Tuesday, 10 March 2009

மருத்துவர் புருனோ பதில் தருவார் என்று நம்பி, ஒரு கேள்வி.

இங்கு மும்பையில், எனது நண்பருடன் சேர்ந்து அவரது மனைவிக்கு மருந்து வாங்க சென்றோம். Duphaston என்று அதற்கு பெயர்.(அதன் பயன்பாடு மற்றும் செயல்பாடும் பற்றி இங்கே நான் எழுதுவேன், ஆனால் அதை படித்துவிட்டு சிலர் மருத்துவர் ஆலோசனை இன்றி அதனை தனக்கு தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்யும் கொடுமை நடந்துவிடும், அதனால் விட்டு விடுகிறேன். ) அந்த மருந்தை மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் நண்பரும் மூன்று மாதங்கள் வாங்கினார். இறுதி சுழற்சி அல்லது இறுதி கட்டத்தில் அவருக்கு நான்கு, ஐந்து மாத்திரைகளே போதுமானதாக இருந்தது. ஆனால் கடையில் "நாங்கள் ஒரு அட்டையாக மட்டுமே தருவோம். நான்கு ஐயிந்தாக தர மாட்டோம்" என்று கூறினார். நண்பரும் வேறு வழியின்றி ஒரு அட்டை வாங்கி சென்றார்.

பிறிதொரு நாளில் வேறு நண்பருடன், மருந்து வாங்க சென்றேன் மருந்தின் பெயர் Mox 500. இப்போது அந்த மருந்து கடையில் நண்பரே ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்தார். நீங்கள் ஏன் ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்தீர்கள். இரண்டு அல்லது மூன்று போதுமே என்றேன். அதற்கு அந்த நண்பர் இந்த மாத்திரை ஒன்று இரண்டெல்லாம் தர மாட்டார்கள். அட்டை தான் வாங்க வேண்டும் என்று கூறினார்.

இரண்டுமே விலை உயர்ந்த மருந்துகள் தான்.

இப்போது என்னுடைய கேள்விகள். இது தெளிதல் மற்றும் அறிதல் நோக்கில் வைக்கபடும் கேள்விகள்.

1. இப்படி இந்த மாத்திரைகளை, மருந்துகளை முழுவதுமாக தான் விற்க வேண்டும் என்று அந்த கடைக்காரர் சொல்கிறாரே. இது சரியா? தவறா?

2. இது சரி என்றால் அந்த உத்தரவை வழங்கிய துறை எது? தவறு என்றால் இதை எங்கே முறையிட வேண்டும்?

3. இந்த மாதிரி நிர்பந்திக்கும் போது, பொருளாதாரா ரீதியாக ஓரளவு வசதியாக இருப்பவர்கள் வாங்கி விடுவார்கள். நடுத்தர மக்களுக்கு தேவை இல்லாத சுமையாகவும், ஏழைகள் வாங்க முடியாதும் போகிறதே? அப்படியே வாங்கி விட்டாலும், அதனை பாதுகாக்கும் வழிகளும், உபகரணங்களும் இல்லது போகும் போது எப்படி காப்பது?

இதில் தங்கள் பெயர் குறிப்பிட்டு விளித்தது, நண்பர் என்கிற முறையில் தான். இதில் தங்களுக்கு வருத்தம் வந்தால், மன்னித்து. நானும் இந்த வலை உலகும் அறியும் பொருட்டு விடை தாருங்கள். என்று தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மருத்துவர் புருனோ மட்டுமன்றி, இதைப்பற்றி அறிந்தவர் யாரும் பதில் அளிக்கலாம். மற்றவரும் தங்கள் அனுபவங்களை தரலாம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

48 comments:

புருனோ Bruno said...

அமாக்சலின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருக்கும் ஒரு மாத்திரை தான்

Mox 500 கண்டிப்பாக ஒரு மாத்திரை மட்டும் கேட்டு சண்டை போட்டு வாங்கலாம்.

அதில் சந்தேகமே வேண்டாம்

புருனோ Bruno said...

அடுத்தாக dydrogesterone (9beta,10alpha-pregna-4,6-diene-3,20-dione) (நீங்கள் கூறிய Duphaston) பற்றி சில விபரங்கள்

1. இந்த மருந்து சில நாடுகளில் விற்கப்படுவதில்லை

2. இது ஒரு இயக்குநீர் (ஹார்மோன்) தொடர்புடைய மருந்து

இயக்குநீர் சிகிச்சை என்பது காய்ச்சல், சளி சிகிச்சையிலிருந்து வேறுபடுவதால் இதை தனியாக பார்ப்போம்

நையாண்டி நைனா said...

