன், ரெட்டை இல்லை எம்ஜியாருக்கு தான் ஒட்டு போடுவேன்" என்று பெருமையாக சொல்லும் குடி மக்களை வைத்து தானே, இங்கே இப்போ நாம் ஜனநாயகத்தை வளர்த்து கொண்டுள்ளோம்.//

நிதர்சனமான உண்மைங்க.ஒருமுறை ஈரோடு பஸ்ல போய்க் கொண்டிருக்கும் போது கேட்ட வார்த்தைகள்.*/

வரவிற்கும் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி.

குவாட்டர் கோயிந்தன் said...

இப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ! போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.

குவாட்டர் கோயிந்தன் said...

இப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ! போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.

கூட்ஸ் வண்டி said...

ஆகா! அருமையான கருத்தை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

போ.போய்.வேற வேலை இருந்தா பாரு.

Anonymous said...

புத்தி சொல்றாராம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனாவுக்கும் சமூகத்தின் மேல் அக்கறை வந்து விட்டது.. குட்.. குட்.. நல்ல பதிவு நண்பா..

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
நைனாவுக்கும் சமூகத்தின் மேல் அக்கறை வந்து விட்டது.. குட்.. குட்.. நல்ல பதிவு நண்பா..*/
சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன் தான் நான்... இப்பொது மட்டும் அல்ல, எப்போதுமே.

Unknown said...

//அனைவரும் அறிதல், அதுவும் உண்மை நிலை அறிதல் என்ற சமூக மாற்றம் இல்லாது வெறும் அரசியல் மாற்றம் மட்டும் நம்மை, நம் சமூகத்தை, நம் நிலையை முன்னேற்றாது என்பது என் நம்பிக்கை//

உண்மைதான்.கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும் நைனா.

நையாண்டி நைனா said...

/* sollarasan said...
//அனைவரும் அறிதல், அதுவும் உண்மை நிலை அறிதல் என்ற சமூக மாற்றம் இல்லாது வெறும் அரசியல் மாற்றம் மட்டும் நம்மை, நம் சமூகத்தை, நம் நிலையை முன்னேற்றாது என்பது என் நம்பிக்கை//

உண்மைதான்.கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும் நைனா.*/


தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*கூட்ஸ் வண்டி said...
ஆகா! அருமையான கருத்தை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.*/

வரவிற்கும் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி.

நையாண்டி நைனா said...

/* குவாட்டர் கோயிந்தன் said...
இப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ! போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.*/

அடப்பாவி மக்கா... உங்களுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியாமே தானே நானே முழிச்சிகிட்டு இருக்கேன்.

Viji Sundararajan said...

நீங்க இவ்ளோ சீரியஸ் மேட்டர் எழுதுவிங்கன்னு நான் நினைக்கவே இல்லை.
நல்ல கருத்து.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப அருமையா சொன்னீங்கன்னே..

//கூகுளாண்டவரை தொழும் நீங்களும் நானும் அல்ல அவர்கள் இலக்கு, கூழையே ஆண்டவனாக கொண்ட அப்பாவிகள் தான் அவர்கள் இலக்கு.

வாழ்கை சக்கரத்தில் 'யு-ட்யூபை' இணைத்து கொண்ட நீங்களோ அவர்களின் வலையில் சிக்க போகிறீர்கள்? வழுக்கை சைக்கில் சக்கரத்தில் உள்ள வால்-ட்யூபை மாற்ற வக்கில்லாத வறியவர்கள் அல்லவோ அவர்கள் வலையில் சிக்க போகிறார்கள்!

வாயிலே பராக் ஒபாமாவை மெல்லும், அறிவாளியாக காட்டி கொள்ளும் சிறிய கூட்டம் அல்ல அவர்களது குறி, வாயிலே வெற்றிலை பாக்கை, பாண் பராக்கை மெல்லும் வறிய கூட்டமே அவர்கள் குறி.//

ஜூப்ப்ப்ப்பர்ர்ர்.. ஆமா.. வழுக்கை சக்கரத்தில் ஏன் வால்-ட்யூபை மாற்றனும்???

கண்டிப்பா தமிழக அரசியலில் மாற்றம் வரும்.