மிக நன்றி ஐயா.

மற்ற கேள்விகளுக்கும் சொல்லி விடுங்கள்.

அப்படி மொத்தமாக வாங்க சொல்லி கட்டாய படுத்த முடியுமா?

புருனோ Bruno said...

அண்டிபயாடிக் மருந்துகள், இயக்குநீர் மருந்துகள் ஆகியவை கட்டாயம் அந்த முழு சுழற்சி சிகிச்சையும் செய்ய வேண்டும்

பாதி செய்தால் அதனால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்

பாதி சிகிச்சை செய்வதை விட சிகிச்சை செய்யாமல் இருப்பதே மேல்

நையாண்டி நைனா said...

மிக தேவையான கருத்துக்கள். நானும் அந்த மருந்தை பற்றி எழுதி இருப்பேன். ஆனால் துறை சார்ந்த நீங்கள் எழுதினால் இன்னும் சிறப்பாய் இருக்கும் என்பதாலேயே விட்டு விட்டேன் ( தலை இருக்கும் பொழுது வால் ஆடக்கூடாது இல்லையா)

புருனோ Bruno said...

Duphaston

//1. இப்படி இந்த மாத்திரைகளை, மருந்துகளை முழுவதுமாக தான் விற்க வேண்டும் என்று அந்த கடைக்காரர் சொல்கிறாரே. இது சரியா? தவறா?//

சரி

//2. இது சரி என்றால் அந்த உத்தரவை வழங்கிய துறை எது? தவறு என்றால் இதை எங்கே முறையிட வேண்டும்?//

இது குறித்து அரசு ஆணையோ (government order) நீதிமன்ற உத்தரவோ (court judgements) இருக்கிறதா என்று தெரியவில்லை
ஆனால் உலக சுகாதார நிலைய நெறிமுறை குறிப்புகள் (guidelines) இருக்கின்றன

புருனோ Bruno said...

//3. இந்த மாதிரி நிர்பந்திக்கும் போது, பொருளாதாரா ரீதியாக ஓரளவு வசதியாக இருப்பவர்கள் வாங்கி விடுவார்கள். நடுத்தர மக்களுக்கு தேவை இல்லாத சுமையாகவும், ஏழைகள் வாங்க முடியாதும் போகிறதே?//

ஹார்மோன் சிகிச்சை போன்றவற்றை பாதி செய்து அதிக அவதிப்படக்கூடாது என்பதற்கு தான் இந்த நடைமுறை

//அப்படியே வாங்கி விட்டாலும், அதனை பாதுகாக்கும் வழிகளும், உபகரணங்களும் இல்லது போகும் போது எப்படி காப்பது?//
நீங்கள் குளிர்பதன கருவி ”பிரிட்ஜ்” பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு மாத்திரை வாங்கினாலும் அதே கருவி தான். 30 மாத்திரை வாங்கினாலும் அதே கருவிதான்

புருனோ Bruno said...

அமாக்ஸி

//1. இப்படி இந்த மாத்திரைகளை, மருந்துகளை முழுவதுமாக தான் விற்க வேண்டும் என்று அந்த கடைக்காரர் சொல்கிறாரே. இது சரியா? தவறா?//
தவறு

//2. இது சரி என்றால் அந்த உத்தரவை வழங்கிய துறை எது? தவறு என்றால் இதை எங்கே முறையிட வேண்டும்?//
director of drug control - மருந்து கட்டுப்பாடு இயக்குனர்
health secretary - சுகாதார துறை செயலர்

புருனோ Bruno said...

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்

அமாக்ஸி வேறு
ஹார்மோன் வேறு

இரண்டையும் ஒன்று போல் நினைக்க கூடாது

நையாண்டி நைனா said...

/*இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்

அமாக்ஸி வேறு
ஹார்மோன் வேறு

இரண்டையும் ஒன்று போல் நினைக்க கூடாது*/

இரண்டும் ஒன்று என்று சொல்லவில்லை.

இரண்டு சம்பவங்களை சொன்னேன். அவ்வளவு தான். விளக்கதிற்கு நன்றி.

நையாண்டி நைனா said...

ஐயா,
இறுதி சுழற்சியில் தானே, அவர் குறைத்து கேட்கிறார்.

அவர் அந்த சுழற்சியின் இறுதி கட்டத்தில் அவருக்கு தேவையே அவ்வளவு தானே.

அவர் இடையில் நிறுத்த முனைய வில்லையே?

கோவி.கண்ணன் said...

இந்தவாரம் மருத்துவர் வாரமா ?

சர்வேஷன், அடுத்து நைனா

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
இந்தவாரம் மருத்துவர் வாரமா ?

சர்வேஷன், அடுத்து நைனா*/

வருகைக்கு மிக நன்றி அண்ணா...

ttpian said...

As per the MRTP(Monoplis Restricted Trade Practices ) ACT, a shopkkeper(inckuding a chemist) cannot force a customer(consumer) to buy in large!
A consumer can get what he wants!
Despite this this act enables a person to demand the shop keeper to sell a particular product without any strings attched!
a shopkeeper cannot deny any selling any product to the consumer!
O.K?
pathi.k/Karaikalpathiplans@sify.com

நையாண்டி நைனா said...

/* ttpian said...
As per the MRTP(Monoplis Restricted Trade Practices ) ACT, a shopkkeper(inckuding a chemist) cannot force a customer(consumer) to buy in large!
A consumer can get what he wants!
Despite this this act enables a person to demand the shop keeper to sell a particular product without any strings attched!
a shopkeeper cannot deny any selling any product to the consumer!
O.K?
pathi.k/Karaikalpathiplans@sify.com*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி அன்பரே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் வசிக்கும் பகுதியான அம்பத்தூரில் telsartan போன்ற மாத்திரைகளையும் அட்டையாகத்தான் (10) தருகிறார்கள்.

புருனோ Bruno said...

//ஐயா,
இறுதி சுழற்சியில் தானே, அவர் குறைத்து கேட்கிறார்.

அவர் அந்த சுழற்சியின் இறுதி கட்டத்தில் அவருக்கு தேவையே அவ்வளவு தானே.

அவர் இடையில் நிறுத்த முனைய வில்லையே?//

எப்படி அப்படி வந்தது என்று விளக்க முடியுமா

எத்தனை சுழற்சி பரிந்துரைக்கப்பட்டது

மாத்திரை சாப்பிடக்கூடாத நாட்களில் சாப்பிடப்பட்டதா
அல்லது
சாப்பிட வேண்டிய நாட்களில் சாப்பிடப்படவில்லையா

--

நீங்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டில் 46 என்று இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது அவர் கண்டிபபக 30 (ஒரு அட்டை) + 16 மாத்திரை (பாதி அட்டை) தந்து தான் ஆக வேண்டும். அப்பொழுது தவிர்க்க முடியாது.

--

புருனோ Bruno said...

//A consumer can get what he wants!//

உண்மைதான். அமாக்ஸிக்கு இது பொருந்தும். ஹார்மோனுக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்தான்

புருனோ Bruno said...

//நான் வசிக்கும் பகுதியான அம்பத்தூரில் telsartan போன்ற மாத்திரைகளையும் அட்டையாகத்தான் (10) தருகிறார்கள்.//

இதய நோய்க்கு தரும் மருந்துக்களை அப்படி கட்டாயப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த முறை கடைக்காரரிடம் சிறிது பேசிப்பாருங்கள்

நையாண்டி நைனா said...

/*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நான் வசிக்கும் பகுதியான அம்பத்தூரில் telsartan போன்ற மாத்திரைகளையும் அட்டையாகத்தான் (10) தருகிறார்கள்.*/

வருகை மற்றும் கருத்துக்கு..நன்றியோ நன்றி அண்ணா.

நையாண்டி நைனா said...

/*எப்படி அப்படி வந்தது என்று விளக்க முடியுமா.*/

நிச்சயமாக....

/*எத்தனை சுழற்சி பரிந்துரைக்கப்பட்டது*/
மூன்று மாதவிடாய் சுழற்சிக்கு...

/*மாத்திரை சாப்பிடக்கூடாத நாட்களில் சாப்பிடப்பட்டதா
அல்லது
சாப்பிட வேண்டிய நாட்களில் சாப்பிடப்படவில்லையா*/

சரியாகவே பின்பற்றப்பட்டது.

மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்து, பதினைந்து நாள் கழித்து முதல் மாத்திரை உண்ண துவங்கி, மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மாத்திரை உட்கொள்ளுவது நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு மூன்று சுழற்சிக்கு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இப்படி பின் பற்றும் போது இறுதி சுழற்சி நேரத்தில் சொச்சமே தேவைப்படும்.

(இன்னும் தேதி வாரியாக விளக்கம் தேவை என்றாலும் தருகிறேன்)

நையாண்டி நைனா said...

/*நீங்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டில் 46 என்று இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது அவர் கண்டிபபக 30 (ஒரு அட்டை) + 16 மாத்திரை (பாதி அட்டை) தந்து தான் ஆக வேண்டும். அப்பொழுது தவிர்க்க முடியாது.*/
* * * * *
//நான் வசிக்கும் பகுதியான அம்பத்தூரில் telsartan போன்ற மாத்திரைகளையும் அட்டையாகத்தான் (10) தருகிறார்கள்.//

இதய நோய்க்கு தரும் மருந்துக்களை அப்படி கட்டாயப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த முறை கடைக்காரரிடம் சிறிது பேசிப்பாருங்கள்.
* * * * *

இவ்வாரான ஒரு சூழ்நிலையில், நாம் நமது கடைக்காரரிடம் மன்றாடியும் கேட்கவில்லை என்றால், நமது அடுத்த கட்ட செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்று தாங்கள் அறிவுரை சொல்வீர்கள்.

சரி. நாம் வேறு கடைக்கு போய் கேட்கிறோம், அவரும் அவ்வாறே சொல்கிறார். அப்படி எனும் பட்சத்தில் உங்கள் அறிவுரையை எதிர்பார்கிறேன்.

Anonymous said...

Lion Dr Kalimuthukitta kekkalayaa?

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
Lion Dr Kalimuthukitta kekkalayaa?*/

இது நல்ல கேள்வி தான்...
நீங்களே சொல்லிடீங்க அவரு "LION" டாக்டர் என்று. பின்னே நான் போய் எப்படி கேக்குறது?

வருகைக்கி நன்றி

குவாட்டர் கோயிந்தன் said...

என்னடா, இது ஆரம்பத்துலே டாஸ்மாக் கடையிலே கட்டிங்கு தரமாட்டேன்னு சொன்ன கதையா இருக்கு.

கூட்ஸ் வண்டி said...

நல்ல பயனுள்ள விவாதமே. வைத்தியருக்கும், நைனாவிற்கும் நன்றி.

நையாண்டி நைனா said...

/*குவாட்டர் கோயிந்தன் said...
என்னடா, இது ஆரம்பத்துலே டாஸ்மாக் கடையிலே கட்டிங்கு தரமாட்டேன்னு சொன்ன கதையா இருக்கு.*/

பாருங்க கோயிந்தன்,
உங்க மருந்து கடையிலே கூட கட்டிங் தாராங்க.
இந்த மருந்து கடையிலே புல்லா தான் வாங்கனுமாம்.

வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*கூட்ஸ் வண்டி said...
நல்ல பயனுள்ள விவாதமே. வைத்தியருக்கும், நைனாவிற்கும் நன்றி.*/

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நன்றி.

நையாண்டி நைனா said...

இதுவரை எனது கேள்விகளுக்கு பதில் கொடுத்த மருத்துவர் புருனோ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் பிற பதிவர்களுக்கும் நன்றி.

மீண்டும் நாளை-மறுநாள் சந்திப்போம்.

Arivazhagan said...

Duphaston is a hormonal drug. One shouldnot discontinue in the midst of a therapy. Three cycles indicate three complete cycles, I couldnot understand how he would need only half the strip.
Same way all antibiotics should be taken as a course(duration depends on the antibiotic as well as the disease). Discontinuing will lead to other complicationsMost of the people think they can stop taking the drug when they are free from symptoms, but it shouldnot be done. The patient is advised to take a certain number of doses for complete cure, for the patients benefit(good health)only.
If we can decide when to stop a medication, should we go to a doctor in the first place?

புருனோ Bruno said...

//Three cycles indicate three complete cycles, I couldnot understand how he would need only half the strip.//

என் சந்தேகமும் அது தான்

புருனோ Bruno said...

//இவ்வாரான ஒரு சூழ்நிலையில், நாம் நமது கடைக்காரரிடம் மன்றாடியும் கேட்கவில்லை என்றால், நமது அடுத்த கட்ட செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்று தாங்கள் அறிவுரை சொல்வீர்கள். //

ஐயா

இயக்குநீர் ஹார்மோன் போன்ற மருந்துக்களில் மருத்துவர் இத்தனை மாத்திரை என்று எழுதியிருந்தால் அதற்கு குறைவாக கேட்டால் தர முடியாது என்று அவர் கூறலாம்

மருந்துக்களை பொருத்த வரை பல scheduleகள் உள்ளன. இதையும் கடையில் சோப்பு வாங்குவதையும் ஒன்றாக கருத முடியாது

அப்படி இல்லாமல் மருத்துவரே 37 மாத்திரை என்று எழுதியிருந்தால் கடைக்காரர் 40 தான் தருவேன் என்று கூற முடியாது. அப்படி கூறினால் நீங்கள் உங்கள் ஊரிலுள்ள director of drug controlலிடம் புகார் அளிக்கலாம்

Shri Amitabh Chandra. Commissioner,Food and Drugs Admn.,Maharashtra,341, Bandra Kulra Complex,Opp. RBI Building, Bandra (East) Mumbai-400 051 (022)26590548
26591959

Mr. Amin Hazi Aziz Nagani
(President)
Maharashtra State Pharmacy Council,
4, Gulshan Colony, Shahid Society,
Yavatmal - 445 001.
Phone : (Res.) 07232 - 245747, (Off.) 07232 - 245269

சொல்லரசன் said...

இது பற்றி விபரம் அறிய‌
http://cdsco.nic.in
அல்லது லவ்பெல் நைனாவிற்கு போன் போடுங்க‌

கல்வெட்டு said...

//மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்து, பதினைந்து நாள் கழித்து முதல் மாத்திரை உண்ண துவங்கி, மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மாத்திரை உட்கொள்ளுவது நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு மூன்று சுழற்சிக்கு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இப்படி பின் பற்றும் போது இறுதி சுழற்சி நேரத்தில் சொச்சமே தேவைப்படும். //

****

//Three cycles indicate three complete cycles, I couldnot understand how he would need only half the strip./

****

பெண்களின் கருப்பை இரத்தச் சுத்திகரிப்பு சுழற்சி அனைவருக்கும் ஒரே சுழற்சி நாட்கள் இருக்காது. மேலும் ஒரே பெண்ணுக்கே ஒரு மாதம் ஒரு சுழற்சியிலும் தொடர்ந்து அடுத்த முறை குறைவான அல்லது அதிகமான நாட்கள் எடுக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

சராசரியான 28 நாட்கள் அளவைக் கொண்டு அட்டை தயாரிக்கப்பட்டால், குறைந்த அளவு சுழற்சி (உம்: 26 நாட்கள் ) கொண்டவர்களுக்கு கடைசி மாத்திரைகள் தேவைப்படாமல் போகலாம்.

***

1. மருந்து எடுப்பவரின் நடப்பு சுழற்சியைக் கருத்தில் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது மருத்துவரின் கடமை.

2.சராசரி 28 நாட்கள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப்பட்ட மருந்து அட்டைகளை இது போன்ற கூடுதல்/குறைவான சுழற்சி உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மருந்து அட்டையிலேயே இருந்தால் நல்லது.

3.மருமகளின் லைசன்ஸுடன் 8 ஆம் வகுப்பு பையனை வைத்து மருந்து விற்கும் கடைகளில் அட்டையாத்தான் விற்க‌னும் என்று சொல்லியிருந்தால், என்னவென்று புரியாமலேயே விற்பனைப் பையன் அடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

சுழற்சி நாட்கள் எல்லோருக்கும் பொதுவாக இல்லாதபோது மருந்து விற்பவருக்கும் , தயாரிப்பவருக்கும் சிக்கல்தான்.

SurveySan said...

//Mox 500 கண்டிப்பாக ஒரு மாத்திரை மட்டும் கேட்டு சண்டை போட்டு வாங்கலாம்.//

சண்டை போடாதீங்க.
ஆனா, கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்னு சொல்லிப் பாருங்க.

அப்படியும் கேக்கலன்னா, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க/அல்லது அவங்க என்ன வழி சொல்றாங்களோ அதன் படி செய்யுங்க.

SurveySan said...

Do this

lodge a complaint here under department of consumer affairs.
give them the address of the shop.

http://pgportal.gov.in/

but, before that you may want to talk to the shop owner and make sure he wants to comply before you lodge the complaint ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

அடடா.. நைனாவும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பதிவுகளா போட்டு தாக்க ஆரம்பிச்சுட்டாரே.. அருமை நண்பா..

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
அடடா.. நைனாவும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பதிவுகளா போட்டு தாக்க ஆரம்பிச்சுட்டாரே.. அருமை நண்பா..*/

வருகைக்கு நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*
SurveySan said...
//Mox 500 கண்டிப்பாக ஒரு மாத்திரை மட்டும் கேட்டு சண்டை போட்டு வாங்கலாம்.//

சண்டை போடாதீங்க.
ஆனா, கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்னு சொல்லிப் பாருங்க.

அப்படியும் கேக்கலன்னா, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க/அல்லது அவங்க என்ன வழி சொல்றாங்களோ அதன் படி செய்யுங்க.
Do this

lodge a complaint here under department of consumer affairs.
give them the address of the shop.

http://pgportal.gov.in/

but, before that you may want to talk to the shop owner and make sure he wants to comply before you lodge the complaint ;)
*/
வருகை தந்து கருத்து சொன்ன நண்பர் SurveySan-க்கு நன்றி

நையாண்டி நைனா said...

/* சொல்லரசன் said...
இது பற்றி விபரம் அறிய‌
http://cdsco.nic.in*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.

அல்லது லவ்பெல் நைனாவிற்கு போன் போடுங்க‌*/

அவருக்கே இப்ப தேர்தல் ஜுரமாம்.

நையாண்டி நைனா said...

/*கல்வெட்டு said...
//மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்து, பதினைந்து நாள் கழித்து முதல் மாத்திரை உண்ண துவங்கி, மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மாத்திரை உட்கொள்ளுவது நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு மூன்று சுழற்சிக்கு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இப்படி பின் பற்றும் போது இறுதி சுழற்சி நேரத்தில் சொச்சமே தேவைப்படும். //

****

//Three cycles indicate three complete cycles, I couldnot understand how he would need only half the strip./

****

பெண்களின் கருப்பை இரத்தச் சுத்திகரிப்பு சுழற்சி அனைவருக்கும் ஒரே சுழற்சி நாட்கள் இருக்காது. மேலும் ஒரே பெண்ணுக்கே ஒரு மாதம் ஒரு சுழற்சியிலும் தொடர்ந்து அடுத்த முறை குறைவான அல்லது அதிகமான நாட்கள் எடுக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

சராசரியான 28 நாட்கள் அளவைக் கொண்டு அட்டை தயாரிக்கப்பட்டால், குறைந்த அளவு சுழற்சி (உம்: 26 நாட்கள் ) கொண்டவர்களுக்கு கடைசி மாத்திரைகள் தேவைப்படாமல் போகலாம்.

***

1. மருந்து எடுப்பவரின் நடப்பு சுழற்சியைக் கருத்தில் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது மருத்துவரின் கடமை.

2.சராசரி 28 நாட்கள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப்பட்ட மருந்து அட்டைகளை இது போன்ற கூடுதல்/குறைவான சுழற்சி உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மருந்து அட்டையிலேயே இருந்தால் நல்லது.

3.மருமகளின் லைசன்ஸுடன் 8 ஆம் வகுப்பு பையனை வைத்து மருந்து விற்கும் கடைகளில் அட்டையாத்தான் விற்க‌னும் என்று சொல்லியிருந்தால், என்னவென்று புரியாமலேயே விற்பனைப் பையன் அடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

சுழற்சி நாட்கள் எல்லோருக்கும் பொதுவாக இல்லாதபோது மருந்து விற்பவருக்கும் , தயாரிப்பவருக்கும் சிக்கல்தான்.*/

நண்பர் கல்வெட்டு,

எனது மனதில் உள்ளதை, அப்படியே கல்வெட்டாய் செதுக்கி உள்ளீர்கள்.

மிக மிக மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*Arivazhagan said...
Duphaston is a hormonal drug. One shouldnot discontinue in the midst of a therapy. Three cycles indicate three complete cycles, I couldnot understand how he would need only half the strip.
Same way all antibiotics should be taken as a course(duration depends on the antibiotic as well as the disease). Discontinuing will lead to other complicationsMost of the people think they can stop taking the drug when they are free from symptoms, but it shouldnot be done. The patient is advised to take a certain number of doses for complete cure, for the patients benefit(good health)only.
If we can decide when to stop a medication, should we go to a doctor in the first place?*/

நண்பர் அறிவழகன் அவர்களே,
வருக வணக்கம்.
எனது தளத்தில் வந்து கருத்து தெரிவித்ததற்கு மிக மிக நன்றி. ஐயா.

மனமும், நேரமும் இருந்தால், பின்னர் விளக்கி கூறவும்.

அதில் எங்கும் இடையிலேயே நிறுத்தப்பட்டது என்று சொல்லவில்லை. இறுதி சுழற்சியின் போதுதான் குறைந்த எண்ணிக்கையில் தேவை பட்டது என்று சொல்ல பட்டிருக்கிறது.

நண்பர் கல்வெட்டின் பதிலையும் படித்துவிடுங்கள்.

நையாண்டி நைனா said...

அருமை நண்பர் மருத்துவர் புருனோ அவர்களே,

தங்களின், பொறுமையும் பெருமையும் மிக்க பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

நான் மற்றும் பதிவர்களும், வாசகர்களுக்கும் எதிர்பார்க்கும் பதில் வந்துவிட்டது.

உங்களின் பணி சூழலிலும், எங்கள் கேள்விகளுக்கு விடை கொடுக்கிற உங்கள் பொறுமைக்கு நன்றி.

நிற்க, உங்களுக்கு மனமும் நேரமும் கிடைக்கும் என்றால்....

அதில் எங்கும் இடையிலேயே நிறுத்தப்பட்டது என்று சொல்லவில்லை. இறுதி சுழற்சியின் போதுதான் குறைந்த எண்ணிக்கையில் தேவை பட்டது என்று சொல்ல பட்டிருக்கிறது. அந்த மாதிரியே சுழற்சி கோளாறுக்கான, சிகிச்சையின் போது பரிந்துரைக்கப்பட்டது தான். அப்படி இருக்கும் போது எப்படி மீதம் வராமல் இருக்கும். (நண்பர் கல்வெட்டின் பதிலையும் படித்து விடுங்கள்)

மேலும், நான் அறிந்தது தவறாக இருக்கும் என்றால்.

ஒரு சீரிய சுழற்சியில், மூன்று சுழற்சிக்கு தேவையான மருந்து எண்ணிக்கையும், மருந்து உட்கொள்ள கூடிய நாட்களும் எப்படி 10-தின் மடங்காக இருக்கும், மீதம் வருவதற்கு வாய்ப்பே இருக்காது என்றும் விளக்குங்கள். (உங்கள் சந்தேகமே "சொச்சம்" வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது எப்படி என்றுதானே)

உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றியை கூறிக்கொள்கிறேன்.

(இந்த பதிவும், இதை சார்ந்த விவாதமும் ஆக்க பூர்வமானது என்று தாங்கள் எண்ணினால், நீங்களே இதற்கு சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கியும் ஒரு பதிவாக்கி உங்கள் வலைத்தளத்தில் பதிவிடுங்கள்)

Cable Sankar said...

என்னா நைனா நீயா இதெல்லாம் எழுதின... உங்க கிட்டேருந்து நான் இதை எதிர்பார்கல.. சூப்பர்.. தேவையான பதிவு..

Naresh Kumar said...

நையாண்டி நைனா,

உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவா?

ஆனால் மிக உபயோகமான பதிவு!!!

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
என்னா நைனா நீயா இதெல்லாம் எழுதின... உங்க கிட்டேருந்து நான் இதை எதிர்பார்கல.. சூப்பர்.. தேவையான பதிவு..*/

வருகைக்கு நன்றி, திரு கேபிளார் அவர்களே.
அடிக்கடி வந்து போய் இருங்க...

நையாண்டி நைனா said...

/*Naresh Kumar said...
நையாண்டி நைனா,

உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவா?

ஆனால் மிக உபயோகமான பதிவு!!!*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக மிக நன்றி.
திரு.Naresh Kumar அவர்களே.